என் வானவில்-9

என் வானவில்-9

மித்ராவும் சுஜியும் அதிகாலையிலேயே கோயம்பத்தூர் சென்று இறங்கினர். அங்கு அவர்களை அழைத்துச் செல்ல கார் தயாராக காத்திருந்தது. கோயம்பத்தூரில் இருந்து அவர்கள் வால்பாறை சென்று சேர்ந்தார்கள். மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் வால்பாறை மித்ராவை அந்த அதிகாலை வேலையில்  பனிமூட்டத்துடன் வரவேற்றது.

தன்  வழக்கையில் நடந்தவைகளையும் தற்போது நடந்துகொண்டிருப்பது அனைத்தும், அவளை பயத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தி இருந்தது. எனவே அந்த இயற்கை அழகை ரசிக்கும் மனநிலையில் மித்ரா இல்லை.

வால்பாறையில் இருந்த ஒரு பெரிய எஸ்டேட்டிற்குள் அந்த கார் நுழைந்தது. அந்த எஸ்டேட்டின் வாசலில் பிருந்தாவனம் என்ற போர்ட் இருந்தது. எஸ்டேட்டிற்குள் சிறிது தூரம் சென்ற பிறகு மலைகளுக்கு இடையில் ஒரு அழகிய பங்களா, அரண்மனையின் பொலிவோடு இருந்தது.

பெரிய வீட்டை பார்த்தவள் மிகவும் பயந்துபோனாள். அந்த மிரட்சியுடன் இறங்கியவளை சுஜி உள்ளே அழைத்துக்கொண்டு செல்ல,

மெல்லிய கரையிட்ட சந்தன நிற புடவையில், கொண்டையுடன் தங்க பிரேம் போட்ட கண்ணாடி அணிந்து முகம் முழுவதும் கனிவுடன் ஒரு எழுபது வயது மதிக்க தக்க பெண்மணி வேக வேகமாக வந்து மித்ராவை வரவேற்றாள்.

 வாங்கடா உங்களுக்காக தான் இரவிலிருந்தே நான் காத்துக்கொண்டிருக்கிறேன். பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது? அதில் ஒன்றும் பிரச்சனை இல்லையே என்று சுஜியிடம் கேட்டவர் ,

மித்ராவை பார்த்து என்னமா ரொம்போ பயந்துவிடாயா ? என்று கேட்டவர், இங்கு வந்துவிட்டாய் இல்லையா இனி அனைத்தும் சரியாகிவிடும்.நீ இங்கு நிம்மதியாக இருக்கலாம் உனக்கு இங்கு எந்த பிரச்சனையும் வராது என்று வாஞ்சையோடு கூற,

 அவரை பார்த்ததும் எதோ தாய் மாடி சேர்ந்த கன்று போல தன் பயமெல்லாம் வடிந்து தன் சக்தியும் வடிந்து அங்கேயே மயங்கி சரிந்தாள் மித்ரா.

 சுஜியும் அந்த வீட்டின் முதலாளி தெய்வநாயகி அம்மாவும் பயந்து போய் மித்ராவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்ப முயன்றனர்.

அதற்குள் அந்த வீட்டின் ட்ரைவர் டாக்டருக்கு போன் செய்துவிட, வீட்டில் வேலை செய்யும் வள்ளியும் சுஜியும் அவளை கைத்தாங்கலாக தூக்கிச்சென்று படுக்கையில் படுக்க வைத்தனர்.

இரவு முழுவதும் அவர்கள் பத்திரமாக போய் சேர்வார்களா என்ற கவலையில் இருந்த பிரகாஷ், கோயம்பத்தூரில் இறங்கி அவர்கள் கார் ஏறியவுடன் சுஜி கார் ஏறிவிட்டதாக சொன்ன பிறகு தான் கண்ணயர்ந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவனை போன் பல முறை அடித்து உறக்கத்தில் இருந்து எழுப்பியது.

யார் என்று பார்த்தவன் சுஜியின் நம்பரை பார்த்து எழுந்து போனை எடுத்து, சுஜி என்ன ஆச்சு என்று கேட்க,

ஒன்றும் இல்லை பிரகாஷ், மித்ரா மயங்கி கீழே விழுந்துவிட்டாள்.அவளுக்கு டெம்பரேச்சர் ரொம்போ அதிகம் ஆயிடுச்சி.நேற்று இரவு மழையில் நனைந்ததால் தான் என்று நினைக்கின்றேன். அதுபோக சின்ன பொண்ணு, ரொம்போ பயந்துவிட்டாள். டாக்டரை வர சொல்லியிருக்கிறார்கள்  எனக்கென்னவோ இந்த சமயத்தில் நீ அவளுடன்  இருப்பது தான் சரி என தோன்றியது அதற்கு தான் போன் செய்தேன் என்று கூறினாள் சுஜி,

இல்லை சுஜி இப்போ நான் அங்கு வந்துவிட்டால் ஈஸியா மித்ராவின் சித்தி என்னை தான் சந்தேகப்படுவார்கள் அது சரிவராது. நீ ஒன்றும் பயப்பட வேண்டாம், நான் இன்று இரவிற்குள் அக்காவை அங்கு வர சொல்லி விடுகின்றேன். நீ நைட் கிளம்பிவிடு. நான் இன்னும் ஒரு நான்கு நாட்களில் அங்கு வந்து விடுகிறேன் என்று பிரகாஷ் கூற,

சுஜி சரி என்று கூறி போனை வைக்கப்போனாள்,

பிரகாஷோ, டாக்டர் வந்துவிட்டு சென்ற பின் என்ன கூறினார் என்று எனக்கு போன் பண்ணு என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

