என் வானவில்-41

என் வானவில்-41

 போன் வந்தது என்று கூறி வீட்டில்  இருந்து கிளம்பி வந்த பிரகாஷ் சற்று தூரத்தில் வந்து காரை நிறுத்திவிட்டு வேதனையோடு அமர்ந்திருந்தான். அவனுக்கு மித்ராவின் இந்த மாற்றம் வலியைக் கொடுத்தது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளமுடியாமல் இருக்கும் தன் நிலையை எண்ணி வருந்தினான்.

உடனடியாக சுஜிக்கு போன் செய்தவன், சுஜி, உன் பிரண்ட்  கம்பெனியில எதோ ஒரு ஓப்பனிங் வருது அதுவும் அவுட் ஆப் கண்ட்ரி போகணும்னு சொன்னியே அந்த வேலைக்கு எனக்கு உடனே கேட்டு சொல்லு நான்  அந்த ஜாபுக்கு அப்ளை பண்ணனும் என்று சொல்ல,

திடீரென போன் செய்து எதுவுமே கூறாமல் உடனே வேலைக்கு சேர வேண்டும் என்று பிரகாஷ் கூறவும், சுஜிக்கு எதோ சரியில்லை என்று தோன்றியது.

என்ன ஆச்சு பிரகாஷ் என்று அவள் கேட்க,

என்னை எதுவுமே கேட்காத எனக்கு உடனே அந்த வேலை வேணும், அதுக்கான ஏற்பாட்டைப் பாரு என்று கூறினான்.

இவள் போன மாதம் இதைப் பற்றி பேசிய போது, நான் கூட இருக்கும்போது பாட்டி ஹெல்த்தியா இருக்காங்க, அடுத்து மித்ராவும் கூட இல்ல, அவள் திரும்பி வந்தாலும் எம்.பி.ஏ. படிக்க காலேஜ் போய்டுவா, அதனால் நான் பாட்டி கூடவே இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் என்று கூறியவன் ஒரே மாதத்தில் இப்படி மாற்றி பேசுவது சுஜிக்கு குழப்பமாக இருந்தது, இருந்தாலும் கேட்பது தன் நண்பன் என்பதால், நான் அதற்கான ஏற்பாட்டை உடனே செய்றேன் என்று கூறினாள்.

அதன் பின் தன் மாமா சங்கருக்கு போன் செய்த பிரகாஷ், மாமா  நான் வேற இடத்தில் வேலை தேடலாம்னு இருக்கேன். நீங்க கொஞ்சம் உங்களுக்கு தெரிஞ்ச பிரண்ட்ஸ் சர்க்கிளில் சொல்லி வைக்கிறிங்களா? என்று கேட்க,

என்ன ஆச்சு பிரகாஷ் திடீர்னு, பாட்டி கூட எஸ்டேட்ல நல்லாதானே போயிட்டு இருக்கு  என்று கேட்க, நல்லா தான் போயிட்டு இருக்கு மாமா இருந்தாலும், எனக்கு  வெளியில வேலைத் தேடி போறது தான் பெஸ்ட்னு தோணுது. அம்மா அப்பாக்கும் நான் இங்கு இருக்கிறது வருத்தமாக தான் இருக்கு, என்றான்,

சரி பிரகாஷ், அம்மா அப்பாக்கு இதுல வருத்தம்னா நான் வெளியில பார்க்கிறேன், எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை  என்றான் சங்கர். சரி என்று கூறி போனை வைத்தவன். சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான் எப்படியாவது விரைவில் மித்ராவின் கண்பார்வையில் இருந்து வெகு தூரம் போய்விட வேண்டும்  என்று அவன் மனம் கூறியது.

அன்று முழுவதும் எதோ சிந்தனையிலேயே வலம் வந்தவனை தெய்வநாயகியும் பெரிதாக எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

அதன் பின் இரண்டு மூன்று நாட்கள் கழித்து சுஜியிடம் நடந்தவற்றை பிரகாஷ் கூறினான். 

