New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-13

அன்று பள்ளியில் இருந்து வந்த பாரதி கோவமாகவும், ஏதோ சிந்தனையிலும் இருந்தாள். சஞ்சனா அன்று கல்லூரியில் அவளது துறை சார்ந்த நிகழ்ச்சி இருப்பதால் வரதாமதமாகும் என்று கூறியிருந்தாள். எனவே பாரதி வரும் நேரம் ஆதி வீட்டில் இருந்தான். வந்ததில் இருந்து தன்னிடம் பேசாமல் ஏதோ போல் இருக்கும் மகளை பார்த்தவன் அவளிடம் சென்று அமர்ந்தான்.

பேபி கேர்ள் என்னடா எதோ யோசனையில இருக்க,

ஒன்னுமில்ல அப்பா,

உன்னோட முகத்தை பார்த்தாலே தெரியுது எதோ இருக்குனு, நீ என்கிட்ட என்ன பிரச்சனையினாலும் பேசலாம் என்னனு சொல்லுடா.

இல்லப்பா அதெல்லாம் எது இல்லை.

சரிடா உனக்கு என்கிட்ட பேச இஷ்டம் இல்லைனா அம்மாக்கு கால் பண்ணி பேசு, ஆனா இப்படி சோகமா இருக்காத சரியா என்றவன் போனை அவளிடம் நீட்டினான்.

போனை வாங்காமல் உங்ககிட்ட சொல்லக்கூடாதுனு இல்லப்பா எனக்கே எது பிரச்சனையா இல்லையானு தெரியல அதான்….

சரி விசயத்தை சொல்லு அப்புறம் முடிவு பண்ணலாம்.

எங்க ஸ்கூல் பார்க்கிங்ல ரெண்டு மூணு காலேஜ் பசங்க நின்னுகிட்டு எங்களையெல்லாம் கிண்டல்பன்றாங்க, மற்றவங்க எல்லாம் ஒதுங்கி போயிடுறாங்க எனக்குதான் கோவமா வருது. ஸ்கூல்குள்ள வந்து இப்படி செய்றது தப்புதான, இன்னைக்கு அவங்க ஸ்மோக் பண்ணிட்டு இருந்தாங்க யாருமே எது சொல்லல, நான்தான் ஓவரா ரியாக்ட் பண்றனோனு தோணுது என்று தனது குழப்பத்தை கூறினாள் பாரதி.

உங்க ஸ்கூல் மேனேஜ்மென்ட்க்கு இந்த விஷயம் தெரியுமா?

அவங்களுக்கு தெரியுமானு எனக்கு தெரியலப்பா

இந்த விசயத்துக்கு என்ன செய்யனுனு நீ நினைக்குற பேபி

எனக்கு தெரியலப்பா

பேபி கேர்ள் உனக்கு தெரியும், உனக்கு 13 வயசாகுது உன்னோட சின்ன சின்ன பிரச்சனைக்கு முடிவெடுக்குற மெச்சூரிட்டி உனக்கு இருக்கு நீ நினைக்குறத சொல்லு அது சரியா, தப்பானு நம்ப பேசலாம்.

பிரின்சிபல் மேம் கிட்ட சொல்லலானு நினைக்குற

நல்லது செய், இதை சரிசெய்ய அவங்கதான் சரியான ஆள். பேபி எந்த விசயத்தையும் பேசிட்ட பிரச்சனைக்கு உனக்கு விடை கிடைச்சுடும். உனக்கு எதுனாலும் என்கிட்டயும் அம்மாகிட்டயும் நீ எப்பவேணா பேசலாம். சரியா ?தப்பா? சொல்லலாமா? வேண்டாமா? எதையும் யோசிக்காம நீ பேசலாம் சரியா?

தேங்க்ஸ்ப்பா என்று கூறி தன்னை அணைத்து கொண்ட மகளின் உச்சியில் முத்தமிட்டவன் அவளை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு ஹோம் ஒர்க் செய்ய சொல்லி அனுப்பிவைத்தான்.

