குட்டி இளவரசன்

அன்பு சகாக்களுக்கு ,
பேசுறதுக்கு நிறைய இருக்கு ஆனா முதல் விஷயம் சுவாரசியமா இருக்கனும், அதனால எங்க வீட்டுல இருக்க ஒரு முக்கியமான நபரை பற்றி உங்களுக்கு சொல்லப்போற. அவரை நாங்க நெறய பேர் சொல்லி கூப்பிடுவோம் ஆனா எனக்கு ரொம்போ பிடிச்ச பெயர் குட்டி இளவரசன். அவரு எங்க வீட்டுல அப்படி ராஜா தோரணைலதா இருப்பாரு.நான் அவர குட்டி இளவரசன் கூப்பிட ஒரு கரணம் இருக்கு, நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களானு தெரில குட்டி இளவரசனு ஒரு புத்தகம் இருக்கு 1943 ல வெளியிடப்பட்ட ஓரு பிரெஞ்சு புத்தகம். கிட்டத்தட்ட 76 வருசத்துக்கு அப்புறமும் இந்த புத்தகம் இன்றைக்கு பலரால் வாங்கி படிக்கப்படுது . வாழ்க்கைல ஒரு முறை யாவது செஞ்சுறனு சொல்ல படுற விஷயங்கள் சில உண்டு எல்லா மனிதர்களும் அதுக்குன்னு ஒரு பட்டியல் வெச்சு இருப்பாங்க நான் என் நண்பர்களுக்கு அவங்க பட்டியலில் ஒரு விஷயமா இந்த புத்தகத்தை ஒரு முறையாவது படிக்கனும் சேர்த்துக்க சொல்ற. இப்படி அந்த புத்தகம் எனக்கு பிடிச்சனாலதா எங்க வீட்டு முக்கிய நபரை நான் அந்த பெயர் சொல்லி கூப்பிடுற.குட்டி இளவரசன் எப்படிநா வடிவேல் சொல்ற மாதிரி building strong basement weak அப்டிங்குற சங்கத்தை சேர்ந்தவர். வீட்டுக்குள்ள இருக்கப்ப நாங்க ரொம்போ வீரமா இருப்போம் வீட்டு கதவை திறந்து வெளில கால் வெச்சுட்டா நாங்க இருக்க இடமே தெரியாது. ஆனா எங்க உலகம் அழகானது அவனாலதா, தன்னை சுத்தி இருக்கவங்கள மகிழ்ச்சியா வெச்சுக்க எல்லாராலும் முடியாது அது சிலருக்கே உள்ள வரம். குட்டி இளவரசனும் அப்படிதா அவனை சுத்தி இருந்தா இல்ல அவன் உங்கள சுத்தி இருந்தா நீங்க எப்பவும் ஆனந்தமா இருக்கலா. அவனோட சின்ன சின்ன சேட்டைகள், வாலுத்தனம், திருட்டு பார்வை, உங்ககிட்ட பேசுற விதம் இப்படி எல்லாமே உங்க முகத்துல ஒரு சின்ன புன்னகையை கொண்டு வரும். அந்த குட்டி இளவரசனை பத்தி மேலும் நாம்ப பேசலா.

என்றும் அன்புடன்
சக தோழி

2

No Responses

Write a response