New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-33

மாயா இன் லவ், நான் எதிர்பார்க்கவே இல்லைனு பொய் சொல்லமாட்ட. எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு, ஆனா எதையுமே நீ எங்ககிட்ட முதல்ல சொல்லுவங்குற நம்பிக்கையில நான் அதுபற்றி பெருச யோசிக்கல.

உங்ககிட்ட சொல்லக்கூடாதுனு இல்ல மேடம். நீங்களும் சாரும் ஒண்ணா இருந்திருந்தா கண்டிப்பா உங்க கிட்டதான் முதல்ல சொல்லியிருப்பேன். நீங்களே மனக்கஷ்டத்துல இருந்தீங்க, அப்ப இதை சொல்ல கொஞ்சம் தயக்கம் அவ்வளவு தான்.

ஹ்ம்ம், யார் அந்த லக்கி பெர்ஸன் மாயாவையே லவ் பண்ண வெச்சுருக்காரு? என்று சஞ்சனா புன்னகையோடு கேட்க, மாயா பார்த்திபன் என்று கூறினாள்.

பெரிய மாமாவோட ஜெனரல் மேனேஜர் பார்த்திபன் ரைட்?

நீங்க ஷார்ப் மேடம் என்று புன்னகைத்தாள் மாயா.

உங்க ரெண்டு பேருக்கும் எப்படி அறிமுகமாச்சுனு நான் கேட்கமாட்ட. பெரிய மாமாக்கும், தயாவுக்கும் உள்ள பிஸினெஸ் டீலிங்ஸ் எல்லாம் பார்த்திபன் தான் பார்த்துக்குறாரு. தயாவோட பிஸினெஸ் டீலிங்ஸ் உனக்கு தெரியாம நடக்குறதுக்கு வாய்ப்பில்லை, சரிதானே?

அதை ஆமாம் என்பதாக தலையசைத்து ஆமோதித்தாள் மாயா. அவர் தான் முதல்ல ப்ரொபோஸ் பண்ணாரு. நான் ஆறு மாசம் டைம் எடுத்துக்கிட்டேன், என்னால மேரேஜ்ங்குற இன்ஸ்டிடியூஷன்குள்ள பிட் ஆக முடியுமானு ரொம்போ யோசிச்ச. இந்த சொசைட்டிய பொறுத்த வரைக்கும் நான் ஆம்பள மாதிரி இருக்க, வாய்க்கு வாய் பேசற, என்னோட ட்ரெஸ்ஸிங் சரியில்லை, இப்படி அடிக்கிட்டே போகலாம். ஆனா இதை எல்லாம் அவர் பாஸிடிவாதான் பாத்தாரு.

அப்பா எப்பவும் என்கிட்ட சொல்லுவாரு நீ பேசற விஷயம் உண்மைய, நேர்மைய இருந்தா எதையும் தைரியமா பேசு, மத்தவங்கள எப்பவும் மரியாதை குறைவா பேசாத, மற்றபடி பேச்சுரிமைங்குறது எல்லாருக்கும் சமம்னு. நாலு பேரு என்ன பேசுவாங்கனு நினைச்சு என்ன எப்பவும் அவரு கன்ட்ரோல் பண்ணதில்லை. இப்ப பார்த்திபனும் அப்படிதான் இருக்காரு. இந்த சொசைட்டி பேசற மாதிரி என்ன இந்த பொண்ணு இப்படி பேசுறா? இப்படி யாருக்கும் அடங்காம நடந்துக்குறானு அவரு பீல் பண்ணமாதிரி எனக்கு எப்பவும் தோணுனது இல்லை. அதே மாதிரி எப்பவுமே என்னோட சுதந்திரத்தில் அவர் தலையிட்டதே இல்ல, லவ்வர்சுனு சொல்றத விட நாங்க நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உள்ள தோழர்கள இருக்கோம்.

அதைக்கேட்ட சஞ்சனா நீ சொல்றத கேட்க சந்தோசமா இருக்கு மாயா. தெளிவ யோசிச்சுதான் முடிவு பண்ணியிருக்க. கணவன் மனைவிங்குறவங்க முதல்ல நல்ல நண்பர்கள இருக்குறது ரொம்போ முக்கியம். சரி கல்யாணத்தை பற்றி என்ன முடிவு செஞ்சிருக்கீங்க.

மேம் நாங்க சேம் காஸ்ட் கிடையாது, அவர் வீட்ல அதெல்லாம் ரொம்ப பாக்குறாங்க. அவருக்கு மூணு சிஸ்டர்ஸ் இருக்காங்க, அவங்க கல்யாணம் முடியற வரைக்கும் இதை யாருக்கும் சொல்ல வேண்டான்னு இருந்தோம். எல்லாருக்கும் கல்யாணம் முடிஞ்சதும் உங்ககிட்ட பேசலானு இருந்த, ஆனா இப்ப அதுக்கு தேவை இல்லாம போயிடுச்சு.

தேவை இல்லாம போச்சா! ஏன் அப்படி சொல்ற?