சுஜிக்கு மித்ரா இப்படி மாறிப்போனதை நம்பவே முடியவில்லை. அவள் அறிந்த மித்ரா, இது போல் மாறிப்போகும் ரகம் அல்ல. இருந்தாலும் கூறுவது பிரகாஷ் என்பதால் அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

ஏன் நண்பன் வெகு விரைவில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

எப்போதும் ஃபீலிங்ஸே இல்லையாடா? ஜடமா? என்று நண்பனை கேலி செய்தவளால் இன்று தன் நண்பனை கேலி செய்ய முடியவில்லை. அவன் வேதனை புரிந்து அவள் அமைதியாக இருந்துவிட்டாள்.

அதன் பின் ஒரு வாரம் மித்ராவுடன் இருந்துவிட்டு ரோஹித் ஊருக்கு சென்றுவிட, சுஜியின் மூலம் விஷயம் கேள்விப்பட்டு மித்ராவை பார்க்க வந்தாள் அபிராமி.

தோழியைப் பார்த்ததும் வேகமாக கட்டி அணைத்துக்கொண்ட மித்ரா, அபி உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு, கடைசியா நீ என்னை தேனியில வந்து பார்த்தது. எப்போதாவது தான் ஒரு போன் பேசுற, அதுவும் மெசேஜ் தான். என்ன ஆச்சு உனக்கு? என்று அவள் கேட்க,

நான் தான் உன்னை கேட்கணும் மித்ரா, உனக்கு என்ன ஆச்சு?  என்றாள்.

எனக்கென்ன ஆச்சு நான் நல்லா தான் இருக்கேன் என்று கூறினாள்.

நீ நல்ல தான் இருக்க, ஆனால் உன் நடவடிக்கை உன் பேச்சு, எல்லாமே மாறி இருக்கு என்று கூறினாள் அபிராமி.

என் பேச்சு நடவடிக்கைல என்ன மாற்றம்னு சொல்ற, நான் எப்பவும் போல தான் இருக்கேன் என்று மீண்டும் மித்ரா கூற.

அப்படியா? எப்போதும் போல தான் இருக்கியா? அதனால் தான் நீ காலேஜ் ஜாயின் பண்ணின விஷயத்தை கூட பிரகாஷ் கிட்ட கேட்காம நீயா முடிவு பண்ணினியா என்று கேட்க,

ஓஹ் அதுவா, அபி நீயும் பாட்டி மாதிரி பேசாத. எல்லா முடிவையும் நான் சுயமா எடுக்கணும்னு தான் பிரகாஷ் விரும்புவார். அதை தான் நானும் செய்தேன் நீங்க ரெண்டு பேரும் தான் புரிஞ்சிக்கல, நீங்க தான் இப்படி எல்லாம் கேள்வி கேட்குறீங்க ஆனால், பிரகாஷ் என்கிட்டே எந்த கேள்வியும் கேட்கல என்று கூற,

அபிராமிக்கு தன் தோழியிடம் என்ன தான் கூறுவது என்றே தெரியவில்லை. சிறிது யோசித்தவள், அதெல்லாம் சரி அந்த ரோஹித் பிரகாஷை மதிக்கவே மாட்டான்னு உனக்கு தெரியும், அவன்கிட்ட நீ அவ்வளவு நல்லா பேசுற, கொஞ்சம் நாளைக்கு முன்னாடி பிரகாஷை லவ் பன்றேன்னு சொன்ன மித்ராவான்னு எனக்கு ஆச்சர்யமாக இருக்கு, என்று அபி கேட்க,

மித்ரா வேகமாக சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அபி இந்த விஷத்தைப் பற்றி நீ வாயை திறக்க கூடாதுன்னு  சொல்லியிருக்கேன் இல்லை,  இப்போ எதுக்கு தேவை இல்லாம இதைப் பற்றி பேசுற என்று கேட்டாள்.

