என் வானவில்-46

என் வானவில்-46

எல்லோரும் அந்த வீடியோவைப் பார்த்து உறைந்து போய் நிற்க, தெய்வநாயகியம்மாவாலும் மித்ராவின் தாத்தாவினாலும் அவர்களது காதுகளில் கேட்டவைகளை நம்பமுடியவில்லை,

இப்படி கூடவே இருந்து குடும்பத்தையே அழித்தது தெரியாமல் அவர்களோடே உறவாடியிருக்கிறோம் என்று நினைத்து மித்ராவின் தாத்தா கார்மேகம் மிகவும் மனம் வெதும்பி போனார்,

அங்கிருந்த அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுக்க,

விஸ்வநாதனிடம் வந்த மித்ரா, என்ன மாமா இவ்வளவு நேரம் நான் பொய் சொன்னேன், சொத்துக்காக இப்படியெல்லாம் பேசுறேன்னு சொன்னிங்க இப்போ உங்க பையனே இவ்வளவு  பெரிய வாக்குமூலம் கொடுத்திருக்கார், இதென்ன பண்ண போறீங்க என்று கேட்க,

ரோஹித்தோ, என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு முழித்துக்கொண்டிருந்தான்,

ரோஹித்திடம் சென்ற மித்ரா, என்ன அத்தான் இப்படி மாட்டிக்கிட்டோமேன்னு முழிக்கிறீங்களா?  எப்படி ஜெனிஃபர் எனக்கு ஹெல்ப் பண்ணினாங்கனு யோசிக்கிறீங்களா? என்ன தான் நீங்க என்னை கல்யாணம் பண்ணி டிவோர்ஸ் பண்ணினாலும், அதுக்கு பிறகு நீங்க ஜெனிஃபரையும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல அப்டிங்குற உண்மையை நான் ஜெனிஃபர் கிட்ட சொன்னேன், சோ நான் சொன்னதை எல்லாம் செய்றதுக்கு அவங்க ரெடியாய்ட்டாங்க என்று சொல்ல, மேலும் அதிர்ந்து போயினர், விஸ்வநாதனும் ரோஹித்தும்,

தன்னை மறந்து விசுவநாதன், அது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க,

மாமா, நான் உங்களை நம்ப ஆரம்பிச்சுட்டேன், நீங்க சொல்றதை எல்லாம் நான் கேக்குறேன்னு, என்னைக்கு நீங்க நம்ப ஆரம்பிச்சிங்களோ அன்னையிலிருந்தே நீங்க யோசிக்கிறதிலிருந்து செய்றது வரை உங்க எல்லா திட்டமும் எனக்கு தெரியும், எப்படின்னு பார்க்குறீங்களா?

கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க இந்த கொஞ்சம் நாளில் அதாவது சொல்லப்போனால் இந்த ரெண்டு வருசமா கொஞ்சம் கொஞ்சமா உங்களை சுத்தி இருக்கிற ஆட்களை எல்லாம் மாத்தி வேற ஆட்களை வேலைக்கு வச்சிருக்கேன், உங்களை வச்சு தான் அதை நான் செஞ்சேன். இதுல இது தப்பா இருக்கு அது தப்பா இருக்குன்னு சொல்லி சொல்லி, உங்க மூலமாகவே உங்க ஆளுங்களை மாத்தி, எனக்கு சாதகமான ஆட்களை இங்க உட்கார வச்சேன், உங்க ட்ரைவர் முதல் கொண்டு உங்களுக்கு கீழ வேலை செய்யும் பியூன் வரைக்கும் எல்லாருமே என்னோட ஆட்கள்  தான்.

அதாவது நீங்க ரகசியம்னு நினச்சு பேசின எல்லாமே எனக்கு தெரியும், அப்படி என்ககு தெரிய வந்த விசயம் தான் நீங்க என்னை டிவோர்ஸ் பண்ணின பிறகு ஜெனிஃபருக்கு பதிலா மல்டி மில்லினியர் பொண்ணை உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணினது. அதுக்கு என்கிட்டே ஆதாரம் இருந்துச்சு அதாவது நீங்க அந்த மல்டி மில்லினியர அடிக்கடி போய் பார்த்தது, ரோஹித் அந்த பொண்ணைப் பார்த்து ஒருமுறை பேசியது, அந்த போட்டோஸ், இதெல்லாம் ஜெனிஃபர் கிட்ட கொடுத்தேன், ஜெனிஃபர் எனக்கு இந்த விடியோவை கொடுத்தாங்க என்று சொல்ல,

ரோஹித்தோ ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்க என்று கத்தினான்,

குட் ஜோக், நாங்க உங்களை ஏமாத்தினோமா? பொண்ணுங்களுக்கு என்ன தெரியும் எஸ்பெஷலி இந்த மித்ரா, ஜெனிஃபர் மாதிரியான ஆளுங்களை எல்லாம் ஈஸியா ஏமாத்திடலாம்னு உங்க கிட்ட ஒரு கால்குலேஷன் இருந்ததுல்ல அப்போ அதுக்கு பேர் என்ன, ஏமாத்துறது இல்லையா? புத்திசாலித்தனமா? என்று ஜெனிஃபர் கேட்க,

