என் வானவில்-12

என் வானவில்-12

அடுத்தநாள் பிரகாஷ் மித்ராவை அழைத்துக்கொண்டு கோயம்பத்தூரில் உள்ள இருபாலரும் படிக்கும் பி.எஸ்.ஜி.கலைக்கல்லூரியில் பி.காம். சேர்த்துவிட்டு, தன்னை கார்டியன் என்று பதிவு செய்துவிட்டு வந்தான்.

 கூடவே கல்லூரி ஹாஸ்டலிலே அவளுக்கு இடமும் ஏற்பாடு செய்துவிட்டு இருவரும் திரும்பி வால்பாறை வந்துகொண்டிருந்தனர்.

 பிரகாஷ்ஷே காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்ததால் மித்ரா தனது மனதில் உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை அவனிடம் கேட்டாள்.

 உங்களிடம் ஒன்று கேட்டால் நீங்க தப்பா நினைப்பீர்களா?என்று கேட்க,

அவன் அங்கு ஒருத்தி அப்படி பேசவே இல்லை என்பதை போல் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

இவரிடம் இது ஒன்று…. என்று மனதுள் நினைத்தவாறே

சத்யா உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் , கேட்டால் தப்பா நினைப்பீர்களா என்று கேட்க,

கேளு, அதெல்லாம் ஒன்றும் தப்பா நினைக்க மாட்டேன் என்று கூறினான். சரியான கல்லூளி மங்கன், முன்னாடி கேட்டபோது அமைதியாக இருந்துவிட்டு இப்போ பெயரை சொல்லி கூப்பிட்டதும் பதில் சொல்லுவதை பாரு என்று அவனை மனதினுள் திட்டிக்கொண்டிருந்தாள்,

மனதினுள் திட்டிக்கொண்டு இருந்தவளை பார்த்தவன், திட்டுவது என்று ஆயிற்று சத்தமாகவே திட்டு என்றான்.

ஹான், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றவள் நான் ஆன்ட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது என்று கூற,

எந்த ஆன்ட்டி என்று அவன் ஒரு மாதிரி கேட்க,

உங்கள் அம்மா, என்றாள் மித்ரா,

ஓஹ் என் அம்மாவா என்றவன் மேலே சொல்லு என்றான்,

இல்லை, அவர்கள் சொன்னார்கள், அவங்க அம்மா அப்பாவும், சாரோட அம்மா அப்பாவும் ஏற்கனவே தவறிட்டாங்க என்று, இப்போ இவரை நீங்க பாட்டி என்று அழைக்கிறீர்கள் …. எப்படி உங்களுக்கு பாட்டி என்று கேட்டாள்?

ஒரு நிமிடம் மனதிற்குள் பிரகாஷ், இவள் நீ நினைக்கும் அளவிற்கு அப்பாவி கிடையாது. நீ உஷாராக இல்லை என்றால் விரைவாக நீ யார் என்பதை அவள் கண்டுபிடித்துவிடுவாள் என்று மனதிற்குள் நினைத்தவன், அதை வெளியில் காட்டாமல்

 அப்பாடி, நீ ஏன் இவ்வளவு புத்திசாலியா இருக்க? என்று கேலி பேசிவிட்டு இவர் எனக்கு அப்பா வழி பாட்டியும் இல்லை, அம்மா வழி பாட்டியும் இல்லை, ஆனால் பாட்டி என்றான்.

அது தான் எப்படி என்றாள் மித்ரா.

தெய்வநாயகியை தனக்கு எப்படி தெரியும் என்று கூற தொடங்கினான் பிரகாஷ்,

ஒருமூன்று வருடங்களுக்கு முன்னர், நான் அப்போ இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன், சரியாக சொல்லவேண்டும் என்றால் அப்போ தான் இரண்டாம் ஆண்டு தொடங்கியது. எல்லோரும் சேர்ந்து ஊட்டிக்கு ட்ரிப் போகலாம் என்று முடிவு செய்தோம். அப்படி ஊட்டிக்கு வரும் வழியில் ஒரு கார் ஆக்ஸிடென்ட் ஆகி சாலையோரமாக இருந்தது. யாரும் கண்டுகொள்ளவில்லை, நாங்கள் பைக்கில் தான் வந்திருந்தோம் யார் என்னவென்று பார்க்காமல் அப்படியே போக மனம் வரவில்லை. என்னவென்று இறங்கி பார்க்கும்பொழுது பாட்டியும் டிரைவரும் அடிப்பட்டிருந்தார்கள்.

