New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-19

சஞ்சனா நடந்த எதையும் அவள் அண்ணனிடமும் அம்மாவிடமும் சொல்லவில்லை வீட்டை விட்டு வந்துவிட்டேன் இங்கேதான் தங்க போகிறேன் என்று சொன்னதும் ரேணுகா தான் ரகளை செய்தாள், சஞ்சனா மாதா மாதம் பணம் கொடுப்பதாக சொல்லவும்தான் ரேணுகா அடங்கினாள். பாலகுமாருக்கும், கிருஷ்ணவேணிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. தங்கை எதுவும் சொல்லாதபோது ஆதியிடம் போய் கேட்டு தெரிந்துகொள்ள பாலகுமாருக்கு மனம் இல்லை. கிருஷ்ணவேணி தனியாக அழுது கரைந்தார்.

இரு நாட்கள் கழித்து ஆதி பாலகுமாரை அவனது அலுவலகத்தில் சந்திக்க  வந்தான். 2 நாட்களில் 20 நாள் பட்டினி கிடந்தது போல ஆளே வாடிபோய் தெரிந்தான். சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்தனர், பின்னர் மெதுவாக ஆதி பேச தொடங்கினான். மன்னிச்சுடுங்க மச்சான் இப்படி ஒரு நிலைமை வருனு நினைக்கல என்னோட தப்புதான், கொஞ்சநாள் அவங்க அங்க இருக்கட்டும் இந்த பிரச்சனையை சரிசெஞ்சு நானே கூட்டிட்டு போய்டுற அதுவரைக்கும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க.

மாப்பிள்ளை அவ எப்பவும் என் தங்கச்சிதான், அவங்களை நான் பார்த்துகிறேன் நீங்க உங்கள பார்த்துக்கோங்க சாப்பிடாம உடம்பை கெடுத்துக்காதீங்க என்று சொல்ல சரி என்று தலையசைத்தவன் அங்கிருந்து வெளியேறினான்.

ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருந்த இவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏன் இந்த பிரிவு என்று பாலகுமாருக்கு புரியவில்லை. மகளை பார்க்கவென்று வெளிநாடு சென்றுயிருந்த ஆதியின் பெரியம்மா, பெரியப்பா விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போயினர். இதை கேள்விப்பட்டபின் அவர்களால் அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை எனவே ஒரே மாதத்தில் திரும்பி வந்தனர். கணவன் மனைவினா அப்படி இருக்கனுனு தங்கள் மகளுக்கு ஆதி சஞ்சனாவை  உதாரணம் சொல்லிக்கொண்டிருந்த ஆதியின் பெரியம்மா, பெரியப்பாவிற்கு இந்த விஷயம் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.

இந்தியா வந்ததும் ஆதியின் பெரியம்மா கற்பகம் சஞ்சனாவிற்கு அழைத்து பேசினார். அவள் என்ன நடந்தது என்று எதுவும் சொல்லவில்லை ஆதியும் அப்படியே மௌனம் காத்தான். குமரவேல் (ஆதியின் பெரியப்பா) ஆதி, சஞ்சனா, சஞ்சனா அம்மா, அண்ணன் மற்றும் மாயா அனைவரையும் அவர் வீட்டிற்கு உடனடியாக வர சொன்னார். பத்து நாட்கள் கழித்து சஞ்சனாவை பார்த்தான் ஆதி வாடிய அவள் தோற்றம் அவனுக்கு வேதனையை கொடுத்தது, அவள் ஆதியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

குமரவேல் என்ன நடந்துச்சு இப்படி நீங்க சும்மாவே இருந்த என்ன அர்த்தம் என்று சற்று கோபத்துடன் கேட்டார். சிறிதுநேரம் யாரும் வாயை திறக்கவில்லை. யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை என்று உணர்ந்து மாயா அன்று நடந்தவைகளை முழுவதும் கூறி முடித்தாள். குமரவேலுக்கு ஆதியா இப்படி பேசியது அதுவும் சஞ்சனாவை என்று நம்பவே முடியவில்லை. பாலகுமாருக்கு ஆதி மீது அளவுகடந்த கோவம் வந்தது, கிருஷ்ணவேணி வந்த அழுகையை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.