ரோஹித்திற்கும் விஸ்வநாதனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை,

அப்போது மித்ராவிடம், கார்மேகம் இது உனக்கு எப்படிமா தெரியும் என்று கேட்க? இத்தனை வருசமா இவங்க கூட இருக்கிற எனக்கே இதெல்லாம் தெரியலையே என்று சொல்ல,

தாத்தா நான் எப்படி இத்தனை வருஷமா என் அப்பா அம்மா யார்னு தெரியாம இருந்து, இப்போ தெரிஞ்சும் அவங்களுக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு தெரியாம முழிச்சிகிட்டு இருந்தேனோ, அதே மாதிரி இத்தனை வருசமா மகன் இறந்துட்டான்னு தெரிஞ்சும் அந்த இறப்புக்கு பின்னாடி என்ன காரணம்னு கூட தெரியாம நீங்க கஷ்டப்பட்டிங்களோ? அதே மாதிரி, இவங்களை பத்தி உண்மை எல்லாம் நான் எப்படி தெரிஞ்சுக்கிட்டேன்னு இவங்களுக்கு தெரியாமலே போகட்டும் இவங்களை போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிட்டு  அதுக்கு பிறகு நான் எப்படி தெரிஞ்சுக்கிட்டேன்னு உங்களுக்கு நான் சொல்றேன், என்று சொல்ல,

விஸ்வநாதனோ இந்த வீடியோ எல்லாம் கோர்ட்ல செல்லவே செல்லாது. நாங்க தான் கொலை செஞ்சோம்னும், என் பையன் தான் உன்னை ஏமாத்த பாத்தன்னும் எப்படி நீ நிரூபிக்கலாம்னு இருக்க,என்று கேட்க,

கரெக்ட் தான், இதெல்லாம் கோர்ட்ல எடுபடாது ஆனால் எடுபடுற மாதிரியான எவிடென்ஸ் எங்ககிட்ட இருக்கு,

ஹ்ம்ம் எங்க போலீசை கூப்பிட போன ஆளை இன்னும் காணோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே போலீசுடன் உள்ளே நுழைந்தான் பிரகாஷ்,

அங்கு பிரகாஷைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைய, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தது பிரகாஷின் நண்பர்களான ராமும் சுஜியும் மட்டும் தான்,

சுஜியிடம் வேகமாக வந்த அபி, அக்கா இதெல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அதனால் தான் என்னை பேசாம கல்யாணத்துக்கு வா வான்னு  சொன்னிங்களா? என்கிட்டே முன்னாடியே சொல்லிருக்கலாம் இல்ல, என்று கேட்க,

சுஜியோ அபியைப் பார்த்து புன்னகைத்தாள்.

உள்ளே வந்த பிரகாஷ் நேராக மித்ராவிடம் வந்து, என்ன மித்து டைமுக்கு வந்துட்டேன் இல்ல?  என்று கேட்க,

பேர்ஃபெக்ட் டைமிங் சத்யா என்று கூறியவள், மாமாக்கு நம்மகிட்ட என்னென்ன ப்ரூஃப் எல்லாம் இருக்கு அப்ப்டிங்கிறதுல்ல ஒரு சின்ன டவுட் இருக்கு, நீங்க தெளிவுபடுத்திறீங்களா, என்று கேட்டாள்.

ஓஹ் அதுக்கென்ன, பண்ணிடலாமே என்று நக்கலாக கூறியவன்,

சார் இந்த வீடியோ கோர்ட்ல எடுபடாதுன்னு எங்களுக்கும் தெரியும், இந்த வீடியோ மார்ஃபிங், போட்டோ ஷாப்பிங்னு எல்லாம் வந்தபிறகு இந்த மாதிரியான எவிடென்ஸ் எல்லாம் சாதாரண ஒரு லாயர் கூட கோர்ட்ல அடிச்சு பேசி காலி பண்ணிட முடியும் என்கிற அளவுக்கு கூடவா எங்களுக்கு அறிவு இருக்காது,

ஆனால் நீங்க லாங் லாங் எகோ சோ லாங் எகோ கிட்டத்தட்ட இருபது வருசத்துக்கு முன்னாடி கொலை பண்ணுவதற்காக சில பேரை பயன்படுத்தினீங்க இல்ல அவங்க வாக்குமூலம் கோர்ட்ல செல்லுமே என்று சொல்ல, விஸ்வநாதன் மொத்தமாக அடங்கி போனார்,

எப்படி தப்பானது, எந்த இடத்தில் மித்ராவிடம் நாம் மாட்டினோம் இவள் ஒன்றும் தெரியாதவள், இவளை எப்படி வேணும்னாலும் ஏமாத்திடலாம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க, இப்படி இவள் தன் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தையே அடித்து காலி பண்ணுவாள் என்று எப்படி உணராமல் போனோம், என்று உறைந்து போயிருந்தார்,

அப்போது அங்கிருந்த போலீசிடம் சார் இவங்க ரெண்டு பேர் தான், பையனுக்கு அந்த கொலை கேஸ்ல எந்த சம்பந்தமும் இல்ல, ஆனால் அப்பா கொலை பண்ணினது தெரிஞ்சும் அதை மறைக்க இவர் உடந்தையா இருந்திருக்கார்.

