என் வானவில்-19

என் வானவில்-19

அதன் பின் மூன்று நாட்களில் மித்ராவும், அபிராமியும் ஸ்டடி ஹாலிடேஸி ற்கு வால்பாறை வந்து சேர்ந்தனர்.

அவர்கள் அங்கு இருந்த சமயத்தில் அவர்களை அங்கு வந்து பார்த்து ஸ்டடிஸ் எப்படி போகிறது என்று கேட்ட கிஷோரிடம் எப்போதும் போல பட்டும் படாமலும் பேசாமல் நன்றாகவே பேசினாள் மித்ரா.

அபிராமி, கிஷோர் இருவருக்குமே அது ஆச்சர்யமாக இருந்தது, ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

கிஷோர் சென்ற பிறகு அபிராமி மட்டும் அவளிடம் என்னப்பா, சீனியரை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுவாய் இப்போது என்ன பதில் கூறுகிறாய், என்று கேட்க,

மித்ரா பிரகாஷ் கூறியதை அவளிடம் கூறினாள்.

அதைக் கேட்ட அபிராமி, ஓ மேலிடத்து உத்தரவா? அது தானே பார்த்தேன் என்று அவளை கேலி செய்ய,

சும்மா ஓட்டாதடி, சத்யா சொல்வதும் சரி தானே என்று கூற,

உனக்கு சத்யா என்ன சொன்னாலும் சரி தான், என்று அபிராமி மித்ராவை கிண்டல் செய்தாள்.

சத்யா என்று  சொல்லாதே என உனக்கு எத்தனை முறை சொல்வது என்று மித்ரா அவள் மீது பாய,

இது என்னடி உன் கூட வம்பாய் போய்விட்டது,  நீ என்னிடம் சொல்லும்போது சத்யானு சொல்கிறாய், ஆனால் நான் உன்னிடம் திருப்பி சொல்லும்பொழுது சத்யா என்று சொல்லக் கூடாதுனு சொல்கிறாய், இது என்ன நியாயம்? இல்லைனா நீயும் இனி என்னிடம் கூறும்போது பிரகாஷ்னு சொல், என்று  அபிராமி கூற,

உன்னிடம் பிரகாஷ்னு சொன்னால், சத்யாவை கூப்பிட வராதே, நானே கஷ்டப்பட்டு முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்,

ஹ்ம்ம் நல்லா முயற்சி செஞ்ச….. வா சென்று படிப்போம் என்று அபிராமி தன் தோழியை கேலி செய்து கொண்டே படிக்க சென்றாள்.

அபிராமிக்கும், மித்ராவிற்கும் தேர்வுகள் முடிந்து, அபிராமி அவளது ஊருக்கு சென்றாள்.

மித்ரா வால்பாறை வந்து சேர்ந்தாள். வந்தவுடன் வள்ளியை பார்த்தவள் வள்ளி இனி ஜாலி…. இரண்டு மாதம் எனக்கு லீவ், இனி டெய்லி படம் பார்க்கலாம், ஜாலியாக வாக்கிங் போகலாம் என்று கூறிக்கொண்டிருக்க,

நீ இப்படி ஏதாவது செய்வாய் என்று எனக்கு தெரியும் என கூறிக்கொண்டே வந்தான் பிரகாஷ்,

அவனை அங்கு சற்றும் எதிர் பார்க்காத மித்ரா, நீங்க எப்போ வந்தீங்க? என்கிட்டே சொல்லாமல் வருவதே உங்களுக்கு வேலையாக போய்விட்டது, என்று அவனிடம் திரும்பினாள் மித்ரா,

நான் இன்று வரும்  ஐடியாவில் இல்லை, இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் வருவதாக இருந்தேன்,பட் அதற்குள் ஒரு வேலை வந்துவிட்டது,

சரி உன்னை பார்த்துவிட்டு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போகலாம் என்று தான் அவசரமாக  வந்தேன் என்று கூறினான்.

அவசரமாக என்னை பார்த்து என்ன? என்று அவள் முழிக்க,

நீ இரண்டு மாதமும் ஒன்றும் வள்ளியுடன் சேர்ந்து படம் பார்த்து ஊரை சுற்றி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் உனக்கு நிறைய கோர்ஸ் எல்லாம் என்ரோல் செய்திருக்கிறேன், அதெல்லாம் செர்டிஃபைய்ட் கோர்ஸ், அனைத்தையும் முடித்து இரண்டு மாதத்தில் அதில் எல்லாம் செர்டிபிகேட்  வாங்கும் வழியை பாரு என்று கூற,

கோர்ஸா என்று தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்  மித்ரா.