ஆதி அருகில் சென்ற கற்பகம் நான் வளர்த்தவனாட நீ, உன்னையே உலகம்னு நினைச்சு இருந்த பொண்ண பார்த்து எப்படிடா அப்படிக்கேட்க மனசு வந்துச்சு. அவங்க பொண்ண காயப்படுத்தி அவங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சிருக்கியே அவங்களுக்கு என்ன பதில் சொல்ல போற, ஏன்டா ஆதி இப்படி பேசுன என்று கேட்டு அழுக தொடங்கினார். ஒரு பெண்ணாக அவரால் ஆதி கேட்ட கேள்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எல்லாம் கூட இருக்கவங்க உபதேசம் அதுதான் இந்த அளவுக்கு கொண்டுவந்திருக்கு என்றாள் மாயா.

கூட இருக்கவங்களா யாரை சொல்ற என்று கேட்டார் குமரவேல்.

சாருடைய அத்தை இருக்காங்கலே அன்னைக்கு என்முன்னாடியே அவ வீட்டை விட்டுப்போனதுதான் தப்பு நீ கேட்டது ஒன்னு தப்பு இல்லைனு ஏத்திவிட்டுட்டு இருந்தாங்க.

அத்தை…… யாரு மரகதமா?? என்று அதிர்ச்சியாக கேட்டார் கற்பகம்.

ஆமா என்பதாக தலையசைத்தான் ஆதி

அவ எங்க இதுல வந்த என்று கேட்டார் குமரவேல்

ஆதி அவர் ஒரு மாதத்திற்கு மேலாக அவர்கள் வீட்டில்தான் இருப்பதாக கூறி மரகதம் வந்த கதையை சொன்னான்.

இதை ஏன்டா எங்ககிட்ட முன்னாடியே சொல்லல அவ பேச்சை கேட்ட இப்படி ஒரு தப்ப பண்ணிட்டு வந்து நிக்குற. அவ உங்க கல்யாணத்தையே நிறுத்த பார்த்தவ என்று கற்பகம் சொல்ல அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர். அதுவரை எதுக்கும் அசையாமல் அமர்ந்திருந்த சஞ்சனா கூட இந்த விஷயம் கேட்டு கற்பகத்தை பார்ததாள், பாலகுமாருக்கு அவனுக்கு வந்த கடிதம் நினைவுக்கு வந்தது.

என்ன பெரியம்மா சொல்ரீங்க என்று ஆதி அதிர்ச்சி குறையாமல் கேட்க,

குமரவேல் ஆரம்பம் தொடங்கி நடந்த அனைத்தும் சொன்னார். இன்னைக்கு யாரோ என்னமோ சொன்னாங்கனு இப்படி பேசிட்டுவந்து நிக்குற. அன்னைக்கு உங்களுக்கு கல்யாணம் கூட ஆகாத நிலையில உன்மேல நம்பிக்கை வெச்சு எங்க உன்கிட்ட கேட்ட கூட அது தப்ப போய்டுமோனு என்கிட்ட வந்து கொடுத்த சஞ்சனா. அன்னைக்கு நீ அதிர்ஷ்டக்காரனு நினைச்ச இப்படி பண்ணிடையே என்று ஆதங்கத்தோடு சொன்னார்.

ஆதிக்கு தலையை சுற்றியது, தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவன் முன் மரகதம் மார்பிங் பண்ணி அனுப்பிய படங்கள் கடிதம் அவர் எழுதிக்கொடுத்த மன்னிப்பு கடிதம் அனைத்தையும் வைத்தார் குமரவேல். அந்த படங்களை பார்த்த ஆதிக்கு அருவருப்பாக இருந்தது இதை பார்த்தும் எப்படி தன்னை ஒருவார்த்தை கேட்காமல் இருந்தால் அப்படினா நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்க. எத்தனை பேர்கூட பேசினாலும் என்னிடத்தை யாரும் தொடமுடியாதுனு எனக்கு ஏன் புரியாம போச்சு. இனி என்ன செய்ய என்று அவன் குழம்பி போக

குமரவேல் சஞ்சனாவிடம் அம்மாடி அவன் செஞ்சது தப்புதான் மரகதம் உள்ள புகுந்து இவ்வளோ குழப்பம் பண்ணிட்டா நீ பெரிய மனசுப்பண்ணி இவனை மன்னிக்க கூடாதா என்று இறங்கிய குரலில் கேட்டார்.

