New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-15

திருமணமாகி மூன்று மாதம் இருக்கும் ஆதியின் பெரியம்மா சஞ்சனாவை பார்க்க வந்திருந்தார். அவரை  ஆனந்தமாக வரவேற்று பேசிக்கொண்டிருந்தாள். அவர் ஏதோ சொல்லவந்து தயங்குவது போல இருந்தது. அவளாகவே அத்தை என்கிட்ட எதாவது சொல்லனுமா என்று கேட்டாள்.

அதுவந்து நீ என்ன தப்பா நினைச்சுக்க கூடாது மாமா கூட சின்ன பசங்க என்ன அவசரம்னு தான் சொன்னாரு ஆனா உங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கனுன்னுதான் கேட்கிறேன். நீ உன்னோட படிப்புக்காக குழந்தையை தள்ளி போட்டிருக்கீங்களா?

சஞ்சனா அவர்கள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போனாள். குழந்தையை தள்ளி போடவேண்டும் என்பது ஆதியின் ஆசை ஆனால் அத்தை தனது படிப்புக்காக என்று நினைத்துவிட்டார்களே அவரிடம் இது ஆதியின் எண்ணம் என்று சொல்லவும் அவளுக்கு விருப்பம் இல்லை. எனவே அப்படியெல்லாம் இல்ல நாங்க குழந்தையை தள்ளி போடுற எண்ணத்துல எல்லாம் இல்லை என்று மட்டும் கூறினாள்.

அப்படினா சரி எங்க நாலஞ்சு வருஷம் தள்ளி போட்டுடுவீங்களோனு பயந்துட்டேன் என்று ஒரு நிம்மதியோடு கூறியவர். ஒருவருசம் கழிச்சுக்கூட பிளான் பண்ணுங்க ஒன்னு தப்பில்லை ஒரேடியா தள்ளிட வேண்டானு தான் சொல்லவந்த நீ ஒன்னு தப்ப நினைச்சுகாத.

என்ன அத்தை இதை கேட்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. சரி இருந்து மதியம் சாப்பிட்டுட்டுதான் போகனும். 

கண்டிப்பா உன்னோட சமையல் பெருமை தான் ஆதி அடிக்கடி சொல்லிட்டே இருக்கான் கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போவேன் என்று கூறி அவரும் சஞ்சனாவுடன் சமையல் அறைக்குள் நுழைந்தார்.

அன்று மாலை தாமதமாக வந்தான் ஆதி. அவனுக்கு காபியும், ஸ்நாக்ஸ்ஸும் கொடுத்தவள் தயா உங்களுக்கு டையர்டா இல்லைனா ஒரு டிரைவ் போகலாமா?

ஓ எஸ் போகலாம் லாங்டே எனக்கு ரிலாக்ஸ் பண்ணனும் என்று கூறியவன் உடை மாற்றிக்கொண்டு சஞ்சனாவுடன் கிளம்பினான். 

கிளம்பி அமைதியாக வந்தவளை பார்த்தவன் சிட்டி அவுட்டர் செல்லும் வரைக்கும் எதுவும் பேசவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் சென்றவன் கடற்கரையில் சென்று நிறுத்தினான். 

என்னப்பா இங்க நிறுத்தீட்டிங்க?

சனா உனக்கு என்கிட்ட என்னவோ பேசனும், டிரைவ் பண்ணிட்டே பேசுறதைவிட இப்படி நடந்துக்கிட்டே பேசலாம். 

எப்படித்தான் மனசுல இருக்கறதை கண்டுபிடிப்பீங்களோ  என்று கூறி அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

அவள் குழந்தை தனத்தில் சிரித்தவன், நீ என்ன நினைக்குறனு எனக்கு தெரியாம யாருக்கு தெரியும் என்று அவளிடமே திருப்பி கேட்டான்.

அவனை பார்த்து புன்னகைத்தவள் அப்ப நான் என்ன பேசவந்திருக்கனு உங்களுக்கு தெரிஞ்சு இருக்கனும். 

ஹ்ம்ம் மேடம் இன்னைக்கு லஞ்ச் கொண்டுவரல, பெரியம்மா வந்துட்டு போயிருக்காங்க. அப்படியெல்லாம் பெரியப்பாவ விட்டுட்டு அவங்க எங்கயும் சாப்பிட மாட்டாங்க. தனியா வந்து இருந்து சாப்பிட்டு இருக்காங்கன்னா……. என்று சிறிது யோசித்தவன் நீ குழந்தை விஷயம் பேசவந்திருக்க சரியா என்றவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள் சஞ்சனா.

