என் வானவில்-10

என் வானவில்-10

ஐந்து நாட்களுக்கு பிறகு கண் விழித்த மித்ராவிற்கு,  தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. கண்ணை சுழற்றி பார்த்தவள் தன் முன் கவலையோடு அமர்ந்திருந்த பிரகாஷை பார்த்ததும் அவளுக்கு ஒன்று ஒன்றாக நடந்தவைகள் நினைவிற்கு வரத்தொடங்கின.

இறுதியாக தான் வால்பாறை வந்தது. அங்கு தெய்வநாயகி அம்மாவை சந்தித்தது பின் மயங்கி சரிந்தது என அனைத்தும் அவளது நினைவில் ஓடியது.

மித்ரா கண் விழித்ததை பார்த்ததும் அவளின் அருகில் வந்த பிரகாஷ், மித்ரா, இப்போ எப்படி இருக்கிறது? ஒன்றும் பிரச்சனை இல்லையே என்று அவளிடம் இதமாக பேசினான்.

அவன் அருகில் வந்ததும் எழுந்து அமர முயற்சித்தாள் மித்ரா.

அவளுக்கு கை  கொடுத்து உட்கார  உதவினான் பிரகாஷ். மித்ரா இங்க பார் இப்போ உனக்கு ஓகே தானே என்று கேட்டான் .

அவனை பார்த்து மெலிதாக முறுவலித்தவள் எனக்கு இப்போ பராவாயில்லை . சாரி, என்னால் தானே நீங்க உடனே வரவேண்டியதாக போய்விட்டது என்று கேட்க?

உடனேவா, மேடம் நீங்க படுத்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது என்றான் பிரகாஷ்.

ஐந்து நாட்களா ?என்று அதிர்ச்சியோடு மித்ரா கேட்க,

ஆமாம்,  இவ்வளவு நாள் இருந்த அனைத்து டென்ஷனிற்கும் சேர்த்து மொத்தமாக ஐந்து நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டாய் என்று பிரகாஷ் கேலியாக கூறினான்.

அச்சச்சோ, எல்லோரையும் ரொம்போ கஷ்டப்படுத்திவிட்டேனா? சுஜி அக்கா பாவம் அப்போவே ஊருக்கு போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று அவள் புலம்ப,

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, சுஜி அன்றே ஊருக்கு போய்விட்டாள். உன்னை நேற்று வரை என் அக்கா தான் பார்த்துக்கொண்டார்கள் நான் நேற்று மதியம் தான் வந்தேன். ஐந்து நாட்களாய் நீ கண் முழிக்கவில்லை என்று கூறியதும் நாங்கள் அனைவரும் மிகவும் பயந்துவிட்டோம். டாக்டர் தான் உனக்கு ஒன்றும் இல்லை எல்லாம் சரி ஆகிவிடும்  என்று கூறினார். இன்றும் நீ கண் முழிக்கவில்லை என்றால் இன்று மாலை உன்னை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிடலாம் என்று நினைத்தோம் என்று கூறினான் பிரகாஷ்.

இன்னொருவர் வீட்டில் வந்துவிட்டு இப்படி எல்லோரையும் சிரமப்படுத்துகிறோம் என்று மித்ரா சங்கடத்துடன் அமர்ந்திருக்க,

அப்போது உள்ளே வந்தார் தெய்வநாயகி, பிரகாஷ் மித்ரா எழுந்துவிட்டாளா என்று கேட்டுக்கொண்டே வந்தவர் அவளின் அருகில் வந்து அமர்ந்து நாங்கள் அனைவரும் ரொம்போ பயந்துவிட்டோம் இப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. உனக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமா டா என்று மிகவும் இதமாக  கேட்டார்.

 அவரை பார்த்தவள் குற்ற உணர்ச்சியோடு சாரி, வந்ததும் வராததுமாக உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்துவிட்டேன் என்று உள்ளே போன குரலில் சொன்னாள்.

இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள் அடி தான் விழும். இது உன் வீடு இங்கு நீ யாருக்கும் எதற்கும் சாரி சொல்லக்கூடாது, என்று கனிவோடும் கண்டிப்போடும் சொன்னார். அங்கு சமையல் வேலை செய்யும் வள்ளியை வர சொன்னவர், அவளிடம் மித்ராவிற்கு குடிக்க பால் ஆற்றி  எடுத்துக்கொண்டு வா என்று கூறினார்.

 பிறகு பிரகாஷிடம், பிரகாஷ் நீ டாக்டரை வர சொல்லு அவர் வந்து டெஸ்ட் பண்ணிடட்டும். இவள் பார் சோர்ந்து போய் எப்படி இருக்கிறாள் என்று கூறினார்.

சரி என்று பிரகாஷ் அங்கிருந்து நகர்ந்தான். நடப்பதையே பார்த்துக்கொண்டிருந்த மித்ரா தெய்வநாயகியிடம்,நான் இங்கு இருப்பதில் உங்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லையே என்று கேட்டாள். 

அதெல்ல்லாம் எனக்கு ஒரு சிரமமும் இல்லை இவ்வளவு நாள் தனியாக இங்கு ஏன் இருக்கின்றோம்? எதற்கு இருக்கின்றோம்? என்று தெரியாமல் இருந்துட்டு இருந்தேன். இனிமேல் தான் என்கூட துணைக்கு நீ இருக்க போகிறாயே என்றவர், மொட்டையாக ஏன்  வாங்க போங்க  என்று அழைக்கிறாய்? என்னை பாட்டி என்று கூப்பிடு என்றார்.

