கருத்தை கவருவோம்…..

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

-மகா கவி பாரதி


என் அன்பு சகாக்களுக்கு ,
நீங்க இந்த விளம்பரம்லா பாத்து இருப்பீங்க கண்ணை கவரும் வண்ணங்களில், கண்கவர் வகைகள், இப்படி எல்லா சொல்லுவாங்க, போன வருஷம் வந்த வேலைக்காரன் படத்துல கூட மருத்துவர் சிவராமன் சொல்லுவாரு குழந்தைங்க சுவை பிடிச்சு சாப்பிடுறது விட விளம்பரங்கள்ல வர பல வண்ணங்களை பாத்துதா சாப்பிட ஆசைப்படுறாங்க அப்படினு சொல்லுவாரு.அது ரொம்போ உண்மை பெரும்பாலான விஷயங்கள் கண்ணனுக்கு அழகா இருக்குனுதா நம்ப வாங்கவோ இல்ல செய்யவோ ஆசைப்படுறோம்.அதேதா நம்ப குழந்தைங்க விசயத்திலும் நம்ப அணுகுமுறைய இருக்கு. குழந்தை பிறந்து அந்த முதல் நிமிடம் நம்ப கண்ணுல குழந்தையை பாக்குற அந்த வினாடில இருந்து குழந்தைக்கான நம்மளோட பொறுப்புகள் தொடங்குது.உண்மையா சொல்லணுனா அது அப்படி இல்ல,குழந்தை கருவில் உருவான நாள் தொடங்கி பெற்றோரின் பொறுப்புகள் தொடங்குது.பொறுப்புனு சொன்ன பெருசா ஒன்னு இல்ல குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் என செய்வோம் அம்மா பாரு, அப்பா பாரு, சமத்தா இருக்கனும் இப்படி நெறய பேசுவோம் அத குழந்தை உங்களுக்குள்ள இருக்கப்ப இருந்து பேசுங்க. நீங்க சாப்பிடுற சாப்பாடு என்னனு சொல்லுங்க, நீங்க பாக்குற நிகழ்ச்சி என்னனு சொல்லுங்க,நீங்க போற இடம் எதுன்னு சொல்லுங்க, நம்ப குழந்தைங்க நம்பள விட ஷார்ப் கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. என்னோட சின்ன வயசுல ஒரு படம் பாத்து இருக்க, படம் பெயர் சரியாய் நியாபகம் இல்ல அதுல ஒரு குட்டி குழந்தய கடத்திட்டு போய்டுவாங்க அந்த குழந்தை அவங்க அம்மா அவனுக்கு போட்டோல காட்டுன இடம்ல நியாபகம் வெச்சு அங்க எல்லா போயிட்டு இருப்பா அவன பிடிச்சு வெக்க முடியாம கடத்திட்டு போனவங்க படாத பாடு படுவாங்க பாக்க ரொம்போ சிரிப்பா இருக்கும். இப்ப யோசிச்சா அது சிரிக்க மாட்டு இல்ல சிந்திக்கவும்னு தோணுது. குழந்தை தான அதுக்கு என்ன தெரிய போகுதுனு நம்ப நெனைக்குறோம் ஆனா குழந்தைகளை சுத்தி நடக்குற விஷயங்கள் தா அவங்களோட எதிர்காலத்த தீர்மானிக்குது. இதுக்காக நம்ப ரொம்போ நேரம் செலவு பண்ணனுனு இல்ல கொஞ்ச நேரமானாலும் பயனுள்ளதா அத மாத்தணும். உங்க குழந்தைக்கான வாழ்க்கை பாடத்தை அவங்க உங்களுக்குள்ள இருக்கப்பவே தொடங்குங்க . நீங்க பாக்குற விஷயங்கள் , உங்களை சுத்தி இருக்க மக்கள், நெருங்கிய உறவுகள், இப்படி எல்லாத்தையும் குழந்தைக்கு அறிமுக படுத்துங்க . இதுல ரொம்போ முக்கியமான விஷயம் உங்களுக்கு பிடிக்காதத சொல்லாதீங்க குழந்தையோட விருப்பு, வெறுப்புகள் அதோட தேர்வா இருக்கனும்.முடிஞ்ச தன்னை சுத்தி இருக்க எல்லாத்தையும், எல்லாரையும் நேசிக்க சொல்லி குடுங்க. கண்ணில் பாத்து உணர்வதுக்கு முன்னாடி உங்க குழந்தையோட கருத்தை கவரும் விஷயங்களை அறிமுகம் படுத்துங்க. நீங்க இதெல்லா செய்றனால புதுசா இந்த உலகத்துக்கு வர குழந்தைக்கு இது புது இடமா இருக்காது, கருத்தில் இருக்குறத கண்களால பாக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து பேசலாம் ……

என்றும் அன்புடன்
சக தோழி

3

No Responses

Write a response