என் வானவில்-18

என் வானவில்-18

மித்ராவிற்கு முதல் செமஸ்டர் நெருங்கிக்கொண்டிருந்தது அவள் ஸ்டடி ஹாலிடேஸிற்காக ஊருக்கு செல்ல மூன்று நாட்கள் இருந்தன.

அபிராமியையும் அவளுடன் அழைத்து வருவதற்கு தெய்வநாயகியிடம் அனுமதி பெற்றிருந்தாள்.

தெய்வநாயகியோ நீ இங்கு யாரை வேண்டுமானாலும் கூட்டிக்கொண்டு வரலாம் அதற்கு யாரிடமும் அனுமதி கேட்க தேவை இல்லை மித்ரா, இது உன் வீடு என்று கூறி, எப்போதும்போல அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அன்று கல்லூரி முடிந்து வந்தவள் தனக்குள்ளாகவே ஏதோ முனகிக்கொண்டிருந்தாள்.

அபிராமி அவளிடம் என்னவென்று கேட்க,

அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு புத்தகத்தை எடுத்துவைத்து அமர்ந்துகொண்டாள்.

இரவு 8.00 மணி போல பிரகாஷ் அவளை அழைத்தான்,

போனை எடுத்தவள் ஹலோ, கூட சொல்லாமல் ஹ்ம்ம் என்று மட்டும் கூறினாள்.

என்ன ஆச்சு மித்ரா ஹலோ சொல்ல கூட நேரம் இல்லையா? அவ்வளவு பிஸியா இருக்கிறாயா என்று கேட்டான்.

நான் மிகவும் கோபமாக இருக்கிறேன் சத்யா என்று கூறினாள்.

அவள் கூறியதை கேட்டு சிரித்தவன், கோபாமாக இருக்கிறாயா? உன்னை யார் கோபப்படுத்தினது? என்று கேட்டான்.

சிரிக்காதீங்க நான் கோபமாக இருக்கிறேன் என்று சொல்கிறேன் இல்லை…என்றாள் .

ஓஹ் மித்ரா நிஜமாகவே கோபமாக இருக்கிறாள்,சரி சிரிக்கவில்லை என்ன ஆனது என்று கேட்டான்.

நான் சொன்னேன் இல்லையா அந்த சீனியர் அவனால் ஒரே தொல்லையா இருக்கு, என்றாள்.

உடனே பிரகாஷ் சிரிப்பதை நிறுத்திவிட்டு என்ன ஆச்சு மித்ரா அவன் என்ன செய்கிறான்? என்று கேட்டான்.

உடனே மித்ரா , அதை ஏன் கேட்கிறீர்கள், நோட்ஸ் வேண்டுமா? புக்ஸ் வேண்டுமா? கிளாஸ் புரிகிறதா? பிரண்ட்ஸ் எல்லாம் ஓகே வா? ஒன்னும் பிரச்சனை இல்லையே, ஹாஸ்ட்டலில் சாப்பாடு பிடிக்கிறதா? இந்தவாரம் எப்படி ஊருக்கு போக போகிறாய்? நான் வந்து உன்னை ட்ராப் பண்ணவா? என்று ஆயிரம் கேள்வி கேட்கிறான். அவனை பார்த்தாலே நான் இப்போதெல்லாம் தலை தெறிக்க ஓடுகிறேன் என்று கூறினாள்.

அவள் கூறியதை கேட்ட பிரகாஷ் அந்த பக்கம் மெலிதாக சிரித்துக்கொண்டான்.  பிறகு அவன் மித்ரா உனக்கு இப்போது 19 வயது ஆகிறது. உன் வயதிற்கு ஒரு இன்ஸ்டிங்ட் இருக்கும். அதுபடி யோசித்து சொல்லு அவன் உன்னிடம் ஏதாவது மிஸ்பிகேவ்  பண்ணுவது போல, அல்லது தவறான விதத்தில் பேசுவது போல தோன்றுகிறதா? என்று கேட்டான்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை ஜென்ரலான டாக் தான், ஆனா அது கூட ஏன் கேட்கவேண்டும் என்றாள் மித்ரா.

