New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்- 22

பாரதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள். மயக்கத்திலிருந்து எழுந்த சஞ்சனா, பாரதியை பார்க்க வேண்டும் என்று பண்ணிய கலாட்டாவில் அவளுக்கு ஊசிபோட்டு மயக்கப்படுத்தினர். எதையும் உணரமுடியாத நிலையில் இருந்தான் ஆதி. சுற்றி இருந்த சொந்தங்கள் இன்னும் ஏற்பட்ட அதிர்ச்சி குறையாத நிலையில் இருந்தனர். தீடீரென பாரதி கத்தும் சத்தம் மருத்துவமனை வராண்டா முழுவதும் கேட்டது.

என்ன விடுங்க கிட்ட வராதீங்க அம்மா, அம்மா யாரு வராதீங்க என்று அவள் கதறிய குரல் மருத்துவமனை முழுவதும் கேட்டது.

பாரதி குரல் கேட்டு தன் நிலைக்கு வந்த ஆதி வேகமாக அவள் இருக்கும் அறைக்கு ஓடினான். அதே சமயம் மயக்கம் தெளிந்து கொண்டிருந்த சஞ்சனாவும் தன் மகள் குரல் கேட்டு தட்டு தடுமாறி அங்கு சென்றாள்.

அதற்குள் ஆதி பாரதியை நெருங்கி ரதிம்மா ஒண்னுமில்லடா என்று சமாதான படுத்தமுயல அவனை பார்த்தும் மிரண்டு கத்தினாள் மகள். அவன் மேலும் அருகில் செல்ல முயல வராதீங்க, வலிக்குது அம்மா வேண்டாம் என்று கத்திய மகளை பார்த்து உயிர் துடித்துப்போனான் ஆதி. தன் மகள் தன்னை பார்த்தே பயப்படுகிறாள் என்பதை அவனால் தாங்கிகொள்ள முடியவில்லை. அதற்குள் சஞ்சனா பாரதியிடம் போக அம்மா என்று கேவிக்கொண்டு அவளிடம் ஒன்றினால் மகள்.

சஞ்சனா அவளை சமாதானப்படுத்த அம்மா வலிக்குதும்மா, அம்மா, அம்மா என்று அரற்றும் மகளை தேற்றும் வழிதெரியாமல் அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். அதற்குள் மருத்துவர் பாரதிக்கு ஊசி போட அவள் மெதுவாக அமைதியாகி உறங்கி போனாள்.

அதேசமயம் வெளியே வந்த ஆதி அங்கிருந்த சுவற்றில் ரத்தம் வருமளவுக்கு அவன் கைகளை குத்தினான். அவனால் நடந்த, நடக்கும் எதையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது அளவுகடந்த கோவம் வந்தது அந்த கோவத்தை காட்டும் வழிதெரியாமல் தன்னையே காயப்படுத்திக்கொண்டிருந்தான். பாலகுமாரும், மருத்துவமனை சிப்பந்திகளும் சேர்ந்து அவனை தடுத்து அவனது கைக்கு கட்டுப்போட்டனர்.

வெகுநேரம் கழித்து வெளியில் வந்தாள் சஞ்சனா அனைவரும் அவளை சுற்றி கொண்டனர், பாரதி எப்படி இருக்க என்று கேட்க அவர்களை தாண்டி ஆதியிடம் சென்றவள், டாக்டர் நம்மகிட்ட பேசனுமாம் என்றாள்.

அவன் எதுவும் சொல்லாமல் அவளோடு நடந்தான். டாக்டர் அறைக்கு சென்றபின்பும் இருவரும் அவர்கள் நிலையில் உறைந்து போயிருந்தனர். டாக்டர் பலமுறை அழைத்தபின்னே இருவரும் சுயநினைவுக்கு வந்தனர்.

அவர்களை பார்க்கும்போது டாக்டருக்கு வருத்தமாக இருந்தது, இதில் தான் சொல்லப்போற விஷயத்தை இவர்கள் தாங்குவார்களா?? சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நினைத்த டாக்டர் பேச தொடங்கினார்.

