என் வானவில்-37

என் வானவில்-37

தேனியில் மறுநாள்  எப்பொழுதும் போல அதிகாலையில் எழுந்த மித்ரா என்ன   செய்வது என்று தெரியாமல் தன் அறையையே சுற்றி வந்தாள். பின்னர் அறையின்  ஜன்னல் வழியே வெளியில் பார்த்தவள் சுற்றி தெரிந்த வயல் வெளியின் அழகில் தன்னை மறந்தாள். என்ன தான் மித்ரா வளர்ந்தது திருச்சியில் என்றாலும்  வீடு, வீடு விட்டால் ஸ்கூல், ஸ்கூல் விட்டால் வீடு என்று இருந்தாள். அதிகபட்சமாக அவளை மலைக்கோயிலுக்கு போக மட்டுமே அவளது சித்தி அவளுக்கு அனுமதி  கொடுத்திருந்தார்.  எனவே வால்பாறை சென்ற போது அந்த மலைஸ்தலமும் அதன் அழகும் அவளை ஈர்த்தது. அதே போல் இன்றும் இந்த வயல் வெளிகளும் பச்சைப்பசேல் என்று செழித்திருந்ததைக் காண அவளுக்கு மிகவும் உற்சாகமாய் இருந்தது.

நேற்று வந்த போது இருந்த நிலை மாறி சற்று இலகுவாக உணர்ந்தவள் தன் அறையில் இருந்து கீழே சென்றாள். வால்பாறையில் சற்று உடல் நிலை சரியானதும் தானாகவே எழுந்து கோலம் போட்டதும் வீட்டு வேலைகள் செய்தது போல இங்கு அவளுக்கு ஒட்டவில்லை.

என்ன தான் பிரகாஷ் அனைவரையும் நல்ல கண்ணோட்டத்துடன்  பார்க்க சொல்லியிருந்தாலும்உள்ளுக்குள் எதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.

அவள் கீழே வரும்போது எதிர்ல வந்த அந்த வீட்டின் சமையல்காரப்  பெண்,மித்ராவிடம் அம்மா  பெரிய அய்யா உங்களுக்கு காஃபி கொடுக்க சொன்னாங்க என்று நீட்டினாள்,

அதை ஒரு நன்றி சொல்லி வாங்கி கொண்டவள் உங்கள் பெரிய அய்யா எங்கே என்று கேட்டாள்?

அவர் பின்னால் இருக்கும் கிணத்தடியில் இருக்கிறார் என்று சொன்னதும்,

தனது தாத்தாவைத் தேடிக்கொண்டு அவள் கிணத்தடிக்கு சென்றாள். அவர் மட்டுமே அந்த வீட்டில் அவளிடம் பேசுபவர், அங்கு பண்ணையாட்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்,  தனது பேத்தி வருவதைக் கண்டதும் என்னம்மா நைட் நல்லா தூங்கினியா? என்று கேட்க,

ஹ்ம்ம் என்று மட்டும் தலை அசைத்தாள்.

இன்னும் அவளுக்கு தாத்தா என்று அழைக்க இயல்பாக வரவில்லை. அதே  நேரம் அங்கு ரோஹித் வர,

என்ன மித்ரா நைட் நால்லா தூங்கினியா?  தேனி உனக்கு பிடிச்சிருக்கா? என்று கேட்க,

அவனிடம் பதில் எதுவும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ரோஹித்திற்கு கோபமாக வந்தது, தாத்தா இருப்பதால் அதைக் காட்டிக்கொள்ளாமல் உனக்கிட்ட தான் மித்ரா கேட்கிறேன் என்றான்,

நான் உங்க கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் என் பெயர் சங்கமித்ரா, இந்த மித்ரான்னு செல்ல பேர் வச்சி கூப்பிடுற வேலை எல்லாம் வேணாம்,

ரோஹித்தோ, நான் ஏன் உன்னை அப்படி கூப்பிட கூடாது? யார் யாரோ உன்னை அப்படி  கூப்பிடுறாங்க நான் உனக்கு சொந்தம் தானே என்று சொல்ல,

