மக்களாட்சி …….

மக்களாட்சி …….

குரல்: செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
விளக்கம்: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

என் அன்பு சகாக்களுக்கு,
எப்பவும் குழந்தைகள் அவங்க வளர்ப்பு இப்படியே பேசிட்டு இருக்கோம் அதனால் ஒரு மாற்றத்துக்கு பரபரப்பான தேர்தல் விஷயங்களை பற்றி கொஞ்சம் பேசுவோம். மன்னர் ஆட்சி, அடிமை முறை, குடவோலை முறை, இப்படி கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைந்தது தான் நம்மோட மக்களாட்சி தேர்தல் முறை. இந்த நாடும் நட்டு மக்களும் எவ்வளவோ தேர்தல்களையும் தலைவர்களையும் சந்திச்சுட்டாங்க. அவற்றில் சிலது வரலாறு, சிலது பாடம், சிலது தண்டனை. ஒரு ஒரு தேர்தலும் மக்களுக்கு எதையாவது கற்றுக்கொடுத்துகிட்டு தான் இருக்கு. பலரின் எழுச்சியும் வீழ்ச்சியும் இந்த தேர்தல் நிர்ணயிக்கிறது.எழுச்சி வீழ்ச்சி என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல மக்களாகிய நமக்கும்தாம். நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர் நம் வாழ்கை போக்கை மாற்றும் வல்லமை படைத்தவர் அதற்கு தகுதியான தலைவரை நாம் தேர்ந்தெடுக்கிறோமா என்பது கேள்வி குறி. தேர்தல் வரப்போகுது அடுத்த 5 வருடங்களுக்கு உங்கள் வாழ்கை தரம், நாட்டின் எதிர்காலம் இதை எல்லாம் நிர்ணயிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கபோகுது என் ஒருத்தன் ஓட்டு என்ன மாற்றம் கொண்டுவந்துட போகுதுனு நீங்க நினைத்தால் உங்க வாழ்க்கையின் பெரிய தவறு அதுதான். அந்நியன் படத்துல சொல்றமாதிரி 50 பைசா திருடுனா தப்பா பெரிய தப்பு இல்லைதான் ஆனா 50, 50 பைசாவா எவ்வளவு பேர் திருடுறாங்க அப்படிங்குறதுதான் வித்தியாசம். அதே மாதிரி என் ஒரு ஓட்டு தான என் ஒரு ஓட்டு தான அப்படி எல்லாரும் நினைத்து ஓட்டு போடாம இருந்துட்டா இது எப்படி மக்களாட்சியாகும். மகாபாரதம் படிச்சவங்களுக்கு தெரியும் கௌரவர்களுக்கு அவர்கள் செய்த பாவத்திற்கான தண்டனை கிடைத்தது. பீஷ்மருக்கு கர்ணனுக்கு அவர்களின் மௌனத்திற்கு தண்டனை கிடைத்தது. ஒரு நல்லவரின் அமைதி மிகவும் மோசமானது. தவறானதை செய்றது எவளோ தப்போ அவ்வளவு தப்பு செய்யவேண்டியதை செய்யாமல் இருப்பது. எவ்வளவு வேலை இருந்தாலும் தேர்தல் அன்னைக்கு உங்கள் ஓட்டை போட மறக்காதீங்க அது உங்கள் உரிமை மட்டுமல்ல கடமையும் கூட. நீங்கள் உங்கள் குழந்தைகளின் முன்மாதிரி தவறான உதாரணத்தை அவங்களுக்கு நீங்க குடுக்காதீங்க.தொடர்ந்து பேசலாம் …….

என்றும் அன்புடன்
சக தோழி

10

No Responses

Write a response