என் வானவில்-17

என் வானவில்-17

மித்ரா கல்லூரியில் அபிராமியை தவிர வேறு யாருடனும் அதிகம் பேச மாட்டாள். என்ன என்றால் என்ன? என்னும் அளவிலேயே அனைவரிடமும் பேசிவந்தாள். சொல்லப்போனால், அபிராமிக்கு மட்டுமே மித்ரா நன்றாக கலகலப்பாக பேசுவாள் என்றே தெரியும். அந்த அளவிற்கு மற்றவர்களிடம் இருந்து மித்ரா ஒதுங்கியே இருந்தாள். அப்பொழுது ஒரு நாள்  மித்ராவும், அபிராமியும் கல்லூரி கேன்டீனில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

என்ன மித்ரா சொல்லுகிறாய்? இந்த ஒரு நாளிற்காக நீ வால்பாறை சென்று தான் ஆக வேண்டுமா?

ஆமாம் அபி பாட்டியை போய் பார்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தாள் மித்ரா.

அந்த வால்பாறையில் என்ன தான் வைத்திருக்கிறாயோ வாரம் வாரம் கிளம்பி போய் விடுகிறாய், எனக்கு தான் நீ இல்லாமல் போர் அடிக்கிறது என்று அபிராமி கூற,

இந்த முறை உன் அம்மா வரும்பொழுது பெர்மிஷன் வாங்கி வை நான் போகும்பொழுது உன்னையும் கூட்டிக்கொண்டு போகிறேன், என்று மித்ரா கூற

ஹ்ம்ம் அதை தான் செய்ய வேண்டும், எனக்கும் வால்பாறை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது,  என்று இருவரும் பேசிக்கொண்டிருந்ததை, அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த சீனியர் ஒருவன் கேட்டுக்கொண்டே அவனது வகுப்பிற்கு சென்றான்.

அங்கு சென்றவன் டேய், கிஷோர் உனக்கு தெரியுமா? நம் கல்லூரியில் வால்பாறையிலிருந்து ஒரு ஜூனியர் பொண்ணு ஜாயின் பண்ணியிருக்கிறாள் என்று கூற,

நமக்கு தெரியாமல் யார் டா அது வால்பாறையில் இருந்து இங்கு  வந்து ஜாயின் பண்ணியது? யார் அந்த பொண்ணு? வா வந்து காட்டு என்று , அவனால் கிஷோர் என்று அழைக்க பட்டவன் அவனை கூட்டிக்கொண்டு கான்டீன் சென்றான்.

அங்கு மித்ராவும் அபிராமியும் அமர்ந்திருந்த டேபிளை அவன் காட்ட, அங்கு சென்றவன்

உங்கள் இருவரில் யார் வால்பாறையில் இருந்து வருவது என்று கேட்டான்,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எழுந்து நின்றனர்.

அவர்களுக்கு அவன் யார் என்று தெரியும், அவன் பி.காம் பைனல் இயர் ஸ்டுடென்ட் இவர்களது சீனியர் அவனை அவர்களது பிரெஷர்ஷ் பார்ட்டியில் பார்த்திருக்கிறார்கள்.

அபிராமியோ அமைதியாக இருக்க, மித்ராவோ என்ன செய்வதென்று தெரியாமல் மெதுவாக நான் தான் வால்பாறையில் இருந்து வருகிறேன் என்று கூறினாள்.

வால்பாறையில் எங்கிருந்து வருகிறாய் என்று கிஷோர் கேட்க, சொல்வதா வேண்டாமா என்று மித்ரா அமைதியாக இருக்க,

என்ன வீட்டு அட்ரஸ் மறந்து போய்விட்டதா? என்று அவளை கேலியாக கேட்டான்.

இல்லை இல்லை நான் பிருந்தாவனம் எஸ்டேட்டில் இருந்து வருகிறேன் என்றாள் .

பிருந்தாவனம் எஸ்டேட்டா? அங்கிருந்து வருகிறாயா? அங்கு பாட்டியம்மா மட்டும் தானே இருப்பார்கள், உன்னை நான் அங்கு பார்த்ததே இல்லையென்று  கிஷோர் கேட்க,

அவள் அமைதியாகவே நின்றாள்.

அதற்கு பக்கத்தில் இருக்கும் எஸ்டேட் எல்லாம் உனக்கு தெரியுமா?என்று கேட்டான்.

