New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-9

ஆதித்யன்-சஞ்சனா நிச்சயத்திற்கு இரு தினங்களே இருந்த நிலையில் பாலகுமாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை படித்து குழம்பிப்போன பாலகுமார் அந்த கடிதத்தை பற்றி தன் அன்னையிடமும், தங்கையிடமும் கூறினான். தன் அண்ணனிடம் இருந்து அந்த கடிதத்தை வாங்கி படித்தாள் சஞ்சனா.

அன்பு பாலகுமாருக்கு,

உங்கள் நலம்விரும்பி எழுதும் கடிதம். பெரிய இடத்து சம்மந்தம் நிறைய சொத்து இருக்கு, ஒரே வாரிசுன உடனே எதையும் யோசிக்காம உங்க தங்கச்சிக்கு பேசி முடிச்சுடீங்க. அவ்வளோ பெரிய இடத்துல இருந்து ஏன் உங்க வீட்டுல பொண்ணு எடுக்கனுனு யோசிச்சு பார்த்தீங்களா?? இவ்வளோ பணம் வருது ஏன் அதெல்லாம் யோசிக்க போறீங்க. ஆனா பணத்தை விட தங்கச்சி வாழ்க்கை முக்கியம்னு நினைச்ச உடனே இந்த கல்யாண ஏற்பாட்டை  நிறுத்திடுங்க. வெளில தெரியற அளவுக்கு அந்த ஆதி நல்லவன் இல்லை. அவனுக்கு இல்லாத கெட்டபழக்கங்களே இல்லை. அதுலயும் பொண்ணுங்க விஷயத்துல அவன் ரொம்பவே மோசம். இவனோட லீலை எல்லாம் தெரிஞ்சும் கேள்விகேட்காத ஒரு குடும்பம் வேணுன்னுதான் உங்க குடும்பத்துல சம்மந்தம் பண்ணியிருக்கான். அவன்கிட்ட நேரடியா கேட்ட இல்லைனு சாதிப்பான். பணத்தை பார்த்து தங்கச்சி வாழ்க்கையை கோட்டை விட்டுடாதீங்க.

இப்படிக்கு ,

உங்கள் நலம் விரும்பி.

கடிதத்தை படித்து விட்டு நிமிர்ந்த சஞ்சனா, என்ன அண்ணா பேர் இல்லாத இந்த கடிதத்தை வெச்சு அவரை சந்தேகப்படுறீயா?

இல்ல சஞ்சும்மா, ஆனா நிச்சயத்துக்கு முன்னாடி இப்படி ஒரு கடிதம் உறுத்தலயிருக்கு. எதுவுமே இல்லாமலா இப்படி ஒரு கடிதம் வரும்.

அண்ணா ப்ளீஸ், அவருக்கு பிசினெஸ்ல நிறைய எதிரிகள் இருக்காங்க, நிறைய பேர் அவங்க பொண்ண இவருக்கு கல்யாணம் செய்யனுனு முயற்சி செஞ்சாங்க அது நடக்காத கோவத்துல யாராவது இந்த மொட்டை கடிதத்தை எழுதி இருக்கலாம். அவர்கூட நான் பழகிகிட்டு இருக்க இந்த கடிதத்துல இருக்க வார்த்தையோடு அவரை கற்பனை கூட பண்ண முடியல. என்மேல அவருக்கு இருக்க காதல் உண்மை, இந்த லெட்டர் முழுக்க பொய்.

ஹ்ம்ம்ம், நீ சொல்றது சரிதான், அவரோட பழகுற உனக்குத்தான் அவரை தெரியும் நீ இவ்வளோ தெளிவா இருக்கப்ப எனக்கு அந்த பயமும் இல்லை. இந்த லெட்டர் விஷயம் நம்மளோட போகட்டும். நீங்க என்னம்மா சொல்றீங்க,

பாலா, உங்க ரெண்டு பேரையும் சுயமா சிந்திச்சு முடிவெடுக்கற மாதிரிதான் நானு, உங்க அப்பாவும் வளர்த்தியிருக்கோம். நீங்க நல்லது கெட்டது யோசிச்சு முடிவு பண்ணுவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. சஞ்சு சொல்ற மாதிரி அந்த தம்பிய தப்ப நினைக்கமுடியல, இப்படி ஒரு லெட்டர் வந்ததவே காட்டிக்க வேண்டாம்.

