New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-11

திருமணத்திற்கு இரு தினங்களே இருந்தது, மறுநாள் மாலை மண்டபத்திற்கு சென்றுவிடுவர். சஞ்சனா வீட்டிலும், ஆதி வீட்டிலும் உறவினர்கள் வந்து இறங்கினர். வீடு முழுக்க பேச்சும் சிரிப்புமாக இருந்தது. சஞ்சனாவிற்கு பார்லரில் இருந்து வந்து மருதாணி வைத்துகொண்டிருந்தனர். அவள் வயது உறவுக்கார பெண்கள் சுற்றி அமர்ந்து கொண்டு சஞ்சனாவுடன் மாப்பிள்ளை பற்றி கேட்டு கேலி செய்துகொண்டிருந்தனர். பாலகுமார் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தான். ஆதி வீட்டிலும் ஆதி நண்பர்கள் அவனை கேலி செய்துகொண்டிருந்தனர். ஆதி பெரியப்பா, பெரியம்மா அனைவரையும் முடுக்கி வேலை வாங்கி கொண்டிருந்தனர். மகேந்திரனிடம் முக்கியமான வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தது, அவர் அந்த வேலைகைளை கவனித்து கொண்டிருந்தார்.

அன்று இரவு அனைவரிடமும் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சஞ்சனாவை கிருஷ்ணவேணி நேரமாகவே தூங்க சொன்னார், அப்பொழுதுதான் நாளை முகம் பளிச்சென்று இருக்கும் என்று கூறி அனுப்பிவைத்தார். திருமணம் பேச்சு தொடங்கியதும் தங்கைக்கு என்று எல்லா வசதிகளுடன் மேலே அறை ஒன்றை கட்டினான் பாலகுமார். புதிய அறை சஞ்சனாவிற்காக  என்று கட்டியது, எனவே வேறு யாரையும் அங்கு தங்கவிடவில்லை கிருஷ்ணவேணி, தற்போது அந்த அறையில் சஞ்சனா மட்டும் தனியாக இருந்தாள். இதுநாள் வரை அன்னையுடன் ஒரே அறையில் தான் தூங்குவாள் இன்றைக்கு இப்படி தனியாக இருக்கவும் அவளுக்கு தூக்கம் வரவில்லை. எனவே ஜன்னல் வழியே முழுநிலவை ரசிச்சுக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

தீடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது, மிகவும் மெதுவாக தட்டும் சத்தம், சரி கல்யாண வீடு நிறைய பேர் இருக்கிறார்கள் யாராவது எதாவது கேட்க வந்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு கதவை திறந்தவள் அங்கு நின்று கொண்டிருந்த ஆதியை நிச்சயமாக  எதிர்பார்க்கவில்லை. அவளது அறை மாடியில் இருந்தது ஆனால் கீழ் இருப்பவர்களாக பார்க்காமல் மாடிப்படி ஏறி வரமுடியாது, அப்படி இருக்க இவன் எப்படி வந்தான் என்று அவள் நினைத்து கொண்டிருக்க, ஆதி வேகமாக உள்ளே வந்து கதவை சாத்தினான்.

 கதவை தாளிடும் சத்தத்தில் நினைவுக்கு வந்தவள், ஆதி இங்க என்ன பண்றீங்க? எப்படி மேல வந்தீங்க?

என்ன கேள்வி இது உன்ன பார்க்கத்தான் வந்தேன். கீழ நிறைய பேர் இருக்காங்க, யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டான்னு பைப் பிடிச்சு மேலவந்துட்டேன் என்றவன் அறையை சுற்றி பார்த்து இதுதான் நம்ம ரூம்மா சூப்பரா இருக்கு என்று பாராட்டினான்.

பைப் பிடித்து வந்தேன் என்று சொன்னதை கேட்டு சஞ்சனாவிற்கு சிரிப்பு வந்தது. எவ்வளோ பெரிய பிசினெஸ் மேன், போனில் பேசுவதற்கு கூட அப்பாய்ண்மென்ட் வாங்க வேண்டும், இன்று தன்னை பார்க்க வருவதற்கு என்ன வேலையெல்லாம் செய்கிறான் என்று எண்ணி அவளுக்கு அவன்மீது காதல் கூடியது.

