குழந்தை பருவம் …….

குழந்தை பருவம் …….

ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

என் அன்பு சகாக்களுக்கு,
பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு இந்த பாட்டு தெரியும், நம்ம சின்ன வயசுல இதை கேட்டு இருக்கோம். நம்மளோட குழந்தை பருவம் ரொம்போ அழகானது விளையாட்டு போதும் வீட்டுக்கு வா, வெயிலில் சுத்துனது போதும் வந்து சாப்பிடு, எதுக்கு இந்த பள்ளி விடுமுறை விடுறாங்க இந்த பசங்களை வெச்சு சமாளிக்க முடியலை, இந்த வசனங்கள் சொல்லாத அம்மாவே இருக்க மாட்டாங்க.நம்ம வீடு தங்குனதே கிடையாது. கண்ணாமூச்சி, ஓடிபிடிச்சு விளையாடுறது, நொண்டி, இப்படி சொல்லிட்டே போலாம். அப்படி மண்ணுலயும், வெயில்லையும் விளையாடிய விளையாட்டு நமக்கு எதிர்ப்பு சக்தியை கொடுத்துச்சு, உடம்புக்கு வலிமையை கொடுத்துச்சு. ஆனா இன்னைக்கு நம்ப குழந்தைகளுக்கு நம்ம என்ன கொடுத்துக்கிட்டு இருக்கோம் தெரியுமா ? மன அழுத்தம், கண்பார்வை குறைபாடு, கவனச்சிதறல், கற்றல்குறைபாடு இப்படி சொல்லிகிட்டே போலாம். இன்றைய தொழிநுட்ப உலகில் சில விஷயங்களை நம்மால் தவிர்க்க முடியாது ஆனால் அதன் தாக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். தொலைக்காட்சி பாக்கனுன்னு கேக்குற குழந்தைக்கு புது விளையாட்டை சொல்லி குடுங்க, கிரிக்கெட், புட்பால் இப்படி மொபைலில் விளையாடுற குழந்தைகளை விளையாட வெளியில் கூட்டிட்டு போங்க. உலகம் ரொம்போ பெருசு அதை திரையில் காட்டாம நிஜத்தில் காட்டுங்க. நூலகம் போகும் பழக்கத்தை அறிமுகம் படுத்துங்க. இதையெல்லாம் செய்னு சொன்ன கண்டிப்பா செய்ய மாட்டாங்க, அவங்க செய்யனுன இதையெல்லாம் அவங்க கூட நீங்க செய்யனும். குழந்தைங்க நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடி, சரியானதா நாமதா கட்டணும். தொடர்ந்து பேசலாம் ……….

என்றும் அன்புடன்
சக தோழி

2

No Responses

Write a response