என்ன சனா சரிதானே?

சரிதான் நிஜமா!!! எப்படிங்க கண்டுபிடிச்சீங்க என்று கேட்டவளை இடுப்பில் கைப்போட்டு தன்னுருகில் இழுத்தவன் உன்னோட மனசுல நான்தானே இருக்க அப்ப நீ மனசுல நினைக்குறது எனக்கு எப்படி தெரியாம போகும். ஆனா எனக்கு ஒண்ணுதான் புரியல இப்ப பேபி வேண்டானு நம்ப முடிவு பண்ணதுதானே அப்புறம் அதைபற்றி பேச என்ன இருக்கு?

தயா நீங்க இப்ப பேபி வேண்டானு சொன்னீங்க நான் சரினு ஒத்துக்கிட்ட இப்ப எனக்கு நீங்க வேண்டானு சொன்னதுக்கு காரணம் வேணும். 

காரணம் எல்லாம் ஒன்னு இல்லை இப்ப என்ன அவசரம் நீயும் படிச்சு முடி அப்புறம் யோசிக்கலாம்.

நான் படிச்சு முடிக்க 5 இயர்ஸ் ஆகும். அது அதுக்கப்புறமும் யோசிக்கலானு சொல்றீங்க எனக்கு இப்ப காரணம் தெரிஞ்சே ஆகனும்.

பாரு பாரு இதுக்குதான் சொல்றேன் வேண்டான்னு. நான் சொன்ன சரினு கேட்டுப்ப பேபி விஷயம்னு அடம்பிடிக்குற. இப்பவே இப்படி நாளைக்கு பேபி வந்துட்ட என்ன சுத்தமா மறந்துடுவ. ஆதிக்கு வைப்ங்குற எண்ணம் சுத்தமா மாறி அந்த குழந்தைக்கு அம்மாவ மட்டுந்தான் இருப்ப. உன்னோட அன்பையும், பாசத்தையும், கவனிப்பையும் ஷேர் பண்ணிக்க நான் இன்னும் ரெடியா இல்லை  என்று படபடவென்று சொல்லி முடித்தான்.

ஒரு நிமிடம் அவன் சொன்னது கேட்டு பேச மறந்து நின்றவள், பின்னர் சிரிக்க தொடங்கினாள். பெரிய பிசினஸ் மேன், பல பிசினெஸ்ஸை தனியாக சமாளிப்பவன் இப்படி குழந்தை தனமாக காரணம் சொல்வது அவளுக்கு சிரிப்பாக இருந்தது. 

இப்ப எதுக்கு சிரிக்குற என்று அவன் கோவமாக கேட்க, தனது சிரிப்பை நிறுத்தியவள் அவன் அருகில் சென்று அவன் தோள்களில் கைபோட்டு கண்களுக்குள் ஆழமாக பார்த்தாள். அவன் கண்களில் அவளுக்கான காதல் இருந்தது. அந்த காதலில் கட்டுண்டு சிறிதுநேரம் அமைதியாக நின்றவள் பின்னர் பேச தொடங்கினாள்.

தயா குழந்தை வந்த உங்களுக்கு கிடைக்குற அன்பு, பாசம், காதல் கிடைக்காதுனு யாரு சொன்ன. எனக்கு என்னோட ஸ்டடீஸ் எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கு தெரியும் ஆனா என்னைகாவது நம்ம டைம்ல அதை கொண்டுவந்திருக்கனா. பேபிக்கான அன்புங்குறது வேற உங்க மேல இருக்க காதல் வேற. அதுமட்டும் இல்ல இப்ப நான் மட்டும் இருக்க பேபி வந்த நாளைக்கு அதுவும் உங்க மேல ரொம்போ பாசமா, அன்பா இருக்கும். என்கிட்ட கூட காரணம் சொல்லி நீங்க லேட்டா வரலாம் அதெல்லாம் உங்க பேபி கிட்ட நடக்காது. ஒன்னுக்கு ரெண்டு பேர் உங்களுக்காக இருப்போம். யாருக்கு தெரியும் நாளைக்கு பேபி கூட சேந்துக்கிட்டு என்ன கழட்டிவிட்டுடுவீங்களோ என்னவோ என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.  

