New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-14

வீட்டிற்கு சென்று குளித்து முடித்து அமைதியாக அமர்ந்திருக்கும் மகளுக்கு அருகில் சென்று அமர்ந்தாள் சஞ்சனா. தாயை கண்டதும் அவள் மீது சாய்ந்து கொண்ட பாரதி அமைதியாகவே இருந்தாள். மகளை இப்படியே விடுவது சரியில்லை என்று உணர்ந்து பேசத்தொடங்கினாள் சஞ்சனா.

ரதிம்மா இன்னைக்கு நடந்த விசயம் உனக்கு ரொம்போ கஷ்டமா, ஏன் பயமா கூட இருக்குனு எனக்கு தெரியும். அது தப்பில்லை இப்பதான் நீ உண்மையான உலகத்தை பார்க்க ஆரம்பிக்குற. இதுவரைக்கு அப்பாவும் அம்மாவும் காட்டுன ஒரு உலகத்தைத்தான் நீ பார்த்த ஆனா உண்மையில இந்த உலகம் அவ்வளோ நல்லவங்களை கொண்டது இல்லை. தான் செஞ்ச தப்பை யாராவது சுட்டிகாட்டுனா தப்ப சரிசெஞ்சுக்காம சுட்டிகாட்டுனவங்க மேலகோவப்படுறவங்க தான் இன்னைக்கு அதிகம்.

நீ ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்ஸன், உன்ன நோக்கி ஒரு பந்து வருது அதை நீ தைரியமா எதுக்குற, அது மிஸ்ஸாயிடா, உன்மேல பட்டுட்டா திரும்ப நீ விளையாடுறதே இல்லையா என்ன?? தோல்விய கத்துக்குற வாய்ப்ப பார்த்து திரும்ப விளையாடுறதானே, வாழ்க்கையையும் அப்படியே பாரு. இதுக்கெல்லாம் துவண்டு போக கூடாது இன்னும் பார்க்க நிறைய இருக்கு ஆனா முடிஞ்சவரைக்கும் அப்பாவும் நானும் எப்பவும் உன்கூட உனக்கு துணையா இருப்போம் புரியுதா??

சரி என்று தலையாட்டிய மகள் அன்னை மடியில் படுத்து உறங்க தொடங்கினாள்.  பாரதி உறங்கியதும் வெளியில் வந்த சஞ்சனாவிற்கு மனது பாரமாக இருந்தது என்னதான் தைரியம் சொன்னாலும் பாரதி பயந்திருப்பது அவளுக்கு புரிந்தது அது அவளை கோழையாக்கிவிட கூடாது என்று அவளுக்கு கவலையாக இருந்தது. யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

சஞ்சனாவிற்கு நல்ல நண்பர்கள் சிலர் உண்டு ஆனால் யாரிடமும் இதுபற்றி பேச அவளுக்கு தோன்றவில்லை. வெளியே இலக்கில்லாமல் வெறித்தவண்ணம் நின்றுகொண்டிருந்த சஞ்சனாவின் அருகில் வந்தான் ஆதி. அரவம் கேட்டு திரும்பிப்பார்த்தவள் ஆதியை கண்டதும் எங்க போனீங்க பாரதிய பார்க்கக்கூட வரலை?

அவளை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு, அதான் மேல வரலை, இப்ப நீ வெளில வரவும் என்னனு பார்க்கலானு வந்தேன்.

பாரதி தூங்கிட்ட, என்னதான் அவளுக்கு தைரியம் சொன்னாலும் என்னமோ மனசுக்குள்ள படபடனே இருக்கு. அவளுக்கு தைரியம் சொன்ன என்னால தைரியமா இருக்க முடியலை.

என்ன சனா எவ்வளவு தைரியமான ஆள் நீ. இதுக்கெல்லாம் பயந்த எப்படி? எனக்கும் பாரதிக்கு தைரியமே நீதான், நீ வாடிப்போன நாங்க என்ன செய்வோம்?

இப்படி பேசுபவன்தான் பிரச்சனைக்கு காரணமான பையனை ஸ்கூல்லை விட்டே வெளியில் அனுப்பிவிட்டு வந்திருக்கிறான். ஆனால் அவன் தைரியம் அவள் தான் என்று கூறுகிறான் என்று நினைத்த சஞ்சனாவிற்கு வியப்பாக இருந்தது.

