என் வானவில்-13

என் வானவில்-13

மித்ராவை கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்த இரண்டாவது நாள் பிரகாஷிற்கு வேலைக்கு அழைப்பு வந்தது.

மித்ராவை விட்டுவிட்டு செல்ல பிரகாஷ் தயங்க மித்ராவோ எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, அது தான் பாட்டி இருக்கிறார்களே , நான் இருந்துகொள்வேன் என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

 வால்பாறையில் இருந்து கிளம்பி நேராக சென்னை சென்றுவிட்டான் பிரகாஷ்.

ஜெயலட்சுமியோ, என்னடா நீ லீவ்ல இங்கே இருப்பதாக சொல்லிவிட்டு கடைசியாக பத்து நாட்கள் கூட முழுதாக  வீட்டில் இல்லை. இப்போ அப்படியே போய் வேலையிலும் சேர்ந்துகொண்டாய் என்று புலம்ப,

என்ன அம்மா, வேலைக்கு தானே வந்திருக்கிறேன், எப்போதும் போல வீக் எண்டில் வருகிறேன் என்று கூறி ஜெயலட்சுமியை சமாதானம் படுத்தினான்.

சென்னை சென்று இறங்கிய பிரகாஷை அவனது நண்பன் ராம் வந்து பிக்கப் செய்து கொண்டான்.

ராமின் வீட்டில் இவர்களுக்காக சுஜி காத்துக்கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் என்னடா பிரகாஷ் மித்ரா எப்படி இருக்கிறாள் என்று கேட்க,

ஹ்ம்ம் அவள் நன்றாக இருக்கிறாள். ஒரு அளவுக்கு செட்டில் ஆகிவிட்டாள், அப்போ இருந்த பயம், எப்போதும் எதோ ஒரு சிந்தனை…. இப்போ அதெல்லாம் இல்லை. ஜாலியா சுற்றிவருகிறாள்,எப்போதும் போல வேலை செய்கிறாள் சமைக்கிறாள், காலேஜ் சேர்வதற்குள் தான் ஒரு ரகளை செய்துவிட்டாள், என்று பிரகாஷ் நடந்தவற்றை கூறினான்.

அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ராம், ஆமாம் இப்போவது உனக்கு மித்ரா மீது இருக்கும் பீலிங்ஸ்க்கு என்ன பெயர் என்று கண்டுபிடித்தாயா? என்று கேட்க,

சுஜியோ ஹ்ம்ம் இவன் கண்டுபிடித்து கிழிச்சான் என்று கிண்டல் செய்தாள்.

பிரகாஷோ டேய் , ஏன்டா அதை தெரிந்துகொள்வதில் என்னைவிட நீ ஆர்வமாக இருக்கிறாய்.. நான் இப்போது அந்த ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கவில்லை. சின்ன பொண்ணு டா இப்போ தான் ஸ்கூல் முடித்திருக்கிறாள், படிக்கட்டும் என்று கூற,

 படிக்க வேண்டாம் என்று யார் சொன்னாங்க, ஆனால் நீ ஏன் ரிஸ்க் எடுத்து இவ்வளவு செய்கிறாய் அதை கேட்டால் மட்டும் தெரியவில்லை என்று பதில் கூறுகிறாய் என்று கேட்டான் ராம்.

தெரிந்தால் தெரிகிறது என்று கூறுவேன், எனக்கு தான் தெரியலையே அதான் தெரியவில்லை என்று கூறினேன் என்றான்,

சுஜியோ ஆரம்பித்துவிட்டாயா? உனக்கும் புரியாமல் எங்களுக்கும் புரியாமல், அட போடா… ஒரு நாள் இல்லை ஒரு நாள் , நீ அவளை காதலிப்பதாக அவளிடம் கிளம்பிவிட போகிறேன் பாரு என்று கூற,

பிரகாஷோ சுஜி அப்படி ஏதாவது செய்துவிடாதே , அவள் அவ்வளவு தான் ஒரே அடியாக அரண்டு போய்விடுவாள் என்று கூற,

பார்க்கலாம் பார்க்கலாம், என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் சுஜி.