என்னடி கிண்டலா? நீதான் எல்லாமேனு இருக்க.

எனக்கு தெரியும் தயா. பேபி வந்தாலும் நம்பத்தான் எல்லாமேனு இருக்கும். கண்டிப்பா நம்ம வாழ்க்கையில அது இன்னும் சந்தோசத்தை தான் கொண்டுவரும். நீங்க யோசிங்க தயா உங்களுக்கு வேண்டான்னு தோணுச்சுனா எனக்கு ஓகே தான் எதுக்காகவும் உங்ககிட்ட சண்டையெல்லாம் போடமாட்டேன் என்று கூறியவள் அவனை அணைத்து மார்பில் சாய்ந்துகொண்டாள், அவளை எல்லையில்லா காதலோடு அணைத்து கொண்டான். 

அதற்கு பிறகு இருவரும் அதை பற்றி பேசிக்கொள்ளவில்லை. முதல் வருட திருமணம் நாள் அன்று பெரியவர்களுக்கு குட் நியூஸ் சொன்னார்கள். கிருஷ்ணவேணி வாரத்தில் பாதி நாள் மகளோடே இருந்து கவனித்து கொண்டார். எதுவும் அவள் படிப்பை பாதிக்காமல் பார்த்துக்கொண்டான் ஆதி. அவளுக்கென்று அவனது நம்பிக்கையான டிரைவரை கல்லூரியிலே இருந்து அழைத்து வருமாறு ஏற்பாடு செய்தான். நாட்கள் இனிமையாக சென்றது.

சஞ்சனாவிற்கு 6 மாதம் இருக்கும்போது ஒரு நாள் நள்ளிரவு தாண்டி ஆதிக்கு போன் வந்தது. முதலில் சஞ்சனா தான் சத்தம் கேட்டு விழித்தாள். அவள் ஆதியை எழுப்பி போன் அடிப்பதை சொல்ல எடுத்துப்பார்த்தவன் குழப்பத்தோடு போனை எடுத்தான். அந்த பக்கம் சொன்ன விஷயம் கேட்டு பதறியவன் நான் இப்பவே வரேன் என்று கூறி போனை வைத்தான்.

என்ன ஆச்சுப்பா? ஏதும் பிரச்சனையா?

மேனேஜர் அங்கிள்க்கு சீரியஸ் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க மாயாதான் பேசுனது என்று கூறிவிட்டு உடைமாற்ற சென்றான். தானும் வருவதாக சஞ்சனா சொல்ல, இந்த நேரத்துல என்று யோசித்தான் ஆதி.

தயா நீங்க இல்லாம தனியா இருக்கவும் எனக்கு ஒரு மாதிரி இருக்கும். மாயாக்கும் இப்ப நான் கூட இருந்த பெட்டெர்ரா இருக்கும் என்றாள். அவள் கூறுவது சரி என்று தோன்ற அவளையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான். 

அவர்கள் விசாரித்துக்கொண்டு ஐ.சி.யு அருகில் செல்லவும் மாயா டாக்டர் கூறுவது கேட்டு மயங்கிவிழுகவும் சரியாக இருந்தது. வேகமாக சென்று ஆதி அவளை தாங்கிப்பிடித்தான். என்னவென்பது போல அவன் டாக்டரை பார்க்க அவர் மஹேந்திரனை காப்பாற்ற முடியவில்லை என்று கூற ஆதிக்கு சஞ்சனாவிற்கும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. 

அதன்பின் மாயாவுடனே இருந்து அனைத்து காரியங்களையும் செய்தான் ஆதி. மயங்கி விழுந்த மாயா கண்விழித்த பின் அழாமல் அப்படியே உறைந்து போயிருந்தாள். சஞ்சனா அவளுடனே இருந்தாள். அனைத்தும் முடித்து உறவினர்கள் கிளம்ப தொடங்கினர். நெருங்கிய உறவுகள் மட்டும் யாரு மாயாவை பார்த்துக்கொள்வது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

அந்த பொண்ணையெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு போய் வெச்சுருக்க முடியாதுப்பா ஆம்பளை மாதிரி துணி போட்டுக்கிட்டு ஆம்பளை பசங்களோட சுத்திவருது, விளையாட போகுது, வீட்டுல எந்த வேலையும் செய்ய தெரியாது அவங்க அப்பா வேலைக்கு ஆள் தான் வெச்சு இருந்தார். இதெல்லாம் நம்மகிட்ட அடங்கி இருக்காது, அதுஇல்லாம பெருசா சொத்து எது இல்லை, இந்த வீட்டு பேருல கூட கடன் இருக்குனு அவங்க முதலாளி சொன்னாரு நமக்கு எதுக்கு வம்பு அது என்னவோ பண்ணிக்கட்டும் என்று கூறி கிளம்பினர். செல்லும் அவர்களை தடுக்காமல் அமைதியாக இருந்தாள் மாயா.

