New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-7

அந்த வாரம் முழுவதும் யோசனையில் இருந்தாள் சஞ்சனா, பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக ஆதித்தியனை அழைத்தாள். அவன் பிசினஸ் விஷயமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் வந்தவுடனே சந்திக்கலாம் என்றும் கூறினான். சஞ்சனா அழைத்ததும் அவள் நிச்சயமாக திருமணத்திற்கு சம்மதம் சொல்லத்தான் அழைக்கிறாள் என்று எண்ணினான். எனவே வேலையை விரைவாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினான். ஆனால் சஞ்சனாவோ முற்றிலும் மாறுபட்ட எண்ணத்தில் இருந்தாள்.

ஆதித்தியன் வந்த உடனே சஞ்சனாவை காணச் சென்றான். இருவரும் பீச்சில் சந்திப்பது என்று முடிவு செய்து பெசன்ட் நகர் பீச்சிற்கு சென்றனர். அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தான் ஆதி. சிறிது நேரம் கடலை பார்த்து கொண்டிருந்த சஞ்சனா, அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்தாள். அவனை பாராமல் இருந்தபோது எளிதாக தெரிந்தது, தற்போது கஷ்டமாக இருந்தது. அவன் முகம் பார்த்து நமக்குள் ஒத்துவராது என்று சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை. ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும் வேறுவழி இல்லை என்று எண்ணி பேச்சை தொடங்கினாள்.

இதை நான் முதல்லயே சொல்லி இருக்கனும் இவ்வளோ நாள் உங்கள காக்க வெச்சிருக்க கூடாது. எனக்குனு கனவு இருக்கு, சும்மா ஒரு டிகிரிக்காக இந்த கோர்ஸ் நான் படிக்கல, இதுல  பி. எச்.டி, பண்ணனும் நிறைய ரிசெர்ச் பண்ணி புக் எழுதனுங்குற ஆசையும் உண்டு.

தெரியும் என்றான் ஆதி.

அவனை நேராக பார்த்தவள், அதுதான் பிரச்சனை உங்களுக்கு என்ன பற்றி எல்லாம் தெரியும், எல்லாம் தெரிஞ்சு உங்களோட எல்லா எதிர்பார்ப்புக்கும் ஒத்துவருவனு தெரிஞ்ச அப்புறம் தான் நீங்க பொண்ணு கேட்டு வந்தீங்க. நான் ஒரு சாதாரணமான பொண்ணு குடும்பத்து மேல பாசம் இருக்கு, எனக்குன்னு கனவு இருக்கு இது எல்லாம் விட்டுட்டு உங்க ஸ்டேட்டஸ்குள்ள வந்து இருக்க எனக்கு ஒத்துவராது. நீங்க வாழ்க்கையை பிசினஸ் மாதிரி பார்க்குறீங்க. ஒரு கம்பெனி கூட பார்ட்னர்ஷிப் போடுறதுக்கு முன்னாடி அவங்கள பத்தி ஸ்டடி பண்ற மாதிரி என்ன ஸ்டடி பண்ணி இருக்கீங்க. இந்த உங்களோட பிசினஸ் மைண்டு, உங்க ஸ்டேட்டஸ் எல்லாம் எனக்கு பயமா இருக்கு, நமக்குள்ள இந்த கல்யாணம் ஒத்துவருனு எனக்கு தோணலை என்று ஒருவழியாக மனதில் இருப்பதை கூறி முடித்தாள்.

அவளது சம்மதத்துக்காக ஆசையாக ஓடிவந்த ஆதி மனதில் அடிவாங்கினான். அந்த வலி முகத்தில் தெரியாமல் மறைக்க போராடினான். இத்தனை வருட பிசினஸ் அனுபவம் கைகொடுக்க விரைவில் தன்னை நிதானப்படுத்திகொண்டு பேச தொடங்கினான்.

சரிதான் என்னோட ஸ்டேட்டஸ் பற்றி எனக்கும் பயம் உண்டு, அந்த பயம் தான் உன்மேல மனசு முழுக்க காதல் இருந்து உன்கிட்ட நேரடியா வந்து சொல்லி உன்பின்னாடியே சுற்றி சம்மதிக்க வைக்காம, தள்ளி நின்னு பாத்துட்டு போகவெச்சுது.