சுற்றி நின்று அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் அவர்களுக்கு உதவ முன் வருவது போல் தெரியவில்லை. உதவ போன எங்களையும் உங்களுக்கு எதற்கு தம்பி போலீஸ் பிரச்சனை ஆகிவிடும் என்று தடுத்தனர். எனக்கு அதெல்லாம் மண்டையில் ஏறவில்ல, இப்படி ரோட்டில் அடிபட்டிருப்பவர்களை பார்த்துவிட்டு எப்படி உதவி செய்யாமல் போவது அதனால் போலீசிற்கு அழைத்து ஆம்புலன்ஸ் வரவைத்து இவர்களை கொண்டுவந்து கோயம்பத்தூரில் அட்மிட் செய்தோம். போலீஸ் அவர்களை பற்றி விசாரித்துவிட்டு இவர்கள் வால்பாறை எஸ்டேட் ஓனர் என்றும் அவர்களது மேனேஜர் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்றும் சொன்னார்.

சரி மேனேஜர் வந்தவுடன் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று காத்துக்கொண்டிருந்தோம்,

 மேனேஜரும் ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டார். வந்தவர் ரொம்போ தேங்க்ஸ் தம்பி, யாருமே உதவாத சமயத்தில் நீங்கள் உதவி செய்தீர்கள் என்று நன்றி சொன்னார்.

எனக்கு என்னவோ போல உறுத்தலாக இருந்தது. அதெல்லாம் இருக்கட்டும் சார்,இவர்கள் வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா என்று கேட்டேன்,

அப்போது தான் பாட்டிக்கு யாருமே இல்லை, பாட்டி ரொம்போ வருடமாக தனியாக தான் இருக்கிறார்கள் ஒரு எஸ்டேட் கேஸ் விஷயமாக சைன் பண்ண வந்த இடத்தில இந்தமாதிரி ஆகிவிட்டது என்று கூறினார்.

எனக்கு ஏனோ அதன் பிறகு பாட்டியை அப்படியே ஹாஸ்பிடலில் விட்டுவிட்டு போக மனம் இல்லை. என்னோட கூட வந்த பிரண்ட்ஸ், நம்ப கிளம்பலாம் என்றனர், நான் அவர்களை போக சொல்லிட்டு பாட்டிகூட ஹாஸ்பிடலில் இருந்து பாட்டி கண்முழிக்கும்வரை பார்த்துக்கொண்டேன்.

கண் முழித்த பாட்டி எனக்கு நன்றி சொன்னதுடன், என் பெற்றோரை பார்க்கவேண்டும் என்று கேட்டார்கள் பிறகு அப்பாவிற்கு போன் செய்து அவர்களை இங்கு வரவைத்து பாட்டியை சந்திக்க வைத்தேன்.

பாட்டி கண்டிப்பாக எங்களை வால்பாறை வர வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் அங்கு சென்றோம், பிறகு பாட்டி எங்களை பார்க்க ஊருக்கு வந்தார்கள் அப்போ நாங்கள் திருச்சிக்கு மூவ் ஆகவில்லை, அப்பா காஞ்சீபுரத்தில் தான் இருந்தார். அப்படியே போக, வர போன்ல பேச, எனக்கு பாட்டியை ரொம்போ பிடிச்சிடுச்சி அதை விட வால்பாறையை ரொம்போ பிடிச்சிருந்தது.

 அதனால் அடிக்கடி பாட்டியை பார்க்க இங்கு வந்துவிடுவேன்.