அனைவரும் கிளம்பிய பிறகு மாயாவிடம் வந்தனர் ஆதியும், சஞ்சனாவும். அவர்களை பார்த்ததும் எழுந்துதவள் சார் இந்த வீடு மேல அப்பா கடன் வாங்குனது எனக்கு தெரியாது நான் கொஞ்ச கொஞ்சமா அடைச்சிடுற டைம் மட்டும் கொடுங்க என்று கைகூப்பினாள்.

அவள் கை பிடித்து தடுத்தான் ஆதி, மாயா அங்கிள் எந்த கடனும் வாங்கல. உன்னோட சொந்தக்காரங்க உனக்காக உன்ன பாத்துக்கனுன்னு நினைச்சு அப்படி ஒரு பொய் சொன்ன நான் சந்தேகப்பட்ட மாதிரி யாரும் உன்ன பாத்துக்க ரெடியா இல்லை. அதுவும் நல்லதுதான் முன்னாடியே அவங்க எப்படினு தெரிஞ்சிடுச்சு. சரி கிளம்பு போகலாம் என்றவனை குழப்பமாக பார்த்தாள் மாயா.

எங்க சார் கிளம்ப சொல்றீங்க?

நம்ம வீட்டுக்கு, உன்ன இங்க தனியா விட்டுட்டு எங்கனால்ல நிம்மதிய இருக்க முடியாது. ஸ்டடீஸ் முடியற வரைக்கும் எங்ககூட இரு, எனக்கு இந்த டைம்ல கூட ஒரு ஆள் இருந்த நல்லாத்தான் இருக்கும். கோர்ஸ் முடிச்சுட்டு நீ என்னசெய்யனு நினைக்குறையோ செய் என்றாள்  சஞ்சனா.

மாயாவிற்கு தன்னால் இந்த வீட்டில் தனியாக இருக்க முடியாது என்று புரிந்தது இருந்தாலும் அவள் தயங்க

என்ன மாயா உனக்கு ஒரு சிஸ்டர் இருந்து கூப்பிட்டு இருந்த போயிருக்க மாட்டியா? என்று சஞ்சனா கூற அதுவரை அழுகாமலே இருந்தவள் உடைந்துபோய் சஞ்சனாவை கட்டிக்கொண்டு அழுதாள். தன் உறவுகள் தன்னை உதறிவிட்டு சென்றுவிட இனி என்னசெய்ய போகிறோம் என்ற பயம் இருந்தது. தன் தந்தையின் மேல் இருக்கும் மாரியாதைக்காகவும், அன்பிற்காகவும் தன்னை பார்த்துக்கொள்ள நினைக்கும் ஆதி சஞ்சனாவின் அன்பு அந்த சமயத்தில் அவளுக்கு மிகவும் தேவையாக இருந்தது.

வேண்டியவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்களோடு புறப்பட்டாள் மாயா. அப்போதிருந்து எப்போதும் சஞ்சனாவின் வயற்றில் கை வைத்து குழந்தையுடன் பேசுவது மாயாவிற்கு வாடிக்கை ஆனது. 

குழந்தை முதல்ல பேச ஆரம்பிக்கும்போதே மாயானுதான் கூப்பிடப்போகுது அம்மா, அப்பா எல்லாம் அப்புறம் தான் வரும் என்று கூறி கிண்டல் செய்வான். பாரதிக்கும் மாயாவிற்கும் அப்போதிருந்தே கண்ணுக்கு தெரியாத ஒரு பாண்டிங் இருந்தது. அது இன்றளவும் தொடர்கிறது. 

தெளிந்த நீரோடையாக சென்ற ஆதி-சஞ்சனா வாழ்வில் விரிசல் ஏற்படுத்தியது எது?  இல்லை யார்? அறிய தொடர்ந்து வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”.

-நறுமுகை 

10

No Responses

Write a response