என் வானவில்-45

என் வானவில்-45

அனைவரும் மித்ரா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகி நிற்க,

மித்ராவின் தாத்தாவும், தெய்வநாயகியும் நீ என்னமா சொல்ற? இவருக்கும் நீ உங்க சித்திகிட்ட வளர்ந்ததுக்கும் என்னமா சம்மந்தம் என்று கேட்டனர்,

மித்ராவோ விஸ்வநாதனைப் பார்த்து கேக்குறாங்க இல்ல மாமா சொல்லுங்க என்று போலி பவ்வியதோடு சொன்னாள்.

நீ என்ன பேசுறன்னே எனக்கு புரியல மித்ரா நீ ஏதேதோ தேவை இல்லாம பேசிக்கிட்டிருக்க, என்று  விசுவநாதன் படபடப்பாக கூறினார்.

 நான் தேவை இல்லாம பேசுறேனா? என்ன நடந்துச்சு, நான் எதைப் பத்தி பேசுறேன்னு உங்களுக்கு தெளிவாக தெரியும், உண்மையை நீங்களே சொல்லுங்க என்று கேட்க,

மித்ராவின் தாத்தாவோ விஸ்வநாதனிடம் மாப்ப்பிள்ளை மித்ரா என்ன சொல்றா? உங்களுக்கு என்ன விஷயம் தெரியும் என்று கேட்க,

விஸ்வநாதனோ அவ தான் எதோ புரியாம உளர்றான்னா அவ சொல்றத கேட்டுட்டு இத்தனை பேர் முன்னாடி என்னை கேள்வி கேக்குறீங்களா? என்று கோபமாக கேட்க,

மித்ரா எதைப் பத்தி பேசுறான்னே எங்களுக்கு புரியல உங்களுக்கு தெரியும்னு அவ சொல்றா அதனால் தானே உங்களை கேக்குறோம், என்று மித்ராவின் தாத்தா கூற,

விஸ்வநாதனோ, நினச்சேன் வந்த ஆரம்பத்துல எதுவுமே வேண்டாம் எனக்கு எதுவுமே பிடிக்கலன்னு சொல்லிட்டிருந்தவ திடீர்னு நான் பிசினெஸ் கத்துக்கிறேன் அக்கவ்ன்ட்ஸ் பாக்குறேன்னு சொல்லி சொத்து விவரங்களை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு இப்போ இங்க எல்லார் முன்னாடியும் என் மேல பழியை போட்டு எங்களை வெளியில் அனுப்பிவிட்டுட்டு எல்லா சொத்தையும் அவளே எடுத்துக்கணும்னு பாக்குறா, என்று கூற,

மித்ராவோ வாவ், சும்மா சொல்லக்கூடாது மாமா எவ்வளோ அழகா ஸ்டோரி சொல்றிங்க? அதுவும் இவ்ளோ ஷார்ட் டைம்ல அப்படியே  அடுக்கடுக்கா பொய் வருதுல்ல உங்களுக்கு, அது சரி பல வருசமா பொய் மட்டும் தான  சொல்லிட்டு இருக்கீங்க அதனால் இது ஒன்னும் ஆச்சர்யம் இல்ல, என்று கூற,

விஸ்வநாதனோ நீ என்ன நினைச்சிட்டு இருக்க, இத்தனை பேரை கூட்டி வச்சு நான் பொய் சொல்றேன்னு சொல்றியா?  நீ எங்கையோ எப்படியோ வளர்ந்ததுக்கு உன் அப்பாவும் அம்மாவும் தான் காரணம், பொறுப்பில்லாமல் உன்னை விட்டுட்டு அவங்க தான் போய் சேர்ந்துட்டாங்க, அதுக்கெல்லாம் நான் பொறுப்பா? என்று விசுவநாதன் கத்த,

பார்த்து பார்த்து மெதுவா கத்துங்க வயசாகுதுல்ல, பட்டுனு போய்டப்போறிங்க என்று மித்ரா சொல்ல,

மித்ராவின் தாத்தாவோ, மித்ரா இது தான் நீ பெரியவங்ககிட்ட பேசுற முறையா? என்று சொல்ல,

ஒரு கொலைகாரனுக்கு இவ்வளவு மரியாதை போதும் தாத்தா, என்றாள்.