பிரகாஷ்,மித்ராவிற்கு புரியும் குரலில் அது அப்படி இல்லை மித்ரா, ரெண்டு விஷயம் ஒன்னு நீ வால்பாறையில் இருந்து வருகிறாய், அதாவது அவனுக்கு தெரிந்த இடத்தில் இருந்து வருகிறாய், இரண்டாவது நீ உனக்கு யாரும் இல்லை பாட்டி தான் உன்னுடைய கார்டியன் என்று சொல்லியிருக்கிறாய், எனக்கு என்னவோ அவன் உன்னிடம் அந்த சிம்பத்தியில் பேசுகிறான் என்று தோன்றுகிறது என கூறினான்.

எனக்கு அவன் சிம்பத்தி  எல்லாம் வேண்டாம் என்றாள் மித்ரா.

அதை எப்படி அவன் முகத்தில் அடித்தாற்போலவா சொல்ல முடியும், உனக்கு ஹெல்ப் பண்ணுவது போல தானே கேட்கிறான் அவன் உன் சீனியர், உனக்கு நோட்ஸ் வேண்டும் என்றால் இல்லை உனக்கு டவுட்ஸ் இருந்தால் அவனிடம் கேட்டுக்கொள், நல்ல ஆப்சன் தானே என்று கூறினான்.

சரி தான்  என்று அவள் இழுக்க,

இங்க பாரு மித்ரா கோயம்பத்தூரில் எத்தனையோ கேர்ள்ஸ் காலேஜ் இருக்கு, அதை எல்லாம் விட்டு விட்டு உன்னை நான் இந்த காலேஜில் சேர்த்தியதன் காரணமே நீ கேர்ள்ஸ், பாய்ஸ் என அனைவரிடமும் இயல்பாக பேசி பழக வேண்டும் என்று தான், ஆரம்பத்தில் உன்னை கொஞ்சம் நாள் கவனமாக இருக்க சொன்னதற்கு காரணம் யாரும் உன்னை தோண்டி தோண்டி கேள்வி கேட்டு நீ பதட்டத்தில் எதையும் சொல்லிவிட கூடாது என்பதற்காக தான். இப்போ அப்படி இப்படி என்று ஆறு மாதம் ஆகிவிட்டது, நீயும் சமாளித்துவிட்டாய், இனி அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் உலர மாட்டாய், அதனால் இனி அனைவரிடமும் கொஞ்சம் இயல்பாக பழக முயற்சி செய்.

 நீ படித்து முடித்து வெளியில் வந்தால் இந்த சொசைட்டியில் பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்களா என்ன? நீ ஆண்களுடனும் பேசி பழக தான் வேண்டும்.

அன்று உன் வாழ்க்கையின் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் நீ ரயில்வே ஸ்டேஷன் போய் ஆக வேண்டிய சூழல், ரயில்வே ஸ்டேஷன் எப்படி போவது என்று முழித்துக்கொண்டு இருந்தாய்,அதே மாதிரி இப்போதும் இருக்க முடியாது அனைத்தையும் பேஸ் பண்ண கற்றுக்கொள்.

 நான் சொன்ன மாதிரி தான் உன் வயதிற்கென்று ஒரு இன்ஸ்டிங்ட் உண்டு, அவன் உன்னிடம் தவறாக பேசுகிறான் மிஸ் பிகேவ் செய்தால் உனக்கு புரிந்துவிடும் அப்படி இல்லை என்னும் பட்சத்தில் இயல்பாக அவன் கேட்கும் கேள்விகளுக்கு இயல்பாக நீயும் பதில் சொல்லிவிட்டு போ, என்று அவளுக்கு சிறு குழந்தைக்கு கூறுவது போல கூறினான்.

அவன் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க,

என்னப்பா இவ்வளவு நேரம் மூச்சை பிடித்து லெக்ச்சர் கொடுத்தேனே எதாவது பதில் சொல்லலாம் இல்லையா என்று கேட்டான்.

சரி சத்யா ட்ரை பண்ணுகிறேன் என்று கூறினாள்.

சரி இப்போ கோபம் போய்விட்டதா கொஞ்சம் சிரிக்கலாமே என்று கூற,

மித்ரா மெலிதாக புன்னகைத்துக்கொண்டே வழக்கம் போல நாள் எப்படி சென்றது? சுஜி என்ன செய்கிறாள் என்பது போன்று பேச தொடங்கினாள்.

அவளிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் தெய்வநாயகிக்கு அழைத்து பேசினான் கூடவே ஜே.பி. எஸ்டேட்டில் இருந்து கிஷோர் அங்கு படிப்பதாகவும் அவன் மித்ராவிற்கு சீனியர் என்றும் மித்ராவை அவன் விசாரித்ததும் மித்ராவிற்கு அவன் உதவி செய்ய முன் வருவது என்று அனைத்தையும் கூறினான்.

அதைக்  கேட்ட தெய்வநாயகி கிஷோரா அவன் ரொம்போ  நல்ல பையன் பிரகாஷ், அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை இங்கிருந்து மித்ரா வருகிறாள் என்று தெரிந்ததால் பேசி இருப்பான், இங்கு இருக்கும்பொழுது அவன் வருவான் அவனது அப்பாவுடன் வரும்பொழுது என்னை பார்த்துவிட்டு என்னிடம் பேசிவிட்டு செல்வான்,நல்ல பையன் தான் நீ ஒன்றும் கவலை படாதே என்று கூற, அதன் பின் தான் பிரகாஷிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

இங்கு ஹாஸ்டலில் பிரகாஷிடம் பேசிய பிறகு சற்று தெளிவான மித்ரா தனது தோழி அபியை தேடி சென்றாள்.

அதே சமயம் அங்கு பிரகாஷோ சுஜிக்கு போன் செய்து மித்ரா கூறியதும் அதற்கு அவன் கூறிய விளக்கங்களையும் சுஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

சுஜியோ ஏன் பிரகாஷ் எனக்கு ஒரு சந்தேகம்  நீ, மித்ரா அனைவரிடமும் சகஜமாக பழக வேண்டும் என்பதற்காக தானே கோ-எட் காலேஜில் சேர்த்துவிட்டாய்  நீயே சொன்னது போல இது அவளுக்கு ஒரு ஏஜ், இன்ஸ்டிங்ட் என்பதையும் தாண்டி பீலிங்க்ஸும் உண்டு, சப்போஸ் அந்த பீலிங்ஸ் உனக்கு பதிலாக வேறு யார் மீதாவது வந்துவிட்டால் என்று கேட்க,

பிரகாஷ் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். பின் உறுதியாக, சுஜி அது அவளது வாழ்க்கை அவள் அதில் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் கிடையாது. நான் அவளை இங்கே கூட்டிக்கொண்டுவந்து சேர்த்தேன் என்பதற்காக நான் என்ன சொன்னாலும் அவள் கேட்க வேண்டும் என்று நினைக்க மாட்டேன், என்று கூறினான்.

சுஜியோ அவ்வளவு நல்லவனாடா நீ, ஹ்ம்ம்  பார்க்கலாம் கடைசி வரை நீ இப்படியே இருக்கிறாயா? என்று அவள் கூற,

பிரகாஷோ,உன்கிட்ட சொன்னேன் பாரு, என்று கோபத்துடன் கூறினான்.

சரிப்பா, காம் டவுன், காம் டவுன்… ஆனால் ஒன்று உனக்கு பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ எனக்கு கண்டிப்பாக அதில் பிரச்சனை இருக்கிறது. அது எப்படி உன்னை விட்டுவிட்டு அவளுக்கு வேறு ஒருவரை  பிடிக்கலாம்? என்று கேட்க,

ஏய்! இதே நினைப்பில் அலைவாயா? முதலில் உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ண வேண்டும் என்று பிரகாஷ் கூற,

சுஜி சிரித்துக்கொண்டே முதலில் அதற்கு ஏற்பாடு பண்ணு மேன் என் வீட்டில் சொல்லி பார்த்தாச்சு, இன்னும் கொஞ்சம் நாளைக்கு வேலை செய் என்று கடுப்படிக்கிறார்கள் என்று கூற,

அதுசரி எவன் மாட்டிக்கொண்டு முழிக்க போரானோ?  என்று கூறி சிரிப்புடனே போனை வைத்தான் பிரகாஷ்.

கிஷோரால் பிரகாஷ் , மித்ரா வாழ்க்கையில் வரப்போகும் மாற்றங்கள் என்ன என்பதை அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில் 

                                   -நறுமுகை

4

No Responses

Write a response