New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்- 25

மாயாவை பார்த்துவிட்டு வந்த இர்பான் நேராக பாரதியை கடத்திய இடத்திற்கு சென்றான். அங்கிருந்து ஸ்கூல் கேட் பார்க்குற தூரத்தில் இருந்தது. அந்த இடத்தை சுற்றி பார்த்தான் வேறு எந்த கட்டிடமும் இல்லை. கேட்டிற்கு அருகில் செக்யூரிட்டி அமர்ந்திருந்தான் அவனிடம் சென்றான் இர்பான். அவனது போலீஸ் உடையை பார்த்த செக்யூரிட்டி பயத்துடன் எழுந்து நின்றான்.

இங்க எத்தனை நாளா வேலை செய்ற?

அய்யா அஞ்சு வருசமா இங்கதாங்க வேலை செய்ற

அன்னைக்கு இங்க ஒரு பொண்ண கடத்துனாங்களே அப்ப யாரு இங்க டியூட்டி பார்த்தது?

அய்யா அவரு பேரு முருகன் பக்கத்துல குவாட்ரஸ்ல குடியிருக்காரு, அந்த சம்பவம் நடந்ததுக்கப்புறம் அவரு வேலைக்கு வரதுயில்லைங்க.

சரி என்றவன் முருகன் அட்ரஸ் வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இர்பான் கூட வந்த கான்ஸ்டபிள் சார் நம்ப அன்னைக்கு வந்து கேட்டப்ப நைட் செக்யூரிட்டி உடம்பு சரியில்லைனு லீவுனு சொன்னாங்க, இப்ப இந்தாளு வேற மாதிரி சொல்றாரு?

அதுமட்டுதான் உங்களுக்கு தப்பா தெரிஞ்சுதா முரளி?

வேற என்ன சார் எனக்கு ஒன்னும் தெரியலையே!

முரளி, அன்னைக்கு மாயா கடத்துனவங்க பற்றி என்ன சொன்னாங்கனு உங்களுக்கு நியாபகம் இருக்கா?

இருக்கு சார், அவங்க சென்னை பாஷை பேசுனாங்க, கூலி ஆட்கள் மாதிரி இருந்தாங்கனு சொன்னாங்க.

ஸ்கூல் உள்ள கட்டட வேலை நடக்குறதை நான் முதல் நாள் வந்தப்பவே கவனிச்சேன், அப்ப எனக்கு ஒன்னும் தோணலை, அன்னைக்கு மாயா சொன்ன அடையாளங்கள் கேட்டதும் ஏதோ தப்பபட்டுச்சு அதான் உள்ள போகாம வெளியில இருந்து விசாரிச்சேன் என்னோட சந்தேகம் சரிதான் இங்க எதோ தப்ப இருக்கு. முதல்ல போய் அந்த முருகனை பார்க்கலாம்.

சரிங்க சார்.

இருவரும்  முருகன் வீட்டிற்கு சென்று கதவை தட்டினர், ஒரு வயதான பெண்மணி கதவை திறந்தார். போலீஸ் உடையை பார்த்ததும் மிரண்டு போனவர் யாரு வேணுங்க?

இது முருகன் வீடுதான?

ஆமா இருங்க கூப்பிடுற, என்னங்க உங்கள தேடி போலீஸ் வந்திருக்காங்க என்று அவர் குரல் கொடுத்ததும்

உள்ளயிருந்து வேகமாக வந்த அந்த பெரியவர் இர்பானிடம் சொல்லுங்க அய்யா

நீங்கதான் முருகன்னா?

ஆமாங்க

பக்கத்து தெருவுல இருக்க ஸ்கூல்லதான செக்யூரிட்டி வேலை பார்க்குறீங்க?