என்ன சனா அமைதியாகிட்ட?

அதெல்லாம் ஒன்னு இல்ல.

நான் ஒன்னு கேட்கட்டுமா?

கேளுங்க அதுக்கு எதுக்கு பெர்மிஸன் கேக்குறீங்க

ஒருவேளை பாரதி சம்மந்தபட்ட இந்த விசயத்துல பாரதி எதாவது தப்பு செஞ்சிருந்த நீ என்ன செஞ்சிருப்ப?

அது தப்பை பொருத்தது, கண்டிப்பா அவகிட்ட பேசி எந்த சூழ்நிலைல அந்த தப்ப செஞ்ச? ஏன் அதை செஞ்ச? அவளுக்கு அது தப்பு அது எவ்வளவு பேரை காயப்படுதுனு தெரியுமான்னு உக்காந்து பேசுவ. தேவைப்பட்ட அவ தப்புக்கான தண்டனை கண்டிப்பா அவளுக்கு உண்டு.

அவளோட எந்த தப்புக்காகவாது அவளை விட்டு பிரிஞ்சுபோய்டுவிய? இந்த கேள்வியை ஒரு எதிர்பார்ப்போடு கேட்டான் ஆதி.

பாரதி பற்றிய கேள்வி என்ற எண்ணத்தில் அவ சின்ன பொண்ணு அவளபோய் பிரிஞ்சு???? பாதி பதிலில் சஞ்சனாவிற்கு கேள்வி பாரதி பற்றியது இல்லை என்று புரிந்தது. அவள் அமைதியாகிவிட ஆழ்ந்த குரலில் பேசினான் ஆதி.

நம்ப கல்யாணத்துக்கப்புறம் எனக்கு எல்லாம இருந்தது நீதான சனா, நான் ஒரு தப்பு செஞ்சப்ப, இப்ப பாரதிக்கு சொன்னயே அப்படி என்கிட்ட பேசியிருக்கலாமே, இல்ல தண்டனைதான் சரினு நினைச்சு இருந்த கூட இருந்தே தண்டனை குடுத்திருக்கலாமே? எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே? உன்ன பிரியாம இருக்க என்ன செய்யச்சொல்லி இருந்தாலும் செஞ்சிருப்பனே. நான் செஞ்சது தப்புதான் அதை என்னைக்கும் நான் நியாயப்படுத்தமாட்டேன், ஆனா தப்பு, சரி தெரியாமத்தான் வளர்ந்த, உன்மேல இருந்த அதிகப்படி காதல், உன் அன்பு  எனக்கு மட்டுந்தானு அதிகப்படி உரிமையுணர்வுல என்ன செய்றனு தெரியாம செஞ்சுட்ட நீ நாலு அடி அடிச்சிருக்கலாம், எனக்கு எதிரா அமைதிய ஆயுதமா வெச்சு ஏன் என்ன விட்டுட்டுப்போன சனா? நீ இல்லாம இந்த வாழ்க்கை நரகமா இருக்கு. இப்படி உன்பக்கத்துல யாரோ மாதிரி இருக்குறது இன்னும் கொடுமையா இருக்கு. என் தப்ப சரிசெய்ய வழியேயில்லையா? இந்த நிலைமை மாறவே மாறாத என்று கேட்ட்கும்போது அவன் குரல் கரகரத்தது.

சனாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது, அவளை மீறி கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆதி சொல்வதுபோல் அவர்களுக்குள் பிரச்சனை வந்ததில் இருந்து  அவனிடம் ஊமையாகி போனாள். தேவைக்கு பேசுவதோடு சரி, ஏன் இப்படி செஞ்ச? நீ இப்படி செய்யலாமா? இப்படி எந்த கேள்வியும் அவள் அவனை கேட்கவில்லை. இப்படி அவன் மனம் வருந்தி பேசுவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த நாளை மறக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கண்களில் கண்ணீரோடு பேசாமல் இருந்தவளை பார்த்தவனுக்கு அவளை வருத்திவிட்டோம் என்று புரிந்தது.