அன்று சஞ்சனா வெகுநேரம் கழித்து வந்ததாள் பாதி அவளிடம் இந்த விசயத்தை கூறவில்லை. தனது பிரச்சனை முடிந்தது என்று நினைத்த பாரதியும் அதை பற்றி அன்னையிடம் கூறவில்லை.

அன்றிலிருந்து ஒருவாரம் கழித்து சஞ்சனா கல்லுரியில் இருக்கும்போது பாரதி ஸ்கூலில் இருந்து அவளுக்கு போன் வந்தது. அவர்கள் கூறிய விஷயம் கேட்டு சஞ்சனாவிற்கு குழப்பமாக இருந்தது. அவர்கள் சஞ்சனாவை நேரில் வரசொன்னனர். சரி என்றவள் ஆதிக்கு போன் செய்தாள்.

ஆதி திருமணம் ஆனா புதிதில் அவனுக்கும் சஞ்சனாவிற்கும் என்று மட்டும் ஒரு நம்பர் வாங்கினான். முக்கியமான விசயம் என்றால் மட்டும் சஞ்சனா அந்த எண்ணிற்கு அழைப்பாள். எவ்வளவு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும் அந்த எண்ணிற்கு கால் வந்தால் உடனடியாக ஆதி அட்டென்ட் செய்வான். அவர்கள் பிரிந்தபின் சஞ்சனா அந்த எண்ணில் தொடர்புகொள்வதே இல்லை. இன்று இருந்த பதட்டத்தில் அந்த எண்ணிற்கு அழைத்தாள். என்னதான் ஆறு வருடமாக அவள் அழைப்பதில்லை என்றாலும் அந்த என்னை தன்னோடு இன்றும் எடுத்துச்செல்வது ஆதியின் பழக்கம். அந்த எண்ணில் சஞ்சனா நம்பர் பார்த்ததும் பதறிபோய் போன் எடுத்தான் ஆதி.

சனா என்ன ஆச்சு எது பிரச்சனையா?

பல நாள் கழித்து கேட்ட சனா என்ற அழைப்பில் சஞ்சனாவிற்கு ஒருநிமிடம் அனைத்தும் மறந்துபோனது. அவன் மீண்டும் மீண்டும் சனா சனா லைன்ல இருக்கியா எதாவது சொல்லு என்று கேட்கவும் தன்நிலைக்கு வந்தவள் ஆதி ஸ்கூல்ல எது பிரச்சனைன்னு பாரதி உங்ககிட்ட சொன்னாளா?

ஆமா ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்ன என்று கூறி அன்று நடந்தவைகளை கூறினான்.

என்கிட்ட ஏன் நீங்க சொல்லல

அன்னைக்கு நீ ரொம்போ லேட்டா டையர்டா இருந்த அதான் சொல்லல, என்ன ஆச்சு?

பாரதி அடுத்தநாள் அந்த விசயத்தை பிரின்சிபல்கிட்ட சொல்லியிருக்க, அவங்களும் உடனே அந்த பசங்களை இனி ஸ்கூல்குள்ள வரக்கூடாதுன்னு சம்மந்தபட்ட பெரண்ட்ஸ்க்கு சொல்லிட்டாங்க போல. ஆனா இன்னைக்கு அந்த பசங்க ஸ்கூலுக்கு வந்து பாரதிகிட்டயும் அவ  ப்ரெண்ட் கிட்டயும் வம்பு பண்ணி இருக்காங்க.

என்ன சொல்ற இப்ப நீ எங்க இருக்க?

பாரதி ஸ்கூலுக்கு போயிட்டு இருக்க

அரைமணி நேரத்துல அங்க இருப்ப என்று கூறி போன்னை வைத்துவிட்டான். கோவத்தில் இருக்கிறான் என்று சஞ்சனாவிற்கு புரிந்தது.