இர்பான் அப்படி கேட்டதும் ஒருநிமிடம் தயங்கியவர், அய்யா நீங்க எதுக்கு இங்க வந்திருக்கீங்கனு எனக்கு தெரியும். அந்த சின்ன பொண்ணு கடத்தல்  விஷயமா வந்திருக்கீங்க. உயிருக்கு பயந்துதான் வாயதொறக்காம இருந்தேன். ஆனா யோசிச்சுப்பார்த்த வாழ்ந்துமுடிச்சவன் நான் இந்த உண்மையை மறைச்சு உயிர்வாழ்ந்து என்ன செய்யப்போற. ஸ்கூல்ல கட்டட வேலை செய்ற நாலு பேர்தான் அந்த பொண்ண கடத்துனது, அவங்க நாலு பேரும் கட்டட வேலை செய்றவனுங்க இல்லை, கூலிபடையை சேர்ந்தவங்க எங்க ஸ்கூல் முதலாளிக்கு ஏதோ சட்டவிரோத வேலை செஞ்சு கொடுத்துட்டு யாருக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னு கூலி ஆளுங்க மாதிரி இங்க இருந்து இருக்காங்க. இதெல்லாம் எனக்கு அந்த பொண்ணு கடத்தப்பட்டதுக்கு அப்புறம்தான் எனக்கு தெரியும். நான் அவங்களை பார்த்துட்டேன் தெரிஞ்சதும், என்ன கூப்பிட்டு மிரட்டுனாங்க, அப்பதான் அவங்க யாரு என்னனு எனக்கும் தெரியும். அய்யா பயந்துதான் நானு பேசாம வந்துட்டேன், ஆனா டிவில்ல அந்த பொண்ணு பத்தி போடுறதுயெல்லாம் பார்க்குறப்ப மனசு தாங்கலை எனக்கா போலீஸ் ஸ்டேஷன் வரவும் தைரியம் இல்லை. அதான் இப்ப உங்ககிட்ட சொல்லிட்டேன், நீங்க எங்க வரச்சொன்னாலும் நான் வந்து சொல்றங்க.

முரளி இவருக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க, ஸ்கூல் ஓனர்க்கு சம்மந்தபட்ட இடத்துல ரகசியம சர்ச் பண்ணுங்க, எல்லா செக்போஸ்ட்லையும் அலெர்ட் பண்ணுங்க. இவர்கிட்ட பழைய கிரிமினல் போட்டோஸ் காட்டி அவங்க நாலு பேரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க என்று உத்தரவுகளை அடுக்கினான்.

போலீஸ் படை அவன் சொன்ன உத்தரவுகளை படுவேகமாக செயல்படுத்தியது. நேரடியாக பாரதியின் நிலையை பார்த்தவர்களுக்கும், ஆதி மற்றும் சஞ்சனாவின் கதறலை கேட்டவர்களுக்கு எப்படியாவது அந்த நாலு பேரை கைது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, அது அவர்களின் தேடலை துரிதப்படுத்தியது. அவர்களின் அந்த வேகத்திற்கு பலன் இருந்தது, சென்னை தாண்டி ஸ்கூல் ஓனர் கணேசனின் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த நாலு பேரையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணியது. போலீஸ் ஸ்கூல் ஓனரை நெருங்குவதற்குள் ஓனர் மேனேஜர் அவர்தான் அந்த நாலு பேரையும் அங்கு பதுக்கிவைத்ததாகவும் ஓனருக்கு ஒன்றும் தெரியாது என்று சரணடைந்தார். தற்போதைக்கு பாரதி கேஸ் முக்கியம் என்று நினைத்த இர்பான் அப்போதைக்கு கணேசனை விட்டுவிட்டான்.

அந்த நாலு பேரு கைதான விஷயம் கேள்விப்பட்டு காளிதாஸ் மாயாவுடன் ஸ்டேஷன் சென்றார். மாயா அவர்களை நன்றாக பார்த்து அவர்கள்தான் என்று உறுதி செய்தாள். இர்பான் உடனடியாக அவர்களை ரிமாண்டில் எடுத்தான் அவர்கள் சாம்பிள்ளை அவனுக்கு கிடைத்த சாம்பிளோடு மேட்ச் பண்ண தடவியலுக்கு (Forensic) அனுப்பினான்.

பாரதி சற்று தெளிந்து இருந்ததாள், அவளை பார்க்க சைல்ட் வெல்ஃபேர் கமிட்டில இருந்து ஒர்க்கர்  வந்திருந்தனர், அவர் பாரதி மனநிலையை கருத்தில் கொண்டு மாஜிஸ்ட்ரேட் மருத்துவமனையில் வந்து அவளது வாக்குமூலத்தை வாங்குவது நல்லது, அவள் அந்த நினைவுகளால் மீண்டும் பயந்து அது அவள் மனநிலையை பாதித்தால் அவளுக்கு உடனடி மருத்துவ உதவி இருப்பது அவசியம் என்று அறிக்கை கொடுத்தார். அதன்படி மாஜிஸ்ட்ரேட் பாரதியை மருத்துவமனையில் வந்து சந்தித்தார். பாரதி தனது அம்மா கூட இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு மாஜிஸ்ட்ரேட் ஒத்துக்கொண்டார். அவள் வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பாரதி கூறிய விஷயங்கள் சஞ்சனாவை மிகவும் தாக்கியது, அவளால் தனது மகளுக்கு நடந்ததை அவள் வாயால் கேட்க்கும் போது யாரோ மனதை வாள்கொண்டு அறுப்பதுபோல் இருந்தது. பாரதி ஒரு கட்டத்திற்கு மேல் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாமல் அலறி மயங்கினாள். மாஜிஸ்ட்ரேட் ஒரு பெண் என்பதால் அவரால் பாரதியின் நிலைகண்டு கலங்காமல் இருக்கமுடியவில்லை. சஞ்சனாவிற்கு ஆறுதல் கூறியவர் பாரதி கொடுத்த வாக்குமூலமே போதுமானது என்று கூறிவிட்டு சென்றார்.

