என் வானவில்-47

என் வானவில்-47

விழாவிற்கு வந்தவர்களை அனுப்பிவைத்துவிட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஹாலில் கூடினர்,

வேகமாக மித்ராவிடம் வந்த அபிராமி, மித்ரா என்ன தான் நடந்துச்சு? இதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சிது? ஏன்  எல்லார்கிட்டயும் இதெல்லாம் மறைச்சு வச்சிருந்த? என்று விடாமல் கேட்க,

பொறு அபி எல்லாருக்கும் இதை சொல்ல தான் போறேன், இந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரிந்ததற்கு காரணம் என் அத்தை தான் என்று அங்கு நின்றுகொண்டிருந்த விஸ்வநாதனின் மனைவியும் ரோஹித்தின் அம்மாவுமான ராஜேஸ்வரியைக் காட்டினாள்.

 வேகமாக தன் மகளைப் பார்த்த கார்மேகம் ராஜி, உனக்கு இதெல்லாம் தெரியுமா? என்று கேட்க

ஆமாப்பா எனக்கு தெரியும், மித்ரா கிடைச்சுட்டான்னு அவங்க உங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடியே இதெல்லாம் எனக்கு  தெரியும், எப்படியாவது மித்ரா தேனி வருவதை நிறுத்திடணும்னு நான் நினச்சேன், ஆனால் என்னால் அது முடியல என்று கூறி, நடந்ததை சொல்ல தொடங்கினார் ராஜலட்சுமி.

கொஞ்சம் நாளா ரோஹித் என்கூட பேசுறதையே குறைச்சுகிட்டான், எப்போ வந்தாலும் என்கிட்டே உட்கார்ந்து ஆசையா பேசுறவன், எப்போதும் எதோ ஒரு பரபரப்புடனே இருந்தான்,

அப்படி தான் அன்று ஒரு நாள் ஊர்ல இருந்து வந்தவன் பரபரப்போடு  அவங்க அப்பாகிட்ட எதையோ பேசிகிட்டு இருந்தான், சரி அவங்க பேசட்டும்னு விட்டுட்டு அன்னைக்கு ராத்திரி அவன் கூட பேசலாம்னு அவன் ரூமுக்கு போனப்போ அப்பாவும் பையனும் ஒண்ணா உட்கார்ந்து தண்ணி அடிச்சிக்கிட்டு பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன், அவங்க பேசின விஷயம் இது தான்,

என்னப்பா இப்படி ஆயிடுச்சே, எப்படியாவது மித்ராகிட்ட முழு உண்மையும் சொல்லி இங்க கூட்டிட்டு வந்திடலாம்னு பார்த்தா……..

ரோஹித் நம்ம அவசரத்துக்கெல்லாம் காரியம் நடக்காது அப்படி நான் அவசரஅவசரமா செய்யணும்னு நினைச்சிருந்தா இன்னைக்கு நாம இந்த வீட்டில இப்படி இருந்திருக்க முடியாது. எதுலயும் நிதானமா இருக்கணும், மித்ராவை எப்படியாவது இங்க கூட்டிட்டு வந்திடலாம் அது உன்னால என்னால முடியலைனாலும் அவ தாத்தா நினைச்சா முடியும், அதை நாம பொறுமையா தான் ஹாண்டில் பண்ணனும்.

என்னப்பா சொல்றிங்க? தாத்தாவே எழுந்திருக்க முடியாம இருக்கார் அவர் எப்படி மித்ராவை கூப்பிடுறதுக்கு வருவாரு?

ரோஹித் அந்த இடத்துல தான் நீ ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க மாட்டேங்குற உங்க தாத்தாக்கு உடம்புல எந்த வியாதியும் இல்ல, எல்லாம் அவர் மனசுல இருக்கிற கவலை  அவரோட மகன் போய்ட்டான், மனைவியும் இல்ல, அப்படிங்குற வருத்தம் தான். ஆனால் அதுவே அந்த மகனுக்கு ஒரு பொண்ணு இருக்கா அவ இப்போ உயிரோடு இருக்கானு தெரிஞ்சா அவர்க்கு இந்த கவலை எல்லாம் போய்டும், சீக்கிரமே உடம்பு சரியாகி எழுந்து நடக்க ஆரம்பிச்சுருவார்,