சாரி சஞ்சனா, ஏதோ இன்னைக்கு நடந்த விஷயம் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு எது எதோ பேசிட்ட நீ மனசுல எது வெச்சுக்காத போய் ரெஸ்ட் எடு என்று கூறியவன் அங்கு நிற்காமல் வேகமாக கிளம்பி வெளியில் சென்றுவிட்டான்.

அவன் கேட்டுச்சென்ற கேள்விகளை அசைபோட்டுக்கொண்டே அமர்ந்திருந்த சஞ்சனாவிற்கு நினைவுகள் பின்னோக்கி சென்றது.

திருமணம் முடிந்து முதல்முதலாக ஆதி வீட்டிற்கு வந்தாள் சஞ்சனா. ஒரு அரண்மனையின் கம்பீரத்தோடு இருந்த வீடு அவளுக்கு பயத்தை கொடுத்தது. கேட்டிலிருந்து வீட்டிற்கு நடைபாதையே ஒரு கிலோமீட்டர் இருந்தது. இருபக்கங்களிலும் மிக நேர்த்தியாக வளர்க்கப்பட்டிருந்த ரோஜா செடிகளும் தோட்டத்தின் மத்தியில் அமைந்திருந்த நீரூற்றும் அவளது கவனத்தை ஈர்த்தது ஆனால் அவள் பயத்தை குறைக்கவில்லை. மணமக்களை ஆரத்தி சுற்றி வீட்டிற்குள் அழைத்து சென்றனர். வீட்டின் உள்புறம் இன்னும் ஆடம்பரமாக இருந்தது. ஹாலின் ஒருபுற சுவரில் பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்த ஆதியின் பெற்றோர் புகைப்படம் சஞ்சனாவின் கண்களில் பட்டது. அவளை மீறி அந்த புகைப்படம் நோக்கி சென்றவள், கைகூப்பி வேண்டத்தொடங்கினாள். உடன் வந்தவள் எங்கே என்று பார்த்தவன், அவள் தனது பெற்றோர் புகைப்படத்தின் முன் கைகூப்பி நின்றது அளவில்லா நிறைவை தந்தது.

வீட்டில் சம்பிரதாயங்கள் முடிந்து அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மனதில் ஒரு கலவரத்தோடே இருந்த சஞ்சனாவை ஓய்வெடுக்க என்று கீழிருந்த அறைக்கு அழைத்து சென்றார் கிருஷ்ணவேணி. உள்ளே சென்றதும் மகளிடம் என்னடம்மா ஒருமாதிரி இருக்க என்று கேட்டார்.

அம்மா எனக்கு ரொம்போ பயமா இருக்கு, இவங்க வீடு பார்த்தீங்களா எவ்வளோ பெரிய வீடு, நீங்க பார்க்கவந்தப்ப ஏன் என்கிட்ட சொல்லல. ஆதி ரொம்போ பெரிய பணக்காரரா? அம்மா நான் இந்த வீட்டுல எப்படி சமாளிப்ப என்று தான் மனதிலிருப்பதை சொன்னாள் சஞ்சனா.

சஞ்சும்மா அதென்ன அவங்க வீடு இனி இது உன்னோட வீடு. எங்க இருந்தாலும் நீ நீயா இரு போதும். ஆதி நீ யாரு என்னனு தெரிஞ்சுதான் உன்ன கல்யாணம் செஞ்சு இருக்காரு. அப்புறம் எதுக்கு வீட்டையும், ஆடம்பரத்தையும் பார்த்து பயப்படுற. நீ இப்படி குழப்பத்தோட இருந்த நான் எப்படி வீட்டுக்கு போறது?

வீட்டுக்கு போறீங்களா?? அப்ப என்கூட யாரு இருப்ப?

இன்னைக்கு சித்தியும், சித்தப்பாவும் இருப்பாங்க. நாளைக்கு உங்கள நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். ஆனா அதுக்கப்புறம் நீ இங்க தனியாத்தான் இருக்கனும் புரிஞ்சுதா?

