நுழைவாயிலிலேயே,
வாசகர்களுக்கான வரவேற்பு வளையம் அமோகம்….
துடிப்பும், துடுக்கும் நிறைந்து,
‘ பட்டாசு’
கிளப்பும் அறிமுகம்.
அறிமுகப்படுத்தப்படும்
பாத்திரங்கள்,
வெற்றுப் பாத்திரங்களாய் இராமல்
உணர்வுகளின்
பிம்பங்களாய்,
நம்மையும் அவற்றுடன் ஒன்றவைக்கும் நேர்த்தி.
வாசிக்கும் பொழுது,
வாசிக்கிறோம் என்ற உணர்வையும் தாண்டி,
உயிர்ப்புடன்
(உள்ளுக்குள் )
ஒரு நிகழ்வு நடப்பது போன்றதொரு உணர்வு.
படைப்பின் பக்குவம்
இவரது
இதர படைப்புகளின்
பட்டியலைத் தேடுகிறது.
இனிய படைப்புகள்
பெருகி, பட்டியல் நீள
வாழ்த்துக்களும்,
ஆசிர்வாதங்களும்.
–மரு.ஜெகதீஸ்வரன்.
உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.