நாளைக்கு ஈவினிங் மண்டபத்துல என்ன பார்க்கத்தான் போறீங்க, இரண்டு நாள்ல உங்க கூடவே கூட்டிட்டு போயிடப்போறீங்க, அதுக்குள்ள இதெல்லாம் என்ன வேலை தயா.

அதெல்லாம் சரிதான் ஆனா இதுவும் ஒரு மாதிரி திரில்லிங்காதானே இருக்கு. காலேஜ் டேஸ்ல சைட் அடிச்சு இருக்க பட் லவ் அனுபவம் எல்லா கிடையாது, அதான் இப்படி யாருக்கு தெரியாம மீட் பண்றது எப்படி இருக்குனு பீல் பண்ணிபாக்கலானு வந்தேன்.

தயா உங்களுக்கு இந்த மாதிரி ஐடியா எல்லாம் வராது, உங்களுக்கு ஐடியா குடுத்தது யாரு?

அது எப்படி சனா கரெக்ட்டா கண்டுபிடிச்ச??

உங்கள எனக்கு தெரியும்ப்பா, சொல்லுங்க ஐடியா குடுத்த அறிவாளி யாரு?

சொன்ன திட்டக்கூடாது?

அவள் அவனை அமைதியாக பார்க்க,

மாயா என்றான் ஆதி.

மாயாவா?? மகேந்திரன் சார் பொண்ணு மாயாவா?

ஆமா….

சின்ன பொண்ணு சொன்ன ஐடியா கேட்டா இப்படி திருட்டுத்தனமா இங்க வந்தீங்க. உங்கள என்னதான் செய்றது என்று கூறி தலையில் கைவைத்து அமர்ந்துகொண்டாள் சஞ்சனா.

அவள் அருகில் சென்று அமர்ந்தவன், அவள் கையை எடுத்து தனது கைக்குள் வைத்து, என்ன உனக்கு தெரியுனு சொன்னையே, உனக்கு தெரியாத ஒரு பக்கம் எனக்கு இருக்கு சனா உன்கிட்ட மனசுவிட்டு பேசத்தான் வந்தேன். உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு போயிடுறேன்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவனை போக சொல்லும் எண்ணம் வரவேயில்லை. வாகாக அவன் தோளில் சாய்ந்தவள் காலைல வரைக்கும் யாரும் மேல வரமாட்டாங்க நாம எவ்வளோ நேரம் வேணுனாலும் பேசலாம் என்றாள். அவளை சுற்றி கைபோட்டு அணைத்துக்கொண்டவன், சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை. சஞ்சனா அந்த அமைதியை கலைக்க விரும்பவில்லை.

ஆதியாகவே பேச தொடங்கினான், சனா அம்மா, அப்பா மறைவுக்கு அப்புறம் என்ன சுத்தி எல்லாம் இருந்துச்சு. பணம், பாதுகாப்பு, படிப்பு ஆனா ந எதிர்பார்த்த அன்பு மட்டும் இல்லை. பெரியம்மா, பெரியப்பா என்ன நல்லாத்தான் பார்த்துக்கிட்டாங்க, ஆனா அவங்களால ரெண்டு அக்காக்கும் போக மீதி டைம் தான் எனக்கு கொடுக்க முடிஞ்சுது. என்ன போர்டிங் ஸ்கூல் அனுப்புனாங்க, எனக்கு எதுவுமே பிடிக்கல அம்மா, அப்பா இழப்பை மறக்க படிப்புக்குள்ள என்ன மூழ்கடிச்சுக்கிட்ட. பிளஸ் ஒன்னு போறப்பவே, பெரியப்பாகிட்ட  பிசினெஸ் கத்துக்க ஆரம்பிச்ச. காலேஜ் வந்து கொஞ்சம் பிரெண்ட்ஸ் கிடைச்சாங்க, ஸ்கூல்ல இருந்த அளவுக்கு ரிசர்வுடா இல்லாம கொஞ்சம் என்ஜாய் பண்ண, அதுக்கப்புறம் ஒருபக்கம் பிசினெஸ் ஒருபக்கம் ஹய்யர் ஸ்டடீஸ்ஸுனு லைப் பிஸி ஆயிடுச்சு.

