New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-24

தங்களுடன் வர புறப்பட்ட மகன்களை வீட்டுலையே இருக்க சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினர் அனுராதாவும், காளிதாஸும். அதேசமயம் பாரதி அறுவைசிகிச்சை முடிந்து அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள். கண்விழித்து அவள் முன்போல் கத்தி அழுதாள் அது இப்போதிருக்கும் நிலைக்கு நல்லதல்ல என்று அவளை மயக்கத்திலேயே வைத்திருந்தனர்.

அனைவரும் அவர் அவர் சிந்தனையில் இருந்தனர். மருத்துவமனைக்கு வெளியில் பத்திரிக்கைகாரர்கள் எதாவது செய்தி கிடைக்காத? சம்மந்தப்பட்ட யாரையாவது பேட்டி எடுத்திடமாட்டோமா? என்று காத்திருந்தனர். இர்பான் அவர்கள் யாரும் மருத்துவமனைக்குள் வராத மாதிரி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தான்.

மருத்துவமனைக்கு வந்த காளிதாஸ், அனுராதா பாரதி இருக்கும் அறை விசாரித்துக்கொண்டு அங்கு சென்றனர். அறைக்கு வெளியில் ஆதி, சஞ்சனா, மாயா மற்றும் பாலகுமார் ஆளுக்கொரு புறம் சூனியத்தை வெறித்தவண்ணம் அமர்ந்திருந்தனர். காளிதாஸிற்கு தன் முன் கம்பீரமாக அமர்ந்து பேசிய ஆதியின் நினைவு வந்தது. தன் மனைவி சொன்னது எவ்வளவு சரி இது என்ன எளிதில் மறைந்துவிடக்கூடிய வலியா? என்று எண்ணிக்கொண்டிருந்தவரை அனுராதா அழைக்கும் குரல் நினைவுக்கு திருப்பியது.

வாங்க போகலாம் என்று அனுராதா அழைக்க அவருடன் சென்று ஆதி அருகில் நின்றார் காளிதாஸ். யாரோ அருகில் வரும் அரவம் கேட்டு திரும்பிய ஆதி அங்கு நிச்சயமாக காளிதாஸை எதிர்பார்க்கவில்லை. ஒருநிமிடம் தான் தன்னை சுதாரித்துக்கொண்டவன்,

ஹலோ, சார் எப்படி இருக்கீங்க? என்ன ஹாஸ்பிடல் வரைக்கும் யாருக்கும் உடம்பு சரியில்லையா?

உங்களை பார்க்க தான் வந்தோம் ஆதி. இப்ப பாரதி எப்படி இருக்க?

சஞ்சானவிற்கு அவரை அடையாளம் தெரிந்தது. இவரு எதுக்கு இங்க வந்திருக்காரு என்று யோசித்துக்கொண்டிருந்தவள் அவர் பாரதி பற்றி கேட்கவும் துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்களா? என்று தவித்துப்போனாள். பாலகுமாருக்கும், மாயாவிற்கும் யாரென்று தெரியாததால் அவர்கள் ஒதுங்கியே இருந்தனர்.

ஆதி என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்க, சஞ்சனா அருகில் சென்ற அனுராதா,

நான் அவரோட மனைவி, நியூஸ் பார்த்துட்டு ரொம்போ மனசுக்கு கஷ்டம்ம இருந்துச்சு, இந்த சமயத்துல யாரு இல்லைனு நீங்க நினைச்சுடக்கூடாது இல்ல அதுதான் பார்த்துட்டு போகலானு வந்தோம் என்று தணிவான குரலில் கூறினார்.

தனது சொந்த அண்ணி வந்து ஒரு முறை கூட பார்க்கவில்லை. நெருங்கிய சொந்தம் இனி உங்கள் உறவே வேண்டாம் என்று சென்றுவிட்டனர். யாரென்றே தெரியாத இவர்கள் நாங்க இருக்கோனு வந்திருக்காங்க இதுதான் வாழ்க்கை போல என்று நினைத்த சஞ்சனா, அனுராதாவிடம் நீங்க இவ்வளோ தூரம் வந்தது எங்களுக்கு ஆறுதலாயிருக்கு. பாரதி இருக்க, இன்னும் ரெண்டு நாளைக்கு மயக்கத்துலதான் வைக்கனுனு டாக்டர் சொல்லிட்டாங்க அப்படியே இருக்க என்று கூறும்போது சஞ்சனா கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்ட அனுராதா எல்லாம் சரியாகும் இதுவும் கடந்து போகும் மனசு விட்டுடாதீங்க என்று சமாதானபடுத்தினார்.

அப்போது அங்குவந்த இர்பான், காளிதாஸை பார்த்து ஹலோ சார், நீங்க எங்க இங்க என்று கேட்டான்.