ஒருவாரம் கழித்து கோர்ட் ஹியரிங் இருந்தது, அப்போது காளிதாஸ்ஸை பார்க்க கணேசின் ஆள் வந்திருந்தான். 

சார், கணேஷ் அய்யா ஒரு முக்கியமான விஷயமா என்ன அனுப்பியிருக்காரு

என்ன விஷயம்?

நீங்க அந்த சின்ன பொண்ணு கேஸ்ல்ல இருந்து விலகிக்கனும், அதுக்கு எவ்வளோ பணம் வேணுமோ கொடுக்க ரெடியா இருக்காரு.

உங்க அய்யாகிட்ட போய் சொல்லு இங்க எதுவும் விற்பனைக்கு இல்லைனு

என்ன சார் சொல்றது புரியலையா, அய்யாயுடைய பவர் தெரியாம பேசுறீங்க

உங்க அய்யாவுக்கு அவளோ பவர் இருந்த கோர்ட்ல வந்து காட்ட சொல்லு, இப்ப நீ வெளியில போல உன்னையும் உங்க அய்யா வந்து ஜாமின் தான் எடுக்கனும். அதன்பின் அந்த ஆள் அங்கிருந்து வேகமாக வெளியேறினான். 

அடுத்து கணேஷ் நேரடியாகவே காளிதாஸிற்கு அழைத்தான் ஆனால் காளிதாஸ் பேரை கேட்டதும் போனை வைத்துவிட்டார். வேறுவழியில்லாமல் காளிதாஸை தேடி கணேஷ் வந்தான். 

என்ன காளிதாஸ் எதுக்கு இவ்வளவு அலட்சியம் உங்களுக்கு. கேஸ்ஸை விட்டு விலகி பணத்தை வாங்கி குடும்பம வேர்ல்ட் டூர் போயிட்டு வாங்க, பெரிய பையன் காலேஜ் போற நல்ல ப்ராண்டட் கார் வாங்கி கொடுங்க அதைவிட்டுட்டு எதுக்கு பிடிவாதம் பிடிக்குறீங்க.

ஹா ஹா ஹா நீங்க சொல்றது எல்லா ரொம்போ சரி உங்ககிட்ட பணம் வாங்கி வேர்ல்ட் டூர் போகலாம், ஆன அதனால என்பசங்களுக்கு நான் சேர்த்துவெக்க போற பாவத்தை தீர்க்க நான் எங்க போகட்டும். என் பசங்களுக்கு தேவையான பணத்தை எப்படி சம்பாதிக்கனுனு எனக்கு தெரியும் உங்க தலையை எப்படி காப்பாத்திக்குறதுனு பாருங்க.

காளிதாஸ் உனக்கு என்ன பத்தி தெரியல, அந்த பாரதி பொண்ணு எவனையோ லவ் பண்ணி ஓடிபோய் இப்படி சீரழிஞ்சு வந்திருக்கானு கோர்ட்ல கேஸ்ஸையே மாத்திடுவ அந்த பொண்ணோட சேர்த்து உன்னோட வாழ்க்கையையும் முடிச்சிடுவ.

இதை ஏன்டா சொன்னோனு உன்ன வருத்தப்பட வெக்குற இப்ப நீ கிளம்பலாம். காளிதாஸின் மீது ஆத்திரத்தோடு அங்கிருந்து வெளியேறிய கணேஷ் டெல்லியில் இருந்து பெரிய கிரிமினல் லாயரை வரவழைத்தான்.

கோர்டில் என்ன நடக்க போகிறது? அந்த நாலு பேருக்கு தண்டனை கிடைக்குமா? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்….

-நறுமுகை

16

No Responses

Write a response