பிசினெஸ் வெற்றிகள் எனக்கு வெறிய கொடுத்துச்சு அந்த வெறியிலேயே இவ்வளோ நாள் ஓடிட்டு இருந்த.  அந்த ஓட்டம் முதல் முறையா உன்ன பார்த்துதான் நின்னுச்சு, ரொம்போ வருஷம் கழிச்சு உன்ன பார்த்த அன்னைக்கு தான் சிரிச்சேன். அதுக்கப்புறம் உன்னோட அந்த முகம் மனசவிட்டு போகவேயில்லை, எவ்வளோ நாள் உன்ன தூரத்துல இருந்து பார்க்குற கொஞ்ச நேரத்துக்காக கார்ல உட்கார்ந்து ஒர்க் பண்ணி இருக்க தெரியுமா?

எங்க நான் நேருல வந்து என்னோட காதலை சொல்லி நீ ரிஜெக்ட் பண்ணிடுவயோனு தான் வீட்டுக்கே வந்து பொண்ணு கேட்ட. நீ லைப்ல வந்ததுக்கப்புறம் தான் சின்ன வயசுல எனக்குள்ள நான் அன்புக்கு எவ்வளோ ஏங்கி இருக்கனு புரிஞ்சுது. அந்த ஏக்கத்துக்கு காயத்துக்கு நீ மட்டுந்தான் மருந்து. உன்கிட்ட மட்டுந்தான் நான் நானா இருக்கேன். உன்னோட அன்பு, காதல் முழுசா எனக்கு மட்டுந்தான் வேணும், எப்பவும் உனக்கு நான் மட்டுந்தான் பர்ஸ்ட்டா இருக்கனும் கிடைக்குமா??? என்று ஒரு எதிர்பார்ப்போடு அவள் முகம் பார்த்தான்.

அவன் கூறியதை கேட்டு சஞ்சனாவிற்கு மனம் பாரமாக இருந்தது வெளியில் இருந்து நாம் பார்ப்பதற்கும், உள்ளிருக்கும் மனதிற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று நினைத்தவள் எந்தநிலையிலும் இவனை எதற்கும் காயப்படுத்திவிடக்கூடாது என்று உறுதியாக நினைத்தாள். அவன் தன் பதிலுக்கு காத்திருப்பது புரிந்து,

அவன் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தியவள், அவன் கண்களுக்குள் பார்த்து, தயா உங்களுக்கு எல்லாமாவும் நான் இருப்பேன். அம்மாவ, மனைவிய, தோழிய, சண்டைகாரிய, இப்படி எல்லாம நான் இருப்பேன். உங்களுக்கு எனக்கு நடுவுல எப்பவும் யாரும், எதுவும் வரமுடியாது என்று கூறியவள் தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டான் ஆதி. சிறிதுநேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சனா மெதுவாக அவன் அணைப்பில் இருந்து விலகினாள்.

இருவருக்கும் அந்த இரவும் அமையதியும் படபடப்பை கொடுத்தது. சஞ்சனா நிலைமையை சகஜமாக்க எண்ணி நீங்க காலேஜ் டேஸ் பற்றி சொன்னப்ப தான் நியாபகம் வந்தது, அன்னைக்கு என்னோட ப்ரண்ட்ஸ் மீட் பண்ணப்ப எனக்கு எவ்வளவு மார்க் போட்டீங்கனு என்கிட்ட சொல்றேன்னு சொன்னீங்க இப்ப சொல்லுங்க,

சனா பேபி இப்படியெல்லாம் உசுப்பேத்த கூடாது, ஏற்கனவே நான் கஷ்டப்பட்டு கன்ட்ரோல்ல இருக்க,

ஆதி அப்படி கூறவும் சஞ்சனாவின் முகம் செந்தாமரையாய்  சிவந்து போனது,

அவள் கன்னத்தை வருடியவன், உன் கேள்விக்கு ரெண்டு நாள் கழிச்சு பதில் சொல்ற, இப்ப கிளம்புற இதுக்கப்புறம் இங்க இருக்குறது வம்பு என்று கூறி சிரித்தான்.