சஞ்சனா சென்று ப்ரின்சிபலிடம் பேசிவிட்டு வெளிய வந்தபோது ஆதி வந்திருந்தான். அவனை பார்த்ததும் பாரதி ஓடிச்சென்று கட்டிக்கொண்டு அழ தொடங்கினாள். மண்டியிட்டு அவள்முன் அமர்ந்தவன் பேபி கேர்ள் இப்ப எதுக்கு நீ அழகுற என்னோட பொண்ண நான் தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன்.

தேம்பிக்கொண்டி அப்பா மேல எல்லா இங்க் அடிச்சுட்டாங்க எல்லாரு சிரிச்சாங்க என்று கூறி மீண்டும் அழுதாள். பேபி நீ எந்த தப்பும் செய்யல, மத்தவங்க கஷ்டப்படுறப்ப பாத்து சிரிக்குறவங்கதான் வெக்கபடனும் நீ எதுக்கு அழுகனும். முதல்ல அழுகுறத நிறுத்து அப்பா பாத்துக்குறேன். அழுகை குறைந்து சரி என்று தலையாட்டினாள் பாரதி.

மகளிடம் பேசிவிட்டு மனைவியிடம் வந்தான் ஆதி. அவன் கேட்பதற்குமுன் சொல்ல தொடங்கினாள் சஞ்சனா.

பையன் பேரு வருண், கிரிமினல் லாயர் காளிதாஸ் ஓட பையன். அவனோட தம்பி இந்த ஸ்கூல்ல 10th படிக்குறான். அவனை கூட்டிட்டு போறதுக்கு கார்டியனு வருண் ஸ்கூலுக்கு வந்துட்டு இருந்து இருக்கான். அப்படி வரப்ப அவனோட காலேஜ் ப்ரெண்டிஸ் கூட கூட்டிட்டு வந்து இங்க பிள்ளைங்க கிட்ட வம்பு பண்ணி இருக்கான். அதைத்தான் பாரதி ப்ரின்ஸிபல்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணியிருக்க. மேடம் அப்பவே காளிதாஸை கூப்பிட்டு இனி வருண் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. தன்னோட தம்பி மூலமா பாரதிதான் இந்தவிஷயத்தை கம்ப்ளைண்ட் பண்ணணு தெரிஞ்சுக்கிட்டு இன்னைக்கு ஸ்கூலுக்கு பைக்குள வந்து பாரதி மேலயும் கூட இருந்த பொண்ணு மேலும் இங்க் அடிச்சு இருக்காங்க. மேடம் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்குறதுக்கு முன்னாடி நம்பகிட்டயும் காளிதாஸ்கிட்டயும் பேசனுனு வரச்சொல்லி இருக்காங்க. அந்த இன்னொரு பொண்ணோட ப்ரெண்ட்ஸ் அந்த பொண்ண வேற ஸ்கூல் மாத்தனுனு பேசிட்டு இருக்காங்க.

பாரதிக்கு நீ என்ன செய்யனுனு நினைக்குற சஞ்சனா?

ஒரு பிரச்சனையின உடனே அவளை ஸ்கூல் மாத்துறதுல எனக்கு இஷ்டமில்லை. அவளுக்கு நம்மளே பிரச்சனையா பார்த்து ஓட கத்துகுடுக்ககூடாது. அவ தொடர்ந்து இங்கதான் படிக்கணும் மத்தபடி நீங்க இந்த பிரச்சனைய எப்படி ஹேண்டில் பண்ணாலும் எனக்கு ஒகே.

ஒரு தலையசைப்போடு உள்ளே சென்றான் ஆதி சஞ்சனா அவனை தொடர்ந்து உள்ளே சென்றாள். உள்ளே காளிதாஸ், பிரின்ஸ்பல் மற்றும் பாரதி ப்ரெண்டு பெற்றோர் இருந்தனர்.