சரி என்று தலை ஆட்டியவள் எதோ கேட்க வர

அதற்குள் பிரகாஷ் உள்ளே வந்தான். பாட்டி கொஞ்சம் நேரத்தில் டாக்டர் வந்துவிடுவதாக கூறினார், வெளியில் உங்களுக்காக மேனேஜர் காத்துக்கொண்டிருக்கிறார் ஏதோ கையெழுத்து வாங்கவேண்டுமாம், நீங்க போய்  கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு வாங்க, நான் அதற்குள் அவளுக்கு பாலை கொடுக்கிறேன், என்று கூறினான்.

சரி என்று  தெய்வநாயகி அங்கிருந்து எழுந்து செல்ல, அவளிடம் வந்து அமர்ந்த பிரகாஷ், மித்ரா இங்கேயே அமர்ந்துகொள்கிறாயா இல்லை கொஞ்சம் நேரம் வெளியில் வந்து ஹாலில் அமர்கிறாயா? என்று கேட்டான்.

நான் ஹாலுக்கே வருகிறேன் என்றாள். சரி போய்  முகம் கழுவிக்கொண்டு வா, போய்  ஹாலில் அமர்ந்து பால் குடிக்கலாம் என்று சொன்னவன்,

அவள் முகம் கழுவி விட்டு வர, அவளை அழைத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தான்.

அங்கிருந்த அலுவலக அறையில் தெய்வநாயகி இரண்டு மூன்று நபர்களுடன் பேசிக்கொண்டிருக்க, பிரகாஷும் மித்ராவும் ஹாலில் அமர்ந்தனர்.

அங்கு சமையல் வேலை செய்யும் வள்ளி கொண்டுவந்து பாலை கொடுக்க, வாங்கிக்கொண்டவள் தேங்க்ஸ் என்று சொல்ல,

அம்மா எனக்கு எதற்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க, உங்களுக்கு உடல்நிலை சரி ஆகட்டும் நல்லா வாயிற்கு ருசியாக சமைத்து தருகிறேன்  சாப்பிட்டுவிட்டு பாராட்டுங்கள் என்றாள்.

அவளை பார்த்து புன்னகைத்த மித்ரா நானும் நன்றாக சமைப்பேன் நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என்றாள்,

அய்யோ என்னை வா போ என்றே சொல்லுங்கள்…..

இங்க பாருங்க பிரகாஷ் தம்பி வாங்க போங்கனு எல்லாம் சொல்றாங்க என்று கூறிய வள்ளி, மித்ரா கொடுத்த டம்ளரை வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த மித்ரா பிரகாஷிடம் திரும்பி, இங்கிருக்கும் எல்லாரும் எப்படி இவ்வளவு நன்றாக பழகுகிறார்கள்? யாருமே நான் இங்கு புதிதாக வந்த பொண்ணு என்று நினைக்கவே இல்லை என்று கேட்க,

அவளை பார்த்த சத்யா, மித்ரா உன் சித்தி மட்டும் தான் உன் உலகம் என்று நினைக்கிறாயா? உன் சித்தி மாதிரி கொஞ்சம் பேருதான் இருக்காங்க, இவர்களை மாதிரி ஆட்கள் தான் அதிகம். இனி நீ இவர்கள் கூட தானே இருக்க போகிறாய் எப்போதும் சந்தோசமாக சிரித்துக்கொண்டே இருக்கலாம் கவலைப்படாதே என்றான்.

 அவனை பார்த்தவள் ரொம்போ தேங்க்ஸ் நீங்க இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. ரொம்போ பயந்து போய் இருந்தேன் என்று கூறும்போதே அவள் கண்களில் கண்ணீர் வர பார்த்தது.

அவளை பார்த்து மறுப்பாக தலை அசைத்தவன், இங்க பாரு பாட்டி சொன்னது தான் நானும் சொல்றேன் இந்த தேங்க்ஸ் சொல்லும் வேலையை இன்றோடு விட்டுவிடு, அதைவிட ரொம்போ முக்கியம், இனி நீ எதற்காகவும் அழ கூடாது.

இவ்வளவு தூரம் வாழ்க்கையை பேஸ் பண்ணனும் என்று வந்துவிட்டாய் இல்லையா, இனி எதற்கு  கோழை மாதிரி அழுதுகொண்டிருக்கிறாய்? உனக்கு உடல்நிலை சரி ஆனதும் நீ இங்கிருக்கும் அனைவரிடமும் கலகலப்பாக பேசி சிரித்து நல்லா பழகனும். இவர்களிடம் எப்படி பேசுவது எப்படி பழகுவது என்ன நினைப்பார்களோ ? அதெல்லாம் நீ எதுவும் நினைக்க வேண்டாம்  என்று பிரகாஷ் கூற,

சரி என்று தலை அசைத்தாள்.

அதற்குள் தெய்வநாயகி வந்துவிட, மூவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

தெய்வநாயகி பிரகாஷ், வள்ளி என அவர்கள் அனைவரும் கூறியது போல, மித்ராவிற்கு தான் ஒரு புது இடத்திற்கு வந்திருக்கின்றோம் என்ற எண்ணமே தோன்றாமல் ஏதோ காலம் காலமாக அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்தது போல ஒரு உணர்வு இருந்தது. அது ஏன் என்று அவளுக்கு பிடிபடவில்லை.

இனி மித்ராவின் வாழ்க்கையில் நடக்க போவது என்ன? பிரகாஷ் அவளுக்காக என்னென்ன ஏற்பாடுகளை செய்திருக்கின்றான் என அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில் “.

நறுமுகை

4

No Responses

Write a response