என் வானவில்-32

என் வானவில்-32

அங்கு  அபிராமியை சற்றும் எதிர்பார்த்திடாத மித்ரா அதிர்ந்து போய் நிற்க, அபிராமி தன் தோழியை நெருங்கி என்ன மித்ரா இதெல்லாம் என்று கேட்டாள்.

மித்ராவிற்கோ இவள் தான் பேசியதை எதுவரை கேட்டாள், இப்போது எதை கேட்கிறாள் என்று தெரியாமல் வாயை விடக்கூடாது என்று அமைதியாக நின்றாள்.

அபிராமியே தொடர்ந்து….. நீ போனில் சொன்னதெல்லாம் உண்மையா? நீ பிரகாஷை லவ் பண்றியா?என்று அபிராமி  கேட்க,

மித்ராவோ, முழுவதும்  கேட்டுட்டா போலையே,  இப்போ நாம என்ன செய்றது? அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தாள்.

அதை அறியாத அபிராமி தன் தோழியை உலுக்கி இப்போ நீ பதில் சொல்ல போறியா இல்லையா? என்று கேட்க,

மித்ராவோ, ஆமா அபி நான் சொன்னது உண்மை தான் என்றாள்,

அதை ஏண்டி பிரகாஷிடம் சொல்லாமல் இருக்க, என்று கேட்டாள் அபி.

அபி நான் போனில் பேசியதை முழுதாக கேட்டிருந்தால் நீ இப்படி கேட்டிருக்க மாட்ட,

என் வாழ்க்கையில் ஒரு கஷ்டமான சூழலில் என்னை காப்பாத்திருக்கார், இன்னைக்கு வரை அவர் என் கார்டியன் என்னும் நிலையைத் தாண்டி ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை, அவர்கிட்ட போய் இப்போ நான் காதல் அது இதுனு நிற்க எனக்கு இஷ்டம் இல்லை,

அபிராமியோ அது சரி, அவரை லவ் பண்ணுவதை நீ எப்போ உணர்ந்த? என்று கேட்க.

கிஷோர் என்கிட்டே லவ்வை சொன்னப்பவே எனக்கு தெரியும்.

கிஷோர் அப்படி சொல்லவும் தான், நான் சத்யாவை காதலிக்கும் விஷயமே எனக்கு புரிந்தது.

கிஷோர் என்னிடம் கேட்டதும் அந்த அதிர்ச்சியில் நான் என்ன சொல்வது என்று தெரியாமல் கிஷோரிடம் சொல்லிவிட்டேன், கிஷோரிடம் சொன்ன பிறகு தான் இப்படி ஒரு எண்ணம் என் மனசுல இருக்கிறதே எனக்கு தெரிஞ்சது. அதன் பிறகு நான் கிஷோரை பார்க்கவே இல்லை, கிஷோரும் எந்த பிரச்சனையும் பண்ணவில்லை.

இப்போ பாட்டி பக்கத்தில் இருப்பவர்களை விழாவுக்கு கூப்பிட்டதா சொன்னதும் எங்க கிஷோர் பிரகாஷிடம் எல்லாத்தையும் சொல்லிடுவாரோ என்று தான் கிஷோருக்கு போன் பண்ணினேன் என்று சொல்ல,

அபிராமியோ, மித்ரா உன் மனசுல இருக்கிறதை சொன்னா தானே தெரியும், ஒருவேளை நீ சொன்னபிறகு அவருக்கும் இதே போல எண்ணம் வரலாம் இல்லையா?நீயாவே ஏன் எதையோ நினைச்சுகிட்டு அவர்கிட்ட இருந்து இதை மறைக்க  நினைக்கிற, என்று கேட்க,

இல்லை அபி ஏனோ எனக்கு அவர்கிட்ட சொல்லணும்னு தோணலை. இதை இப்படியே விட்டுட்டு, தயவு செஞ்சு நீ யார்கிட்டயும் இதைப்பத்தி சொல்லிடாத, இதை எப்போதும் எந்த நிலமையிலும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்கொடு என்று கேட்க,

அபிராமி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

கிஷோர் காதலை சொன்னதில் இருந்து மித்ராவிடம் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம், மித்ராவிற்கு பிரகாஷ் மீது ஏற்பட்ட காதலா? இதை  எப்படி நாம் கவனிக்காமல் விட்டோம். இப்போது மித்ரா சத்தியம் வேறு கேட்கிறாள்? இதை எப்படி சுஜி அக்காவிடமோ பிரகாஷிடமோ சொல்லாமல் இருப்பது?

இவதான் பைத்தியக்கார தனமா எதோ நினைச்சுகிட்டு சொல்ல கூடாதுன்னு நினைக்கிறானா, நம்மையும் செல்லவிடாமல் செய்கிறாளே என்று அபிராமி நினைக்க,

மித்ராவோ, எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு அபி என்று தன் தோழியை வற்புறுத்தினாள்.