இது என்னைக்கு நடக்குறது என்று ரோஹித் கேட்க,

நீ ஏன் அதை பத்தி கவலைப்படுற எவ்ளோ நாள் ஆனாலும் சரி நாம  தாத்தாவைக்  கூட்டிட்டு போய் தான் மித்ராவை இங்க கூட்டிட்டு வரமுடியும்,

அதெல்லாம் சரிப்பா, ஆனால் மித்ராவுக்கு அவங்க அப்பா அம்மாவோட சாவுக்கு நீங்க தான் காரணம்னு தெரிஞ்சிருக்குமோ? என்று கேட்க,

அதைக் கேட்டுக்கொண்டிருந்த ராஜலட்சுமி உறைந்து போனார்,

அது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை தெரிஞ்சிருந்தா இந்நேரம் அவள் தெய்வநாயகியிடம் சொல்லி நம்ம ரெண்டு பேரையும் கம்பி எண்ண வச்சிருப்பா எனக்கு தெரிஞ்சு மித்ராக்கு அவளோட அப்பா அம்மா யாருன்னே தெரியாம தான் இருந்திருக்கு, அவ சொல்றதுல பொய் இருக்குற மாதிரி தெரியல, என்றார் விசுவநாதன்.

ரோஹித் அவரிடம் என்னவோப்பா நீங்க சொன்னதை நம்பி தான் நான் ரிஸ்க் எடுக்குறேன், நாளைக்கு அவளுக்கு உண்மை தெரிஞ்சு நம்மை ஏமாத்திடப்போறா என்று சொல்ல,

நீ சொன்னதை எல்லாம் வச்சு பார்குறப்போ மித்ரா ஒன்னும் அவ்வளவு புத்திசாலியா தெரியல,  அதனால நீ அதை பத்தி கவலைப்படாத  ரோஹித் நிம்மதியா இரு, நாளைக்கு நாம முதல் வேலையா தாத்தாகிட்ட மித்ரா கிடைச்ச விஷயத்தை சொல்லுவோம், அவரோட உடம்பை சரி பண்ணிட்டு போய்  மித்ராவைக் கூட்டிட்டு வர வழியை பார்ப்போம், என்று சொல்ல,

சரிப்பா அப்படியே செய்யலாம் என்று கூறிவிட்டு அவர்கள்  வேறு பேச்சுக்கு தாவினர்.

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ராஜலட்சுமிக்கோ எதுவும் புரியவில்லை, தன் அண்ணன் இறந்ததற்கு தன் கணவன் தான் காரணமா? அது தெரிந்த தன் மகனும் அவருக்கு துணையாக நிற்கிறானா ? என்று எண்ணி மிகவும் உறைந்து போனார், அதை யோசித்துக்கொண்டிருந்தவர் எப்படி தன் அறைக்கு வந்து சேர்ந்தார் என்றே தெரியவில்லை, இதை என்ன செய்வதென்றும் அவருக்கு தெரியவில்லை,

தன்னால்  இவர்களை எதுவும் செய்ய முடியாது உடல்நிலை சரியில்லாத அப்பாவும்,  அவர்களை எதிர்த்து பேசியே பழகாத நானும் இவங்களை என்ன செஞ்சிட முடியும், அவங்க தான் கொன்னாங்கன்னு அவங்க பேசின பேச்சை தவிர வேற எந்த ஆதாரமும் என்கிட்ட இல்ல, என்னால  என் அண்ணன் சாவுக்கு நியாயம் தேட முடியாது, ஆனா என் அண்ணன் பொண்ணு இவங்க கையில சிக்காம காப்பாத்தியே ஆகணும், அவ எக்காரணத்தைக் கொண்டும் தேனிக்கு வரவே கூடாது, என்று தன் மனதோடு முடிவு செய்துகொண்டு அதை எப்படி  செய்வது என்று யோசிக்க தொடங்கினார்.

 இந்த விஷயம் எனக்கு தெரிய வந்தபிறகு என்னால நிம்மதியாவே இருக்க முடியலப்பா ஆனால் நீங்க இருந்த நிலைமையில் என்னால யார்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி என்ன செய்றதுன்னே தெரியல, அதனால இதை என்னோடே வச்சிக்கிட்டு அமைதியாயிட்டேன். மித்ராவை எப்படி காப்பாத்துறதுன்னு யோசிச்சேன், நீங்க மித்ராவை பார்க்க போறது எனக்கு பிடிக்கலன்னு சண்டை போட்டேன் அதை நீங்க கேட்கல, நீங்க அவளை போய்  பார்த்து பேசி இங்க வரவச்சீங்க, அவ வந்த பிறகும் இங்க இருக்கிற யாரும் அவகிட்ட பேசக்கூடாதுன்னும் பாசம் வைக்கக்கூடாதுன்னும் நினச்சேன்.