இங்க பாருங்க நீங்க இருக்க நிலைமை எனக்கு புரியுது, ஆனா இப்ப இதை பேசிதான் ஆகனும் எனக்கு வேற வழியில்லை. பாரதிக்கு ஏற்பட்டு இருக்குறது ரொம்போ மோசமான அனுபவம், அவளை மிருகம் மாதிரி வேட்டையாடி இருக்காங்க. பாரதியோட யூட்ரஸ் பியூபெர்ட்டிக்கு தயாராகிட்டு இருந்த சமயத்துல இப்படி நடந்திருக்கு, அதுனால அவளோட மொத்த ரீப்ரோடக்டிவ் ஆர்கன்ஸ் ரொம்போ டேமேஜ் ஆகியிருக்கு, நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணியும் இன்டெர்னல் ப்ளீடிங் நிறுத்த முடியலை. இந்த பீல்ட்ல சிட்டில டாப்ல இருக்க டாக்டர்ஸ் கிட்ட எல்லாம் கன்ஸல்ட் பண்ணிட்ட யூட்ரஸ் ரிமூவ் பண்றது தவிர வழியில்லை அப்படியே விட்ட பாரதி உயிருக்கே ஆபத்தாகிடும். எனக்கு தெரியும் நீங்க எந்த முடிவும் எடுக்குற நிலையில இல்லைனு ஆனா உங்க கையெழுத்து இல்லாமல் என்னால எதுவும் செய்ய முடியாது என்று கூறி தயக்கமாக அவர்கள் முகம் பார்த்தார் டாக்டர்.

எங்க கையெழுத்து போடானும் என்று கேட்டான் ஆதி. சஞ்சனா எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தாள். டாக்டர் டாக்குமெண்ட் எடுத்துக் கொடுக்க இயந்திரமாக கையெழுத்து போட்டான் ஆதி. வேற எந்த கேள்வியும் கேட்காமல் இருவரும் வெளியில் வந்தனர். அவர்களுக்கு அனைத்து உணர்ச்சிகளும் மறுத்து போனதுபோல் இருந்தது.

காத்திருந்த குடும்பம் இவர்களிடம் என்ன ஆச்சு டாக்டர் என்ன சொன்னாங்க, பாரதி எப்படி இருக்க என்று கேட்க ஆதி மெதுவாக டாக்டர் சொன்னதை கூறினான். கற்பகம் பெருங்குரலெடுத்து அழுக தொடங்கினார். இப்படி கொடுமையான நிலையில இவள பாக்குறதுக்கு இவ செத்தே போயிருக்கலாம். இனி அவளுக்குனு என்ன இருக்கு, அவ வாழ்க்கையே முடிஞ்சு போச்சு, குடும்ப மானம் மரியாதை எல்லாம் போச்சு…….

போதும் நிறுத்துங்க என்று பெண்சிங்கமாக கர்ஜித்தார் கிருஷ்ணவேணி. என்னம்மா பேசுறீங்க பெரியவங்க பேசுற பேச்ச இது, செத்திருந்த பரவாலனு சொல்ற அளவுக்கு என்னோட பேத்தி என்ன தப்பு செஞ்ச. வார்த்தை பார்த்து வரணும் என்னவேனா பேசலா யாரு கேட்க மாட்டாங்கனு கிடையாது என்று கூறியவர் சஞ்சனாவிடம் திரும்பினார்.

நான் வளர்த்த பொண்ண நீ, அன்னைக்கு உன்ன ஒருவார்த்தை தப்ப பேசிட்டாருனு அவ்வளவு உறுதியா எதிர் நின்ன, இன்னைக்கு உன்னோட பொண்ண செத்திருந்த பரவாலனு பேசுறாங்க கேட்டுட்டு சும்மா இருக்க. ஏன் நீயே அப்படி நடந்து இருந்த பரவாலனு நினைக்குறியா என்ற கேள்வியில் துடித்து நிமிர்ந்தாள் சஞ்சனா.

என்னம்மா பேசுற நான் எப்படி அப்படி நினைப்பேன், இந்த நிலமையில அவங்க கூட நான் சண்டையா போடமுடியும்.

போடனும் இவங்க கூட மட்டுமில்லை, எந்த தப்பு செய்யாத நம்ம பொண்ண இனி எல்லாரும் ஏதோ பெரிய பாவம் பண்ணிட்ட மாதிரி பேசுவாங்களே அவங்க எல்லார் கூடயும் நீ சண்ட போட்டுத்தான் ஆகனும். இல்லைனா தான் வாழுறது தப்பு போலனு பாரதிய நினைக்க வெச்சுடுவாங்க.

அவளுக்கு நடந்தது ஒரு விபத்து தப்பு செஞ்சவ எங்கயோ வெளியில நிம்மதிய சுத்திட்டு இருக்கப்ப என் பேத்தினால குடும்ப மானம் போச்சுன்னு பேசுறத பாத்துகிட்டு நான் சும்மா இருக்க மாட்ட. அவளுக்கு தைரியம் சொல்லி இந்த சமூகத்தோட அழுக்கு படிஞ்ச பேச்சுக்கு அவள பலிகொடுக்காம பாத்துக்க முடியுனா சொல்லி இல்லையா பாரதிய என்கிட்ட கொடுத்துடு, அப்பா இல்லாம உன்னயும், உங்க அண்ணனையும் பாத்துக்கிட்ட என்னால என்னோட பேத்திய தனிய வளர்த்த முடியும்.