சாதாரண பையன் மாதிரி எனக்கு உன்ன பிடிச்சிருக்குனு உன்கிட்ட வந்து சொல்லாம உன்னோட வீட்டுக்கு பொண்ணுக்கேட்டு வரவெச்சுது.

என்ன சொன்ன உன்ன ஸ்டடி பண்ணி லைப்பை பிசினஸ் மாதிரி பாக்குற, ஹ்ம்ம்ம் எனக்கு உன்ன மாதிரி ஒரு பொண்ணுவேணுனா நிறைய பேர் கிடைப்பாங்க, நீயே வேணுன்னு நினைச்சனாலதான் உன்ன தேடி வந்த.

உன்ன பார்த்துட்டு வந்ததுக்கப்புறம் மனசுல பதிஞ்சுபோன உன்முகம் தான் சிரிப்பே மறந்து போன என்னோட முகத்துல புன்னகையை கொண்டுவந்துச்சு. நீ தொட்ட அடையாளம் இருக்க அந்த சட்டையை கூட பத்திரப்படுத்தி வெச்சிருக்க. நீதான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணித்தான் உன்ன தேடி வந்த உன்ன ஸ்டடி பண்ணிட்டு நான் முடிவெடுக்கல.

உன்கிட்ட நேரடிய வந்து பேசுனா யாராவது பார்த்து அது தேவை இல்லாத நியூஸ் ஆகிட கூடாது, உனக்கு அது தொல்லை ஆகிட கூடாதுன்னுதான் வீட்டுக்கு முறைப்படி வந்தேன். நீ அடுத்தநாளே எனக்கு போன் பண்ணப்ப ரொம்போ சந்தோசப்பட்ட, என்னோட ஸ்டேட்டஸ் வாழ்க்கைக்குள்ள உன்ன கொண்டுவர நினைக்கல, உன்னோட எதார்த்த வாழ்க்கைகுள்ள நான் வரனுன்னு நினைத்தேன், அதான் உன்னோட ப்ரண்ட்ஸ் மீட் பண்ண கூப்பிட்டதும் உடனே வந்தேன். 

உன்னோட கனவு பற்றி நான் ஸ்டடி பண்ணி தெரிஞ்சுக்கல, உன்னோட அண்ணன் தான் கல்யாணம்னு வந்த எங்களோட ஒரே கண்டிஷன் சஞ்சனா  பி. எச்.டி, முடிக்கனும்னு சொன்னாரு. அவரு சொன்னதுக்கப்புறம் உன்னோட பீல்ட் பத்தி நிறைய படிச்சு தெரிஞ்சுக்கிட்ட, வெளிநாட்டுல சில காலேஜ்ஐஸ் கூட விசாரிச்சு வெச்சிருந்த ஆனா நீ இப்படி அடிப்படையே தப்பா புரிஞ்சு வெச்சிருப்பனு நான் எதிர்பார்க்கல.

அவன் கூறிய அனைத்தும் கேட்டு சஞ்சனா சிலையாக நின்றாள், அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. மனதில் தன்னை இந்த அளவுக்கு நினைத்து கொண்டிருப்பவனை காயப்படுத்தி விட்டோம் என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது. இப்படி அவசரப்பட்டு விட்டோமே இனி இதை எப்படி சரி செய்வது என்று அவள் எண்ணி கலங்கிப்போனாள்.

அவள் கண்ணில் கண்ணீரை கண்டவன் அது எதற்கு என்று தெரியாமல் குழம்பிப்போனான், இருந்தும் அவள் அழுவது வருத்தம் கொடுக்க ப்ளீஸ் சஞ்சனா அழுகாதே என்றான். அவனே தொடர்ந்து உங்க அண்ணாகிட்ட சொல்லி பெரியம்மா, பெரியப்பாகிட்ட முறையா சொல்ல சொல்லிடு, இப்பவாது உன்னோட மனசுல என்ன இருக்குனு சொன்னதுக்கு தேங்க்ஸ் என்றவன், உன்ன வீட்டுல ட்ராப் பண்ணிடுற வா என்றான். தான் ஆட்டோவில் சென்றுவிடுவதாக சஞ்சனா கூற அவளை வற்புறுத்தாமல் ஆட்டோவில் ஏற்றிவிட்டான், ஒரு தலையசைப்போடு விடைபெற்றாள் சஞ்சனா.