ஏற்கனவே அவளுக்கு ரோஹித்தைப் பிடிக்கலன்னு நீங்க சொல்லி நான் தெரிஞ்சுக்கிட்டதால்  நான் அவகிட்ட முகம் கொடுத்து பேசாம அவகிட்ட முறைச்சிகிட்டு நின்னா, அப்படியாவது அவ இங்கிருந்து சீக்கிரம் கிளம்பிடுவான்னு நினச்சேன், இங்க இருக்கணும்ங்குற எண்ணம் அவளுக்கு வராதுன்னு நினச்சேன். ஆனால் அவ உங்களுக்காக அதை எல்லாம் பொறுத்துகிட்டு இங்கையே இருந்துட்டா. இதுக்கு பிறகும் இவகிட்ட உண்மையை மறைக்கிறது நியாயமில்லை  என்னால் என் அண்ணனை தான் காப்பாத்த முடியல அட்லீஸ்ட் என் அண்ணன் பொண்ணையாவது காப்பாத்தணும்னு நினைச்சு நானே நம்ம வைக்கோல் புதருக்கு தீய வச்சு எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்பினேன் என்று கூற,

அத்தை அங்கிருந்து நான் சொல்றேன் என்று ஆரம்பிச்ச மித்ரா, எங்கிட்டா தனியா பேசுறதுக்காக அத்தை வைக்கோல்ல தீ வச்சாங்க. மாமா, நீங்க ரோஹித் அப்புறம் வீட்டில இருக்குற எல்லாரும் அதைப் பார்குறதுக்காக அங்க போயிட்டீங்க, ஏன்னா மாமாவைப் பத்தி தெரிஞ்ச பிறகு வீட்டில் இருக்குற வேலைக்காரங்க யாரையும் நம்ப முடியல அவங்களை எல்லாம் வச்சிக்கிட்டு என்கிட்ட பேசுறதுக்கு அத்தைக்கு பயம், அதனால் வேலைகாரங்க எல்லாரையும் திசைதிருப்பிட்டு தனியா ரூம்ல இருந்த என்கிட்ட பேசவந்தாங்க என்று கூறி அந்த நாள் நினைவுக்கு போனால்.

மித்ரா வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவளது அறையில் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்க, யாரோ தன் அறைக்குள் நுழையும் சத்தம் கேட்டு  நிமிர்ந்து பார்த்தாள். அவள் அங்கு தன் அத்தையை சற்றும் எதிர்பார்க்கவில்லை, அவரைப் பார்த்ததும் வேகமாக எழுந்து நின்றவள் உங்களுக்கு எதாவது வேண்டுமா என்று கேட்க,

ராஜலட்சுமி வேகமாக சென்று மித்ராவை அணைத்துக்கொண்டாள்,

என் அண்ணன் போனதுக்கப்புறம், அவர் எங்க எல்லாரையும் விட்டுட்டு போயிட்டார்னு கோபம் இருந்தாலும் இப்படி தனக்கு புடிச்ச வாழ்க்கையை வாழாம இறந்துட்டாறேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன், அப்பாவும் அம்மாவும் அப்போ ரொம்போ மனக்கஷ்டத்துல இருக்க, என்னோட கஷ்டத்தை சொல்லிக்காம அவங்களுக்கு நான் ஆதரவா இருக்கணும்னு நினச்சேன்.

