என் வானவில்-24

என் வானவில்-24

அன்று இரவு வழக்கம் போல வீடியோ காலில் அழைத்த பிரகாஷிடம், தனக்கு உடல் நிலை சரி இல்லை, தன்னால் பேச இயலாது என்று கூறிவிட்டாள் மித்ரா.

பிரகாஷ் லண்டன் சென்ற நாளில் இருந்து இதுவரை ஒருபோதும் மித்ரா இப்படி கூறியது கிடையாது.

மறுநாள் தேர்வே இருந்தாலும் கூட அவள் அவனிடம் பேசுவாள்.

இன்று திடீரென அவள் இப்படி கூறியது ஏனோ பிரகாஷிற்கு வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே கிஷோரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு இதுவும் அதுவும் சேர்ந்து குழப்பத்தைக் கொடுக்க சுஜிக்கு போன் செய்தான்.

அந்த நேரத்தில் பிரகாஷின் நம்பரை பார்த்தவள் என்ன பிரகாஷ் இந்த நேரத்தில் என்று கேட்க, பிரகாஷ் நடந்ததைக் கூறினான்.

ஒருவேளை உண்மையில் அவளுக்கு உடம்பு சரி இல்லையோ என்னவோ என்று சுஜி கூற,

இல்லை சுஜி என்ன ஆனாலும் அவள் என்னிடம் பேசுவாள் ஆனால் இன்று அவள் வீடியோ காலை அட்டென்ட் செய்யவே இல்லை.

வீடியோ காலை கட் செய்துவிட்டு நார்மல் காலில் வந்து எனக்கு உடல்நிலை சரி இல்லை நாளைக்கு பேசுகிறேன் என்று கூறிவிட்டாள் இது போல இதுவரை நடந்ததே இல்லை என்று பிரகாஷ் கூற,

சரிப்பா, நான் வேண்டுமென்றால் அழைத்து பேசவா என்று சுஜி கேட்டாள்.

இல்லை சுஜி நீ அவளது தோழி அபிராமிக்கு அழைத்து பேசு, அவள் ஒருமுறை அபி போன் நம்பரை எனக்கு கொடுத்திருந்தாள் இந்த நேரத்திற்கு நான் கூப்பிட்டு பேசினால் சரியாக இருக்காது, நீ கூப்பிட்டு பேசு, மித்ரா எதையோ நம்மிடம் மறைக்கிறாள் என்று பிரகாஷ் கூற,

கண்டிப்பாக இதை அபிராமி வரை கேட்க வேண்டுமா? எனக்கென்னவோ அவளுக்கு உடல்நிலை சரி இல்லை என்று தான் தோன்றுகிறது, என்று சுஜி கூற,

பிரகாஷோ தயங்கி,தயங்கி, நான் அன்றே கூறினேன் இல்லையா கிஷோர் பிரச்சனை வேறு எனக்கு உறுதிக்கு கொண்டே இருக்கிறது என்று கூறினான்.

சுஜியோ, நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் கிஷோரை மித்ரா காதலிக்கிறாள் அதனால் உன்னை அவாய்ட் பண்ணுகிறாள் என்று நினைக்கிறாயா?என்று கேட்க

இல்லை… அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இருந்தாலும் ஏதோ சரி இல்லை என்று படுகிறது நீ எதற்கும் அபிக்கு ஒருமுறை கால் செய்து பாரேன் என்று பிரகாஷ் கூற,

சரி என்று பிரகாஷிடம்  அபியின் எண்ணை வாங்கிகொண்டவள் அபிராமிக்கு அழைத்தாள்.

புது எண்ணை பார்த்த அபிராமி யோசித்துக் கொண்டே போனை எடுத்தாள்

சுஜி தன்னை பிரகாஷின் தோழி என்றும், மித்ராவை பற்றி பேசவேண்டும் என்றும் கூறி பேச தொடங்கினாள்.

அபிராமியே ஓஹ் சொல்லுங்க சுஜி அக்கா உங்களை பற்றி மித்ரா நிறைய பேசியிருக்கிறாள், என்ன இந்த நேரத்தில் அழைத்திருக்கிறீர்கள் மித்ரா நன்றாக இருக்கிறாள் இல்லையா? என்று கொஞ்சம் படபடவென  அபி பேச,

சுஜிக்கு இருந்த தயக்கமும் விலகியது. அவள் நன்றாக தான் இருக்கிறாள் ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் , கொஞ்சம் நாட்களாக மித்ரா ஒருவித குழப்பத்திலேயே இருக்கிறாளே அவளுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே எங்களிடம் ஏதும் கூறவில்லை, இருந்தாலும்……. என்று இழுக்க,