திடீரென முந்தாநாள் குதிச்சு நீங்க வேணும்னா சொந்தம்னு சொல்லிக்கலாம் ஆனால் என்னால் அதை ஒத்துக்கொள்ள முடியாது. சங்கமித்ரான்னு கூப்பிட்டு பேசுறதுனா பேசுங்க இல்லைனா நீங்க என்கிட்டே பேசவே வேண்டாம். அது இன்னும் சந்தோசம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெடுக்கென சென்றுவிட்டாள்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த மித்ராவின் தாத்தாவிற்கு வருத்தமாக இருந்தது. பேத்தி வீட்டில் யாரிடமும் ஒட்ட மாட்டிக்கிறாளே என்று நினைத்தவர் இதை எப்படி மூன்று மாதத்திற்குள் சரி செய்வது கவலைப்பட்டார்.

ஆயிரமாவது முறையாக ரோஹித்தும் விஸ்வநாதனும் சொன்னதை கேட்டு விழா அன்று அங்கு சென்றிருக்க கூடாதோ? பின்னர் மெதுவாக சென்று தன்மையாக பேசி மித்ராவை இங்கு அழைத்து வந்திருக்க வேண்டுமோ? என்று அவர் நினைத்துக்கொண்டார்.

ஒரு வாரம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக சென்றது,

மித்ரா அந்த வீட்டில் இருப்பதே தெரியாத அளவுக்கு அவள் அறையிலேயே முடங்கி இருந்தாள். அவளது தாத்தா மட்டுமே அவளைத் தேடி சென்று பேசுவார். அதை  மீறி பேச வரும் ரோஹித்தை மித்ரா மதிப்பதே இல்லை.

மித்ரா இவ்வாறு அவனை தவிர்க்க தவிர்க்க, ரோஹித்தின் கோபம் பிரகாஷின் மீது திரும்பியது. அவன் விஸ்வநாதனிடம் பொரிந்து தள்ள, விஸ்வநாதனோ, நீ ஒன்னும் கவலை படாத ரோஹித் பிரகாஷிற்கு நான் வேற ஏற்பாடு பண்ணிட்டேன் என்று சொல்ல,

ரோஹித்தோ என்னவென்று தன் தந்தையின் முகத்தை ஆவலாக பார்த்தான்.

அதே நேரம் இங்கோ மீண்டும் பணிக்கு திரும்பிய பிரகாஷிற்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. லண்டனில் இருந்து விடுமுறைக்கு வந்துவிட்டு உரிய காரணம் சொல்லாமல் இங்கேயே தங்கி விட்டதால் பிரகாஷை வேலையில் இருந்து நீக்கியிருந்தனர். மேலும் அவன் சரியாக வேலை செய்யாதது போல மிகவும் மோசமாக அவனுக்கு செர்டிபிகேட் கொடுத்திருந்தனர் அதைக் கண்டு பிரகாஷ், சுஜி, ராம் மூவரும் அதிர்ந்து போயினர்.

பிரகாஷிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை தன் மீது மிகவும் நம்பிக்கை வைத்து தன்னை படிக்க வைத்த தன் பெற்றோரிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இதைப் பற்றி சொல்வது என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் அவ்வாறு யோசித்துக்கொண்டிருக்க

சுஜியோ, பிரகாஷ் நீ ஏன் இதை பாட்டிகிட்ட சொல்லக்கூடாது? நீ பாட்டி எஸ்டேட்லயே ஒர்க் பண்ணலாம் இல்லையா? என்று கேட்க,

இல்லை சுஜி அது சரியா வராது  இது வரை பாட்டிக்கிட்ட நான் எதுவும் வேணும்னு கேட்டதே இல்லை. எனக்கு அவங்க அன்பு மட்டும் போதும் இப்போ போய் நான் இதுக்காக நின்னா இவ்வளவு நாள் பழகினதே ஒரு ஆதாயத்துக்காக என்று ஆகிவிடும் என்று கூறினான்.