 திடீர்னு நீ என் அண்ணன் பொண்ணுன்னு வந்து நிக்கவும், எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு தெரியுமா? என்  அண்ணன் உறவு என் அண்ணனோடு முடிஞ்சு போயிடலனு எனக்கு அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு. ஆனா அதை வெளியில சொல்லக்கூடிய நிலைமையில கூட நான் இல்லை இப்போ கூட நான் உன்கூட பேசணும்னு இந்த வீட்டில இருக்கிற எல்லாரையும் வெளியில அனுப்ப வைக்கோலுக்கு தீ வச்சிட்டு வந்திருக்கேன்னு,

மித்ரா உறைந்து போனாள். நீங்க என்ன அத்தை சொல்றீங்க, என்கிட்டே பேச எதுக்கு வீட்டில இருக்குற எல்லாரையும் வெளியில அனுப்பனும் என்று மித்ரா கேட்க,

ஆமா மித்ரா நீ இங்க வந்ததும் நான் உன்னை பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டதுக்கு காரணம் உன்னை பிடிக்காமையோ, நீ என் அண்ணனோட பொண்ணான்னு சந்தேகப்பட்டோ இல்ல உன் மாமாகிட்ட இருந்தும், ரோஹித் கிட்ட இருந்தும் உன்னை காப்பாத்தறதுக்காக தான் என்று சொல்ல

எனக்கு நீங்க என்ன சொல்றீங்கனே புரியல அத்தை என்று மித்ரா சொல்ல,

ராஜலட்சுமி தான் கேட்டவற்றை மித்ராவிடம் கூறினாள்.  அதைக் கேட்டு மித்ராவிற்கு என்ன உணர்வு தோன்றியதென்று அவளாலே புரிந்துகொள்ள முடியவில்லை அப்போது பிரகாஷ் கூறிய வார்த்தைகள் அவளது காதுகளில் ஒலித்தன,  “நீ தேனிக்கு போ ஒருவேளை உன் அம்மா அப்பாக்கு என்ன ஆச்சுங்கறதுக்கான காரணம் உனக்கு அங்க கிடைக்கலாம்.” சிறிதுநேரம் கண்ணை மூடி அமைதியாக அமர்ந்திருந்தவள் பிறகு தன் அத்தையைப் பார்த்து இப்போ என்ன செய்யலாம் அத்தை என்று கேட்க,

எனக்கு  தெரியல மித்ரா, என்னால இதை உங்க தாத்தாகிட்ட சொல்லமுடியாது, இத்தனை வருசத்துல எதோ இப்போ நீ கிடச்சதனால தான் அவர் எழுந்து நடமாடிட்டு இருக்காரு, அவர்கிட்ட இதை சொல்லி நானே அவரைக் கொல்ல விரும்பல, இதுக்குமேல இவங்க கெட்டவங்க இவங்க தான் என் அண்ணனை கொன்னாங்கனு என்னால நிரூபிக்க முடியாது. ஆனால் இவங்க கிட்ட இருந்து உன்னை என்னால காப்பாத்த முடியும், இங்க இருக்க பிடிக்கலைனு சொல்லி உங்க பாட்டிகிட்டையே நீ திரும்ப போய்டு, அந்த பிரகாஷ் தம்பி பார்க்க ரொம்ப நல்லபையனா தெரியுறான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோசமா இரு, திரும்ப இங்க  வராத, இங்க யாரையுமே நீ பார்க்கலன்னு நினைச்சுக்கோ என்று சொல்ல,

மித்ராவோ தீர்க்கமாக தலையை அசைத்து அதை மறுத்தாள், இல்லை அத்தை அப்படி எல்லாம் அவங்களை விட்டுட முடியாது, இவ்வளவு விஷயம் தெரிஞ்ச பிறகும் உங்களையும் தாத்தாவையும் அந்த கொலைகாரங்ககிட்ட விட்டுட்டு எப்படி நான் மட்டும் அங்க போய்  சந்தோசமா இருப்பேன்னு நீங்க நினைக்கறீங்க?  கூடவே அவங்க கொன்னது என் அப்பா அம்மாவை, அதனால் நான் இவ்வளவு நாள் நான் யார்? என் அடையாளம் எதுவுமே தெரியாம கஷ்டப்பட்டேன், அதுமட்டுமா தாத்தா படுத்த படுக்கையா இருந்தது, தாத்தா இறந்துபோனது அங்கு வால்பாறையில் பாட்டி இப்படி தனிமையில் கஷ்டப்பட்டது எல்லாத்துக்குமே இவர்  ஒருத்தர் காரணம். இதை அப்படியே என்னால கண்டிப்பா விடமுடியாது அத்தை, என்று மித்ரா சொல்ல,

நம்மால் என்னமா செய்யமுடியும் என்று ராஜலட்சுமி வருத்தப்பட்டார்,

முடியும், பொறுமையா யோசிச்சா கண்டிப்பா இவங்களை மாட்டிவிடறதுக்கு ஒரு வழி கிடைக்கும். ஆனால் அவசரப்பட்டு நாம எதை செஞ்சாலும் நாம மாட்டிக்குவோம், மாமா சொன்ன மாதிரி தான், அவர் எப்படி நிதானமா யோசிச்சு இத்தனை பேரை ஏமார்த்திட்டு இருக்காரோ அதே மாதிரி அவரை நம்ப வச்சு ஏமாத்திடலாம்.