பக்கத்தில் ஜே பி எஸ்டேட் இருக்கிறது பார்த்திருக்கிறேன் என்றாள்.

ஹ்ம்ம் அங்கிருந்துதான் நான் வருகிறேன், உன்னை நான் பிருந்தாவனம் எஸ்டேட்டில் பார்த்ததே இல்லையே என்று மீண்டும் கிஷோர் கேட்க,

என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றாள் மித்ரா.

எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டாலும் தெரியாது, எப்போ பிருந்தாவனம் எஸ்டேட்டிற்கு வந்தாய் என்றும் உனக்கு தெரியாதா? என்று அவன் மீண்டு கேலி செய்ய,

இல்லை எனக்கு யாரும் இல்லை பாட்டி தான் என்னை பார்த்துக்கொள்கிறார்கள்.அவர்கள் தான் என் கார்டியன் என்று அனைவரிடமும் சொன்ன அதே கதையை அவனிடமும் சொன்னாள் .

ஓ சரி, சரி உனக்கு எதாவது உதவி வேண்டும்  என்றால் என்னிடம் கேள். லாஸ்ட் இயர் நோட்ஸ்,  புக்ஸ் எது வேண்டுமானாலும் என்னிடம் கேள் நான் தருகிறேன் என்று கூறி அங்கிருந்து வெளியேறினான்.

தனக்கு யாரும் இல்லை பாட்டி தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று மித்ரா கூறியது ஏனோ அவனுக்கு கஷ்டமாக இருந்தது. இப்படி அனைவரும் இருக்கும் இடத்தில இதுபோல கேட்டு அவளை சொல்ல வைத்திருக்க கூடாது என்று நினைத்து அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

இவன் இப்படி கேட்டு விட்டு சென்றதும் பயந்து போன மித்ரா, அபிராமியிடம், எனக்கு லைப்ரரியில் கொஞ்சம் ஒர்க் இருக்கிறது. புக் இப்போதே  ரிட்டர்ன் செய்தாக  வேண்டும் மறந்துவிட்டேன், நான்  ஹாஸ்டல் சென்று எடுத்துக்கொண்டு  வந்து ரிட்டர்ன் செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியவள் தனியாக மரத்தடிக்கு வந்து பிரகாஷிற்கு கால் செய்தாள்.

வழக்கமாக இரவு படுப்பதற்கு முன் பிரகாஷிற்கு கால் செய்வாள். பெரும்பாலும் பிரகாஷ் தான் அவளுக்கு அழைத்து பேசுவான். வெகு சில நாட்களே பிரகாஷ் வேலையில் மறந்து போனால் மட்டுமே மித்ரா அவனுக்கு அழைப்பாள். இன்றோ, மதிய வேளையில் மித்ராவிடம் இருந்து போன் வரவும் பதறி போன பிரகாஷ்,

ஹலோ மித்து என்ன ஆச்சு, ஏன் இந்த நேரத்திற்கு கால் செய்திருக்கிறாய்? ஏதும் பிரச்சனை  இல்லையே டா என்று அவன் கேட்க,

 இவளிருந்த மனநிலையில் அவன் மித்து என்றதையோ பதறியதையோ கவனிக்காமல் அதெல்லாம் ஒன்றும் இல்லை இங்கு என்னுடைய சீனியர் நம் பாட்டி எஸ்டேட் பக்கத்தில் ஒரு ஜே.பி எஸ்டேட் இருக்கே அங்கிருந்த தான் வருகிறாராம், நீ வால்பாறையில் இருந்து தானே வருகிறாய்? எங்கிருந்து வருகிறாய் என்று விசாரித்தார்கள் என்று கூறினாள்.

ஒரு நிமிடம் என்னவோ எதோ என்று பயந்துபோன பிரகாஷ் இவள் கூறியதை கேட்டு அவ்வளவு தானா? நான் பயந்தே போய்விட்டேன், மித்ரா உன்னை யாரவது திருச்சியில் இருந்து வருகிறாயா என்று கேட்டால்  தான் நீ பயப்படவேண்டும், வால்பாறையில் இருந்து வருகிறாயா என்று கேட்டால் நீ ஏன் பயப்படுகிறாய், இப்போ அது தானே உன் அடையாளம் என்றான்.