சும்மா நிறுத்துங்கம்மா என்னமோ உங்களுக்குத்தான் அக்கறை இருக்க மாதிரி, அப்படி காப்பாத்தி மட்டும் அவளுக்கு இனி வாழ்க்கையில என்ன இருக்கு என்று இரக்கமே இல்லாமல் கேட்டார் கற்பகம்.

என்னோட பொண்ணுக்கு வாழ்க்கையியில்லைனு முடிவு பண்ண நீங்க யாரு என்ற கேள்வி ஆதியிடம் இருந்து வந்தது.

என்னடா ஆதி என்ன இப்படி கேக்குற,

வேற எப்படி கேட்கனும் பெரியம்மா, நீங்க அவளுக்கு பாட்டி ஆனா நீங்க அப்படியா பேசுறீங்க நீங்களே இப்படி பேசுறீங்கனா மத்தவங்க எப்படி எல்லாம் பேசுவாங்க. அத்தை சொன்ன மாதிரி பாரதி என்ன தப்பு செஞ்ச அவளுக்கு எதுக்கு தண்டனை கொடுக்க பாக்குறீங்க. என்னோட பொண்ணு இப்பவும் எப்பவும் என்னோட வீட்டுக்கு இளவரசி தான். குடும்ப கௌரவம், குடும்ப மானம்னு கண்ணுக்கே தெரியாத உங்க சமூக கட்டமைப்புக்கு என்னோட பொண்ண இரையாக்க விடமாட்ட. அவளுக்கு அரண் மாதிரி இருந்து பாதுகாக்க நானும் அவளோட அம்மாவும் இருக்கோம் என்னோட பொண்ணு இதை கடந்துவருவ, இஷ்டம் இருந்த இங்க இருங்க இல்லைனா கிளம்புங்க என்று வாசலை நோக்கி கை நீட்டினான்.

இன்னும் எதுக்குங்க இங்க நின்னுட்டு இருக்கீங்க அதான் அவனுக்கு அவனோட பொண்டாட்டி குடும்பம் இருக்கே நம்ப எதுக்கு. 6 வருஷமா விட்டுட்டு போன பொண்டாட்டி இப்ப திரும்பி வந்ததும் நம்ப எல்லாம் முக்கியம் இல்லாம போய்ட்டோம். அவங்க அத்தை சொல்றதுதான் சரி நம்ப எல்லாம் தப்புனு ஆயிடுச்சு. நமக்கு என்ன சூடு சுரணை இல்ல. அம்மா அப்பா இல்லாத பையன்னு வளர்த்து ஆளாக்கியதுக்கு நல்ல மரியாதை கொடுத்துட்டப்ப போதும் நீயாச்சு உன்னோட குடும்பம் ஆச்சு என்னமோ பண்ணுங்க என்றுவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினார், குமரவேலும் எதுவும் சொல்லாமல் அவர்பின்னாடி சென்றுவிட்டார்.

அவங்க சொல்லி எதை செய்யலைனு இப்படி வார்த்தைகளை கொட்டிவிட்டு செல்கிறார்கள் என்று இருந்தது சஞ்சானவிற்கு.

ஒரு சம்பவம் வாழ்க்கையை எப்படி புரட்டி அடிக்குறது அம்மா, அப்பாவாக இருந்தவர்கள் அந்நியமாகி போனது ஆதிக்கு வேதனையாக இருந்தது.

மாப்பிள்ளை நான் இப்படி நடக்குனு நினைக்கல பாரதிய அப்படி பேசுறப்ப பாத்துகிட்டு அமைதிய இருக்க முடியலை மன்னிச்சுடுங்க என்று கைகூப்பினார் கிருஷ்ணவேணி,

வேகமாக அவர் கைபிடித்து இறக்கிய ஆதி அத்தை அடுத்து என்னனு புரியாம இருந்தோம், நீங்க பேசுனதுக்கப்புறம் தான் ஒரு தெளிவு வந்திருக்கு, உங்க அளவுக்கு நாங்க யாருமே யோசிக்கலை, பெரியம்மா பேசுனதை மனசுல வெச்சுக்காதீங்க. இப்ப நமக்கு பாரதிதான் முக்கியம், அவளுக்கு நாங்க அவசியம் எங்களுக்கு நீங்க அவசியம் என்றான், அவன் கூறியதை ஆமோதித்தாள் சஞ்சனா.

அதன்பின் அவர்கள் பாரதி கண்முழிக்க காத்திருந்தனர். எதிர்காலம் இருண்டு இருந்தாலும் ஒன்றாக இணைந்து அதை கடந்துசெல்வது என்று அந்த குடும்பம் முடிவு செய்தது.

பாரதியை இனி தனது வாழ்வை எப்படி எதிர்கொள்ள போகிறாள்? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்.

-நறுமுகை

2

No Responses

Write a response