அத்தை நீங்க நான் சொல்றதை மட்டும் கேளுங்க, சீக்கிரமா நீங்க என்கூட நல்லபடியா பேச ஆரம்பிச்சுடுங்க, அதாவது இந்தமாதிரி ஒவ்வொரு முறை நீங்க என்கிட்டே பேச வீட்டில நாம எதையாவது எரிக்கவோ கொளுத்தவோ முடியாது,  தாத்தா அடிக்கடி உங்ககிட்ட வந்து மித்ராகிட்ட பேசுன்னு சொல்றார் இல்லையா அதனால் என்கிட்டே வந்து பேசுற மாதிரி ஆரம்பிங்க. கொஞ்சம் கொஞ்சமா அப்படியே என்கிட்ட சகஜமா பேச ஆரம்பிங்க. அதாவது நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டா நாம ரெண்டுபேரும் சேர்ந்து கோயிலுக்கு போயிட்டு வந்தா, மாமாக்கும் ரோஹித்துக்கும் சந்தேகம் வரக்கூடாது, அந்த மாதிரி அது இயல்பா இருக்கணும் அதாவது இவங்கள நாம மாட்டிவிடணும்னா இவங்க என்ன எல்லாம் செய்றாங்கன்னு நமக்கு தெரியணும் அதுக்கு நாம் ரெண்டு பேரும் பேசிக்கணும் அதுக்காக  தான் சொல்றேன் என்று சொல்ல,

ராஜியோ மித்ரா இதெல்லாம் நடக்கும்னு நீ நினைக்கிறியா? என்று கேட்க,

நடக்கும் அத்தை அநியாயம் பண்ற அவங்களுக்கே இதெல்லாம் நடக்கும்போது நமக்கு ஏன் நடக்காது கண்டிப்பா நடக்கும், என்றாள்.

இதை நீ அந்த பிரகாஷ் தம்பிகிட்ட சொல்ல போறியா?

இல்ல அத்தை கொஞ்சம் யோசிக்கணும் பிரகாஷ் கிட்ட சொன்னா நீங்க சொன்னமாதிரி முதல்ல என்னை இங்கிருந்து கிளம்ப தான் சொல்வரு,  என்னோட பாதுகாப்பு தான் முக்கியம்னு நினைப்பாரு, யோசிச்சு தான் இந்த விஷயத்தை பிரகாஷ் கிட்ட செல்ல போறேன், அதுக்குள்ள  நீங்க எப்படியாவது சகஜமா பேச ஆரம்பிச்சுடுங்க என்று சொல்ல,

சரி மித்ரா நீ சொல்ற மாதிரியே நான் செய்றேன் ஆனால் எக்காரணத்தை கொண்டும் அவங்க திட்டத்துக்கு நீ பலியாயிட கூடாது, எனக்கு அது தான் முக்கியம். எதோ ஒரு நிலைமையில உன் பாதுகாப்புக்கு பிரச்சனை வருதுன்னு நான் நினச்சா எனக்கு தோணுச்சுன்னா அவங்கள பத்தி வெளிய சொல்ல நான் யோசிக்க மாட்டேன், எனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம் என்று சொல்ல,

அத்தை உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம். என்னை நான் பார்த்துப்பேன், எதிரி யார்னு தெரியதப்போ தான் நமக்கு பிரச்சனை எதிரி யார்னு தெரிஞ்சி, நமக்கு அந்த விஷயம் தெரியும்னு எதிரிக்கு தெரியாதது தான் நம் பலம். இவங்கள நாம சும்மா விடக்கூடாது அத்தை பார்த்துக்கலாம், என்கூட இருங்க போதும் என்று சொல்ல,

ராஜி தன் மருமகளை அனைத்து கண்ணீர் வடித்தார்,

இதை கேட்டுக்கொண்டிருந்த கார்மேகமோ நீங்க ரெண்டுபேரும் அப்போவே என்கிட்டே இந்த விஷயத்தை சொல்லியிருக்கணும், இவனுங்கள உண்டு இல்லனு பண்ணிருப்பேன் என்று சொல்ல,