அவள் சென்ற பிறகு இடமே வெறுமையாக தோன்றியது ஆதிக்கு, இந்த வலி இந்த வெறுமை எளிதில் தன்னை விட்டு போகாது என்று உணர்ந்தவன் தனது பலமெல்லாம் வடிந்தவனாக வீட்டிற்கு சென்றான். ஒரு வாரமாக கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்று பெரியம்மா, பெரியப்பா சொல்லுவார்கள் என்று காத்திருந்தான் அதுபோல எதுவும் நடக்கவில்லை என்னவானது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அந்த வார இறுதியில் பிசினஸ் விஷயமாக ஒருவரை சந்தித்து விட்டு வரும் வழியில் சஞ்சனா ஒரு பார்க்கிற்குள் நுழைவதை பார்த்து ஆதி அந்த பார்க்கிற்கு சென்றான். ஏன் இன்னும் வீட்டில் சொல்லவில்லை என்று கேட்க நினைத்து அவளை தேடினான், அது ஒரு சாக்குதான் அவனுக்கு அவளை பார்க்கவேண்டுபோல் இருந்தது எனவே தான் அங்கு வந்தான். 5 நிமிடம் தேடியவன் ஒரு மரத்தடியில் அவள் தோழி நந்தினியுடன் அமர்ந்திருப்பதை பார்த்து அவர்கள் அருகில் சென்றான். அவன் அருகில் செல்லும்போதே சஞ்சனா அழுதுகொண்டிருப்பது அவனுக்கு தெரிந்தது.

என்னதான் நடந்துச்சு சொல்லுடி ஒருவாரமா பித்துபிடிச்சவ மாதிரி இருக்க, யார்கிட்டயும் பேச மாட்டங்குற, ஒழுங்கா கிளாஸ் கவனிக்குறது இல்லை என்னதான் பிரச்சனை என்று கேட்டாள் நந்தினி. நந்தினி இப்படி கேட்டதும் அவர்கள் அருகில் செல்லாமல் மரத்தின் பின் நின்று அவர்கள் பேசுவதை கேட்டான் ஆதி.

அழுதுகொண்டிருந்த சஞ்சனா விசும்பலுக்கிடையில், நந்து நான் தேவையில்லாம ஒரு குழப்பம் பண்ணிட்ட. ஆதி முதல் முறை வீட்டுக்கு வந்தபோதே அவரு யாருனு சொல்றதுக்கு முன்னாடியே கோவில்ல பார்த்தவருனு எனக்கு அடையாளம் தெரிஞ்சுடுச்சு, எப்படி 2 மாசத்துக்கு முன்னாடி பார்த்தவர் முகம் இன்னும் நியாபகம் இருக்குனு எனக்கே ஆச்சர்யம் தான். அதுக்கப்புறம் ஆதி என்கிட்ட பேசுனது உங்ககிட்ட பேசுனதுனு அவரை பத்தியே யோசிச்சுட்டு இருந்துதான் அன்னைக்கு கிளாஸ்ல திட்டு வாங்குன. மேம் கூப்பிட்டு உன் கனவு என்ன இப்படி பொறுப்பில்லாம இருக்கனு கேட்டதும் எனக்கு என்மேலயே கோவம்.

யோசிச்சு பார்த்தப்ப ஆதி பத்தி நினைத்துதான் படிப்புல கவனம் போச்சுனு தோணுச்சு, நான்தான் அவரை நினைச்சுட்டு இருக்க அவரு என்னைப்பற்றி எல்லா தெரிஞ்சு, என்ன ஸ்டடி பண்ணித்தான் பொண்ணு கேட்டு வந்தாருனு தோணுச்சு, நான்தான் அதை காதல்னு தப்பா புரிஞ்சுக்கிட்டனு நினைச்சு அவர்கிட்ட போய் எங்க  ரெண்டு பேருக்கு செட் ஆகாதுனு சொல்லிட்ட.