 பின் எழுந்து சென்று முகம் கழுவிக்கொண்டிருந்தவன், வெளியில் சத்தம் கேட்டு நிதானமாக எட்டிப்பார்த்தான்,

மித்ராவின் சித்தி அங்கு கண்டபடி கத்திக்கொண்டிருந்தார். நான் தான் அப்பொழுதே கூறினேனே, இவள் இப்படி ஏதாவது செய்வாள் என்று தெரிந்து தான் மரியாதையா ஒருத்தனுக்கு கட்டி வச்சிடலாம் என்று நினைத்தேன், என் பேச்சை யார் கேட்டீர்கள்? இப்படி குடும்ப மானத்தை வாங்கிவிட்டு ஓடிப்போய்விட்டாள். எவன் கூட ஓடிபோனாள் என்று தெரியவில்லை…… என்று மித்ராவை பற்றி மிக மோசமாக பேசிக்கொண்டிருந்தாள்.

 ஆனால் அங்கு இருந்த யாருமே அவர் கூறிய ஒரு வார்த்தையையும் நம்பவில்லை. அந்த தெருவாசிகள் அனைவரும், மித்ரா ரொம்போ அமைதியான பொண்ணு இவள் இப்படி  அந்த பொண்ணை ஒன்றுமே இல்லாமல் வீட்டை விட்டு ஓட வைத்துவிட்டாளே என்ற ரீதியில் தான் புவனாவை பார்த்தனர்.

 விஷயம் கேள்விப்பட்டு வேகமாக ஓடிவந்த பன்னீர்செல்வம் அங்கு அமைதியாக நின்று கொண்டிருந்த சண்முகத்திடம்

 உன் பொண்ணை காப்பாற்றி விட்டதாக நினைக்கிறாயா? எங்கு போனாலும் அவளை நான் தூக்கி கொண்டுவந்து உன் முன்னாடி வைத்து தாலி கட்டுவேன் எனக்கு பரிசம் போட்ட பொண்ணை அப்படி எல்லாம் விட்டுவிட மாட்டேன் என்று சவால் விட்டுக் கொண்டிருக்கும்பொழுது மித்ராவின் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது,

பன்னீர்  செல்வம் என்னவென்று பார்க்க அவன் எப்போதோ செய்த ஒரு குற்றத்திற்கு சாட்சி கிடைத்து விட்டதாகவும் அவனுக்கு அர்ரெஸ்ட் வாரென்ட் வந்திருப்பதாகவும் கூறி அவனை கூட்டிக்கொண்டு சென்றனர்.

எப்படியும் இவன் மித்ராவை இழுத்துக்கொண்டு வந்துவிடுவான் என்று புவனா நினைத்துக்கொண்டிருக்க, இப்படி பன்னீர்செல்வம் கைது செய்யப்படுவான் என்று புவனாவே எதிர்பார்க்கவில்லை. மித்ராவை திருமணம் செய்த பிறகு, புவனாவிற்கு ஒரு பெரிய தொகையை கொடுப்பதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தான். இப்போது மித்ரா சொல்லாமல் வீட்டை விட்டு சென்றதனால் அந்த பணம் தனக்கு வராது என்று வயிற்றெரிச்சலில் இருந்த புவனா, பன்னீர்செல்வம் எப்படியும் அவளை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்வான் அந்த பணம் எப்படியும் தனக்கு கிடைத்து விடும் என்று நம்பிக்கொண்டிருந்தாள். ஆனால் அந்த எண்ணத்திலும் இப்போது மண் விழுந்துவிட்டது.

 முன்னிலும் அதிகமாக சண்முகத்தை பார்த்து கத்த தொடங்கியவள், இது தான் நீ உன் பொண்ணை வைத்திருக்கும் லட்சணமா நான் எத்தனை முறை சொன்னேன் என்னமோ ஊரில் இல்லாத பொண்ணை வைத்திருப்பது போல எப்படி பேசினாய் கடைசியாக என்ன ஆயிற்று பார்த்தாயா என்று கத்திக்கொண்டிருக்க,

அங்கிருந்த அனைவரும் அவர் அவர் வேலையை பார்க்க சென்றனர்.

பிரகாஷும் மற்றவர்களில் ஒருவர் போல வேடிக்கை பார்த்துவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

அங்கு வால்பாறையில் மித்ராவிற்கு, அதிக மனஉளைச்சல் மற்றும் மழையில் நனைந்ததால்  காய்ச்சல் வந்திருக்கிறது. தினமும் ஊசி போட வேண்டும். ஃபிட்ஸ் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பல அறிவுரைகளோடு மருந்துகளை கொடுத்துவிட்டு, ஊசி போட்டுவிட்டு சென்றார் மருத்துவர்.

தெய்வநாயகி அம்மாவை வால்பாறையில்  அனைவருக்கும் தெரியும். காலம் காலமாக அவர்களது குடும்பம் டீ எஸ்டேட், டீ பாக்டரி, என்று வைத்திருக்கின்றனர். எனவே டாக்டர் அவரே தினமும் வந்து வீட்டில் பார்த்துவிட்டு ஊசி போட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டார். தெய்வநாயகி அம்மா கார் அனுப்பி பிரகாஷின் அக்காவை அழைத்து வர சொன்னார்.

இனி மித்ராவின் வாழ்க்கையில் நடக்க போவது என்ன? தெய்வநாயகி யார்? பிரகாஷ் எதற்காக மித்ராவை அங்கே அனுப்பியுள்ளான் ? இவையெல்லாம் அறிய தொடர்ந்து வாசியுங்கள் ” என் வானவில்”.

 -நறுமுகை

4

No Responses

Write a response