New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-29

மாயாவுடன் கீழிறங்கி வந்த பாரதி ஹாலில் அமர்ந்திருந்த அனுராதா மற்றும் வருணை பார்த்து தயங்கி நின்றாள். அவள் அருகில் சென்ற ஆதி, வா பாரதி ஆன்ட்டி உன்ன பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள், என்று கூறி அழைத்து வந்தான். இவர்கள் எதற்கு வந்தார்கள், என்ன கேட்க போறார்கள், என்ன பார்த்து பாவப்பட வந்துருக்காங்களா? என்று பலதும் அவள் மனதில் வினாடி நேரத்தில் தோன்றியது. பாரதியை பார்த்ததும் இதமாக புன்னகைத்த அனுராதா வாடாம்மா எப்படியிருக்க? என்று கேட்டார், இம்ம்ம்..என்று மட்டும் தலையாட்டினாள் பாரதி.

இந்த பசங்கயெல்லாம் வேகமா வளர்ந்துறாங்க. எனக்கு இப்பதான் விஷ்ணு பிறந்த மாதிரி இருக்கு அதுக்குள்ளே எவ்வளவு வளந்துட்டான் என்று இயல்பாக சஞ்சனா, கிருஷ்ணவேணியிடம் பேச ஆரம்பிக்க, சற்று ஆறுதலாக உணர்ந்த பாரதி அவ்விடம் விட்டு செல்ல தன் தந்தையிடம் அனுமதி கேட்டாள்.

அதுக்குள்ள எங்கடா போற வருண் உன்னிடம் ஏதோ பேசணுன்னு சொன்னான் என்னனு கேளு என்று வெகு இயல்பாக சொன்னான் ஆதி,  அங்கிருந்த அனைவரும் அவர்கள் பேசுவதை பேசிக்கொண்டே பாரதியை கவனித்து கொண்டிருந்தனர்.

பாரதி அவன்புறம் திரும்பாமல் யாராவது ரூம்முக்கு போ என்று சொல்லிவிடமாட்டார்களா என்று பார்த்தாள்.

அங்கு யாரும் அவளை கண்டு கொள்வதாக தெரியவில்லை. அவளை பார்த்து ஹாய் என்றான் வருண். அதற்கு பாரதியிடம் எந்த பதிலும் இல்லை. அதைப்பற்றி கவலைப்படாமல் பேச்சை தொடர்ந்தான் வருண்.

பாரதி நீ ரொம்ப நல்ல பேட்மிட்டன் விளையாடுவனு அப்பா சொன்னாரு, எனக்கு இப்ப கொஞ்சநாளா பேட்மிட்டன் விளையாட ரொம்ப பிடிச்சுருக்கு. அதான் உன்கூட விளையாடலான்னு வந்தேன். நீ எனக்கு டிப்ஸ்லா கொடுக்கலாம், உனக்கும் ப்ராக்டிஸ் பண்ண மாதிரி இருக்கும் என்று பலநாள் பழகியவன் போல பேசினான். அவன் இப்படி கேட்கக்கூடும் என்று அனுராதாவே எதிர்பார்க்கவில்லை.

அதுவரை அமைதியாக இருந்த பாரதி எனக்கு ப்ராக்டிஸ் எல்லாம் தேவையில்லை. இனி நீங்க விளயாடணும்னு இங்க வராதீங்க என்று முகத்தில் அடித்ததுபோல கூறினாள். அவள் கூறியதை கேட்டு ஆதி ஏதோ சொல்வதற்க்கு எத்தனிக்க, அவளை தடுத்துவிட்டு வருணே பேசினான்.

நீ பெரிய ப்ளேயர் ஆகப்போறன்னு அப்பா சொன்னாரு. அதுக்கு ப்ராக்டிஸ் வேண்டாமா? ஒருவேளை என்கிட்ட தோற்றுடுவனு நினைக்குறியா? அது சரி இன்க் அடிச்சதுக்கு பயந்து அழுத ஆள்தான நீ, உன்னால எப்படி தோல்வியெல்லாம் பேஸ் பண்ண முடியும் என்று நக்கலாக சொன்னான்.