ஆதி இதுவரைக்கும் சஞ்சனாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அவனுக்கு தெரியும் அவன் செய்த தவறுக்கு மன்னிப்பே கிடையாது என்று. அனைவரும் சஞ்சனா பதிலுக்காக காத்திருக்க குமரவேலை நேராக பார்த்து பேச தொடங்கினாள்.

மாமா நான் இங்க வந்தது என்ன நடந்துச்சு ஏன் நடந்துச்சுனு தெரிஞ்சுக்க இல்லை. உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் சொல்லிட்டு போகத்தான், இனி சஞ்சனா வாழ்க்கையில மிஸ்டர். ஆதித்யன் இல்லை. அவர் பாரதிக்கு அப்பா அந்த உரிமைல நான் குறுக்க வரமாட்டேன் ஆனா இனி சேர்ந்து வாழ்க்கைங்குறது நடக்காத ஒன்று எனக்கு அவர்கிட்ட இருந்து டைவோர்ஸ் வேணும் என்று பிசிறில்லாமல் தெளிவாக கூறினாள்.

ஆதி துடித்துப்போய் நிமிர்ந்து பார்த்தான், அவள் மன்னிக்கவில்லை என்றாலும் தன்னோடு ஒரே வீட்டில் இருந்தால் போதும் அவள் முகம் பார்த்துக்கொண்டே மீதி வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் சஞ்சனா விவாகரத்து கேட்பாள் என்று ஆதியே எதிர்பார்க்காத போது மற்றவர்கள் நிலையை சொல்லவே வேண்டாம்.

கற்பகம் தான் சஞ்சனாவிடம் என்னம்மா இப்படி எல்லாம் பேசுற அவன் தெரியாம செஞ்சுட்டான் நீ மறந்து அவனை என்று கூறிக்கொண்டிருக்கும்போதே கைகாட்டி தடுத்தவள் அத்தை உங்கமேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு தயவுசெஞ்சு என்கிட்ட இனி இதுபற்றி பேசாதீங்க என்று உறுதியாக கூறினாள்.

கற்பகம் கிருஷ்ணவேணியிடம் நீங்க அமைதியாகவே இருக்கீங்களே அவளுக்கு சொல்ல கூடாத

என்னம்மா சொல்ல என் பொண்ணு நல்ல சாப்பிட்டு பத்து நாள் ஆச்சு இப்ப வரைக்கு என்ன நடந்துச்சுனு அவளா எங்ககிட்ட சொல்லல உங்க எல்லாரையும் நம்பித்தான் கல்யாணம் செஞ்சுகொடுத்தோம் இன்னைக்கு மனசு முழுக்க ரணத்தோட என்னோட பொண்ணு இருக்க அவளோட எந்த முடிவுக்கும் நான் குறுக்க நிற்க மாட்டேன் என்று தனது நிலையை கூறினார் கிருஷ்ணவேணி.

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சஞ்சனாவின் காலை பிடித்தான் ஆதி. சஞ்சனா உறைந்துபோனாள் யாருமே அவன் அதை செய்வான் என்று நினைக்கவேயில்லை.

சனா மன்னிப்புகேக்குற தகுதி கூட எனக்கு கிடையாது நீ என்ன ஏத்துக்க வேண்டாம் நம்ம வீட்டுக்கு வரவேண்டாம் ஆனா விவாகரத்து மட்டும் கேட்காத என்று இறைஞ்சும் குரலில் கேட்டான்.

அவனை அப்படி பார்க்கமுடியாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள் சஞ்சனா. அன்று பிரிந்துவந்தது ஆறு வருடங்கள் ஓடிவிட்டது.

இதெல்லாம் தெரிந்த மாயா வேண்டுமென்றுதான் ஆதி விவாகரத்து கேட்பதாக சஞ்சனாவிடம் நாடகம் நடத்தினால்.

ஆதியை ஏற்றுக்கொள்வாளா சஞ்சனா?? அறிய தொடர்ந்து வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”.

-நறுமுகை

6

No Responses

Write a response