New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-17

ஒருவாரம் வீட்டு நிலவரம் முழுதும் அறிந்துகொண்டு தனது மகளுக்கு அழைத்தார் மரகதம்.

என்னம்மா பணக்கார இடம் கிடைச்சதும் செட்டிலாயிட்டு என்ன மறந்துட்டபோல என்று எடுத்ததும் கேலிபேசினாள் மேனகா,

அடபோடி இவளே வேணுங்குறத சரியா தெரிஞ்சுக்கிட்டு உனக்கு சொல்லணும்னு கண்ணுல விளக்கெண்ணையை விட்டுகிட்டு சுத்திட்டு இருக்க இவயென்னமோ கேலி பேசுற என்று பொரிந்தார் மரகதம்.

என்னம்மா சும்மா தானே சொன்ன எதுக்கு இவ்வளோ பொங்குற

என்னத்த சொல்ல கல்யாணமாகி ஆறு வருஷம் ஆகப்போகுது குழந்தை ஸ்கூல் போற வயசு வந்துடுச்சு இன்னும் இதுங்க ரெண்டும் லவர்ஸ் மாதிரி கொஞ்சிகிட்டு சுத்திட்டு இருக்காங்க. அதுலயும் அந்த ஆதி எதுக்குனாலும் சனா, சனானு உயிரவிடுறான். இதுல அந்த மாயா பொண்ணு வேற அவ இஷ்டம்போல வர போற சொந்த வீடு மாதிரி.

அந்த மாயா தான் அவ வீட்டுக்கு போய்ட்டாளேம்மா.

ஆமா ஆன வாரத்துல ரெண்டு நாள் வந்துடுற. அந்த பாரதியும் அவகிட்டன ரொம்போ செல்லம்.

இப்ப அவங்க லவ் ஸ்டோரி சொல்லத்தான் எனக்கு கூபிட்டயா?

இல்ல மேனகா நீ நாளைல இருந்து அந்த சஞ்சனாவை வேவு பார்க்கனும். அவ வாழ்க்கையில இருக்க ஆம்பளைங்க யாருனு நம்ப தெரிஞ்சுக்கனும் ஒரு பேர் கிடைச்ச போதும்.

என்னம்மா சொல்ற சஞ்சனா ஆதியை ஏமாத்துறாளா!!

அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்ல. சஞ்சனா ஆதியைவிட வேற ஒருத்தன்கிட்ட நெருங்கி பழகுற ஆதியைவிட அவனுக்கு முக்கியத்துவம் தரானு ஆதியை நம்பவெச்ச போதும் நம்ப நினைக்குறது எல்லாம் நடக்கும்.

அது எப்படிம்மா??

மேனகா இந்த ஒருவாரத்துல நான் தெரிஞ்சுக்கிட்ட ஒரு முக்கியமான விசயம் ஆதிக்கு சஞ்சனா பாரதியை அதிகமா கொஞ்சுனாலே பிடிக்காது அப்படி இருக்கப்ப வெளியிலயிருந்து  ஒருத்தன் வந்த சும்மா இருப்பானா? நீ டெய்லி நைட் எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லு அதை எப்படி பயன்படுத்தனுனு நான் பார்த்துக்குறேன்.

செம ஐடியாம்மா நாளைல இருந்து எனக்கு தெரியாம அந்த சஞ்சனா எந்த வேலையையும் செய்யமுடியாது என்று கூறி போனை வைத்தாள்.

சில சமயம் நம்ம வாழ்க்கையில சாதாரணமா நடக்குற விஷயங்கள் கூட நம்மள அழிக்கனுன்னு நினைக்குறவங்களுக்கு பெரிய ஆயுதமாக மாறும். சஞ்சனா கல்லூரி விரிவுரையாளராக சேர்ந்து கொஞ்சநாள் இருக்கும் முதலாண்டில் லேட்டாக வந்து சேர்ந்தான் வாசு. தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்து வந்திருந்தான். சைக்காலஜிதான் படிக்கவேண்டும் என்று உறுதியோடு இருந்தவனை கட்டாயப்படுத்தி இன்ஜினியரிங் சேர்த்துவிட்டனர் பெற்றோர், அவர்களிடம் சண்டைபோட்டு பிடிவாதம் பிடித்து மூன்று மாதங்கள் கழித்து வந்து இளநிலை சைக்காலஜியில் சேர்ந்தான். என்னதான் படிக்கும் ஆர்வத்தில் வந்தாலும் அவனுக்கு இந்த நகரம், நுனிநாக்கு ஆங்கிலம் என்று அனைத்தும் பயமுறுத்தியது. அவன் ஆங்கில வழி கல்வி கற்றிருந்தாலும் இங்கு அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பது அவனுக்கு பாடங்களை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

