New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-4

ஆதியும், சஞ்சனாவும் கோயிலில் சந்தித்து இரு மாதங்கள் இருக்கும், அன்று மாலை கல்லூரியில் இருந்து வந்த சஞ்சனா தன் அன்னையிடம் சமையலறையில் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

அலுவலகத்தில் இருந்து வந்த பாலகுமார் தன் தங்கையிடம் வம்பு செய்து கொண்டிருந்தான்.

அப்பொழுது அவர்கள் வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது,

பாலகுமார் யார் என்று பார்ப்பதற்கு வாசலுக்குச் சென்றான்.

அங்கு ஆதி தன் பெரியம்மா பெரியப்பாவோடு வந்திருந்தான்.

பாலகுமாருக்கு அவர்கள் யார் என்று தெரியாததால் அறிமுகமற்ற பார்வை பார்த்தான்.

ஆதி பாலகுமாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு முக்கியமான விஷயம்  பேசவந்திருப்பதாக  கூறினான்.

வீடு தேடி வந்தவர்களை அதற்குமேல் வாசலில் நிறுத்தி வைத்து பேசுவது மரியாதையாக இருக்காது என எண்ணி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.

வந்திருப்பது யார் என்று அறிய ஹாலுக்கு வந்தார் கிருஷ்ணவேணி.

கிருஷ்ணவேணியைப் பார்த்ததும் ஆதியின் பெரியம்மா பேச தொடங்கினார். வணக்கம்மா இவன் ஆதித்தியன் “நிலா” குரூப்ஸ் ஆஃ ப் கம்பெனியின் ஓனர். நாங்க இவனோட ஒன்னுவிட்ட பெரியம்மா பெரியப்பா, ஆதியோட அம்மா அப்பா தவறின பிறகு நாங்கதான் அவனோட கார்டியன். படிச்சு முடிச்சு ஆதி பிசினஸ் பார்க்க ஆரம்பிச்ச பிறகு எங்களுக்கு இருந்த ஒரே பொறுப்பு அவன் கல்யாணம் தான். ஆனா ஆதி கல்யாணம் வேணாம்னு தட்டி கழிச்சுட்டே இருந்தான்.

திடீர்னு ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்து உங்க பொண்ணு போட்டோ காட்டி உங்க குடும்பத்தை பத்தி சொல்லி இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க விரும்புறதா சொன்னான். உங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சதுல எங்களுக்கு ரொம்போ திருப்தியா இருந்துச்சு, அதனால் தான் முறைப்படி உங்ககிட்டையே பேசிடலாம்னு நேர்ல வந்தோம் என்று ஆதியின் பெரியம்மா தாங்கள் வந்த காரணத்தை கூறி முடித்தார்.

பாலகுமாருக்கும் கிருஷ்ணவேணிக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

யார் வந்திருக்கிறார்கள் என்று சமையல் அறையில் இருந்து எட்டிப்பார்த்த சஞ்சனாவிற்கு ஆதியின் முகம் உடனே பிடிபட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் கோயிலில் சில நிமிஷங்கள் மட்டுமே பார்த்த ஒருவரின் முகம் தன் மனதில் இந்த அளவிற்கு ஆழ பதிந்திருக்கிறது  என்பது சஞ்சனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

தன் அண்ணனும் அம்மாவும் என்ன கூற போகிறார்கள் என்று ஆவலோடு சஞ்சனா கேட்டுக்கொண்டிருக்க,

சிறிது நேரம் யோசித்த கிருஷ்ணவேணி, அம்மா இப்படி திடுதிப்புனு வந்து பொண்ணு கேக்குறீங்க எங்களுக்கு ஒண்ணுமே புரியல, அவங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் இந்த குடும்பத்துல எல்லா முடிவையும் நாங்க மூணு பேரும் கலந்து பேசி தான் எடுக்குறோம். இது என்  பொண்ணு வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் எங்களுக்கு பிடிச்சிருந்தாலும்  அவளோட விருப்பம் தான் எங்களுக்கு  முக்கியம், என்று கூற,

ஆதியோ நீங்க தப்பா நினைக்கலைனா நான் உங்க பொண்ணுகிட்ட தனியா ஒரு பத்து நிமிஷம் பேசலாமா? என்று கேட்டான்.