அம்மாகூட கிண்டல் பண்ணுவாங்க பாட்டி  வந்தபிறகு என்னை நீ சுத்தமாக மறந்துவிட்டாய் என்று அந்த அளவிற்கு லீவில் பாட்டிகூடவே இருப்பேன். ஏனென்றால் அந்த வயதிற்கு தனிமை மிகவும் கொடுமை என்று தோன்றியது என, தெய்வநாயகியை தனக்கு எப்படி தெரியும் என்று கூறி முடித்தான்.

மித்ராவிற்கோ ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. தன் சொந்த பேரனாக இல்லாதபொழுது தன்னை எப்படி இவர்கள் பரந்த மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள் என்று குழம்பிபோனாள் அதை அவள் அவனிடம் கேட்கவும் செய்தாள்.

அவனோ பாட்டி அப்படி தான், அவர்கள் தனியாக இருந்து இருந்து அவர்களுக்கென்று உறவுகள் அமையாதா என்று ஏங்கி போய் இருக்கிறார்கள். அதனால் தான் இது உனக்கு சரியான இடம் என்று நினைத்தேன். அதுபோக, பாட்டிக்கு இங்கு செல்வாக்கு அதிகம் அவர்களைமீறி எல்லாம் உன்னை யாரும் இங்கு வந்து தூக்கிக்கொண்டு செல்ல முடியாது என்று கூறியவன்,

கோயம்பத்தூரில் அவளை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்றும் கல்லூரிக்கு திங்கள் கிழமை காலையில் பாட்டி ட்ரைவரே கொண்டு வந்து விட்டுவிட்டு மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை அழைத்துக்கொள்வார் என்றும் கூறினான்.

மித்ராவிற்கு தன்  நிலை நன்றாகவே தெரியும் என்பதால் அந்தமாதிரி எல்லாம் போக மாட்டேன் என்று வாக்களித்தாள்.

என்னதான் தனிமை, உறவுகள் வேண்டும் என்றாலும் எப்படி இப்படி ஒருமனதுடன் இருக்க முடிகிறது என்று மித்ராவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

ஆச்சர்யத்துடன் மேலும் தெய்வநாயகியை நல்லபடியாக பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு தனிமை உணர்வு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அமைதியாகவர,

என்ன ஆச்சு அமைதியாக வர, என்று கேட்டான் பிரகாஷ்.

ஹ்ம்ம் அதெல்லாம் ஒன்றும் இல்லை பாட்டியை பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன் என்று கூறியவள் உங்க அம்மாவிடம் பேசினீர்களா பேசினால், என் வீட்டில் உள்ள பூனையை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லுங்கள் என்று கேட்டாள் .

எது உன் பட்டுவையா? என்று அவன் கேட்க,

பட்டுவை உங்களுக்கு தெரியுமா? என்று முகம் மலர கேட்டாள்,

அவள் கேட்ட அழகில் கவரப்பட்டவன் ஹ்ம்ம் பட்டுவை தான் அந்த தெருவிற்கே தெரியுமே என்றவன்,

நான் அல்ரெடி அம்மாகிட்ட சொல்லிட்டேன் அம்மா பத்திரமாக பார்த்துக்கொள்கிறார்கள். அடுத்தமுறை வரும்பொழுது நான் போட்டோ எடுத்துக்கொண்டு வருகிறேன் என்றான்.

அப்புறம் அப்பாவையும், அருணையும் கூட போட்டோ எடுத்துட்டு வாங்க பார்க்கனும் போல இருக்கு என்றாள், கண்டிப்பா கொண்டுவர, அடுத்து ஊருக்கு போகும்போது அருண்னை உன்கூட பேசவைக்குறேன் என்றான், சரி என்று தலையாட்டியவள் தெய்வநாயகியை பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு இவன் ஏன் தனக்கு இவ்வளவு செய்கிறான் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

பிரகாஷ் மறைக்கும் விஷயம் என்ன? அதை மித்ரா கண்டுபிடிப்பாளா ? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.

-நறுமுகை

                                      

4

No Responses

Write a response