சரிம்மா, நான்தான் கொஞ்சம் பயந்துட்டேன் இப்பதான் நிம்மதியா இருக்கு என்று கூறி அந்த லெட்டரை கிழித்துப் போட்டான் பாலகுமார். 

அந்த விஷயத்தை சஞ்சனா ஆதியிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாள். ஒருவேளை சொல்லியிருந்தால் சஞ்சனா அவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவனுக்கு புரிந்திருக்கும், கூடவே திருமண உறவில் பரஸ்பர நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதையும் அறிந்திருப்பான். நாம் நினைப்பது எல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

ஆதியின் பெரியம்மா, பெரியப்பா நிச்சயத்தை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஆதியின் பெரியம்மா நிச்சயத்திற்கு சஞ்சனாவிற்கு வைர அட்டிகை போட்டார். பாலகுமார் ஆதிக்கு, செயின், மோதிரம், வாட்ச் என்று போட்டான். ஆதியின் பெரியம்மா, பெரியப்பாவிற்கு திருப்தியாக இருந்தது.

நிச்சயம் முடிந்து அந்த வாரம் ஆதி, சஞ்சனாவை போனில் அழைத்தான். சனா பேபி என்ன பண்ற,

ஸ்டடி ஹாலிடேஸ்ல என்ன பண்ணுவாங்க படிச்சுட்டு இருக்க தயா,

சரியான புத்தக புழுவை காதலிச்சுட்ட,

சார் ரொம்போ வருத்தப்படுற மாதிரி தெரியுது, வேற பிகர் செட் பண்ற ஐடியா எதாவது இருக்க,

வாய்ப்பேயில்லை, நீ புக்கோட இரு நான் உன்கூட இருக்கேன், இதுக்காக எல்லாம் வேற ஆள் பார்க்குற ஐடியா இல்ல,

சோ ஸ்வீட், இப்ப எதுக்கு கால் பண்ணீங்கன்னு சொல்லுங்க, இந்த நேரத்துல பிஸியா பிசினெஸ் பார்க்குற ஆள், காரணம் இல்லாம என்ன கூப்பிட மாட்டீங்களே,

எக்ஸாக்ட்லி, ஒரு முக்கியமான விஷயமதான் கால் பண்ண. நீ MPHIL பண்ணாம டைரக்ட் PHD பண்றனால உனக்கு கோர்ஸ் 5 இயர்ஸ் இருக்குமாமே,

ஆமா தயா, ஆனா லாஸ்ட் இயர் கம்ப்ளீட் பண்றது நம்மளோட ஸ்பீட் பொறுத்து,

உன்னோட கோர்ஸ்க்கு, UK, US, கனடால நல்ல காலேஜ் இருக்கு. நான் டீடெயில்ஸ் அனுப்புற நீ பார்த்துட்டு எது பிடிச்சு இருக்குனு சொல்லு அங்க அட்மிஷன் ப்ராசெஸ் என்னனு நான் விசாரிக்குறேன்.

ஆமா என்ன அங்க அனுப்பிட்டு நீங்க என்ன செய்யலானு இருக்கீங்க,

உன்ன தனியா அனுப்ப போறேனு நான் எப்ப சொன்ன, அந்த மூணு கண்ட்ரிலையும் நமக்கு பிசினெஸ் இருக்கு நான் அதை பார்க்க போறேன்.