புரிந்தது என்று தலையாட்டி சஞ்சனா முடிந்தவரை சிரிச்ச முகத்தோடு தாயையும், அண்ணனையும் வழியனுப்பி வைத்தாள். அன்று இரவு ஆதியின் அறைக்குள் சென்ற சஞ்சனாவிற்கு இதுவே ஒரு வீடு அளவுக்கு பெருசா இருக்கு என்று தோன்றியது. கத்தவருகிலேயே நின்று யோசிச்சுக்கொண்டிருக்கும் சஞ்சனாவை குழப்பமாக பார்த்தவன் அவள் அருகில் சென்றான்.

சனா என்னடா இங்கயே நின்னுட்ட?

ஒண்ணுமில்ல சும்மாதான்…

சும்மாவா சனா  பேபி ஆர் யு ஆல்ரைட் ?

கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றவளை கைபிடித்து அழைத்து சென்று முன்னறையில் இருந்த சோபாவில் அமரவைத்தான். ஆதியின் அறை முன்னாள் ஒரு அலுவலக அறை, அதையடுத்து படுக்கை அறை, அதன் ஒருபுறத்தில் பெரிய உடைமாற்றும் அறை மற்றும் குளியலறை இருந்தது. படுக்கையறையை ஒட்டி ஒரு பெரிய பால்கனி இருந்தது.

சனா என்னடா ஆச்சு ஏன் என்னவோபோல இருக்க?

தயா நீங்க உங்க இந்த வீடு எல்லா பாக்குறப்ப எனக்கு பயமா இருக்கு. உங்க ஸ்டேடஸ் இன்னைக்கு வந்திருந்த வி ஐ பிஸ்  நான்.. என்னால இதோட எல்லாம் ஒத்துப்போக முடியுமானு தெரியல? தயா நீங்க இவ்வளோ பெரிய ஆளுனு தெரியாமயே இருந்துட்ட

அதுனாலதான் எனக்கு உன்ன ரொம்போ பிடிக்கும். உனக்கு என்ன ஆதித்தியன்னா மட்டுந்தான் தெரியும். அந்த ஆதியை தான் நீ காதலிச்ச உனக்கு அந்த ஆதியா நான் எப்பவும் இருப்பேன். இது நம்ப வீடு அம்மா போனதுக்கப்புறம் இந்த வீட்டோட உயிர்ப்பும் ஜீவனும் போய்டுச்சு. நீ நீயா இரு இந்த வீடு உயிர்ப்போடு இருக்கும்.

பேசும் அவனை ஆச்சரியமாக பார்த்தாள் சஞ்சனா. என்ன சனா அப்படி பாக்குற?

இல்ல அப்படி என்கிட்ட என்னதான் இருக்குனு என்மேல இவ்வளோ காதலோட இருக்கீங்க?

காதலிக்க காரணம் எதுக்கு? உன்கூட  இருந்த என்னோட மிச்ச வாழ்க்கை சந்தோசமா இருக்குனு நம்புற அதுதான் முக்கியம்.

ஆனா தயா….. என்று சஞ்சனா ஏதோ சொல்ல வர, சனா பேபி உனக்கு ஏன் இன்னைக்குனு இவ்வளோ சந்தேகம் வருது என்ன பார்த்த பாவமா இல்லையா என்று ஆதி கேட்க, சனா சிரிக்க தொடங்கினாள்.

என்னோட நிலமை உனக்கு சிரிப்பா இருக்கு ஹ்ம்ம்ம் என்று போலியாக அலுத்துக்கொண்டவன் சோபாவிலிருந்து எழுந்து அவள் காதருகில் குனிந்து, சனா ஏன் லவ் பண்றனு என்கிட்ட காரணம் இல்லை, ஆனா எவ்வளவு லவ் பண்றனு காட்டமுடியும் என்று ரகசிய குரலில் சொன்னான். கன்னத்தில் உராய்ந்த அவனது மீசை அவளுக்கு சிலிர்ப்பை குடுத்தது, கூடவே அவனது ரகசிய குரல் அவளை என்னவோ செய்தது. நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் தடுத்தது. அவள் வெட்கத்தை ரசித்தவன், மனதில் சுமப்பவளை கைகளில் ஏந்திக்கொண்டு படுக்கையறைக்குள் சென்றான். அதன்பின் சஞ்சனாவிற்கு நினைவில் இருந்ததெல்லாம் ஆதி மட்டும்தான்.