ஒரு நிமிடம் அமைதியாக இருந்த அபிராமி, அக்கா நான் சொன்னேன் என்று நீங்கள் மித்ராவிடம் சொல்லிவிடாதீங்க. கொஞ்சம் நாட்களுக்கு முன்னர் நீங்கள் தான் அவளிடம் யார், எப்படி பேசுகிறார்கள்? பழகுகிறார்கள்? என்று கவனிக்க சொன்னதாக அவள் கூறினாள். அப்படி கவனித்ததில் கிஷோர் சீனியர், அவளை ஆர்வமாக பார்ப்பதாக தோன்றியது அவளுக்கு,

என்னிடம் வந்து கூறினாள் நானும் அதை நோட் பண்ணினேன். அவள் கூறியது உண்மை தான். அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை, நாங்கள் அது தெரிந்தும் தெரியாதது போல இருந்துகொண்டோம். மித்ரா அதன் பிறகு கிஷோர் சீனியர் எஸ்டேட்டிற்கு வந்தால் கூட பேசுவதை அவாய்ட் செய்தாள்.

இப்போ கடைசியாக ஊருக்கு செல்லும்பொழுது கூட இரண்டு நாள் விடுமுறையில் எப்படியோ சமாளித்துக்கொண்டிருந்தேன், இப்போது போய் ஒன்றரை மாதங்கள் இருக்க வேண்டும் அடிக்கடி வந்தால் என்ன செய்வது என்று புலம்பிக்கொண்டே சென்றாள், நான் தான் அவளை கொஞ்சம் சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். ஒரு வேளை  அதனால் எதாவது பிரச்சனையாக இருக்கலாம், என்று கூற,

சுஜிக்கோ இவ்வளவு நடந்திருக்கிறது, இதை பற்றி மித்ரா தன்னிடமோ இல்லை பிரகாஷிடமோ எதுவும் கூறவில்லை என்பதே ஆச்சர்யமாக இருந்தது. அதை அபிராமியிடம் கேட்க தோணாமல், அபிராமி எனக்கு ஒரு உதவி செய்கிறாயா? நீ மித்ராவிற்கு போன் செய்து அப்படி ஏதாவது நடந்ததா என்று கேட்டு என்னிடம் கூறுகிறாயா? என்று கேட்டாள்.

சரி அக்கா நான் கேட்டுவிட்டு உங்களுக்கு அழைக்கிறேன் என்று கூறி போனை வைத்தவள்.

தன் தோழிக்கு அழைத்தாள்.

வெகு நேரம் ரிங் அடித்த பிறகே போனை எடுத்தாள் மித்ரா.

போனை எடுத்த மித்ரா அழுது ஓய்ந்திருந்த்தாள் மெல்லிய குரலில் சொல்லு அபி என்று கேட்டாள்.

உடனடியாக அவளது குரலில் வித்தியாசத்தை உணர்ந்தவள் என்ன ஆச்சு மித்ரா, உடம்பு சரியில்லையா வாய்ஸ் டல்லா இருக்கிறது  என்று கேட்க,

அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றாள் மித்ரா.

சும்மா என்னிடம் பொய் கூறாதே உன்னை எனக்கு தெரியாத? இப்போ நீயாக சொல்லப் போகிறாயா? இல்லை நான் பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்ளவா? என்று மிரட்ட,

அப்படி எல்லாம் ஒன்றும் செய்துவிடாதே என்று கூறியவள் அமைதியாக இருந்தாள்.

இப்போ என்ன நடந்தது என்று சொல்கிறாயா இல்லையா என்று அபிராமி வற்புறுத்த,

கிஷோர் வந்ததையும் பின் நடந்தவைகளையும் அபிராமியிடம் கூறியவள் மித்ரா அதற்க்கு அளித்த பதிலை மட்டும் அவளிடம் கூறாமல் மறைத்துவிட்டாள்.

அபியோ எஸ்டேட்டிற்கே வந்தா சீனியர் அப்படி சொன்னார் ரொம்போ தைரியம் தான், நீ இதைப் பற்றி பட்டியிடம் கூறினாயா? என்று கேட்க,

இல்லை என்றாள் மித்ரா.

சரி பிரகாஷிடமாவது கூறினாய் என்று அபி கேட்க,

நான் சத்யாவிடம் இன்று பேசவே இல்லை. எனக்கு உடம்பு சரி இல்லை என்று கூறிவிட்டேன்.

