New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-6

அனைவரையும் பார்த்து பொதுவாக சிரித்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, சஞ்சனாவும் தனது தோழிகளை அவனுக்கு அறிமுகம் செய்தாள். பிறகு யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு பேச்சைத் தொடங்கினான் ஆதித்யன்.

ஹ்ம்ம், சரி அப்போ இன்டெர்வியூ ஆரம்பிக்கலாமா, என்று அவன் கேட்க,

சஞ்சனாவின் தோழிகள் அனைவரும் என்ன சார் ஒரே அடியா இன்டெர்வியூன்னு சொல்லிட்டீங்க. அப்படி எல்லாம் இல்ல எங்க ஃபிரண்ட கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை படுறீங்க நீங்க எப்படி பட்டவர் என்னனு நாங்க தெரிஞ்சிக்க வேண்டாமா, பாவம் எங்க சஞ்சனா அப்பாவி, என்று கூற,

ஆமாமா, அப்பாவி என்று கூறினான்,

அவன் தன்னை கேலி செய்கிறானோ என்று சஞ்சனாவிற்கு தோன்றியது, ஆனால் இவளும் தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தா தான் என்ன?  என்று தன் தோழியை மனதிற்குள் திட்டிக்கொண்டிருந்தாள், அதே சமையம் மற்றுமொருவள் உங்களுக்கு என்ன எல்லாம் சாப்பிட பிடிக்கும் என்று கேட்க,

அட தின்னிப்பண்டாரமே உனக்கு வேற கேள்வியே இல்லையா? என்று மற்ற தோழிகள் அவளை முறைத்தனர்.

அதற்கு அவனும் சிரித்துவிட்டு எனக்கு வெஜிடேரியன் தான் ரொம்போ பிடிக்கும். நான்-வெஜிடேரியன் வீட்ல சமைச்சா கொஞ்சம் தான் சாப்பிடுவேன் வெளியில நான்-வெஜிடேரியன் சாப்பிட மாட்டேன் என்று கூறினான்.

சஞ்சனாவின் தோழி மீனாவோ சார் சாப்பாட்டு விஷயம் எல்லாம் விடுங்க, இதுக்கு முன்னாடி உங்களுக்கு லவ் அஃபைர், க்ரஷ், காலேஜ்ல சைட்டு, அந்த மாதிரி எல்லாம் இருந்திருக்கா, என்று கேட்க,

லவ் கிடையாது, க்ரஷ்ன்னா ஒரு சில பெரிய பிசினஸ் பண்ற லேடிஸ் பார்த்து க்ரஷ் இருந்துருக்கு, அதெல்லாம் என் பிசினஸ்ல நான் வளர்ர டைம்ல இருந்துருக்கு, சைட்டு காலேஜ் டேஸ்ல எல்லாம் பசங்கள மாதிரி சைட் அடிச்சிருக்கேன், என்று கூற,

உடனே தோழிகள் அனைவரும் சூப்பர் சார் சைட் அடிச்சு மார்க்கெல்லாம் போட்ருக்கீங்களா? என்று கேட்டனர்.

இது என்னங்க காலேஜ்ல சைட்டடிச்சா மார்க்கெல்லாம் போட மாட்டாங்களா? என்று ரொம்போ இயல்பாக கேட்டான் அவன்,

தோழிகள் அனைவரும் ஓ! அப்படியா என்று கோரஸாக கேட்டுவிட்டு அப்போ எங்க சஞ்சனாவுக்கு என்ன மார்க் போட்ருக்கீங்க என்று கேட்டனர்.

அவன் சஞ்சனாவைத் திரும்பி பார்க்க அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை,

அதற்கு ஆதித்யனோ அதை நான் உங்க ஃபிரண்ட்கிட்ட தனியா சொல்லிக்கிறேன், என்று கூறினான்.

உடனே அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

மேலும் அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, அவன் எங்கு படித்தான் வளர்ந்தான் என்று அவனை கேள்வி கேட்டு ஒரு வழி செய்தனர். ஒரு கட்டத்தில் சஞ்சனாவிற்கே ஐயோ பாவம் என்றாகிவிட்டது.

ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் கூறினான் ஆதித்யன். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்து பேசிவிட்டு கிளம்பும்போது,

இவ்ளோ நேரம் கேள்வி எல்லாம் கேட்டுட்டு பதில் எதுவும் சொல்லாம போறீங்க என்று கேட்டான்

சார் நீங்க எப்படி உங்க மார்க்கை சஞ்சனக்கிட்ட தனியா சொல்லுவிங்களோ அதே மாதிரி உங்க ரிசல்டையும் சஞ்சனா உங்களுக்கு தனியா சொல்லுவா என்று கூறிவிட்டு அவளது தோழிகள் வெளியில் செல்ல தொடங்கினர்.

இறுதியாக வந்த சஞ்சனாவும் ஆதித்யனும் பார்க்கிங்கில் நிற்க, ஆதித்யனோ பதில் இப்போ கிடைக்குமா இல்ல காத்திருக்கணுமா? என்று கேட்டான்,

ஃபிரண்ட்ஸ் உங்களை பார்க்கணும் பேசணும்னு கேட்டாங்கன்னு கூட்டிட்டு வந்தேன். பட் எனக்கு இன்னும் யோசிக்க டைம் வேணும் என்று தயக்கத்தோடு கூற,

நோ ப்ராப்ளம் என்றான் ஒரு புன்னகையோடு.

சாரி, ஃபிரண்ட்ஸ் உங்களை ரொம்போ தொந்தரவு பண்ணியிருந்தா சாரி என்று கூற,

அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல எப்பவுமே பிசினஸ், பிசினஸ்னு இருந்த எனக்கு இது ஒரு நல்ல சேன்ஞ் இந்த த்ரீ ஹவர்ஸ், ரொம்போ ஜாலியா இருந்துச்சு. நான் ரிலாக்ஸ் பண்ணி ரொம்போ நாள் ஆச்சு என்று கூற,

எதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்து புன்னகையோடு தலை அசைத்துவிட்டு தன் தோழிகளோடு சென்றாள் சஞ்சனா.

செல்லும் அவளையே புன்னகையோடு பார்த்துவிட்டு கிளம்பினான் ஆதித்யன்.

வீட்டிற்கு சென்று அன்று நடந்தவைகளை அசை போட்டுக்கொண்டிருந்த சஞ்சனாவை பாலகுமாரின் குரல் கலைத்தது,

சஞ்சு என்ன வேலை பார்த்துட்டு வந்திருக்க நீ? என்று கேட்க,

என்ன அண்ணா என்ன ஆச்சு என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் சஞ்சனா.

உன் ஃபிரண்ட்ஸ் கூட போய் மாப்பிளையை இன்டெர்வியூ பண்ணிட்டு வந்திருக்கியா என்று கேட்க,

உனக்கு யாரு சொன்னது? என்றாள்.

அப்போ நீ அதை தான் பண்ணிட்டு வந்தியா? என்று பாலகுமார் கேட்க,

இல்ல அண்ணா ஃபிரண்ட்ஸ் எல்லாம் சும்மா அவர்கிட்ட பேசிப்பார்க்கலாம்னு சொன்னாங்க அதனால தான் என்று தயக்கத்தோடு இழுக்க,

கிருஷ்ணவேணியோ, ஏண்டி இதுக்கு தான் ஃபிரண்ட்ஸ் கூட வெளியில போறேன்னு சொன்னியா? நீ எப்போதும் போல போறன்னு நானும் கேள்வி கேட்காம விட்டுட்டேன், ஆனா…. நீ

அதன் சொன்னனேம்மா சும்மா பேசி பாக்கலாம்னு என்று கூற,

நீ என்ன இன்னும் சின்ன பொண்ணா? எப்போ பாரு விளையாட்டுத்தனமாவே இருக்க, மாப்பிள்ளை என்ன நினைப்பாரு என்று கிருஷ்ணவேணி அவள் பங்குக்கு திட்ட,

சஞ்சனாவுக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ஆதித்யன் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் இதை ஒரு பெரிய விஷயமாகவே அவள் நினைக்கவில்லை.

ஆனால் இப்போது அம்மாவும் அண்ணனும் மாற்றி மாற்றி கேள்வி கேட்கவும் தான் எதோ தப்பு செய்து விட்டோமோ என்று தோன்றியது.