கிருஷ்ணவேணி தயக்கத்தோடு பாலகுமாரை பார்க்க,

பொண்ணை பிடிச்சிருக்குனு பொண்ணு பின்னாடி சுத்தாம நேரடியாக முறைப்படி வீட்டுக்கு வந்து பேசியது பாலகுமாருக்கு ஆதியின் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. எனவே பாலகுமாரோ நீங்க ரெண்டுபேரும் பேசாம எந்த முடிவுக்கும் வர முடியாது அதனால நீங்க ரெண்டுபேரும் தனியா பேசுறதுல எங்களுக்கு ஆட்சயபனை  இல்லை என்று கூறிவிட்டான்.

அதன் பின் டைனிங் ஹாலில் ஆதியும் சஞ்சனாவும் அமர்ந்து பேச தொடங்கினர்.

சஞ்சனாவிற்கு அன்று தன்னை கீழே விழாமல் காப்பாற்றியதற்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் வந்தது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது,

ஆதியோ எந்த தயக்கமும் இல்லாமல் பேச தொடங்கினான்.

உங்களுக்கு என்னை ஞாபக இருக்கும்னு நினைக்கிறன், அன்னைக்கு ரொம்போ ஃபியூ மினிட்ஸ் தான் பார்த்தோம். ஆனால் அந்த ஃபியூ மினிட்ஸ்ல எனக்கு ஏற்பட்ட பாதிப்பு ரொம்போ அதிகம். பல பிசினஸ் பார்க்குறேன், பல பேரை சந்திக்கிறேன் எந்த பொண்ணும் இதுக்கு முன்னாடி என்னை இந்த அளவுக்கு டிஸ்டர்ப் பண்ணினது இல்ல, கொஞ்சம் நேரம் எதையாவது யோசிச்சு கண்ணை மூடினாக்கூட அன்னைக்கு பயந்து போய் என் கையில் விழுந்த உங்களோட முகம் தான் என் கண்ணுல வந்துகிட்டே இருக்கு.  நானும் போக போக சரியாயிடும்னு நினச்சேன் ஆனால் ஒருவாரம், பத்து நாள் ஆகியும் அந்த முகம் என் கண்ணை விட்டு  மறையுறதா இல்ல, அதுக்கப்புறம் தான் தோணுச்சு ஒருவேளை உங்களுக்காக தான் நான் இவ்வளவு நாள் காத்திருந்தனோ?  அதுக்கப்புறம் நான் உங்களை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். தப்பு தான் ஆனா நான் உங்களை தொந்தரவு பண்ணாம ஃபாலோ பண்ணினேன்.

எனக்கு உங்களை பத்தி தெரிஞ்சிக்க வேண்டி இருந்தது. நீ மத்த பொண்ணுங்களை காட்டிலும் வித்தியாசம இருந்த. இந்த வயசுக்கே உரிய எல்லாமே உன்கிட்ட இருந்தது. ஆனால் அதுல ஆர்ப்பாட்டம் இல்ல, அளவுக்கு மீறி நீ எதையும் செய்றது இல்ல.  நான் ரொம்போ முக்கியமா தெரிஞ்சிகிட்ட ஒரு விஷயம் உன்கிட்ட காதல் அப்படின்னு சொல்லி உன்னை நெருங்கவே முடியாதுன்னு.

ஆர்ப்பாட்டம் இல்லாத உன்னோட குணம், அமைதியான உன்னோட போக்கு ஃபேமிலி மேல உனக்கு இருக்கிற பாண்டிங், இதெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் இனி விட்டு கொடுக்க கூடாதுன்னு எனக்கு தோணுச்சு.

அதனால தான் பெரியப்பா பெரியம்மாக்கிட்ட பேசி நேரா உங்க வீட்டுக்கே பொண்ணு கேட்டு வந்தேன். நான் உன்னைப் பத்தி தெரிஞ்சிக்க ரெண்டு மாசம் எடுத்துக்கிட்டேன், நீ என்னைப் பத்தி தெரிஞ்சிக்க எவ்ளோ நாள் வேணுமோ எடுத்துக்கோ, ஆனா நீ ஒரு நல்ல பதிலை சொல்லுவன்னு நான் எதிர்பார்க்குறேன் என்று கூறி முடித்தான் ஆதி.

சஞ்சனாவிற்கு தன்னிடம் ஆதி காதலை சொல்லுவது புரிந்தது ஆனால் அதை இவ்வளவு தெளிவாக எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் ஆதி சொன்னது இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளால் சட்டென ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. அவன்தான் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் யோசிக்க எடுத்து கொள் என்கிறானே, என்ன அவசரம் என்று நினைத்தவள், எனக்கு கொஞ்சம் டைம் வேணும், நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன் என்று சொல்ல,

ஆதி ஒரு தலையசைப்புடன் அதை ஏற்றுக்கொண்டான்.