அவனை பார்த்து புன்னகைத்தவளின் நெற்றியில் முதல் முத்தத்தை கொடுத்தவன், வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

சஞ்சனா வெகுநேரம் உலகம் மறந்து அமர்ந்திருந்தாள். ஆதி வீட்டிற்கு சென்றுவிட்டு போன் செய்தபின்தான் சுயஉணர்விற்கு வந்தாள். இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு கல்யாண கனவுகளோடு உறங்க சென்றனர்.

மறுநாள் அழகாக விடிந்தது, வீடே பரபரப்பாக இருந்தது. வீட்டில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முடிந்து மாலை மண்டபத்திற்கு கிளம்பினர். தன் ஆசை தங்கை இனி வேறு வீட்டு பெண், அவள் கணவனுக்கு தான் அவள் மீது இனி அதிக உரிமை என்று எண்ணி பாலகுமாருக்கு சந்தோசம், வருத்தம் இருமனநிலையும் கலந்து இருந்தது. தன்னிடம் ஆசி வாங்க வந்த தங்கையை தடுத்து அணைத்துக்கொண்டவன் கண்கள் கலங்கியது, சஞ்சனாவிற்கும் அதே நிலைதான், கிருஷ்ணவேணி தான் இருவரையும் சமாதானம் செய்தார்.

அங்கு ஆதி மண்டபத்திற்கு கிளம்பும் முன் அவன் பெற்றோர் புகைப்படங்களுக்கு முன் விழுந்து வணங்கினான்.  பெண் அழைப்பு, மாப்பிளை அழைப்பு முடிந்து அனைவரும் மண்டபம் வந்து சேர்ந்தனர். சஞ்சனாவிற்கு நலுங்கு வைத்தனர். ஒரு புறம் மெல்லிசை கச்சேரி நடந்துகொண்டிருந்தது. பெண்களின் பேச்சு குரல்கள், வளையல் ஓசைகள், பட்டு புடவைகளின் ஜொலிப்பு, வாண்டுகளின் ஆட்டம் பாட்டம் என்று கல்யாணம் மண்டபம் கலைகட்டியது.

மறுநாள் காலை அனைத்து உறவுகளும் ஆசி கூற, மறைந்த ஆதியின் பெற்றோர் சொர்க்கத்தில் இருந்து ஆசிர்வதிக்க இப்பிறவி மட்டுமல்ல அனைத்து பிறவியிலும் இவளே துணையாக வரவேண்டும் என்று வேண்டி சஞ்சனா கழுத்தில் தாலி கட்டினான் ஆதி. பாலகுமாரின் தங்கை, கிருஷ்ணவேணியின் மகளாக இருந்தவள் அந்த நொடி முதல் சஞ்சனா ஆதித்யனாக மாறிப்போனாள்.

தீடீரென ஏதோ சத்தம் கேட்க பழய நினைவுகளில் இருந்து வெளியில் வந்தாள் சஞ்சனா. என்ன சத்தம் என்று பார்க்க அவளின் அலாரம் அடித்துக்கொண்டிருந்தது, பழைய நினைவுகளில் விடிந்தேவிட்டது என்று எண்ணியவள், அதற்குப்பின் தூங்க தோன்றாமல் எழுந்து காலை வேலைகளை பார்க்க தொடங்கினாள். அந்த வர முழுவதும் கல்லூரி சென்றுவந்தபின் மாலையில் தங்கள் உடமைகளை பேக் செய்தாள். வெளியில் சொல்லவில்லை என்றாலும் பாரதி மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. இதற்காக எதுவும் செய்யலாம் என்று நினைத்தாள் சஞ்சனா.

