மாற்றம் நம்மில் தொடங்கட்டும்…..

மாற்றம் நம்மில் தொடங்கட்டும்…..

“Children need models rather than critics.”

  — Joseph Joubert, French moralist

நம்ப குழந்தைகள் மனோ வளர்ச்சிக்கு பெற்றோரோட பங்கு எவ்வளவு முக்கியம்னு பேசிட்டு இருக்கோம். நான் முன்னாடியே சொன்ன மாதிரி குழந்தைகள்னு வந்துட்டா அம்மா அப்பா ரெண்டு பெரும் அவங்களோட எல்லா வளர்ச்சி நிலையிலும் கூட இருக்கனும். குழந்தை உருவான நாளில் தொடங்கி முதல் 5 வருடங்கள் மிக முக்கியமான காலகட்டம். நீங்க குழந்தை முன்னாடி பேசும் பேச்சுக்கள் நடந்துக்கும் முறைகள் எல்லாம் குழந்தையோட வருங்காலத்தை நிர்ணயிக்கும். நீங்க நல்லகவனிச்சா தெரியும் குழந்தைகள் உங்களை அப்படியே பாத்து நீங்க செய்ற மாதிரிதா செய்வாங்க. ஒரு விளம்பரம் இருக்கு ஒரு குட்டி பொண்ணு அவங்க அம்மாவ பாத்து அவங்க பேசுற மாதிரி கைய கைய அசைத்து தொலைபேசி பேசும் அதுவும் அவங்கள மாதிரி நடந்துகிட்டு பேசும் பாக்க ரொம்போ அழகா இருக்கும். அந்த விளம்பரம் சொல்ற விஷயம் என்னன்னா குழந்தைங்க நம்ப கட்டளைகளை பின்பற்ற மாட்டாங்க நம்மை தான் பின்பற்றுவாங்க. உங்க குழந்தை தினம் ரெண்டு வேலை பல் துலக்கனுன்னு நினைச்சா அதை நீங்க அட்டவணையில் போட்டா போதாது அவங்க கூட அதை நீங்களும் செய்யனும். முகநூல், ட்விட்டர் இதுல எல்லா உங்களுக்கு பிடிச்சவங்கள follow பண்ணலாம். இந்த தலைமுறைக்கு follow பண்ண பிடிக்கும். அதனால இனி அவங்களுக்கு அறிவுரை சொல்றதுக்கு பதிலா அவங்க நம்மை follow பண்ற மாதிரி நம்ம நடந்துபோம். அதுக்கு நாம் செய்ய வேண்டியது என்னனு தொடர்ந்து பேசலாம்……

1

No Responses

Write a response