பின்னர் ஹாலுக்கு வந்தவர்கள் சஞ்சனாவுக்கு யோசிக்க கால அவகாசம் தேவை என்றும் அதுவரை தான் காத்திருக்க  தயார் என்றும் கூற,

பெரியவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர்.

கிருஷ்ணவேணியும் பாலகுமாரும் அவர்களை வாசல் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தனர்.

திரும்பி வந்த பாலகுமார், சஞ்சனாவிடம் என்னடா நீ என்ன நினைக்குற என்று கேட்க,

எனக்கு சொல்ல தெரியலைண்ணா அவருக்கு என்னை புடிச்சிருக்கு ரெண்டு மாசம் டைம் எடுத்து என்னை பத்தி எல்லாம் தெரிஞ்ச பிறகு தான் அவர் இந்த கல்யாணமுடிவை எடுத்திருக்கார், அப்படி இருக்குறப்போ அவசரப்பட்டு நான் இந்த கல்யாணத்துல ஒரு முடிவு எடுக்க விரும்பல, அது மட்டுமில்லாம உங்களுக்கும் அம்மாவுக்கும் என் கல்யாணத்தை பத்தி நிறைய கனவு இருக்கும் நீங்களும் அவரைப் பத்தி விசாரிக்கணும்னு நினைப்பிங்க இல்ல, என்ன தான் பெரிய இடமா இருந்தாலும் உடனே சரின்னு சொல்லணும்னு அவங்களும் எதிர்பார்க்கல நம்மளும் ஏன் அவசரப்படணும்? என்று கேட்க,

சரி தான்மா நானும் எல்லா இடத்திலும் விசாரிக்கிறேன், உனக்கு இத பத்தி ஏதாவது தனிப்பட்ட முறையில விசாரிக்கணும்னா சொல்லு அண்ணன் அதையும் விசாரிச்சு சொல்றேன் என்று சொல்ல,

சம்மதமாக தலை அசைத்தாள் சஞ்சனா.

இங்கு காரில் சென்று கொண்டிருந்த ஆதியின் குடும்பமும் அதே நேரம் சஞ்சனாவின் குடும்பத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.

சும்மா சொல்லக்கூடாது ஆதி இவ்வளவு பெரிய சம்பந்தம் வீடு தேடி வருதுன்னு அவங்க ஒன்னும் பறக்கல,ரொம்போ நிதானமா தான் இருந்தாங்க, அந்த பொண்ணும்  ஒன்னும் பணத்துக்காக டக்குனு ஒத்துக்கலையே,  டைம் வேணும்னு கேட்டிருக்கு எனக்கு அதனாலயே அந்த பொண்ண ரொம்போ பிடிச்சிருக்கு, என்று சொல்ல, ஆதியின் பெரியப்பாவும் அதை ஆமோதிப்பது போல தலையசைத்தார்.

ஆதியோ  நான் தான் சொன்னேனே பெரியம்மா, சஞ்சனாவை உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்னு என்று கூற,

ஹ்ம்ம் சரி தான் அவளுக்கும் உன்னை பிடிச்சிருச்சுன்னா நாங்க கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திருவோம். எங்களுக்கு ஒரு பொறுப்பு முடிஞ்சிடும் என்று சொல்ல,

ஆதியோ என்ன பெரியம்மா கல்யாணம் முடிஞ்சதும் பொறுப்பு முடிஞ்சுடும்னு கை கழுவரதுலேயே குறியா இருக்கீங்க என்று கூற,

அட போடா படவா, இந்நேரத்துக்கு அண்ணன் அண்ணி இருந்திருந்தா உன் கல்யாணத்தை எப்பாடு பட்டாவது நடத்தியிருப்பாங்க, எங்களால உன்னை ஒரு அளவுக்கு மேல வற்புறுத்த முடியல இப்படி உனக்கு கல்யாணம் பண்ணாம தட்டிப்போகுதேன்னு நான் எவ்வளவு வருத்தத்துல இருந்தேன் தெரியுமா? இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு  என்று சொல்ல, அங்கு ஒரு சந்தோஷமான மனநிலை இருந்தது.

சஞ்சனா ஆதியை திருமண செய்துகொள்ள ஒத்துக்கொண்ட காரணம் என்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”.

நறுமுகை

1

No Responses

Write a response