மற்ற விரிவுரையாளர்களில் இருந்து மாறுபட்டு தோழமையோடு பழகும் சஞ்சனாவிடம் அவனது சந்தேகங்களை கேட்க தொடங்கினான். சஞ்சனாவும் அவனது ஆர்வத்தை பார்த்து அவனுக்கு வேண்டியவைகளை கல்லுரி நேரம் தாண்டி சொல்லித்தர தொடங்கினாள். வாசுவுடன் சேர்ந்து இன்னும் சில மாணவிகளும் சஞ்சனாவிடம் சிறப்பு வகுப்புகளில் கற்றுவந்தனர். உடன் பணி செய்பவர்களிடம் நல்லமுறையில் பழகும் சஞ்சனா யாரிடமும் நெருங்கி பழகமாட்டாள். ஒரு மாதம் பின்தொடர்ந்தும் மேனகாவிற்கு தேவைப்படுவதுபோல எந்த விசயமும் கிடைக்கவில்லை. அதற்காக அன்று மரகதத்திடம் திட்டுவாங்கிக்கொண்டிருந்தாள்.

என்ன என்னம்மா செய்ய சொல்ற அவ யார்கிட்டயும் அப்படி பழக்கறது இல்லை. காலேஜ் அது முடிஞ்ச வீடு எனக்கு தெரிஞ்சு அவ நல்ல சிரிச்சு பேசுறது அவ ஸ்டூடென்ட்ஸ் கிட்ட மட்டும்தான்.

ஸ்டூடென்ட்ஸ்னா அதுல ஆம்பள பசங்க இருக்காங்களா? என்று மரகதம் கேட்டார்.

ஹ்ம்ம் இருக்கான் ஒரு பையன் பேரு வாசு அவனுக்குத்தான் முதல்ல சஞ்சனா ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்ச.

இதை ஏண்டி முதல்லயே சொல்லல என்று இரைந்தார் மரகதம்

அம்மா அவன் அவளோட ஸ்டூடென்ட் சின்ன பையன் அவனை பத்தி தெரிஞ்சு நீ என்ன செய்யப்போற

போடி லூசு நமக்கு தேவை சஞ்சனா நெருக்கமா இருக்க ஒரு ஆள் அது சின்ன பையன இருந்த நமக்கென்ன ஒரு கேள்வி, ஒரு நிமிஷ கோவம், ஒரு தப்பான வார்த்தை போதும் அவங்கள பிரிக்குறதுக்கு. இந்த வாசு பையன பற்றி இன்னும் விஷயம் தெரிஞ்சிக்கிட்டு எனக்கு சொல்லு என் விளையாட்டை ஆரம்பிக்குற நேரம் வந்திடுச்சு.

தனக்கு தேவையான விஷயங்கள் கிடைச்சதும் வாசு பேரை வீட்டுக்குள் கொண்டுவர வழி தேடிக்கொண்டிருந்தார் மரகதம். அப்போது மாயா ஒருநாள் ஒரு புக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் சஞ்சனாவும், மாயாவும் மரகதம் முன்னாடியே பேச தொடங்கினர்.

மேடம் நீங்க கேட்ட புக் இதை வாங்குறதுக்குள்ள போது போதுனு ஆயிடுச்சு எதுக்கு மேடம் இந்த புக்.

சாரி மாயா இது வாசுக்கு, ரெண்டு மாசத்துல ஒரு நேஷனல் லெவல் செமினார் நடக்கபோகுது அதுல வாசு கலந்துக்க போறான் அதுக்குதான் இந்த புக். அவனுக்கு இன்னும் பயம் போகல அதுக்குதான் இதுல கலந்துக்க சொல்லி சொல்லியிருக்க.

ஒஹ்ஹஹ் வாசு எனக்கு நியாபகம் இருக்கு எப்படி சைக்காலஜி படிக்குறானு யோசிச்சுருக்க. ஒரு வார்த்தை பேசவே அவ்ளோ பயம்.

என்ன மாயா அப்படி சொல்லிட்ட ஹி இஸ் வெரி பிரில்லியனட். இந்த பீல்ட்ல டாப்ல வருவான் கொஞ்சம் சப்போர்ட் இருந்த போதும்.

அதான் நீங்க இருக்கீங்களே மேடம் உங்களமாதிரி சப்போர்ட் இருக்கே அவன் கண்டிப்பா ஷைன் பண்ணுவான்.

அதன்பின் அவர்கள் வேறு பேச்சுக்கு தாவினார்கள். மரகதம் பலத்த யோசனையில் இருந்தார் எப்படி ஆதியிடம் இதை கொண்டுபோவது மாயாவுக்கு தெரிந்திருக்கு என்றால் கண்டிப்பாக ஆதிக்கும் தெரிந்திருக்கும். வாசு சஞ்சனாவிற்கும் முக்கியமான ஆள் மாதிரி எப்படி காட்டுவது என்று மண்டையை உடைத்துக்கொண்டிருந்தார்.

அவருக்கென்று அந்த சந்தர்ப்பம் வாய்த்தது செமினார்க்கு தயாராக என்று வாசு சஞ்சனா வீட்டிற்கு மாலை வேளைகளில் வர தொடங்கினான்.

வாசுவின் வருகையை எப்படி பிரச்சனையாக மாற்றினார் மரகதம். அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்.

-நறுமுகை

4

No Responses

Write a response