ராமோ, பிரகாஷ் எனக்கென்னவோ இதுக்கு பின்னாடி மித்ராவின் அப்பா வீட்டை சேர்ந்தவங்க இருக்காங்களோன்னு தோணுது என்று கூற,

சுஜியோ, என்னடா நேரம் கெட்ட நேரத்தில சம்மந்தமே இல்லாம எதையோ சொல்லிக்கிட்டு இருக்க, என்று கேட்டாள்.

இல்லை நீ நல்லா யோசிச்சு பாரு மித்ரா யார் என்னனு தெரியுற வரைக்கும் யாருக்குமே எந்த பிரச்சனையும் வரல, ஆனால் மித்ரா யார் என்னனு தெரிஞ்ச பிறகு பிரச்சனைகள் வர தொடங்கியிருக்கு, குறிப்பா அவங்க அப்பா வீட்டை சேர்ந்தவங்க மித்ராவைத் தேடி வர ஆரபிச்ச பிறகுதான்  பிரகாஷுக்கு பிரச்சனை ஆரமிச்சது,

திடீரென மித்ராவின் சித்தி பிரகாஷ் வீட்டில சத்தம் போட்டதும், இப்போ பிரகாஷுக்கு சம்மந்தமே இல்லாம வேலை போனதும் எனக்கென்னவோ இதெல்லாம் மித்ராவோட அப்பா குடும்பம் சம்மந்தம் பட்ட விஷயம்னு தோணுது என்று கூற,

சுஜியோ, நீ சொல்றது சரியா இருந்தா மித்ராவை இன்னும் அங்கு விட்டு வைக்கிறது நல்லது இல்லை, என்று கூறினாள்.

பிரகாஷோ சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, நீ செல்றது உண்மையாகவே இருந்தாலும் மித்ரா அங்க தான் இருக்கணும், என்று சொல்ல,

நீ என்ன லூசா? என்று கேட்டான் ராம்.

இல்லடா மித்ரா அங்க சமாளிச்சிக்குவா  இந்த ஒரு வாரத்துல போன் பண்ணி போர் அடிக்குது சத்யான்னு சொன்னாளே தவிர இங்க அந்த பிரச்சனை இந்த பிரச்சனைன்னு அவ எதுவுமே சொல்லல,  அது போக ரோஹித் வர போக அவகிட்ட திட்டு வாங்கிட்டு இருப்பான் போல, அவங்க தான் இதை எல்லாம் செய்றாங்க அப்படின்னா அங்க இருக்கிற மித்ராவால் தான் இதை எல்லாம் கண்டுபிடிக்க முடியும் என்று கூறினான்.

நீ என்ன சொல்ற மித்ராவை ஸ்பை வேலை பார்க்க வைக்க போறியா? என்று சுஜி கேட்க,

கிட்டத்தட்ட அப்படி தான் இவர்கள், மித்ராவை நாம் அவங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டோம்னு இதை எல்லாம் செய்றாங்களா? இல்லை மித்ராவின் அம்மா அவளை அவங்க அப்பா வீட்டுக்கு போக கூடாதுன்னு சொன்னதுக்கான காரணத்தை மறைக்க தான் இவர்கள் இப்படி எல்லாம் செய்றாங்களா? என்று நாம கண்டுபிடிக்கணும்.