உடனே, ரோஹித் யாரைப் பார்த்து கொலைகாரன்னு சொல்ற, என்று எகிற,

நான் சொல்லல நீங்க தான் சொன்னிங்க, வேணும்னா கேக்குறீங்களா? என்று சொல்லி அங்கு நின்ற எஸ்டேட் மானேஜரிடம், சார் அந்த ஸ்க்ரீனை பிளே பண்ணுங்க என்று கூறினாள்.

அனைவரும் ஸ்க்ரீனைப் பார்க்க, ரோஹித் மது அருந்திக்கொண்டு ஜெனிஃபருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த காட்சி தெரிந்தது,

ஆமா ரோஹித் நீ இப்படி மித்ராவை கல்யாணம் பண்ணி ஏமாத்த பிளான் பண்ணியிருக்கிங்களே இதுக்கு உங்க அம்மா ஒத்துப்பாங்களா? என்று கேட்க,

எங்க அம்மாக்கு அவ்ளோ விவரம் எல்லாம் கிடையாது, இத்தனை வருஷமா எங்க அப்பாவை நம்பி இருகாங்க இல்ல, எங்க அப்பா என்ன சொன்னாலும் மித்ரா தான் என்னை ஏமாத்திட்டு அந்த பிரகாஷ் கூட ஓடி போய்ட்டான்னு சொன்னா கூட நம்பிடுவாங்க, எங்க அம்மாக்கு நானும் எங்க அப்பாவும் சொல்றது தான் வேதவாக்கு, என்று சொல்ல,

ஓஹ் உங்க அப்பா உங்க அம்மாகிட்ட பொய் சொல்வாரா? என்று கேட்க,

குடி போதையில் இருந்த ரோஹித்தோ சிரித்துக்கொண்டே பொய் சொல்லுவாராவா? ஹ்ம்ம்… பின்ன பொய் சொல்லாம எப்படி மாமனார் வீட்டில இப்படி சகல வசதிகளோட இருக்கார்னு நீ நினைக்குற, என்று கூற,

அதுவா உங்க மாமா லவ் மேரேஜ் பண்ணி வெளியில போய்ட்டாரு தனியா இருந்த உங்க தாத்தா பாட்டியைப் பார்த்துகிறதுக்காக உங்க அம்மாவும் அப்பாவும் இங்க வந்து தங்கி இருகாங்க, மகனே வேண்டாம்னு விட்டுட்டு போனபிறகு மாப்பிள்ளை நம்மள பார்த்துக்குறாருனா தாங்க தானே செய்வாங்க, என்று ஜெனிஃபர் சொல்ல,

போன எங்க மாமா திரும்பி வராமலே இருந்ததுக்கு காரணம் எங்க அப்பா தான் என்று கூற, அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து போயினர்,

ரோஹித்தோ இந்த தவறு எங்கு எப்படி நடந்தது, ஜெனிஃபர் ரெக்கார்ட் செய்யும் வரை நாம் எப்படி விட்டுவைத்தோம் என்று யோசித்துக்ண்டிருக்க,

விஸ்வநாதனுக்கோ தன் மகனை கொன்றால் என்ன என்னும் அளவிற்கு வெறி வந்தது. இதில் உடைந்து போய் அந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்தது தெய்வநாயகியும் மித்ராவின் தாத்தாவும் தான்.

மித்ராவின் தாத்தாவை ரோஹித்தின் அம்மா ஆதரவாக பற்றிக்கொள்ள தெய்வநாயகியை மித்ரா ஆறுதல் படுத்தினாள். வீடியோவில் பேச்சு தொடர்ந்து நடந்தது,

நீங்க என்ன சொல்றீங்க? ரோஹித், உங்க அப்பா தான் உங்க மாமாவை கொன்னாரா?