பிரகாஷ் சென்று ஒரு மாதம் கழித்து மித்ரா கல்லூரியில் சேர்ந்தாள்.

பிரகாஷ் கூறியதை போல திங்கள் கிழமை காலை வால்பாறையில் இருந்து கிளம்பி ஹாஸ்டலுக்கு செல்பவள் மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை  கிளம்பி வால்பாறை வந்துவிடுவாள்.

 தெய்வநாயகி அவரது நம்பிக்கைக்கு உரிய டிரைவர் முருகனை தான் எப்போதுமே மித்ராவுடன் அனுப்புவார். வரும்போது போகும்பொழுதும் முருகனுடன் ஒரு தங்கையின் அன்போடு பேசிக்கொண்டே வரும் மித்ராவிற்கு, முருகன் ஒரு பாதுகாவலனாகவே மாறிப்போனான்.

வார இறுதியில் வரும் மித்ரா, வள்ளியிடன் சேர்ந்து புதிதாக எதையாவது சமைப்பது, புதிதாக யூடியூபில்  பார்த்து கோலம் போடுவது, இருவரும் சேர்ந்து தெய்வநாயகியுடன் எஸ்டேட்டை சுற்றிவருவது, அவருக்காக புத்தகம் வாசிப்பது, என அவளுக்கு பொழுது மிக இனிமையாக கழிந்தது. முதல் மூன்று மாதங்கள் பிரகாஷ் அவளை பார்க்க வால்பாறை வரவே இல்லை.

அவன் அவளுக்காக ஒரு செல் போனை வாங்கி அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தான். தினமும் இரவு அவளுடன் பேசுவான். அன்று என்ன நடந்தது, கல்லூரி எப்படி சென்றது என்பது போன்ற பொதுவான பேச்சுகளாக அவை இருந்தது. இருந்தாலும் அவனை பார்க்காமல் என்னவோ போல இருந்தாலும் மித்ரா அவனிடம் கேட்கவில்லை.

மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அவன் வராமல் இருக்கவே, ஒரு நாள் மெதுவாக மித்ராவே பேச்சை தொடங்கினாள்,

ஏன் சத்யா உங்களுக்கு வீக்கெண்ட்ஸ் எல்லாம் லீவ் தானே,

ஆமாம் லீவ் தான் என்றான் பிரகாஷ்,

அப்போ ஒரு வீக்கெண்ட் நீங்க வால்பாறை வரலாமே, உங்களுக்கு தான் வால்பாறை ரொம்போ பிடிக்குமே என்றாள் ,

அவளாக அப்படி கேட்க வேண்டும் என்று தான் அவ்வளவு நாள் பிரகாஷும் அங்கு செல்லாமலே இருந்தான். இப்போது மித்ரா அப்படி கேட்கவும் அவனுக்கு மிகவும் குஷியாக இருந்தது. மூன்று மாதங்கள் அவளை பார்க்காமல் அவனும் மிகவும் தவித்து தான் போய் இருந்தான்.

 ராமோ அதை சொல்லி கேலி செய்ய, உன் ஆராய்ச்சியை தூக்கிக்கொண்டு அந்தப்பக்கம் போ, கூட்டிக்கொண்டு போய் விட்டோமே, சின்ன பொண்ணு தனியாக அங்கு என்ன செய்கிறாளோ என்ற கவலை தான் என்று பிரகாஷ் சொல்ல,

நம்பிவிட்டேன் நம்பிவிட்டேன் என்று ராம் அவனை கிண்டல் செய்தான்.

மித்ரா நீங்க வால்பாறை வரலாமே என்று கேட்ட அந்த வாரமே வால்பாறை சென்றான் பிரகாஷ்.

பிரகாஷ் மித்ராவை காதலிக்கின்றானா? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்    “என் வானவில்”.

-நறுமுகை

3

No Responses

Write a response