அவன் கூறிய கேலி குரல், அவன் நினைவுபடுத்திய விஷயம்  பாரதிக்கு அளவுகடந்த கோவத்தையும், கூடவே அழுகையும் உண்டாக்கியது. அவன் தன்னை அதே கேலியோடு பார்த்து கொண்டிருப்பது உணர்ந்து, வந்த அழுகையை உள்ளிழுத்துக்கொண்டாள். இவன் பார்க்க அழுவதா? என்று வைராக்கியம் தோன்றியது. என் வீட்டிற்கு வந்து, என்னை இவன் என்ன கேலி செய்வது என்று எண்ணியவள், ஏன் தன் பெற்றோர் தனக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என்று அவர்களை பார்த்தாள். சஞ்சனா,மாயா,கிருஷ்ணவேணி,அனுராதா நால்வரும் மும்மரமாக பேசி கொண்டிருந்தனர். ஆதி போனில் யாரிடமோ ஆபிஸ் விஷயம் பேசிக்கொண்டிருந்தான்.

அவள் பார்வையை உணர்ந்த வருண், என்ன பார்க்கிற பாரதி? யாராவது உனக்கு சப்போர்ட்டுக்கு வருவார்களானா? இன்னைக்கு உன்ன நான் எதுவும் தொந்தரவு செய்யலையே,வி ளையாடத்தன கூப்பிடேன். அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு யோசிக்கற. ஒரு கேம் ஆடி என்ன ஜெயிச்சுடு இனி உன் வழிக்கு நான் வரலை, இல்லனா பாக்குறப்ப எல்லாம் ஓட்டுவேன். நீ ஒவ்வொரு டைமு சப்போர்ட்டுக்கு ஆள் தேடணும் யோசிச்சுக்கோ என்று அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.

நான் ஜெயிச்சுட்டா இவ்வளவு நேரம் என்ன கிண்டல் பண்ணுனதுக்கு என்கிட்ட நீங்க சாரி சொல்லணும் சரியா? என்று கோபத்தோடு கேட்டாள் பாரதி. கால்ல விழுந்து மன்னிப்பு கேட்குற என்ன ஜெயிச்சுக்காட்டு என்று அவளிடம் சவால் விட்டான் வருண்.

வேகமாக தனது அறைக்கு சென்று விளையாடுவதற்கு தயாராகி கையில் ராக்கெட்டோடு வந்தாள் பாரதி. ஹாலில் அமர்ந்திருந்தவர் அவளை விழி அகல பார்த்தார்கள். அவள் மீண்டும் அவ்வளவு எளிதில் கையில் ராக்கெட் எடுப்பாள் என்று யாரும் எதிர்பாக்கவில்லை.

அவர்கள் வீட்டின் பின்புறத்தில் பாரதிக்கென ஒரு கோர்ட் அமைத்திருந்தான் ஆதி. தற்போது குடும்பமே அங்கு கூடியிருந்தது. எதிரும்,புதிருமாக மோதிக்கொள்ள தயாராகிருந்தனர் இருவரும்.

கருவில் இருக்கும் போதிலிருந்து அறிமுகமான விளையாட்டு. என்னதான் சில மாத இடைவெளியென்றாலும் அவளுக்கு வெகு இலகுவாக கைவந்தது. ஆட்டத்தின் முதல் சுற்றில் மெத்தனமாக விளையாடிய வருண் அடுத்தடுத்து பாய்ண்ட்ஸை இழந்தான். ஆனால் விரைவில் பாரதியின் அனுபவத்தை உணர்ந்து கொண்ட வருண் சுதாரித்து கொண்டான்.

அதற்குப்பின் இருவரும் சரிக்கு சரியாக ஆடினார். சுற்றிருந்தவர்கள் இருவரையும் உற்சாகப்படுத்தினார். குட் சர்வ் பாரதி என்று மாயாவும், கமான் வருண் பியூட்டிபுல் ஸாட் என்று ஆதியும் மாற்றி மாற்றி கமெண்ட் செய்தனர். பாரதி கவனத்தில் எதுவும் பதியவில்லை.அவள் எண்ணம் முழுவதும் ஜெயிப்பதில் மட்டுமேயிருந்தது. இந்த குறுகிய காலத்தில் அவள்பட்ட வேதனை, கஷ்டம், அனுதாப பார்வைகள், ஆறுதல்கள் என அனைத்திலும் ரணமாயிருந்த மனதிற்கு இந்த வெற்றி மிக அவசியமாக அவளுக்கு தேவைப்பட்டது. மூன்று செட்டுகள் விளையாடி 20-20 என்று பாயிண்ட்ட்ஸில் இருந்த இருவரில் யாருக்கு வெற்றி என்று அனைவரும் ஆவலோடு பார்த்திருக்க, அடுத்தடுத்து இரண்டு சர்வ் வருணால் எடுத்து ஆடமுடியாத அளவுக்கு அடித்து வெற்றியை தனதாக்கினால் பாரதி.