ஆமா லவ் தான் முக்கியம்னு வீட்டை விட்டு போன எங்க மாமாக்கு அப்பா அம்மா மேல பாசம் அதிகம்,

என்ன தான் லவ் தான் முக்கியம்னு போயிருந்தாலும் என்னைக்கு இருந்தாலும் அப்பா அம்மாவைத் தேடி வந்திருவார்ன்னு எங்க அப்பாக்கு நல்லாவே தெரியும், அந்த மாதிரி வந்துட்டா மாமா தானே அந்த எல்லா சொத்துக்கும் வாரிசு, அந்த சொத்தை எல்லாம் என் அப்பவே அடையணும்னு நினைச்சாரு, அதனால் எங்க மாமா எங்களை தேடி வரதுக்கு முன்னாடியே எங்க அப்பா அவரை தேடி போனாரு,

வீட்டில தாத்தாவும் பாட்டியும் ரொம்போ கோவமா இருகாங்க இப்போ நீங்க வீட்டுக்கு வந்தா அது இன்னும் உங்களுக்கு பிரச்னை ஆகும்னும் மேலும் அது தாத்தா பாட்டியோட ஹெல்த்தை பாதிக்குனும் கதை சொல்லி, எங்க மாமாவை இங்க வர விடாம தடுத்தார்.

அது மட்டுமில்லாம இவங்க ரெண்டு பேருக்கும் இடையில தான் பாலமாக இருப்பதாகவும், தானே உங்களை சேர்த்து வைப்பதாகவும் …. இப்படியெல்லாம் கதை சொல்லி எங்க மாமாவை நம்பவச்சார்,

எங்க அப்பா சொன்னதை நம்பி எங்க மாமாவும் எங்க தாத்தா பாட்டியை தேடி வராமல், எங்க அப்பா வந்து சொன்ன பிறகு போகலாம்னு முடிவு பண்ணிருப்பார் போல,

ஆனால்… கொஞ்சம் நாளிலேயே எங்க மாமாக்கு இது இப்படியே இருக்கிறது சரி இல்ல, என்ன தான் நீங்க அப்பாகிட்ட பேசினாலும், நான் வந்தா என்னை பார்த்தா அப்பா டென்ஷன் ஆவாரு அது அவர் ஹெல்த்தை பாதிக்கும்னு நீங்க சொன்னாலும், நான் வராமல் நீங்களே பேசிட்டு இருக்கிறது இந்த பிரச்சனையை சரி பண்ணாது. அதனால நான் நேராவே வந்து அப்பாவை பார்த்துட்றேன்னு மாமா கிளம்பிட, இதை இதுக்குமேல விடுறது நமக்கு நல்லது இல்லனு நினச்ச எங்க அப்பா சரி நீங்க மட்டும் வாங்க, தங்கச்சி கன்ஸீவா இருக்குற இந்த நிலைமையில ட்ராவல் வேண்டாம்னு சொல்லி எங்க மாமாவ மட்டும் தனியா கூட்டிட்டு வந்து ஆள வச்சு கச்சிதமா வேலைய முடிச்சிட்டார்,

அதுக்கப்புறம் எங்க அத்தைய தேடி கொல்ல போறதுக்குள்ள எங்க அத்தை அங்கிருந்து கிளம்பிட்டாங்க,

எங்க என் அத்தை மாமாவை தேடி வீட்டுக்கே வந்திடுவாங்களோன்னு எங்க அப்பாக்கு பக்கு பக்குனு இருந்தது, ஆனால் அவரோட நல்ல நேரம் எங்க அத்தை மித்ரா பிறந்தவுடனே இறந்துபோய்ட்டாங்க, இரண்டு பெரும் இறந்துபோய்ட்டாங்க, ஆனால் அவங்களுக்கு குழந்தை இருந்தது எங்க யாருக்கும் தெரியாது.

