என் வானவில்-22

என் வானவில்-22

இங்கு சுஜி கிஷோர் பிரச்சனையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க, அவர்கள் எதிர்ப்பார்க்காத வேறு பிரச்சனைகள் தொடங்கியது.

தேனியில் விஸ்வநாதன் கூறியது போல மித்ரா யார்? அவள் எப்படி இங்கு வந்து சேர்ந்தாள் அவளுக்கும் தெய்வநாயகி அம்மாவிற்கும் என்ன தொடர்பு என்று அறிய முனைந்தான் ரோஹித். அதற்குள்ளாக அவனது சிங்கப்பூர் பிராஞ்சில்  பிரச்சனை வரவே தவிர்க்க முடியாத காரணத்தால் அவன் அங்கு செல்ல வேண்டியிருந்தது.       

 விஸ்வனாதனோ ரோஹித், இந்த விஷயத்தை உன்னையும் என்னையும் தவிர வேறு யாரை வைத்து செய்தாலும் அது நமக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அதனால் நீ உன் வேலையை முடித்துவிட்டு வந்து அந்த பொண்ணு யார் என்பதை விசாரி. அதுவரை இந்த விஷயத்தை ஆறப்போடு. நாம் பார்த்தவரை அந்த பெண்ணால் நமக்கு எந்த பிரச்சனையும் வருவது போல தெரியவில்லை. அதனால் நீ நிம்மதியாக போய் வா என்று கூறிவிட தற்காலிகமாக மித்ரா பற்றிய ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான் ரோஹித்.

மித்ரா இரண்டாம் ஆண்டு முடிக்கும் தருவாயில், தனது வேலைகளை முடித்துக்கொண்டு ரோஹித்தும் இந்தியா வந்து சேர்ந்தான். வந்தவுடன் அவன் முதல் வேலையாக விட்ட இடத்தில் இருந்து மித்ராவைப் பற்றி ஆராயத் தொடங்கினான்.

அதே சமயத்தில் ரோஹித்தின் தாத்தாவின் நிலையும் சற்று மோசமானது. விஸ்வநாதனும் ரோஹித்துடன் இணைந்து மித்ரா யார் என்பதை பற்றி யோசிக்க முடியாமல் ஊரிலேயே தங்க வேண்டி இருந்தது.

 இங்கோ மித்ரா சுஜி கூறியது போல தன்னோடு பேசுபவர்கள் பழகுபவர்கள் அனைவரையும் கூர்ந்து கவனிக்க தொடங்கினாள். அதனுள் வள்ளி, மற்றும் அவளைக் கல்லூரிக்கு அழைத்து வரும் கார் ட்ரைவர் முதல் கொண்டு அனைவரும் அடக்கம்.

அப்படி அவள் கவனிக்க தொடங்கிய சில நாட்களிலேயே அவள் கிஷோரிடம் மாற்றங்களை உணர்ந்தாள். அவன் அவளை குறுகுறுவென பார்ப்பது போலவும் பேசும்பொழுது ஏதோ ஒரு உரிமை இருப்பது போலவும் அவளுக்கு தோன்றியது. இதை யாரிடம் கூறுவது  என்று அவளுக்கு  தெரியவில்லை.   இதைப் பற்றி பிரகாஷிடம் பேசுவதற்கு மனமில்லை.

சுஜியிடம் கூறினால் கண்டிப்பாக இந்த விஷயம் பிரகாஷிற்கு தெரிந்து விடும் என்று நினைத்தவள் சுஜியிடம் கூறாமல் இதை அபிராமியிடம் கூறினாள்.

அபிராமியே நீ என்னடி சொல்லுகிறாய் என்று கேட்க,

ஆமாம், அபி என்னவோ வித்தியாசமாக இருக்கிறது. நான் வள்ளியிடம், முருகன் அண்ணாவிடம் எல்லாம் கேட்டேன், முன்னரெல்லாம் எப்போதாவது தான் பாட்டியை பார்க்க வருவாராம், இப்போதெல்லாம் வாரம் வாரம் வருகிறார்.

அதுவும் சரியாக பாட்டி தூங்க போகும் கொஞ்சம் நேரத்திற்கு முன்னர் தான் வருகிறார். பாட்டி கொஞ்ச நேரம் பேசிவிட்டு தூங்க சென்றுவிடுகிறார். என்கிட்டே தான் அதிக நேரம் பேசுவது போல தெரிகிறது. முன்னர் எல்லாம் பார்க்கும்போது இந்த மாதிரி குறுகுறுவென இல்லை என்று மித்ரா கூற,

அபிராமியோ எனக்கென்னவோ நீ தேவை இல்லாமல் யோசிக்கிறாயோ எனத் தோன்றுகிறது என்று கூறினாள்.