ஏய் நீ நடந்துக்கிறது எல்லாம் பார்த்தா எனக்கு அப்படி தான் இருக்கு.  அப்போ காதலிக்குறேன்னு சொன்ன, இப்போ அதே பிரகாஷ் கிட்ட எதுவும் சொல்லாமல் எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்க, அந்த  பிரகாஷை எப்போதும் மதிக்காத ரோஹித் கூட அத்தான், அத்தான்னு பேசிட்டு சேர்ந்து சுத்திட்டு இருக்க, என்று அபிராமி பொரிய,

மித்ரா அவர் எனக்காக செய்ததை எல்லாம் பார்த்து, அந்த ஃபீலை லவ்வுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன், நீ இன்னுமா அதை நினைச்சுகிட்டு இருக்க,  நான் அதை எல்லாம் எப்போதோ மறந்துட்டேன். எனக்கு பிரகாஷ் மேல அந்த மாதிரி ஃபீலிங் எல்லாம் கிடையாது.  எனக்கு இருந்தது சாதாரண ஒரு அஃபக்சன் தான். நமக்காக இவ்வளவு செய்றாரே அப்படிங்குற ஒரு தாட்,  அவ்வளவு தான்.  நான் தான் அதை தப்பா குழப்பிகிட்டேன்,  அது உனக்கு தெரிஞ்சிருச்சி நீயும் கண்ஃபியூஸ் ஆயிட்ட அவ்வளவு தான். அதே மாதிரி நீ நினைக்கிற அளவுக்கு ரோஹித் அத்தான் ஒன்னும் அவ்வளவு மோசமான டைப் எல்லாம் கிடையாது. பாட்டி, நான் கிடைச்ச விஷயத்தை அவங்க விட்டில யார் கிட்டையும் சொல்லலனு அவருக்கு கோபம் அவ்வளவு தான்  என்று கூற,

அவ்வளவு தானா மித்ரா?, என்று மீண்டும் கேட்டாள் அபிராமி,

அவ்வளவு தான்  நீ தேவை இல்லாம குழப்பிக்காத, இங்க எல்லாம் சரியா தான் இருக்கு. நான் இப்படி இருக்கிறது பிரகாஷுக்கு பிடிக்கும், நீங்க தான் தேவை இல்லாம குழப்பிக்கிறீங்க, என்று தோழியின் வாயை அடைந்துவிட்டாள் மித்ரா.

அதற்கு மேல் மித்ராவிடம் என்ன கூறுவது என்று அபிராமிக்கு புரியவில்லை. காதலே இல்லை அது வெறும் ஈர்ப்பு தான் என்று கூறுபவளிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல்  அன்று ஒரு நாள் இருந்துவிட்டு அடுத்தநாள் கிளம்பிவிட்டாள் அபிராமி.

அங்கு வீட்டில் இருந்த ஒரு மாத காலமும் மித்ரா சந்தோசமாக வலம் வந்தாள். எப்பொழுதும் போல தெய்வநாயகியிடம் பேசினாள், அவரை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்று வந்தாள். வள்ளியுடன் கலாட்டா செய்து கொண்டிருந்தாள். ஆனால் பிரகாஷிடம் இருந்து மட்டும் வெகு தூரத்திலேயே இருந்தாள். அவனிடம்  அனாவசியமான பேச்சுக்களை அவள் வைத்துக்கொள்ளவே இல்லை.

தெய்வநாயகிக்கு அது வருத்தமாக இருந்தது. இந்த பொண்ணு ஏன் இப்படி செய்றாள்? ஆனால் நாம கேள்வி கேட்டால் அவள் கூறும் பதிலில் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லையே, என்று மனதோடு தெய்வநாயகி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, 

பிரகாஷ் தான் வெளிநாட்டு செல்லப்போவதாகவும் அங்கு தனக்கு வேலை கிடைத்துவிட்டதாகவும் தெய்வநாயகியிடம் அறிவித்தான். அதை அங்கேயே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த மித்ரா,

சூப்பர் சத்யா, கங்கிராட்ஸ், இந்தமுறை எந்த கண்ட்ரிக்கு போறீங்க? என்று உற்சாகத்துடன் கேட்க,

பிரகாஷிற்கு தான் முதல்முறை லண்டனிற்கு போகும்போது கலங்கி நின்ற மித்ராவின் முகம் மனதிற்குள் வந்து சென்றது. 

மித்ரா  இப்படி நடந்துகொள்வதன் காரணம் என்ன? பிரகாஷின் வெளிநாட்டு பயணம் என்னென்ன விளைவுகளை இவர்களது வாழ்க்கையில் கொண்டு வரப்போகிறது என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்.

                                           -நறுமுகை

4

2 Responses

  1. K Pandimadevi
    February 27, 2021
    • narumukai
      February 27, 2021

Write a response