வேற்றுமையில் ஒற்றுமை

என் அன்பு சகாக்களுக்கு
நான் முந்தைய பதிவில் சொன்னது போல மறைந்த வீரர்களின் வாழ்க்கை நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லப்படவேண்டும் அதுதான் நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.நடப்பது என்னவென்றே தெரியாமல் தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் மூழ்கி போய் இருக்கும் இன்றைய தலைமுறைக்கு இவர்கள் மரணம் நம் பாதுகாப்பிற்கு அவர்கள் கொடுத்த விலை என்று சொல்லுங்கள். பழைய பழமொழி ஒன்று உண்டு

” ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது “

தாய் பால் புகட்டும்போதே தாய்நாட்டு பற்றும் சேர்த்து ஊட்டப்பட வேண்டும். கோவிலில் சாமியை பார்த்தால் கையெடுத்து கும்பிட சொல்லிகுடுக்கும் நாம் உலகில் எங்கு உன் தேசிய கொடியை பார்த்தாலும் தலை வணங்கி அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். பட டிக்கெட் வாங்க மணிக்கணக்கில் காத்திருக்கும் இந்த தலைமுறை தான் ஒருநிமிடம் தேசியகீதத்திற்கு எழுந்து நிற்பதை வீண் என்றும் நினைக்கிறது.இது அவர்கள் தவறு அல்ல சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லி குடுக்க வேண்டிய வயதில் தேசம் பற்றிய பார்வையை அவர்களுக்குள் செலுத்தாத பெற்றோர்களின் பிழை. இன்னும் கூட காலம் கடந்துவிடவில்லை உங்கள் பிள்ளைகளுடன் பேசுங்கள் அங்கு தீவிரவாதத்துக்கு பலியானது உன் சகோதரன் என்று அடையாளம் காட்டுங்கள். இனம்,மொழி,மதம்,கலாச்சாரம்,இப்படி எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இந்தியர்கள் என்று அவர்களுக்கு புரியும் படி சொல்லுங்கள்.இன்றும் நாம் இவர்களுக்கு சொல்லாமல் விட்டுவிட்டால் அடுத்து வரும் தலைமுறை தன் அடையாளத்தை துளைத்துவிடும்.

என்றும் அன்புடன்
சக தோழி

1

No Responses

Write a response