ஆதியை பார்த்ததும் வரவேற்ற பிரின்ஸ்பல் அவனை அமரச்சொன்னார். அவர்கள் ஸ்கூல் காண்பிரென்ஸ் ரூமில் இருந்தனர். காளிதாஸுக்கு எதிரில் அமர்ந்தான் ஆதி, சஞ்சனா ஆதி அருகில் அமர்ந்தாள். காளிதாஸ், ஆதித்யன் இருவரும் பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டனர்.

பிரின்ஸ்பல் சொல்ல தொடங்குவதற்கு முன் காளிதாஸ் பேச தொடங்கினார். Mr. ஆதி என்னோட பையன் செஞ்சது தப்புதான், அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குற, தம்பிய கூப்பிட வர இடத்துல பசங்ககூட சேர்ந்து வம்புபண்ணுவானு நான் எதிர்பார்க்கல வயசு கோளாறு தப்பு பண்ணிட்ட. ஸ்கூல்ல இருந்து போன் வந்ததும் இனி அவன் ஸ்கூலுக்கு போகவேண்டான்னு சொல்லிட்டேன். ஆனா இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கல. மேடம் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்குற சொல்றாங்க, அதுனால இன்னும் பிரச்சனை தான் மீடியால ஸ்கூல் நேம் வரும், இந்த ஸ்கூல்ல இப்படி நடந்துச்சுனு திரும்ப திரும்ப போடுவாங்க. நம்ப ரெண்டுபேரும் சமூகத்துல எல்லாருக்கு தெரியற இடத்துல இருக்கோம் இன்னும் ஒரு மாசம் நம்பள வெச்சே நியூஸ் சேனல் எல்லாம் டீ ஆர் பி ஏத்திப்பாங்க இதெல்லாம் தேவையா? படிக்குற பையன் அவன் வாழ்க்கையே போயிடும் கொஞ்சம் யோசிங்க.

மெதுவாக புன்னகைத்த ஆதி ஏன் பேமஸ் கிரிமினல் லாயரா இருக்கீங்கன்னு எனக்கு புரியுது. ஸ்கூல் நேம் போய்டும், என்னோட பேமிலி நேம் நியூஸ்ல வரும்னு எமோஷனல்ல ஹிட் பண்றீங்க. ஆனா உங்க பிரச்சனை கடைசியா சொன்ன படிக்குற பையன் வாழ்க்கை வீணாபோய்டுங்குறது மட்டும்தான். இங்க பாருங்க Mr. காளிதாஸ் என்னோட பொண்ணு எந்த தப்பும் செய்யல இன்னாரு பொண்ண வம்பு பண்ணதுனால இன்னாரு மகன் கைது செய்யப்பட்டருனு நியூஸில வரதுனால என்னோட மானம் போகாது. ஸ்கூல்குள்ள வந்து நெல்லு பேர் பிள்ளைங்ககிட்ட வம்பு பண்றவரைக்கு பார்த்துகிட்டு இருந்த ஸ்கூல் மேனேஜ்மென்ட்டை நான் ஏன் சும்மாவிடனும்.

சொந்தக்காரங்க வீட்டுல விட்டாகூட போன் பண்ணி எப்படி இருக்க, பத்திரமா இருக்கலானு செக் பண்ணுவோம் எட்டு மணிநேரம் நம்பி விடுறது ஸ்கூல்ல தான். அந்த நம்பிக்கையை ஸ்கூல்தான் காப்பாத்தணும் அதை செய்ய அவங்க தவறிட்டாங்க. சரி நீங்க சொன்ன மாதிரி படிக்குற பையனோட வாழ்க்கையை  ஒரு பிரச்சனைக்காக கெடுக்குறதுல எனக்கு இஷ்டம் இல்லை. அதே மாதிரி பிரச்சனையை சொன்னவுடனே பிரின்ஸ்பல் அக்ஷன் எடுத்து இருக்காங்க சோ நானும் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க விரும்பல. ஆனா ஒரு கண்டிஷன் நீங்க உங்க பையன் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கடிதம் குடுக்கணும், கூடவே உங்க சின்ன பையன் இனி இந்த ஸ்கூல்ல படிக்க கூடாது. அவனை கூட்டிட்டு போக வந்துதான் இந்த பிரச்சனை, அவன்தான் தன் அண்ணனுக்கு கம்ப்ளைண்ட் குடுத்தது யாருனு சொல்லி இருக்கான். அதுனால அவனை நீங்க வேற ஸ்கூல் மாத்திடுங்க, இதுதான் காரணம்னு சொல்ல வேண்டாம், அவனோட காண்டாக்ட் செர்டிபிகேட்ல எது சொல்ல தேவையில்லை அவன் இந்த ஸ்கூல்ல இருக்க கூடாது அவ்ளோதான்.