இல்ல மேம் பாரதிக்கு இப்படியானதுக்கு அப்புறம் எனக்குன்னு ஒரு லைப்ப யோசிக்க எனக்கு தோணல. இப்படியே இருந்திடலான்னு இருக்கேன். உங்க கூட, பாரதிகூட அப்படியே நல்லாதானே இருக்கேன், ஜாலியா.

உனக்கென்ன பைத்தியமா மாயா? பாரதி சின்ன பொண்ணு, அவளுக்கு லைப் இன்னும் லாங் வே இருக்கு. ஆனா உனக்கு அப்படி இல்ல. உனக்குன்னு இருக்க வாழ்க்கைய வேண்டான்னு சொல்ல போறியா?

மேம் பாரதிய எந்த அளவுக்கு அன்பா, அரவணைப்ப பார்த்துகுறீங்களோ அதேமாதிரி தான் என்னையும் பார்த்துக்கிட்டீங்க. பாரதிய என்கூட அனுப்புறப்ப நீங்க ஒரு நிமிஷம் கூட யோசிச்சதே கிடையாது. என்கூட இருந்த, அவ உங்ககூட இருக்கமாதிரினு என்மேல ரொம்போ நம்பிக்கை வெச்சிருந்தீங்க, ஆனா அந்த நம்பிக்கையை நான் காப்பத்துலையே. சின்ன பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு விபரீதம் நடக்குறதுக்கு நான் விட்டுட்டேன். உன்ன நம்பித்தானே பாரதிய அனுப்புன இப்படி பண்ணிட்டியேன்னு என்ன திட்டியிருந்தாலோ, இல்ல அடிச்சிருந்தாலோ எனக்கு இவ்வளோ குற்றவுணர்ச்சி இருந்திருக்காது, ஆனா யாருமே எதுவுமே சொல்லலேயே மேம், இப்பவும் என்னோட கல்யாணத்தை பற்றி பேசவந்திருக்கீங்க. ஏன் மேம் என்மேல இவ்வளோ இவ்வளோ அன்போட இருக்கீங்க. இதுக்கு நான் தகுதியானவ கிடையாது. என்னோட சொந்தபந்தம் எல்லாரும் சொல்ற மாதிரி நான் ராசி இல்லாதவ பொறந்த உடனே அம்மாவ தொலைச்சுட்ட, அப்புறம் அப்பா, இப்ப பாரதிக்கு இப்படி நான் எப்படி மேம் எதுமே நடக்காத மாதிரி என்னோட லைப் பற்றி யோசிக்குறது என்று கேட்டு சஞ்சனாவை கட்டிக்கொண்டு அழுதாள்.

மாயாவின் மனகுமுறல் கேட்டு சஞ்சனாவிற்கும் கண்கள் கலங்கியது. எவ்வளோ தைரியமான பொண்ணு, அன்று கோர்டில் அந்த வக்கீலை எப்படி அலறவிட்டாள், இன்று மனம் உடைந்து அழுவது காண சஞ்சனாவிற்கு சகிக்கவில்லை. இவளை இப்படியே விடக்கூடாது என்று எண்ணிய சஞ்சனா தன்னை தேற்றிக்கொண்டு பேசத்தொடங்கினாள்.

சரி இப்ப கல்யாணம் பண்ணிக்காம இருந்த பாரதிக்கு நடந்தது இல்லனு ஆயிருமா?

இல்ல எல்லாம் சரியா போயிருமா?

அது இல்லதான், ஆனா நான் செஞ்ச தப்புக்கு தண்டனையா இருக்கும்.

மாயா நீ எந்த தப்புமே பண்ணலையே? இன்னும் சொல்ல போனா அவங்க மூணுபேரா இல்லாம அஞ்சு பேரா இருந்திருந்தா உனக்கும் இந்த விபரீதம் நடந்திருக்கும். உன்னையும் கடத்திட்டுபோன சமாளிக்க முடியாதுங்கற ஒரே காரணத்துக்காகதான் அவனுங்க உன்ன விட்டுட்டாங்க. நீ ஒன்னும் சுயநலம்மா உன்ன காப்பதிக்குறதுக்காக பாரதிய சிக்கவிடலையே. அந்த சமயம் நீ பாரதிகூட இருந்தைங்குறத தவிர, இதுக்கும் உனக்கும் வேற எந்த சம்மந்தமும் இல்லை.

நீ தேவையில்லாத குற்ற உணர்ச்சியை வளர்த்திக்கிட்டு கையில இருக்க நல்ல வாழ்க்கையை தூக்கி போடப்பாக்குற. சரி நீ ஏதோ தப்பு பண்ணிட்டதா நினைச்சு தண்டனை கொடுத்துக்குற, பார்த்திபனுக்கு எதுக்கு தண்டனை கொடுக்குற?

அந்த கேள்விக்கு மாயாவிடம் எந்த பதிலும் இல்லை, அமைதியாக நின்றாள்.