இல்ல தாத்தா அப்போ நீங்க கேட்டிருந்தா இல்லவே இல்லனு சாதிச்சிருப்பாங்க, இப்போ நான் இவ்வளவு ஆதாரத்தோடு நிரூபிச்சதுக்கே நான் சொத்துக்காக இதெல்லாம் பன்றேன்னு பேச்சை மாற்ற பார்த்தாங்க, அப்போ நீங்க இருந்த நிலைமையில இது உண்மைன்னு உங்களாலே ஏத்துக்கிட்டிருந்துக்க முடியாது ஏன்னா நீங்க அவங்க மேல அந்த அளவுக்கு அன்பும் நம்பிக்கையும் வச்சிருந்திங்க, என்று சொல்ல, கார்மேகத்திற்கு தன் பேத்தி சொல்வது சரி என்றே பட்டது,

தெய்வநாயகியோ ஏம்மா இப்படி நீ தனியா அங்கிருந்து செய்ய போய்  அவங்களால் ஏதாவது பிரச்சனை வந்திருந்தா இதை குறைஞ்சபட்சம் பிரகாஷ் கிட்டையாவது சொல்லியிருக்கலாம் இல்ல, என்று சொல்ல,

நான் அப்படி தான் பாட்டி நினச்சேன். அந்த சமயத்துல தான் பிரகாஷோட வேலை போனதுன்னும் என்னோட சித்தி சத்யா அம்மா அப்பாகிட்ட சத்தம் போட்ட விஷயமும் எனக்கு தெரியவந்தது, எதோ ஒரு வகையில் இதுக்கும் இவங்க தான் காரணம்னு எனக்கு தோணுச்சு, அது உண்மை தானான்னு தெரிஞ்சிக்க நான் முயற்சி செஞ்சப்போ ரோஹித் போன்ல பேசிட்டிருந்ததை நான் கேட்டேன்,

ரோஹித் தான் தன் பணபலத்தை பயன்படுத்தி சத்யாவை வேலையிலிருந்து தூக்குணாங்குற விஷயம் எனக்கு தெரிய வந்துச்சு, அதுக்குப்பிறகு சுஜி அக்கா மூலமா உங்களுக்கு அந்த விஷயத்தை தெரியப்படுத்தினேன், நீங்க எப்படியும் சத்யாவுக்கு வேலை போனது தெரிஞ்சா சத்யாவை உங்க கூட கூட்டிட்டு வந்துடுவீங்கன்னு நான் நினச்சேன், நீங்களும் அதே தான் செஞ்சீங்க. ஆனா நான் அதுக்குப்பிறகு தான் சத்யாகிட்ட பேசுறதை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு ரோஹித் கிட்ட பேச ஆரம்பிச்சேன், மாமா புத்திசாலி, ஆனால் ரோஹித் அந்த அளவுக்கு புத்திசாலி கிடையாது, மாமா சொல்றதை செய்றதுக்கு மட்டும் தான் ரோஹித்துக்கு தெரியும், அதனால என்ன நம்பும் முதல் ஆள் ரோஹித் தான்னு நான் நினச்சேன்,

ரோஹித்துக்கு சத்யாகிட்ட ஈகோ பிரச்சனை இருந்தது, நான் ரோஹித்தைவிட சத்யாவை தான் பெருசுன்னு நினைக்கிறேன் அப்படிங்குற ஈகோ, அந்த ஈகோவை நான் எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன், தாத்தாவுக்காக வேண்டா வெறுப்பை ரோஹித்கிட்ட பேசுற மாதிரி ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா ரோஹித்தோட நல்லபடியா பழக ஆரம்பிச்சேன். அதே சமயத்துல சத்யா இப்படி கஷ்டப்படுறது எனக்கு வருத்தமா இருக்கு, சத்யாவை போய் பார்க்கனும் போல இருக்குன்னு நான் ரோஹித்துக்கிட்ட போலியா நடிக்கவும் அதை உண்மைன்னு நம்பி ரோஹித் அவங்க அப்பாகிட்ட,

அப்பா இப்போ மித்ரா என்கிட்ட நல்லபடியா பேச ஆரம்பிச்சிருக்கா இந்த டைமல் நீங்க பிரகாஷுக்கு தொல்லை கொடுத்தீங்கனா அவ என்கூட பேசுறதை விட்டுட்டு பிரகாஷ் பத்தி கவலைப்பட ஆரம்பிச்சுடுவா அப்புறம் அவ அங்க போகணும்னு கேட்க ஆரம்பிச்சிட்டா நம்மால் ஒன்னும் பண்ண முடியாது அதனால் இப்போதைக்கு அந்த பிரகாஷை ஒன்னும் பண்ண வேண்டாம்னு சொல்லி மாமா மேலும் பிரகாஷை எதுவும் செய்யாமல் தடுத்து நிறுத்திட்டான்.