தனக்கு வேறு வலி இல்லை என்று உணர்ந்த அபிராமி மித்ராவிடம், இங்க பாரு மித்ரா நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்கிட்டே சத்தியம் எல்லாம் கேட்காதே என்று கூற,

மித்ரா தோழியை மறுப்பாக பார்த்தாள், இல்லை நான் உன்னை நம்ப மாட்டேன் என்று கூற, வேறு வழி இல்லை என்று நினைத்து அபிராமி மித்ராவிற்கு சத்தியம் செய்து கொடுத்தாள்.

நான் சத்யாக்கு பிறகு அதிகமா நம்புறதே உன்னை மட்டும் தான் நீ இதை யார்கிட்டையும் சொல்ல மாட்டன்னு நினைக்கிறேன். இதை எப்போதும் எந்த நிலமையிலும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்கொடு என்று கேட்க,

அபிராமி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

கிஷோர் காதலை சொன்னதில் இருந்து மித்ராவிடம் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம், மித்ராவிற்கு பிரகாஷ் மீது ஏற்பட்ட காதலா? இதை  எப்படி நாம் கவனிக்காமல் விட்டோம். இப்போது மித்ரா சத்தியம் வேறு கேட்கிறாள்? இதை எப்படி சுஜி அக்கவிடமோ பிரகாஷிடமோ சொல்லாமல் இருப்பது?

இவை தான் பைத்தியக்கார தனமா எதோ நினைச்சுகிட்டு சொல்ல கூடாதுன்னு நினைக்கிறானா நம்மையும் சொல்லவிடாமல் செய்கிறாளே என்று அபிராமி நினைக்க,

மித்ராவோ, எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு அபி என்று தன் தோழியை வற்புறுத்தினாள்.

தனக்கு வேறு வழி இல்லை என்று உணர்ந்த அபிராமி மித்ராவிடம், இங்க பாரு மித்ரா நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்கிட்டே சத்தியம் எல்லாம் கேட்காதே என்று கூற,

மித்ரா தோழியை மறுப்பாக பார்த்தாள். இல்லை நான் உன்னை நம்ப மாட்டேன் என்று கூற, வேறு வழி இல்லை என்று நினைத்து அபிராமி மித்ராவிற்கு சத்தியம் செய்து கொடுத்தாள்.

விழா நாள் மிக அழகாக விடிந்தது. தெய்வநாயகி மித்ராவிற்காக பார்த்து பார்த்து அழகான பட்டுப்புடவை தேர்ந்தெடுத்திருந்தார். கூடவே சுஜி,ஸ்வாதி,அபிராமி, மற்றும்  ஜெயலட்சுமி என அனைவருக்கும் புடவை எடுத்து வைத்திருந்தார்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் தயாராகினர். புடவையில் அதற்கான நகைகள் அணிந்து, தலை நிறைய மல்லிகை சூடி கோவில் சிலை போல் மாடியில் இருந்து இறங்கி வந்த மித்ராவை விட்டு பார்வையை திருப்ப பிரகாஷ் பெரும்பிரயத்தனம் செய்யவேண்டி இருந்தது. தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவன் திடீரென அமைதியாகி விட்டதை பார்த்த ராம், நண்பனின் தோளில் தட்டினான்.

திடுக்கிட்டு நண்பனை பார்த்தான் பிரகாஷ். ராமோ டேய் மாப்பிள்ளை நீ இப்படி வெச்சக்கண்ணு வாங்காம மித்ராவை பார்த்த அவ இல்ல சுத்தி இருக்க எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சுச்சுடும் என்று கூற, என்ன ஒட்டலைனா உனக்கு பொழுதே போகாதே என்ற பிரகாஷ், அவங்க கண்டுபிடிக்குறதுக்குள்ள நீயே போட்டுகுடுத்துடாத என்று  கூறிவிட்டு வேலையை பார்க்க சென்றான்

அன்று மாலை விழாவிற்கு அனைவரும் வந்த பின் தெய்வநாயகி மித்ரா தன் மகள் காயத்ரியின் ஒரே மகள் எனது ஒரே பேத்தி என்று அங்கிருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

அங்கிருந்த அனைவரும் நாகரீகம் கருதி என்ன எது என்று எதுவும் கேட்காமல் மித்ராவின் வருகையை ஏற்றுக்கொண்டனர்.அதே சமயம் கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது

அப்படி எல்லாம் உங்களுக்கு மட்டும் சொந்தம் என்று நீங்கள் சொல்லிவிட முடியாது தெய்வநாயகி அம்மா,

அனைவரும் குரல் வந்த பக்கம் திரும்பி பார்க்க, அங்கு விஸ்வநாதன் ரோஹித்துடன் மித்ராவின் தாத்தாவும் வந்திருந்தார்.

தெய்வநாயகி இந்த விழாவை இவர்கள் இப்படியா கெடுக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைக்க, இவர்கள் எல்லாம் யார்? இந்த ரோஹித் யாரை கூட்டிகிட்டு வந்திருக்கான்? என்று நினைத்தாள் மித்ரா. பிரகாஷிற்கோ இது என்னடா புது தலைவலி என்று தோன்றியது. இனி நடக்க போவது என்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.

-நறுமுகை

3

No Responses

Write a response