ஆமாம் கோர்ஸ் தான் ஸ்போக்கன் இங்கிலீஸ் கோர்ஸ் என்ரோல் செய்திருக்கிறேன், அடுத்து மேனேஜ்மென்ட் கோர்ஸ் ஒன்றும் லீடெர்ஷிப் கோர்ஸும், லைப் ஸ்கில் கோர்ஸும்  என்ரோல் செய்திருக்கிறேன் புரிகிறதா என்று கேட்க,

நான்கு கோர்ஸா அதற்கே நாள் முழுவதும் சரியாக இருக்குமே என்று கேட்க,

ஆமாம் புல்டேதான் நீ மாலையில் வள்ளியுடன் சேர்ந்து வெளியில் சுற்று அது போதும் என்றான்.

 அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க, ஏதாவது பதில் பேசு என்றான்,

வேண்டாம் என்று சொன்னால் விட்டுவிட போகிறீர்களா? என்று கேட்டாள்.

 அப்போ இரண்டு மாதம் சும்மா இருந்து டைம் பாஸ் பண்ண போகிறாயா? என்று கோபமாக கேட்க,

அப்படி சொல்ல வரவில்லை என்று இழுத்தாள்,

இங்க பார், இதை முடித்துவிட்டு எம்.பி.ஏ. சேர வேண்டும்,  அதற்குள்  நீ நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், மரியாதையாக இந்த கோர்ஸ் எல்லாம் முடி என்று அவளை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் பிரகாஷ்.

போகும் அவனையே பார்த்து மனதிற்குள் பழிப்பு காட்டியவள்,

ஹ்ம்ம் சத்யா கூறுவதும் சரி தான் என்று மனதிற்குள் நினைக்கும்போதே அபிராமியின் முகம் அவளது கண் முன்னே வந்தது “உனக்கு சத்யா என்ன சொன்னாலும் சரி தான்” என்று கேலி செய்யும் குரல், அதை நினைத்து தன் மனதுடன் சிரித்துக்கொண்டவள் தெய்வநாயகியை தேடி உள்ளே சென்றாள். அதன் பின் அந்த விடுமுறை நாட்கள் முழுவதும் பிரகாஷ் கூறியதை போல அனைத்து கோர்ஸையும் முடித்து அதில் செர்டிபிகேட்டும் வாங்கினாள்.

அதற்காக அவள் வள்ளியுடன் சுற்றாமலோ படம் பார்க்காமலோ இல்லை.  அது பாட்டிற்கு அது, இது பாட்டிற்கு இது என்று விடுமுறையை நன்றாக என்ஜாய்  செய்தாள்.

விடுமுறை முடிந்து அடுத்த செமஸ்டர் தொடங்க, மித்ரா கல்லூரிக்கு செல்ல தொடங்கி மூன்று மாதங்கள் இருக்கும். அப்போது ஒரு வாரத்தின் புதன் கிழமை மாலை அவளை அழைத்து செல்ல வால்பாறையில் இருந்து டிரைவர் வந்திருந்தார்,

அவரை பார்த்ததும் பயந்துபோனவள் என்ன அண்ணா புதன் கிழமை வந்திருக்கீங்க ஒன்றும் சொல்லவும் இல்லை, என்று கேட்க,

இல்லை பாப்பா பிரகாஷ் தம்பி வந்திருக்கார், உன்னை கையுடன் கூட்டிக்கொண்டு வர சொன்னார் அதற்கு தான் வந்தேன் என்று கூறினார் முருகன்.

பிரகாஷா?  பாட்டிக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே என்று கேட்க,

இல்லை இல்லை, அனைவரும் நன்றாக தான் இருக்கிறார்கள், என்றார்.

சரி அண்ணா, என்று கூறிவிட்டு, கல்லூரி விடுதியில் தகவல் கூறி விட்டு அவருடன் சென்றாள்.

அங்கு பிரகாஷ் அவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை வைத்திருந்தான் .

பிரகாஷ் மித்ராவிற்கு சொல்லப் போகும் அந்த அதிர்ச்சியான செய்தி என்ன? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்  என் வானவில்“.

நறுமுகை

4

No Responses

Write a response