விஸ்வநாதனுக்கு கொலை செய்ய அப்போ உதவியா இருந்த அந்த அடியாட்கள் மாஜிஸ்திரேட் முன்னாடி அப்ரூவரா மாறிட்டாங்க, அந்த டீடெயில்ஸ் எல்லாம் ஆல்ரெடி நான் சப்மிட் பண்ணிட்டேன். அதே போல இந்த கேசட்டோட காப்பியும் உங்களுக்கு கொடுத்திருக்கேன். இப்போ நீங்க இவங்களை கூட்டிட்டு போனீங்கன்னா நாங்க மற்ற வேலைகளை பார்ப்போம் என்று பிரகாஷ் சொல்ல,

போலீசோ, கண்டிப்பா சார் அதுக்கு தானே வந்திருக்கோம். கொலை செஞ்சிட்டு சாதாரணமா தப்பிச்சுடலாம்னு இவங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் நினைக்குறதுனால தான் எங்களுக்கெல்லாம் மரியாதையே இல்லாம போய்டுச்சு, இவ்வளவு தூரம் இதை கண்டுபிடிச்சு அதற்காக இத்தனை ஆதாரங்களையும் கொடுத்திருக்கிங்க இவங்கள கண்டிப்பா நாங்க தப்பிக்க விடமாட்டோம், என்று  சொல்லி அவர்கள்  இருவரையும் கைது செய்து கூட்டி சென்றனர்,

யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் விஸ்வநாதனும் ரோஹித்தும் சென்றுவிட,

அங்கிருந்த உறவினர்களைப் பார்த்து பேச தொடங்கினாள் மித்ரா இத்தனை வருஷம் என் அப்பா அம்மா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டது மட்டும் தான் உங்களுக்கு தெரியும், அதுக்குப்பிறகு அவங்க என்ன ஆனாங்க? நான் எப்படி இங்க வந்தேன்? இப்படி பல கேள்விகள் உங்க எல்லாருக்குமே இருந்திருக்கும். எல்லாருடைய கேள்விக்கும் பதில் சொல்லணும்னு தான் உங்க எல்லோரையும் இங்க வர வச்சு இந்த விஷயத்தை நான் சொன்னேன்.

இவ்வளவு தூரம் வந்ததுக்கு உங்க எல்லோருக்கும் நன்றி ரெண்டு நாள் கழிச்சு மறக்காம கல்யாணத்துக்கு வந்துடுங்க என்று சொல்ல,

அனைவரும் கல்யாணமா? என்று ஆச்சர்யமாக பார்க்க,

தெய்வநாயகியோ என்னமா சொல்ற? என்று கேட்டார்,

ஆமா பாட்டி ரெண்டு நாள் கழிச்சு கல்யாணம் இருக்குல்ல, என்று கேட்க,

யாருக்கு? என்று மித்ராவின் தாத்தா மித்ராவிடம் கேட்டார்,

எனக்கு தான் தாத்தா என்றாள்,

மாப்பிள்ளை யார் என்று அவர் கேட்டு முடிப்பதற்குள்,

தெய்வநாயகி “சத்யபிரகாஷ்” என்று கூறினார்,

வேகமாக அவரிடம் வந்த சுஜி பெர்ஃபெக்ட் பாட்டி சரியா சொல்லிட்டீங்க என்று சொல்ல,

மித்ரா அவளின் தாத்தாவை பார்க்க

அவர், நீ உன் மனசு போல சந்தோசமா இருக்கனும்மா எனக்கு அது தான் வேணும், நீ போதும் என்கிற அளவுக்கு உன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுட்ட இனியாவது சந்தோஷமா இரு என்று கூற,

தேங்க்ஸ் தாத்தா என்று கூறி அவரைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.

அதன் பின் அங்கிருந்த அனைவரையும் இரண்டு நாட்கள் கழித்து திருமணத்திற்கு வருமாறு பெரியவர்கள் இருவரும் முறைப்படி அழைத்து,  அனைவரையும் அனுப்பி வைத்தனர்,

மித்ராவிற்கு இந்த விஷயம் தெரிந்தது எப்படி,? வெளிநாடு சென்ற பிரகாஷ் எப்படி இங்கு வந்து சேர்ந்தான்? பிரகாஷிற்கு எப்போது உண்மை தெரிய வந்தது? இதை எல்லாம் அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”…….

-நறுமுகை

5

No Responses

Write a response