அவ்வளவு தூரத்தில் இருக்கார் நீ உடல்நிலை சரி இல்லை என்று அவரிடம் கூறினாள் அவர் என்னவோ எதோ என்று கவலைப்படுவார் இல்லையா? இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் கூறுவதில் உனக்கென்ன பிரச்சனை என்று அபி கேட்க,

இல்லை என்னைப் படிக்க வைக்க தான் அவர் கல்லூரியில் சேர்த்துவிட்டார் அதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று எனக்கு தெரியும். இப்போ நான் போய் காதல் அது இது என்று கூறினால் அவர் என்ன நினைப்பார் என்று கேட்க,

இதில் என்ன இருக்கிறது, நீயா லவ் பண்ணுகிறாய் யாரோ உன்னை காதலிப்பதை பற்றி அவரிடம் கூறப்போகிறாய், இது உன் பாதுகாப்பு தொடர்பான விஷயம், நாளைக்கே கிஷோர் சீனியர் ஏதாவது முட்டாள் தனமாக செய்தால் பிரகாஷிற்கு அந்த விஷயம் தெரிய வேண்டாமா?

நீயா லவ் பண்ணுகிறாய் என்று கேட்டதிலேயே மித்ராவின் மனம் உழன்றுகொண்டிருந்தது. ஆமாம் நான் தான் லவ் பண்ணுகிறேன் சத்யாவை, அதை சொல்ல முடியாமல் தான் நான் சத்யாவிடம் பேசாமல் அவாய்ட் பண்ணுகிறேன் என்று மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டிருந்தவள்,

அபி இன்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது இன்னும் இரண்டு நாட்களில் நான் அவரிடம் இதைப்  பற்றி கூறுகிறேன். என்று கூறினாள்

சரி என்னவோ பண்ணு, ஆனால் இது ஒரு விஷயம் என்று இதையே போட்டு நினைத்து கொண்டிருக்காதே, முதலில் போய் சாப்பிடு என்று கூறியவள் சிறிது நேரம் தோழியிடம் பொதுவாக பேசிவிட்டு போனை வைத்தாள்.

பின் சுஜியை அழைத்து நடந்தவைகளை கூற,

சுஜியோ இது என்னடா புது பூதம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சரி அபிராமி ரொம்போ தேங்க்ஸ் என்று கூறிவிட்டு இனி கிஷோர் விஷயமாக மித்ரா எதாவது கூறினால் எனக்கு தகவல் கொடு என்றாள்.

அபியோ கண்டிப்பாக அக்கா ஆனால் நான் சொன்னதாக அவளிடம் சொல்லிவிடாதீங்க என்று கூறியவள் போனை வைத்தாள்.

 சுஜி உடனடியாக பிரகாஷிற்கு அழைக்க,

அங்கு சுஜியின் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருந்தவன் போனை எடுத்து என்ன ஆச்சு? மித்ராவிற்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே என்று படபடப்புடன் கூற, மிகுந்த தயக்கத்திற்கு பிறகு சுஜி நடந்தவைகளை பிரகாஷிடம் கூறினாள்.

அதை கேட்டவன், ஓ அந்த அளவிற்கு சென்றுவிட்டதா? சரி அதற்கு இவள் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாள் என்று கேட்க

அது தான் அதற்கு அவளே காரணம் சொல்லி இருக்கிறாளே,

ஓ அப்படியும் இருக்கும், சரி நாளை அவள் என்னிடம் பேசுகிறாளா என்று பார்க்கிறேன் எனக்கும் இன்னும் ஒரு த்ரீ, ஃபோர் மன்த்தில் ஒரு கேப் கிடைக்கிறது, அவள் என்னிடம் பேசவில்லை என்றால் நான் ஊருக்கு வரும்பொழுது இதைப் பற்றி பேசுகிறேன்

நீ மட்டும் அபிராமியிடம் அப்பப்போ என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள். எதாவது பிரச்சனை ஆவது போல தெரிந்தால் உடனடியாக என்னிடம் சொல்லிவிடு, என்று பிரகாஷ் கூற,

சரி என்றவள் ஆர் யூ ஆல்ரைட் என்று பிரகாஷிடம் கேட்டாள் சுஜி.

அவளிடம் யாரோ பிரபோஸ் பண்ணியிருக்கான் நான் ஏன் கவலைப்பட வேண்டும், அவளுடைய சேஃப்டி மட்டும் தான் எனக்கு முக்கியம் என்று கூறியவன், சரி சுஜி நீ போய் தூங்கு என்று கூறி போனை வைத்தான்.

போனை வைத்தவனுக்கு அந்த புறம் உறுத்தலாகவே இருந்தது மித்ரா கூறிய காரணங்களையும் தாண்டி வேறு ஏதோ இருக்கிறது அவள் என்னிடம் பேசாததற்கு காரணம் என்ன? என்று எண்ணி குழம்பி போனான் பிரகாஷ்.

மித்ராவின் மனதில் இருப்பதை அறிவானா பிரகாஷ்? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்

நறுமுகை

3

No Responses

Write a response