ஆதி என்னோட நண்பர் பார்த்துட்டு போகலானு வந்தேன். நீங்கதான் இந்த கேஸ் ஹேண்டில் பண்றீங்களா?

ஆமா சார், சம்பவம் நடந்த ஸ்கூல் என்னோட லிமிட்குள்ளதான் வருது.

கேஸ் ஸ்டேட்டஸ் என்ன இர்பான்,

காளிதாஸ் அப்படி கேட்கவும் சொல்லுவதா, வேண்டாமா என்று இர்பான் தயங்கி ஆதியை பார்த்தான்.

அவன் தயக்கம் புரிந்து ஆதியிடம் திரும்பிய காளிதாஸ் உங்களுக்கு ஓகேனா இந்த கேஸ்ஸை நான் நடத்தலாமா?

ஆதிக்கு, காளிதாஸின் திறமை தெரியும், இவர்தான் எங்கள் கேஸ்ஸை எடுக்க வேண்டும் என்று பலர் காத்திருக்கிறார்கள். அப்படியிருக்க தானாக வந்து தோள்கொடுக்க நினைக்கும் அவர் தன்மை அவனுக்கு பிடித்திருந்தது எனவே அவர் கேஸ்ஸை நடத்த சம்மதம் கூறினான்.

இர்பான் கேஸ் பற்றிய விவரங்களை காளிதாஸிடம் கூறினான். சார், பாரதி இன்னும் பதில் சொல்ற நிலையில இல்லை. மாயா சொன்னது வெச்சுதான் முதல் கட்ட விசாரணை நடத்தினோம், இப்ப மாயா பெட்டெர்ரா இருக்காங்க அவங்க கிட்ட மேலும் சில தகவல் கேட்கத்தான் வந்தேன்.

சரி இங்க வேண்டாம் கான்டீன் போய் பேசலாம் என்று கூறி மாயாவையும் அழைத்துக்கொண்டு சென்றனர்.

அனுராதா அங்கு சஞ்சனாவுடனே அமர்ந்துகொண்டார். கான்டீன் சென்று இடம் பார்த்து அமர்ந்தவர்கள் கேஸ் பற்றி மாயாவிடம் கேட்க தொடங்கினர். எப்போது பாரதிக்கு இப்படியானது என்று மாயா அறிந்தாலோ அந்த நிமிடம் முதல் பாரதி கடத்தப்பட்டதை மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்திருந்தாள். இர்பான் கேட்க தொடங்கவும் சார் அன்னைக்கு சொன்னதுதான் அவங்க ஆம்னி வைட் கலர் கார்லதான் வந்தாங்க, அதுல இருந்த எல்லாரும் வேலை செய்றவங்க, அதாவது கயிலி கட்டி, துண்டு போட்டிருந்தாங்க கட்டட வேலை, இல்ல எதாவது தின கூலி வேலை செய்றவங்க மாதிரி இருந்தாங்க. பேசிக்கிட்டது கண்டிப்பா சென்னை பாஷை தான். என்ன தள்ளிவிடுறப்ப அவ வேண்டாம் சமாளிக்க முடியாதுனு சொன்னாங்க, வேற எதுவும் எனக்கு நியாபகம் இல்லை. கார் நம்பர் எல்லாம் நான் நோட் பண்ணல.

மாயா, நீங்க சொன்ன இந்த அடையாளம் வெச்சு கண்டிப்பா நான் சுற்று வட்டாரத்துல விசாரிக்குற, அவனுங்கள திரும்ப பார்த்த உங்கனால அடையாளம் காட்ட முடியுமா?

கண்டிப்பா சார் என்னால அடையாளம் காட்ட முடியும். சரி சீக்கிரம் அவனுங்கள பிடிக்குற அந்த மிருங்கங்களை வேட்டையாடுனதான் எனக்கு நிம்மதிய இருக்கும் என்று கோவத்தோட சொன்ன இர்பான் இருக்கும் இடம் கருதி தன்னை நிலைப்படுத்திக்கொண்டான்.

அதன்பின் காளிதாஸிடம் சார், கேஸ் பைல் உங்க ஆபீஸ்க்கு அனுப்பிடுற என்று கூறி விடைபெற்றான்.

திரும்பி வரும்போது மாயா காளிதாஸிடம், சார் கேஸ் கோர்ட்க்கு வந்த பாரதிய எல்லார் முன்னாடியும் என்ன நடந்துச்சுனு சொல்ல சொல்லுவீங்களா?

மாஜிஸ்ட்ரேட் முன்னாடி பாரதி நடந்ததை சொன்னா போதும், ஏற்கனவே இர்பான் மெடிக்கல் ரிப்போர்ட், கொஞ்சம் சாம்பிள்ஸ் எல்லா கிடைச்சு இருக்குனு டாக்குமெண்ட் பண்ணியிருக்காரு. சந்தேகத்தின் பேருல யாரையாவது அரெஸ்ட் பண்ண நீங்களும், பாரதியும் ஐடென்டிபிகேஷன்க்கு போகனும்.