பாலகுமாரோ முதல்ல மாப்பிள்ளைக்கு போன் பண்ணி சாரி சொல்லு, இனிமேல் இந்த மாதிரி எல்லாம் பண்ணாத என்று கூற,

சரி என்று தலை அசைத்துவிட்டு உள்ளே சென்றவள் அவனது எண்ணிற்கு சாரி என்று மெசேஜ் அனுப்ப,

இந்த சாரி எதுக்கு என்று கேட்டனுப்பினான் அவன்,

இல்ல ஃபிரண்ட்ஸ் கூட வந்து உங்களை கேள்வி எல்லாம் கேட்டு…..என்று அவள் மெசேஜ் அனுப்ப,

நான் தான் அப்பவே சொன்னேனே எனக்கு அது ரொம்போ பிடிச்சிருந்தது. அதை நான் ரொம்போவே என்ஜாய் பண்ணினேன். நீ அதை பத்தி இவ்ளோ எல்லாம் யோசிக்காத, என்று கூறிவிட்டான்.

அதன் பின் அன்றும், மறுநாளும் கூட அவளுக்கு அந்த ஹோட்டலில் நடந்த விஷயங்கள் பேச்சுக்கள் இதுவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அதே எண்ணத்தில் இருந்தவள் நல்லவரா தான் இருக்காரு பேசின விஷயங்களில் பொய் தெரியல, எல்லா விஷயத்தையும் ஈஸியா தான் எடுத்துகிறார், ஆனால் எனக்கு ஏன் எதோ ஒரு விஷயம் முடிவு எடுக்கவிடாம தடுத்துகிட்டே இருக்கு என்று யோசித்துகொண்டிருந்தவள் அதே எண்ணத்தில் கிளாஸை கவனிக்காமல் அமர்ந்திருந்தாள், இருமுறை லெக்ச்சரர் அவளது பெயரை அழைத்தும் அவள் ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க,

லெக்ச்சரர் க்ளாஸ் முடிந்து தன்னை வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.

க்ளாஸ் முடிந்து அவரை சென்று பார்த்த சஞ்சனாவிடம்,

என்ன ஆச்சு சஞ்சனா ஏன் இப்படி இருக்க, என்று கேட்க,

இல்லங்க மேடம் நான் நல்ல தான் இருக்கேன் என்று கூறினாள்,

நானும் ரெண்டு மூனு நாளா உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன் எதோ ஒரு யோசனையில் இருக்கியே நீ இப்படி இருக்க கூடிய ஆள் இல்லையே, எம்.பில் முடிச்சு பி. எச்.டி, பண்ணனும் இந்த பீல்டுல நிறைய ரிசர்ச் பண்ணனும்னு எப்பவுமே யோசிக்கிற ஆள் நீ, ஒரு நாள் கூட க்ளாஸ் கவனிக்காம இருந்ததில்லை, இப்போ ஏன் இப்படி இருக்க என்று கேட்கவும் சஞ்சனாவிற்கு தீ சுட்டது போல் இருந்தது,

தான் எப்படி இதெல்லாம் மறந்து போய் ஆதித்யனை மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறோம். திருமணம் என்றால் கூட இதை பத்தி எல்லாம் ஆதித்யனிடம் பேச வேண்டியது முக்கியம் இதை எப்படி நாம் மறந்துபோனோம் என்று நினைத்தவள், லெக்சரரிடம் சாரி மேடம் இனிமேல்  இப்படி நடக்காம பார்த்துகிறேன் என்று கூறிவிட்டு வெளியேறினாள்.

அதன் பின்னும் அவளுக்கு தன்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்றால் ஆதித்யனுக்கு தன்னுடைய இந்த கனவும் தெரிந்திருக்க வேண்டும், ஆனால் அவன் அதை பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. நமக்கான கனவு என்றால் நாம் தான் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டவள், இதோடு சேர்த்து வேறு எதோ ஒரு காரணமும் நம்மை இந்த திருமணத்திற்கு முழு மனதாக சம்மதிக்க விடாமல் தடுக்கிறது என்று அவளுக்கு தோன்றியது. அது என்ன என்று யோசனையிலேயே இருந்தாள் சஞ்சனா.

எது சஞ்சனாவைத் திருமணத்திற்கு சம்மதிக்க விடாமல் தடுக்கிறது என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்….

-நறுமுகை

3

No Responses

Write a response