சஞ்சனாவின் முடிவை தெரிந்துகொண்டு மாயா அழைத்து அவளது மகிழ்ச்சியை தெரிவித்தாள். என்னதான் முடிவெடுத்தாலும் நாள் நெருங்க நெருங்க சஞ்சனாவிற்கு இனம் புரியாத பயம் எழுந்தது. அதை பிறரிடம் மறைத்து நடமாடினாள்.

ஞாயிறு அன்று காலையே வந்துவிட்டான் ஆதி, பாலகுமாரும், கிருஷ்ணவேணியும் வாசலுக்கு சென்று அவனை வரவேற்றனர், குற்றயுணர்ச்சியோடு அவர்களை பார்த்தவன் பொதுவாக நலம் விசாரித்தான். தனது தந்தை குரல் கேட்டதும் மேலிருந்து ஓடி வந்த பாரதி அப்பா என்று அவனை கட்டிக்கொண்டாள், மகளை பாசத்தோடு கட்டிக்கொண்டவன், கண்களால் சஞ்சனாவை தேடினான்.

அவனது பார்வையை புரிந்துகொண்ட பாலகுமார், நான் போய் சஞ்சனாவை கூட்டி வருகிறேன் என்று மேலே சென்றான். அங்கு தங்கை அனைத்தையும் எடுத்துவைத்து விட்டு கீழே வராமல் அமர்ந்து இருப்பதை பார்த்து,

என்ன ஆச்சு சஞ்சும்மா கீழ வராம இங்க என்ன செய்ற?

தெரியல அண்ணா பயமா இருக்கு அன்னைக்கு கொஞ்ச நாள் தெரிஞ்ச ஆதி கூட சந்தோசமா இந்த வீட்டை விட்டுப்போனேன் இன்னைக்கு 6 வருஷம் கூட வாழ்ந்தவரோட போக பயமா இருக்கு.

சஞ்சும்மா, மாப்பிள்ளை செஞ்சது சரினு சொல்ல மாட்ட, ஆனா அவரு தப்பானவரு இல்ல, சூழ்நிலை கூடவே அவருக்கு உன்மேல இருக்க அதீத காதல் தான் உங்க பிரச்சனைக்கு காரணம். இனியாவது எல்லாம் சரியாகட்டும் நிம்மதியபோய்ட்டுவா. அவருக்கு உண்ணாவிட்ட யாரு இருக்க அவரு செஞ்ச தப்புக்கு தண்டனைய அனுபவிச்சுட்டாரு, நீயும் கொஞ்சம் உன்னோட பிடிவாதத்தை விட்டுட்டு யோசிச்சுப்பாரு. இப்ப கீழ உனக்காக பாரதியும், மாப்பிள்ளையும் வெயிட் பன்றாங்க வா போகலாம்.

சிறிது சமாதானமான சஞ்சனா தன் அண்ணனோடு கீழே வந்தாள். பாலகுமார் தனது மனைவியை அவளது அம்மா வீட்டில் விட்டிருந்தான், தங்கை கிளம்பும்போது எந்த வாக்குவாதமும் வேண்டாம் என்று இந்த ஏற்பாட்டை செய்தான். நான் ஏன் போக வேண்டும் என்று சண்டைக்கு நின்றவளிடம், இப்ப போன ரெண்டு நாளில் கூட்டிட்டு வந்திடுவேன், இல்லைனா இனி எப்பவும் இங்க வரமுடியாது என்று பாலகுமார் உறுதியாக கூற வேறவழியில்லாமல் கிளம்பிவிட்டாள். எனவே சஞ்சனாவும், பாரதியும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆதியுடன் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

இப்படி உருகி காதலித்து கைப்பிடித்த ஆதிக்கும்  சஞ்சனாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரிவிற்கு காரணம் என்ன?? சஞ்சனா ஆதியை மன்னித்து ஏற்றுக்கொள்வாளா??? அறிய தொடர்ந்து வாசியுங்கள் ” மீண்டும் மலர்வாய்”.

-நறுமுகை

2

No Responses

Write a response