மறுநாள் காலை பால்கனியில் நின்று தலையை துவட்டி கொண்டிருந்த சஞ்சனாவை பின்னிருந்து அணைத்துக்கொண்டான் ஆதி. வாகாக அவன்மீது சாய்ந்துகொண்டவள் தயா இங்கிருந்து பார்க்க தோட்டம் ரொம்போ அழகா இருக்கு. அம்மா இருந்தப்ப எப்படி இருந்துச்சோ அப்படியே மெயிண்டைன் பண்ணசொல்லிட்டேன். உனக்கு எதாவது மாத்தனும் புதுசா வாங்கி வெக்கணுனாலும் செய் என்றவன் அவளை தன்புறம் திருப்பி ஈரகூந்தலில் முகம் புதைத்தான்.

தயா கீழ போகனும்.

போலாம் என்ன அவசரம்.

கீழ அத்தை மாமா எல்லா வெயிட் பண்ணுவாங்க.

இன்னும் கொஞ்சநேரம் வெயிட் பண்ணட்டும் என்றவன் அதன்பின் அவளை பேசவிடவில்லை.

அன்று மகிழ்ச்சியோடு தொடங்கிய அவர்கள் வாழ்க்கை அவர்கள் பிரியும் வரைகூட அந்த இனிமை குறையாமல் இருந்தது. மறுவீடு முடித்து மறுநாளே சஞ்சனாவும் ஆதியும் தேனிலவிற்கு சென்றனர். அவ்வளவு வசதியாக இருப்பவன் தங்கள் வீட்டில் சிறிதுகூட முகம் சுழிக்காமல் தங்கியது, அண்ணனுடன் பைக்கில் கடைக்கு சென்று வந்தது, இரவு தோசை ஊற்ற உதவுகிறேன் என்று கிட்சனை ஒருவழி செய்தது என்று அனைத்தும் சஞ்சனாவிற்கு அவன்மீது காதலை அதிகப்படுத்தியது.

தேனிலவு முடித்து வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் காதலர்கள் போல இருவரும் சுற்றி திரிந்தனர். சஞ்சனா அவளுடைய PHD க்கு கல்லூரி மற்றும் தனது ஆசிரியரையும் தேர்வு செய்தாள். அவ்வளவு பெரிய வீட்டை நிர்வகிக்க கற்றுக்கொண்டாள். தோட்டத்தில் மாற்றங்கள் செய்தாள். வேலையாட்களோடு அன்பாக இருந்தாள். தனது கல்லூரி நேரம் எந்தவிதத்திலும் ஆதியுடனான நேரத்தை குறைத்துவிடாமல் பார்த்துக்கொண்டாள். கல்லூரிக்கு செல்லாத நாட்கள் ஆதியுடன் அலுவலகத்துக்கு சென்றுவிடுவாள். அவன் அறையில் அவளுக்கென்று ஒரு டெஸ்க் இருந்தது, அங்கிருந்து அவளது ரிசெர்ச் வேலைகளை செய்வாள்.

ஆதியின் உலகமே மாறிப்போனது எந்த நேரமும் பிசினெஸ், பிசினெஸ் என்று இருந்தவன் இப்போதுதான் வாழ்க்கையை வாழ தொடங்கினான். அவனுக்கென்று பார்த்து பார்த்து சனா சமைப்பதில் அவன் அம்மாவின் கைருசி இருப்பதுபோல் அவனுக்கு தோன்றும். சஞ்சனா சொன்னதுபோல அவள் அவனுக்கு எல்லாமுமாக இருந்தாள். ஆதி மீண்டும் தங்கள் வீட்டிற்கு ஜீவன் வந்துவிட்டது என்று நிம்மதியாக இருந்தான். இந்த சந்தோஷமும் நிம்மதியும் அவனுக்கு மேலும் பல வெற்றிகளை தேடித்தந்தது.

வாழ்க்கை அப்படியே சென்றால் நன்றாகத்தான் இருக்கும், நினைப்பது எல்லாம் நடந்துவிடுமா என்ன??? ஆதி-சஞ்சனா வாழ்க்கையில் நடக்கப்போகும் சுவாரசிய திருப்பங்களை அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்.

-நறுமுகை

2

No Responses

Write a response