இல்லை எப்படி தெரிந்ததென்றே தெரியவில்லை திடீரெனெ வந்து கேட்கவும் நான் பயந்துவிட்டேன் என்று கூறினாள்.

இங்கபாரு உன்னுடைய சீனியர், நம்முடைய டிபார்ட்மெண்ட்டில் நம் ஊரில் இருந்து ஒரு பொண்ணு வருகிறது என்றால் யார் என்ன என்று தெரிந்துகொள்ள கேட்டிருப்பான் இதற்கெல்லாம் நீ ரொம்ப பயப்படாத, எல்லாரிடமும் சொன்ன அதே கதையை தானே கூறினாய்? அவ்வளவு தான் இதற்கு போய் நீ டென்சன் ஆகி என்னையும் டென்சன் செய்துகொண்டு போய்  நிம்மதியாக கிளாஸ் அட்டென்ட் பண்ணு, என்றான் பிரகாஷ்.

ஹ்ம்ம் என்றவள் போனை வைக்க போவதற்கு முன் சத்யா சாப்ட்டீங்களா? என்று கேட்டாள்.

இல்லை இனி தான் போகனும் நீ சாப்பிட்டாயா? என்று கேட்டான்.

ஹ்ம்ம் என்றவள், சரி எனக்கு கிளாஸ்ஸிற்கு நேரம் ஆகிவிட்டது என்று போனை வைத்துவிட்டாள்.

போன் வைத்ததும், பிரகாஷ் ஒரு ஆசுவாச மூச்சு விட்டான் , அங்கு தன்னை கேலியாக பார்த்துக்கொண்டிருந்த ராம் மற்றும் சுஜியை பார்த்து இப்போ உங்களுக்கு என்னடா? என்றான்.

எங்களுக்கு ஒன்றும் இல்லை, நீ இப்படி நான்கு முறை டென்ஷன் ஆனால் மித்ரா ஈஸியா உன்னை கண்டுபிடித்துவிடுவாள் என்று ராம் கூறினான்.

திடீரென போன் வரவும் டென்ஷன் ஆகிவிட்டேன்,

அதுசரி டா, அதற்கு, மித்து  சொல்லுடா என்று இப்படி உருகினால்  மித்ரா உன்னை இரண்டே நாட்களில் கண்டுபிடித்துவிடுவாள் என்று சுஜி சொல்ல,

அப்படியா சொன்னேன் என்று அவளையே திரும்ப கேட்டான் பிரகாஷ்.

சரியாய் போனது போ, இங்க பாரு டென்சன் ஆனாலும் கவனமாக இருக்கும் வழியை பார், மாட்டிக்கொண்டு பிறகு எங்களிடம் காப்பாற்ற சொல்லி கேட்காதே என்று ராம் கூற,

சரி டா எப்போதும் கால் செய்யாதவள் திடீரென கால் பண்ணவும் பதட்டமாகிவிட்டேன் என்று பிரகாஷ் கூறியதும்,

சுஜியோ, என்ன ஆச்சு என்று கேட்டாள்,

யாரோ சீனியர் பையன் இவள் வால்பாறையில் இருந்து வருகிறாள் என்று தெரிந்து கேட்டிருப்பான் போல, அவனும் வால்பாறையில் இருந்து தான் வருகிறானாம், விசாரித்ததும் இவள் பயந்துவிட்டாள் என்று கூறியதும்,

அவனுக்கு எப்படி டா இவள் வால்பாறையில் இருந்து வருகிறாள் என்று தெரிந்தது?  என்று கேட்டான் ராம்.

இது என்னடா பெரிய விஷயமா? ஒரே டிபார்ட்மென்ட் போல பேச்சுவாக்கில் தெரிந்திருக்கும் யார் அது நம் ஊர் பொண்ணு என்று தேடி வந்திருப்பான் அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை, மித்ரா காலேஜில் யாரிடமும் பெரிதாக பேசுவது கிடையாது அதனால் அது ஒன்றும் பெரிய பிரச்சனை  இல்லை என்று கூறிவிட்டு நண்பர்களோடு உணவருந்த சென்றான் பிரகாஷ்.

பிரகாஷ் பிரச்சனை அல்ல என்று நினைத்த அளவிற்கு கிஷோர் ஒரு பிரச்சனயா? இல்லையா? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்

                              –நறுமுகை

3

No Responses

Write a response