சார் குற்றவாளிகளுக்கு ஜாமின் எல்லா கிடைக்காது இல்ல?

POCSO (Protection of Children from Sexual Offenses Act) ஆக்ட்படி ஜாமின் கிடைக்கும், ஆனா அதேசமயம் கேஸ் செயல்முறை பாரதிய முதன்மையா வெச்சு அவளோட மனநிலையை கருத்துல கொண்டுதான் நடத்தப்படும். பாரதிக்கு மயக்கம் தெளிஞ்சதும் சைல்ட் வெல்ஃபேர் கமிட்டில இருந்து ஒர்க்கர் வருவாங்க அவங்க போலீஸ், கோர்ட் மற்றும் பேமிலியோட ஒர்க் பண்ணுவாங்க. பாரதியோட மனநிலையை கவனிச்சுக்குற பொறுப்பு அவங்களோடது.

இந்த மாதிரி மிருகங்களுக்கு எதுக்கு சார் ஜாமின்.

என்ன செய்யம்மா, இன்னும் பெண்ணிற்கு எதிரான வன்கொடுமைகளின் வலியையும், வேதனையையும் சமூகம் முழுசா உணரல. நம்ம வீட்டு பொண்ணு பத்திரமா இருக்க வரைக்கும் போதுங்குற எண்ணம்தான் இருக்கு.

சார், சட்டத்துல உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இந்த குற்றவாளிகள் தப்பிக்கவே கூடாது, இன்னைக்கு ஸ்டேட் மீட்ல சாம்பியன் ஆகவேண்டிய பாரதிய இந்த நிலைக்கு தள்ளுனவங்கள சும்மாவே விடக்கூடாது.

நிச்சயமா, அவனுங்களை அடையாளம் மட்டும் காட்டு அவனுங்களுக்கான விதியை நான் முடிவு பண்றேன் என்று ஆவேசத்தோடு கூறினார் காளிதாஸ்.

அதன்பின் சிறிதுநேரம் ஆதியிடம் பேசிவிட்டு அவர்கள் கிளம்பினர்.

இறுதினங்கள் கழித்து பாரதி மயக்கத்தில் இருந்து கண் விழித்தாள். ஆழ்ந்த மயக்கம் அவளை அமைதி படுத்தியிருந்தது. அமைதியாக அனைவரையும் பார்த்தவள் சஞ்சனாவை பார்த்ததும் கை நீட்டினாள். கைபிடித்து அவள் அருகில் அமர்ந்தவள் மகள் தலையை வாஞ்சையோடு கோதிவிட்டு முத்தமிட்டாள்.

ரதிம்மா இப்ப எப்படிடா இருக்கு?

பயமா இருக்கும்மா, என்னைவிட்டு எங்கையும் போகாதீங்க என்று அழும் குரலில் கூறினாள்.

பாரதி முன்னாடி யாரு அழுக கூடாது என்று முன்னரே முடிவு செய்திருந்தனர், எனவே தன்னை சமாளித்து, ரதிம்மா அம்மா உன்னவிட்டு எங்கயும் போக மாட்ட நீ தைரியமா இரு. என்னோட பாரதிக்கு எதுக்கு பயம் வரக்கூடாது சரியா?

சரி என்பதாக தலையசைத்த பாரதி அன்னை கையை விடாமலே தூங்க தொடங்கினாள்.

எப்படி இருந்த பொண்ணு ஏன் இந்த நிலைமை என்று பாலகுமாருக்கு ஆற்றாமையாக இருந்தது. ஆதியும், சஞ்சனாவும் என்ன நடந்தாலும் மகளை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று உறுதியோடு இருந்தனர்.

அதேநாள் குற்றவாளிகளை கைது செய்துவிட்டதாக இர்பானிடம் இருந்து செய்தி வந்தது. பாரதி இன்னும் மருத்துவமனையில் இருப்பதால் மாயா மட்டும் காளிதாஸ் உடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றாள். ஒன்றுக்கு இருமுறை பார்த்தவள், அவர்கள்தான் பாரதியை கடத்தியது என்று உறுதி செய்தாள்.

பாரதி வாக்குமூலம் கொடுக்கவேண்டும், அது அவளை மேலும் பாதிக்குமோ என்று அனைவரும் கவலையோடு இருந்தனர். அதேசமயம் காளிதாஸை இந்த கேஸ்ஸில் இருந்து விலகிக்கொள்ள சொல்லி ஒரு தூது வந்தது.

தூது அனுப்பியது யார்? இனி நடக்கப்போவது என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்.

-நறுமுகை

17

No Responses

Write a response