அனைவரும் கத்தி கூச்சலிட ராக்கெட்டை கீழே போட்ட பாரதி கோர்ட்டிலேயே மடங்கி அமர்ந்து அழ தொடங்கினாள். இதுவரை தனக்குள்ளே ஒடுக்கி போயிருந்தவளுக்கு அந்த அழுகை அவளுள் இருந்த ஆற்றாமை, வேதனை, வலி அனைத்தையும் வெளியே தள்ளுவதாக இருந்தது. அழும் தன் மகளை பார்த்து வேகமாக அவளிடம் சென்று அவளை கட்டிக்கொண்டான் ஆதி. அதுவரை அதியிடம் தள்ளி நின்றே பேசிக்கொண்டிருந்தவள், அவனை கட்டிக்கொண்டு அழுதாள். அப்பபாயென்னலா முடியும்ப்பா, ஐ கேன் பிளே, நான் வீக் இல்ல, என்னால முடியும் என்று அழுகையோடு சொன்ன மகளை மேலும் இறுக்கமாக அனைத்துக்கொண்டவன், கண்டிப்பா பேபி கேர்ள் உன்னால முடியும் என்று கூறும் போது அவனுக்கும் கண்கள் கலங்கியது. அவர்களை பார்த்த அனைவருக்கும் கண்கள் கலங்கியது. மகள் தன்னிடமிருந்து விலகாமல் இருந்தது ஆதிக்கு மன அமைதியை கொடுத்தது. அதை அவன் முகத்தில் படித்த சஞ்சனாவிற்கு நிம்மதியாக இருந்தது.

அதன்பின் பாரதியை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றனர். அனைவரும் சற்று இயல்புக்கு வந்த பிறகு பாரதியிடம் வந்த வருண், ஐயம் சாரி பாரதி என்று  கூறி அவள் காலில் விழப்போனவனை தடுத்த பாரதி வேண்டாம், சாரி வேண்டாம், அதற்கு பதிலா ரெகுலரா ப்ராக்டிஸ் பண்ண வருவீங்களா என்று பாரதி கேட்க, அடிக்க ஒரு அப்பாவி கிடைச்சுட்டானு வெச்சு அடிக்கலானு முடிவு பண்ணிட்டியா என்று அவன் பாவம் போல் கேட்க,அனைவரும் சிரிக்க தொடங்கினர். சிரிக்க மறந்திருந்த பாரதி முகத்தில் கூட சிறு புன்னகை தோன்றியது.

பாரதி அதனுடே அவளது அறைக்கு சென்றுவிட்டாள், மாயாவும் அவளுடனே சென்றாள். அவர்கள் சென்றதும் வருணிடம் சென்ற ஆதி, தேங்க்ஸ்  வருண் பாரதிய பழைய மாதிரி மாத்துறதுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம குழம்பிப்போய் இருந்தோம். நீ அவளை திரும்ப பேட்மிட்டன் விளையாட வெச்சிருக்க, ரொம்போ தேங்க்ஸ்.

அய்யோ அங்கிள், எனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்ரீங்க இது நான் ஆன்ட்டியோட ரிசெர்ச் பேப்பர்ல படிச்சதுதான் அப்ளை பண்ணி பார்த்தேன். என்னால பாரதிக்கு ஒரு ப்ராப்ளம் வந்தபோது எவ்வளோ ஸ்மார்ட்டா ஹேண்டில் பண்ணீங்க, இப்ப என்ன செய்றதுன்னு தெரியலைனு சொல்ரீங்க. நீங்க ரெண்டு பேரும் எமோஷனல்லா லாக்காகி இருக்கீங்க. பிசினெஸ்மேன் ஆதியா யோசிச்சுப்பாருங்க, டாப் சைக்காலஜி ரிசெர்ச் ரைட்டர் சஞ்சனாவா யோசிச்சுப்பாருங்க, உங்கனால பாரதிக்கு ஹெல்ப் பண்ணமுடியும்.

இருட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சஞ்சனாவிற்கு, ஆதிக்கும் ஏதோ தெளிவு கிடைச்சது போல இருந்தது. அனுராதாவிற்கு மகனை நினைத்து பெருமையாக இருந்தது.

இந்த மாற்றம் தொடருமா? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்…..

-நறுமுகை

26

No Responses

Write a response