அப்ப இங்க இருக்க பபிசினெஸ்,

அப்ப அப்ப இங்கயும் வந்து பார்த்துக்க வேண்டியதுதான். அங்க படிச்ச உனக்கு எக்ஸ்போஸர் கிடைக்கும், கேரியர் நல்லா இருக்கும் அதான் அங்க செலக்ட் பண்ண,

தயா, இத்தனை வருஷம் இங்கதான படிச்ச, இங்க இருக்க எஜுகேஷனுக்கு என்ன குறை. நம்மளோட அடித்தளமே இங்க நிறுவப்பட்டதுதான, ஏன் அதைவிட்டுட்டு ஏதோ ஒரு வெளிநாட்டுல போய் படிக்கனும். இங்க படிச்சு, இங்க கேரியர் ஸ்டார்ட் பண்ணி அதுல நம்ப திறமையை பார்த்து வெளிநாட்டுல இருந்து நம்மள கூப்பிடனும் அதுதானே உண்மையான வளர்ச்சி.

என்ன ஒரு தேசபக்தி, இதுனாலதான் நீ எப்பவும் ஸ்பெஷல் சனா, வேற பொண்ண இருந்த கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ணகூடாதுனு இந்நேரம் ஓகே சொல்லியிருப்பாங்க, நீ அப்படி இல்ல உனக்கு என்ன வேணும், எப்படி வேணும் எல்லாத்துலையும் உனக்கு தெளிவு உண்டு, ஐயம் ப்ரௌட் ஆப் யு சனா பேபி.

இங்க எந்த காலேஜ்ல கோர்ஸ் பண்ணனுனு டிசைடு பண்ணிட்டு சொல்லு என்றவன் அதன்பின் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைத்தான்.

அதேசமயம் தான் கணக்கு போட்டபடி நிச்சயம் நிற்கவில்லை என்று கோவத்தில் பொருமி கொண்டிருந்தார் மரகதம். அவரின் மகள் மேனகாவோ அம்மா, எனக்கு ஆதி எல்லாம் செட்டே ஆகமாட்டான், அவன் ரொம்போ ஸ்ட்ரிக்ட், டிசிப்ளின், எனக்கெல்லாம் நினைச்ச நேரம் ஷாப்பிங் போகணும், பார்ட்டி, பப் இப்படி ஜாலியா லைப் என்ஜாய் பண்ணனும். அப்படி ஒரு மாப்பிள்ளை பாரு அதைவிட்டுட்டு ஆதிக்கு ட்ரை பண்ற.

சரிதாண்டி மகளே நீ சொல்ற மாதிரி லைப் என்ஜாய் பண்ண பணம் வேணும் அது அந்த ஆதி கிட்டதான் இருக்கு. இந்த கல்யாணத்தை பொண்ணு வீடே நிறுத்திட்டா, அண்ணன் மகன் படுற கஷ்டத்தை பார்க்க முடியாம என்னோட பொண்ண கட்டித்தரனு  சொல்லி  உங்க கல்யாணத்தை முடிச்சுடுவ. அதுக்கப்புறம் உன்னோட இஷ்டம் போல என்ஜாய் பண்ணு, அவனுக்கு பபிடிக்கலைன்னா அவன் டிவோர்ஸ் பைல் பண்ணட்டும், அதையே காரணமா காட்டி அவன் மொத்த சொத்தையும் ஜீவனாம்சமா வாங்கிடலாம்.

செம பிளான்ம்மா, ஆனா எப்படி நடக்கும் அதுதான் நிச்சயம் நடந்துடுச்சே,

இன்னும் கல்யாணம் நடக்கலையே, நிறுத்திக்காட்டுற என்று கண்களில் ஆசை மின்ன கூறினார் மரகதம்.

மரகதத்தால் வரப்போகும் பிரச்சனை என்ன?? ஆதி-சஞ்சனா அதை எப்படி சமாளிக்க போகிறார்கள்?? அறிய தொடர்ந்து படியுங்கள் “மீண்டும் மலர்வாய்”.

-நறுமுகை

3

No Responses

Write a response