அதுக்கப்புறம் சத்யாவுக்கு எந்த பிரச்னையும் வரல, அதனால் நான் சத்யாகிட்ட பேசாம இருக்கிறது தான் அவருக்கு நல்லதுன்னு நினச்சேன், அவரோட பேசுறதை சுத்தமா குறைச்சுகிட்டேன். அந்த சமயம் எல்லாம் நான் ரோஹித் கூட பேச ஆரம்பிச்சேன், அபி வீட்டுக்கு வந்தப்போ கூட நாங்க ரெண்டுபேரும் பேசுறதை ரோஹித் ஒட்டுகேட்டுட்டு இருந்தான் அதனால தான் சத்யா எனக்கு கொடுத்தனுப்பின போனை நான் வேண்டவே வேண்டாம்னு திருப்பி அனுப்பினேன். புதுசா அந்த வீட்டுக்கு வந்த அபிராமிக்கு இது எதுவுமே தெரியல ஆனால் இவங்க யார் என்னனு தெரிஞ்சபிறகு இவங்க என்னவெல்லாம் பண்றங்கன்னு கவனமா இருந்த எனக்கு ரோஹித் ஒட்டுகேக்குற விஷயம் டக்குனு புரிஞ்சிடுச்சி, அதனால அந்த போனை நான் கைல கூட தொடல அபி கிளம்பினபிறகு அந்த போன் விஷயத்தை மறைக்காம நான் ரோஹித்க்கிட்ட சொன்னேன்.

உடனே ரோஹித் நான் சத்யவைவிட ரோஹித்தை அதிகம் நம்புறேன், சத்யா கொடுத்த போனை கூட நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்னு நினைத்து ரொம்போ சந்தோஷப்பட்டான்,

அதுக்கப்புறம் நான் சொல்ற எல்லாத்தையும் நம்பினான், ரோஹித்தை நம்ப வைக்கிறதுக்காக நான் பிரகாஷைக் காயப்படுத்தினேன், அது இந்த மாதிரி சின்ன சின்ன அளவிலேயே போயிடும்னு நினச்சேன், ஆனால் மாமாவோட நம்பிக்கையும் கிடைக்கணும்னா பெரிய அளவுல காயப்படுத்த வேண்டியிருக்கும்னு எனக்கு அப்போ புரியல. திடீர்னு அவர் இங்க வீட்ல வந்து உட்கார்ந்து கல்யாணம் பேசவும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, ஆனால் எனக்கு இதை விட்டா அவங்க நம்பிக்கையை முழுசா அடைய வேற வழி இல்லன்னு தோணுச்சு, அதனால தான் உங்க பேச்சு மீறி நான்  ரோஹித்தை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் சத்யாவை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தினேன், அதுல ரோஹித்துக்கு ரொம்போ சந்தோசம்

ரோஹித்தும் மாமாவும் என்னை முழுசா நம்ப ஆரம்பிச்சது அங்கிருந்துதான்,

ஆனால் இந்த சம்பவம் முடிஞ்சவுடனே பிரகாஷ் இங்கிருந்து கிளம்பி வெளிநாடு போயிட்டானே நீ எப்படி பிரகாஷுக்கு இந்த விஷயத்தை எல்லாம் சொன்ன? உனக்கு எப்படி பிரகாஷ் இதெல்லாம் தெரியும் என்று தெய்வநாயகி பிரகாஷிடம் கேட்க?

சத்யாவோ அதை நான் சொல்றேன் என்று சொல்லி, அன்று  நடந்தவைகளை சொல்ல தொடங்கினான். 

பிரகாஷிறிக்கு  எப்படி அனைத்தும் தெரியவந்தது அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்….

-நறுமுகை

8

No Responses

Write a response