இல்லை அபி நீ வேண்டுமென்றால் என்னிடம் பேசும்பொழுது கவனித்து பாரேன் என்று கூற,

ஹ்ம்ம் சரி நான் கவனிக்கிறேன். அப்படி இருந்தால் நீ என்ன செய்வதாக இருக்கிறாய் என்று அபிராமி கேட்க, பேசுவதை நிறுத்திவிட வேண்டியது தான் இதெல்லாம் எதற்கு தேவை இல்லாத வம்பு என்றாள் மித்ரா.

ஏன் உனக்கு கிஷோரை பிடிக்காதா? என்று கேட்டாள் அபிராமி.

பிடிப்பது வேறு, ஆனால் நீ கேட்பது போல் எல்லாம் ஒன்றும் இல்லை அபி, என்று விளக்கினாள் மித்ரா.

சரி சரி அந்த குட்டி மூளையைப் போட்டு குழப்பிக்கொள்ளாதே நீ சொன்னது போல நான் கவனித்து பார்க்கின்றேன் என்று கூறினாள் அபிராமி.

அதன் பின் தோழியை யோசனையோடு பார்த்தவள், ஆமாம் இந்த  விஷயத்தை நீ பிரகாஷிடம் கூறவில்லையா? என்று கேட்டாள் .

தெரியவில்லை, சொல்லவேண்டாம் என தோன்றுகிறது. அவரே அங்கு தொலைவில் இருக்கிறார் இதை வேறு அவரிடம் சொல்லி ஏன் அவரை கவலை படுத்த வேண்டும் என்றாள் மித்ரா.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், நீ நிஜமாகவே பிரகாஷ் கவலைப்படக்  கூடாது என்று தான் கூறவில்லையா? என்று கேட்டாள் அபிராமி.

அபிராமியை புரியாமல் பார்த்தவள் அது மட்டும் தான் வேறு என்ன? வேறு எதற்காக நான் சத்யாகிட்ட மறைக்கவேண்டும் உனக்கே தெரியும் இந்த இரண்டு ஆண்டில் எதை நான் சத்யாவிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறேன், என்று கூற

சரி சரி… சும்மா கேட்டேன்பா நீ அதற்கு இவ்வளவு சீரியஸாக பதில் அளிக்கிறாய். சீனியர் வேற மாதிரி பேசுவது போல தோன்றினால் நாம் அவரிடம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணிக்கொள்வோம், அவ்வளவு தான் சிம்பிள் என்று அபிராமி தோழியை சமாதானம்படுத்த,

அப்போதைக்கு மித்ராவும் அந்த கவலையை மறந்து சமாதானம் ஆனாள்.

மித்ரா கூறியது போல அபிராமி, மித்ராவும் கிஷோரும் பேசும்பொழுது கவனிக்க தொடங்க அப்பட்டமாக கிஷோர் மித்ராவை ஆர்வமாக பார்ப்பது புரிந்தது.

அதை அவள் மித்ராவிடம் கூற, இப்போ என்னடி செய்வது என்று அவளிடமே திருப்பி கேட்டாள் மித்ரா.

மித்ரா எப்படி இவ்வளவு நாள் எதுவும் தெரியாதது போல இருந்தாயோ அதுபோலவே இனியும் இருந்துவிடு, உனக்கு கிஷோர் உன்னை ஆர்வமாக பார்ப்பது புரிகிறது என்பதைக் கூட நீ காட்டிக்கொள்ளாதே. ஆனால் பேசுவதை கொஞ்சம் குறைத்துக்கொள். பாட்டியை பார்க்க வீட்டிற்கு வரும்பொழுது ஏதாவது வேலை இருப்பதாக கூறி அவரிடம் பேசுவதை அவாய்ட் பண்ணு என்று தன் தோழிக்கு அறிவுரை கூறினாள் அபிராமி.

அவள் கூறுவது சரி என்று தோன்ற, சரி அபி அப்படியே செய்கிறேன் என்று தோழி கூறியதை ஏற்றுக்கொண்டாள் மித்ரா.

நாம் நினைப்பது போல் எல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை எப்படி சுவாரசியமாக இருக்கும்.

 மித்ராவும் அபிராமியும் எதிர்பார்க்காத சமயத்தில் மித்ரா இரண்டாம் ஆண்டு தேர்வு முடிந்து வீட்டில் இருந்தபொழுது அவளை தேடி வந்த கிஷோர் தான் அவளை காதலிப்பதாக அவளிடம் கூறினான்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன மித்ரா வேறு ஒரு உண்மையை அறிந்து கொண்டாள் அது என்ன? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.

-நறுமுகை

4

No Responses

Write a response