அடிப்பாவி என்னடி வேல செஞ்சு வெச்சிருக்க, அவருக்கு உன்மேல லவ் இல்லையா, உன்ன பாக்குற பார்வையில அவ்வளோ லவ் இருக்கு, உன்ன பிடிக்காமய எங்கள பார்க்க வந்தாரு. கிளாஸ் டாப்பர் நீ எப்படி அவரு மனசு தெரியாம இப்படி ஒரு காரியம் செஞ்ச.

எனக்கு தெரியலை ஏன் இப்படி செஞ்சன்னு, எனக்கு அவரை பிடிக்கும், அதே சமயத்துல அவரோட ஸ்டேட்டஸ் பார்த்து எனக்கு பயமா இருந்துச்சு. பணத்துக்காகனு யாராவது சொல்லிடுவாங்களோனு ஒரு தயக்கம் இருந்துச்சு. கூடவே அவரு என்ன லவ் பண்ணல, அவரோட எதிர்பார்ப்புக்கு ஒத்துபோறனால என்ன கல்யாணம் பண்ணிக்க நினைக்குறாருனு தோணிடுச்சு. அவரை காயப்படுத்திட்ட என்னால ஒருவாரம நிம்மதியா இருக்கவே முடியல, கல்யாணம் வேண்டானு வீட்டுல சொல்ல சொல்லிட்டாரு சொல்றதுக்கு எனக்கு மனசு வரமாட்டங்குது. என்ன பண்றதுனு தெரில என்று வேதனையோடு கூறினாள்.  

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு ஆதிக்கு சந்தோசமாக இருந்தது. இருவரும் சரிவர பேசிக்கொள்ளாததால் வந்த குழப்பம் என்று அவனுக்கு புரிந்தது. இதை மேலும் வளர விடக்கூடாது என்று நினைத்தவன், மரத்தை சுற்றி அவர்கள் முன்னால் சென்று நின்றான்.

அந்த நேரத்தில் அவனை அந்த இரு பெண்களும் அங்கு எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அதிர்ச்சியாக அவனை பார்க்க, ஆதி நந்தினியை பார்த்து நீங்க தப்பா நினைக்கலைனா நான் சஞ்சனாகூட தனியா பேசனும் என்றான். நந்தினியோ தயவுசெஞ்சு பேசுங்க சார், இந்த அழுமூஞ்சு சஞ்சனாவை பார்க்க முடியலை என்று கூறியவள், அங்கிருந்து கிளம்பினாள்.

தாங்கள் பேசியதை கேட்டிருப்பானோ என்று சஞ்சனா நினைக்க, அவனோ சாரி சனா உன்கிட்ட முழுசா நான் பேசி இருக்கனும், நான் என்ன நினைக்குறனு உனக்கு புரியற மாதிரி சொல்லி இருக்கனும். முதல்லையே பேசி இருந்த இந்த மன கஷ்டத்தை தவிர்த்திருக்கலாம். இப்பவும் ஒன்னு லேட் இல்ல, நான் உன்ன மனப்பூர்வமா நேசிக்குற, என்னோட மனைவிய என் வாழ்க்கைகுள்ள  வர உனக்கு சம்மதம் என்று கேட்டு அவள் முகம் பார்த்தான்.

அவன் சனா என்று அழைத்ததும் அவனை புதிதாக பார்த்தவள் அவன் பேச பேச தாங்கள் பேசியதை கேட்டிருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது. இந்த ஒருவாரம் இருந்த மனபாரம் விலகி அவனை பார்த்தவள், முடிவ வீட்டுல சொல்லி உங்க பெரியம்மா, பெரியப்பாகிட்ட சொல்ல சொல்லிடுறேன் என்றாள்.

அவளை புன்னகையோடு பார்த்தவன் இனி நமக்கு நடுவுல பேச யாரு தேவையில்ல, எதுனாலும் மனசுல என்ன இருந்தாலும் என்கிட்ட நேரடியா சொல்லு சனா உன்ன இழக்க என்னால முடியாது.

இனி அப்படி ஒரு நிலை வராதுப்பா நடந்த எல்லாத்துக்கும் சாரி என்றாள் சஞ்சனா. இருவரும் ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக்கொண்டனர், அவர்கள் கண்களில் அவர்களுக்கான காதல் இருந்தது.

இந்த புன்னகை என்றும் நிலைத்திருக்குமா??? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீணடும் மலர்வாய்……

-நறுமுகை

2

No Responses

Write a response