பாராட்டும் தொனியில் பார்த்த காளிதாஸ் சும்மாவா ஆதித்யன்னா வியாபார உலகத்துல பயப்படுறாங்க, ஐ அக்ரீ நீங்க சொன்னதுக்கு நான் ஒத்துக்குறேன். என்னோட பசங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும் என்றவர் டீ.சி கொடுக்க சொல்லிவிட்டார். ஆதி கேட்ட மன்னிப்பு கடிதத்தையும் கொடுத்தார். ஸ்கூல் மேனேஜ்மென்ட் ஆதியிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டது. அவன் பாரதி தொடர்ந்து அங்குதான் படிப்பாள் என்று சொன்னதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்துவதாக கூறினர்.

அனைத்தும் பேசிமுடித்து வெளியில் வந்த போது பாரதி தோழியின் பெற்றோர் ஆதி சஞ்சனாவிடம் வந்தனர். என்ன சார் இவ்ளோ பிரச்சனைக்கு அப்புறமும் பொண்ண இங்கயே படிக்கவெக்குறனு சொல்ரீங்க?

வேற என்ன சார் பண்ணனும் தப்பு பண்ணது யாரோ தண்டனை எதுக்கு நம்மபிள்ளைங்களுக்கு கொடுக்கனும் ?

துஷ்டனை கண்ட தூர விலகுனு சொல்லுவாங்க…. என்று அவர் இழுத்தார்.

இன்னைக்கு துஷ்டன் இல்லாத இடமே இல்ல சார், ஓடி ஒளிஞ்சுக்க சொல்லிகுடுக்கக்கூடாது எதிர்த்து நிற்க கற்றுகொடுக்கனும். என்ன நடந்தாலும் நாங்க உன்கூட இருக்கோம்ங்குற நம்பிக்கையை குடுக்கனும். இன்னைக்கு எந்த தப்பும் செய்யாம உங்க பொண்ண ஸ்கூல் மாத்துனீங்கனா நாளைக்கு தெரியாம ஒரு தப்பு செஞ்சகூட உங்க பொண்ணு உங்ககிட்ட சொல்ல பயப்படுவ அதுவே வேற பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கலாம். உங்க பொண்ணு உங்களுக்குத்தான் எல்லாராவிடவும் அக்கறை அதிகம் நீங்க சரினு செய்றத செய்ங்க என்று கூறிவிட்டு மனைவி மகளுடன் காருக்கு சென்றான் ஆதி.

அவன் டிரைவரோடு வந்திருந்ததால் டிரைவராய் சஞ்சனா காரை வீட்டில் விடசொல்லிவிட்டு மூவரும் ஒன்றாக ஆதி காரில் வீட்டிற்கு கிளம்பினர்.

சஞ்சனாவிற்கு எப்போதும்போல் அவனை நினைத்து பெருமையாக இருந்தது. அவன் இந்த விஷயத்தை முடித்தவிதம் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. தன் மடியில் உறங்கும் மகளை வாஞ்சையோடு பார்த்தாள்.

சஞ்சனா நினைத்தது போல இந்த விசயம் முடிந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் ஆனால் அது அவர்கள் வாழ்க்கையில் சூறாவளியாக அடித்தது. நடக்கப்போவது என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”.

-நறுமுகை

7

No Responses

Write a response