நம்ம யாராலும் அந்த வீட்டுக்குள்ள அவ்வளவு ஈஸியா போய் அங்கு இருக்கிறவர்களோடு பழக முடியாது. ஆனால் மித்ராவால் முடியும். இந்த கேள்விக்கெல்லாம் மித்ராவால மட்டும் தான் விடை கண்டு பிடிக்க முடியும். என்று பிரகாஷ் கூற,

சுஜியோ, மித்ரா சின்ன பொண்ணுடா அவளை போய் இதெல்லாம்…… என்று கவலையோடு கூற,

அதெல்லாம் ஒன்னும் இல்லை சுஜி மித்ரா இடத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாத்திப்பா அவளால் அங்கு என்ன நடக்குதுன்னு கண்டிப்பா கண்டு பிடிக்க முடியும். நீ அதை பத்தி ஒன்னும் கவலைப்படத என்றான்,

சுஜியும் ராமும் ஒரு வேலை பிரகாஷ் சொல்றது தான் சரியோ, மித்ராவால் அங்கிருந்து என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்க முடியுமோ சரி, என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம், என்று நினைத்தவர்கள் பிரகாஷிடம் , பிரகாஷ் மித்ராவுக்கு யாருக்குமே தெரியாமல் ஒரு போன் கொடுத்து அனுப்பியிருக்கியா? என்று கேட்க,

அதெல்லாம் எதுவும் கொடுத்து அனுப்பல என்று கூறினான்.

அப்போ சரி முதலில் அதை செய். அந்த வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் அவளிடம் ஒரு போனை கொடுத்து வை, அது அவளுக்கு ரொம்போ யூஸ் ஆகும். நீ சொன்னது மாதிரி அவளை அங்கு ஸ்பை வேலை பார்க்க வைக்க போற அப்படின்னா அவ கையில் இருக்கும் போன் மட்டும் போதாது, ஒரு வேலை இவை எதோ செய்கிறாள் என்று தெரிந்து அவர்கள் அவளை லாக் பண்ணிட்டா நம்மை கம்யூனிகேட் பண்ண அவளுக்கு ஒரு போன் இருக்கனும் என்று சொல்ல,

அதுவும் சரி தான் நான் அவளுக்கு ஒரு போனுக்கு ஏற்பாடு செய்கிறேன், அதுக்கு சரியான ஆள் மித்ராவின் தோழி அபி, அவளை வைத்து நான் அந்த போனை அவளுக்கு கொடுத்து அனுப்புறேன், என்று பிரகாஷ் கூற,

ஹ்ம்ம் அதுவும் சரி தான் என்று கூறிவிட்டு, இப்போ வேலைக்கு என்ன செய்வது? என்று ராம் கேட்க,

இப்போதைக்கு வீட்டுக்கு சொல்லப்போறதில்லை,  கோயம்பத்தூர்ல இருக்க அக்கா வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன், அங்கு மாமாகிட்ட சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கிறேன். எனக்கு தெரிஞ்சு நம்பிக்கையான ரெண்டே பெரு அவங்க தான் வேற யார்கிட்ட சொன்னாலும் எல்லாருக்கும் தெரிஞ்சிடும் என்று கூறினான்.

அதுவும் சரி தான் எப்போ கிளம்புற? என்று இருவரும் கேட்க?

நைட்டே கிளம்புறேன் என்றான் பிரகாஷ் .

சரி அப்போ நான் போய் உனக்கு டிக்கெட் அரேஞ்சு பண்றேன் என்று கூறிவிட்டு ராம் விலகி சென்றுவிட,

பிரகாஷோ யோசனையில் அமர்ந்திருந்தான்  ராம் சொல்வது போல மித்ராவை அங்கு விட்டுவைப்பது தவறோ என்று ஒருபுறம் யோசிக்க, இல்லை அங்கிருந்தால் தான் மித்ராவிற்கு தன் ஆதி என்ன என்று கண்டுபிடிக்க முடியும்  அதுக்கு அவ அங்கிருப்பது தான் சரி என்று அவனது இன்னொரு மனமும் அவனிடம் வாதிட தொடங்கியது,

பிரகாஷ் என்ன முடிவு எடுக்க போகிறான்? எதற்காக பிரகாஷை மித்ராவின் வாழ்க்கையில் இருந்து ரோஹித்தும் அவனது தந்தையும் விலக்க நினைக்கிறார்கள் என்பதை அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்…..

நறுமுகை

3

No Responses

Write a response