இங்கப்பாரு மாயா, பாரதிக்கு நடந்தது யாராலும் அவ்வளோ சீக்கிரம் மறக்கமுடியாத சம்பவம். ஆனா அவளை சுத்தியிருக்க நம்ம எல்லோரும் பழைய மாதிரி நம்மளோட வாழ்க்கையை வாழ தொடங்குனாதான் பாரதி நடந்ததை மறக்க ஆரம்பிப்ப.  இப்படி நீயே உனக்கு தண்டனை கொடுத்துகுறேனு உன்னோட வாழ்க்கையை விட்டுடு, நானும் ஐய்யோ என் பொண்ணுக்கு இப்படி ஆயிருச்சேன்னு வேலைய விட்டுட்டு, அவளை சுத்தி எல்லாரும் அதையே நினைச்சுட்டு இருந்தா மட்டும்  அவ சரியாயிடுவாளா? நீயே யோசிச்சுப்பாரு, நம்ம எல்லாரும் கூடவேதான் இருந்தோம் ஆனா வருண் வந்து அவளுக்கு சவாலா நின்னப்பதான் அவளா அந்த கூட்ட விட்டு வெளியில வந்த, அப்படி இருக்கப்ப நீ இப்படி உன்னோட லைப்பை விட்டுட்டு இருக்குறது அவளுக்கு சந்தோசத்தை கொடுக்குனு நினைக்குறீயா?

எனக்கு தெரிஞ்ச மாயா எதுலையும் பாசிட்டிவ்வ இருப்ப, எந்த நிலையிலும் சோர்ந்துபோகமாட்ட இப்ப என்ன ஆச்சு மாயாவுக்கு?

மேடம் பாரதிக்கு நடந்த விஷயம் என்ன ரொம்ப பாதிச்சுருச்சு.

வெளியில சொல்லலனாலும் என்னால ஈஸியா எடுத்துக்கமுடியல மேடம். பாரதி முன்னாடி அவ வருத்தப்படக்கூடாதுனு, வீட்லயே முடங்கி போகக்கூடாதுனு எவ்வளவோ பேசினாலும், அவளுக்கு நடந்ததை யோசிச்சு பாக்கறப்ப, என்னால அந்த கொடுமையை தாங்க முடியல.

நீ சொல்றது எனக்கு புரியுது. இது எனக்கும் ஆதிக்கும் கூட இருக்கு. ஆனா அதுக்கு நீ தேர்ந்தெடுத்திருக்க வழி தீர்வுயில்லை.  நான் சொல்றத கேளு, உடனே பார்த்திபன் கிட்ட பேசு. சிஸ்டர் மேரேஜ் முடிச்சதுக்கு அப்புறம் நானும் சார் அவங்க வீட்டுல பேசவரோனு சொல்லு. வேற எதையும் யோசிச்சுட்டு இருக்காத, புரியுதா?

மாயா சரி என்பதாக தலையசைத்தாள்.

அப்புறம் மாயா, நானும் சாரும் வேற ஒரு விஷயம் யோசிச்சு வெச்சிருக்கோம். அதை கண்டிப்பா செஞ்சேயாகனும். அதுக்கு அப்புறம் உன்னோட மேரேஜ். இன்னும் சொல்ல போனா உன்னோட கல்யாணம் எல்லாருக்கு ஒரு நல்ல மனம் மாற்றமாயிருக்கும்,

என்ன மேம் பண்ண போறீங்க? என்று மாயா கேட்க.

சஞ்சனா தன் மனதில் இருந்ததை விவரித்தாள்.

அதை உள்வாங்கிக்கொண்ட மாயா, கரெக்ட் மேம். நீங்க சொல்றது சரி, இதை கண்டிப்பா நாம செஞ்சேயாகனும். பாரதிக்காக மட்டுமில்ல, இந்த மாதிரி எத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கை வீணா போயிருக்கும்.  தப்பே செய்யாம அவங்க தண்டனையை அனுபவிச்சிட்டு இருக்காங்க. நம்ம அந்த மாற்றத்தோட தொடக்கம இருக்கலாம்.

கண்டிப்ப மாயா. நீ முதல்ல பார்த்திபன் கிட்ட பேசிட்டு எனக்கு சொல்லு என்று கூற,

மேம் உங்களுக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லல, என்னனா சாரோட பெரியப்பா இப்ப சார் கிட்ட பேசுறதில்ல, இந்த டைம்ல இத பத்தி சொன்ன அவரு எப்படி எடுத்துப்பாருனு தெரியலையே? நீ சொல்றது சரிதான் ஆனா அதையெல்லாம் ஆதி பார்த்துப்பாரு நீ கவலைப்படாத.

சரி மேடம், ஆமா சார்ரோட சிஸ்டர் எப்ப வராங்க?

இன்னும் ஒருவாரத்துல வராங்க அவங்க வந்ததுக்கப்புறம் தான் நாங்க பிளான் பண்றோம். அதுவும் சரிதான் என்று ஒத்துக்கொண்டாள் மாயா.

சஞ்சனா, ஆதி பிளான் பண்ணுவது என்ன? மாயா காதல் என்ன பிரச்சனைகளை கொண்டுவரப்போகுது? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்…

-நறுமுகை

36

No Responses

Write a response