மகன் போன துக்கத்தில் எங்க பாட்டி படுத்த படுக்கையாக, தாத்தாவையும் பாட்டியையும் பார்த்துக்குறதுக்காகன்னு எங்க அம்மாவோடு எங்க அப்பாவும் இங்கையே வந்து செட்டில் ஆயிட்டாரு, இப்போ அவர் தான் அந்த வீட்டுக்கு ராஜா, ஆனால் எங்க அத்தையோட அப்பா சாதாரண ஆள் கிடையாது,

எப்படி இருந்தாலும் பொண்ணு என்ன ஆனா ஏது ஆச்சுன்னு தேடுவார், எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையை கண்டுபிடிச்சுருவார்னு பயந்து அவங்களை கண்காணிக்கவும் எங்க அப்பா ஆள் போட்டு வச்சிருந்தார்,  இன்னும்  சொல்லப்போனால் எங்க அப்பா தடுத்ததனால் தான் எங்க அத்தையும் மாமாவும் இறந்த விஷயமே அவங்களுக்கு ரொம்போ நாள் தெரியாம இருந்துச்சு, அப்படி போட்டு வச்ச ஆள் மூலமா தான் மித்ரா அந்த வீட்டுக்கு வந்தது எங்களுக்கு தெரிஞ்சது,

திடீர்னு புதுசா ஒரு பொண்ணு வந்து அங்கேயே தங்கி இருக்கா, தங்கி படிக்கிறா, தெய்வநாயகி அம்மாவும் அந்த பொண்ணு வந்த பிறகு ரொம்போ சந்தோசமா இருக்குறாங்கனு கேள்விப்பட்டு தான் மித்ரா யாருன்னு தோண்டி துருவ ஆரமிச்சோம்,

எதாவது தத்து எடுத்துருப்பாங்க அப்படி இப்படின்னு நாங்க எதிர்பார்த்த மாதிரி இல்லாம, மித்ரா தான் எங்க மாமாக்கும் அத்தைக்கும் பொறந்த பொண்ணுன்னு தெரிஞ்சது, அது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி, இந்த விஷயம் எங்க தாத்தாக்கு ஒரு நாள் எப்படியும் தெரிஞ்சிடும், தெரிஞ்சவுடனே அவர் சொத்தையெல்லாம் அவளுக்கு மாத்தி எழுதிடுவார்னு எங்களுக்கு தெரியும், எங்க அப்பா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டது எல்லாம் வீணா போய்டும் அதனால் தான் எங்க அப்பா மித்ராவை எனக்கு கல்யாணம் பண்ணிவைக்கலாம்னு ஏற்பாடு பண்ணினார், இதை எங்க அப்பா போய் பேசினா நடக்காதுன்னு தான் எங்க தாத்தாவை விட்டே பேச வச்சார், இதெல்லாம் நினைச்ச மாதிரியே நடக்குது

சீக்கிரத்தில் மித்ராவை கல்யாணம் பண்ணி ரொம்போ சீக்கிரத்தில் அவ சொத்தையெல்லாம் வாங்கிட்டு அவளை டிவோர்ஸ் பண்ணி அனுப்பிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன், இதுக்கு எங்க அப்பாவோட முழு ஆதரவும் உண்டு,

இந்த பிளான்ல எந்த பிரச்சனையும் வராது நீ ஒன்னும் கவலை படாத, மித்ரா என்னைவிட்டு ஓடிபோய்ட்டானு கதை சொல்றதுக்கு ஏத்த மாதிரி அவளுக்கு தான் பிரகாஷ்னு ஒரு அஃபேர் இருக்கே என்று சொல்லி ரோஹித் சிரிக்க, அங்கிருந்த அனைவரும் ஸ்க்ரீனை பார்த்தபடி உரைந்து போயினர்,

இனி நடக்கப்போவது என்ன? மித்ராவிற்கு இந்த உண்மைகள் எப்படி தெரிந்தது என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்.

                                                   -நறுமுகை

11

No Responses

Write a response