நம்பிக்கை 2…….

நம்பிக்கை 2…….

என் அன்பு சகாக்களுக்கு,
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான நம்பிக்கை பற்றி பேசிட்டு இருந்தோம்.எல்லா உறவுகளுக்குமான அடிப்படை விஷயம் நம்பிக்கை. ஒரு குழந்தை பிறக்கும்போது அது நம்புவது தாய் ,தந்தையை மட்டும்தான். அம்மா இதுதான் அப்பா,தாத்தா,பாட்டி என்று அறிமுகம் செய்யும்போது குழந்தை அதை கேள்வி இன்றி ஏற்கிறது. அப்பா இதுதான் வானம், கடல், பறவை என்று சொல்லிக்கொடுக்கும் போது குழந்தை அதனை பிரமிப்போடு பார்த்து மகிழ்கிறது. இந்த நம்பிக்கை எங்கு உடைபடுகிறது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா ? என்று முதல் முறை உங்கள் பிள்ளைகளை நீங்கள் வேறு பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசுகிறீர்களோ அன்று அந்த நம்பிக்கையில் முதல் விரிசல் ஏற்படுகிறது. அவர்கள் சார்பாக நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது அவர்கள் விருப்பங்களை ஏற்க மறுத்தால் அந்த விரிசல் அதிகரிக்கிறது. யாரை நம்புவது என்று அவர்கள் குழம்பிப்போகுது அந்த இடத்தை நட்பு நிரப்புகிறது. உலகில் மிக அழகான விஷயங்களில் நட்பும் ஒன்று. ஆனால் அது நன்மையா, தீமையா என்பது அவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களை பொறுத்தது. நல்ல நட்பு அவரக்ளுக்கு புதிய வழியை காட்டும், கூடாநட்பு உங்கள் பிள்ளைகளை உங்களிடம் இருந்து வெகுதூரம் கூட்டி சென்றுவிடும். என்றும் எந்த காரணத்திற்காகவும் உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அவர்களுக்கான முடிவுகளை எடுக்கும் போது அவர்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் விருப்பம் போல செய்ய முடியாத நிலையில் அவர்களுக்கு புரிவது போல எடுத்து சொல்லுங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் முதல் நண்பர்களாக இருக்கும்பட்சத்தில் கூடாநட்பு என்று ஒன்று ஏற்பட வாய்புகள் இல்லை. உங்கள் உலகில் இருந்து அவர்களை பார்க்காதீர்கள். அவர்கள் உலகில் அவர்களோட பயணப்படுங்கள். இவை உங்கள் குழந்தைகள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை உடையாமல் காக்கும் .

என்றும் அன்புடன்
சக தோழி

2

No Responses

Write a response