என் வானவில்-20

என் வானவில்-20

கல்லூரியில் இருந்து வந்த மித்ராவை சிறிது முக்கியமாக பேச வேண்டும் என்று கூறி பிரகாஷ் வெளியில் அழைத்துக் கொண்டுவந்தான்.

சிறிது தூரம் ஒன்றும் கூறாமல் மௌனமாக வந்த பிரகாஷை பார்த்த மித்ரா என்ன ஆச்சு சத்யா  ஏதும் பிரச்சனையா? என்று கேட்டாள்.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன், இல்லை மித்ரா, நான் இந்த வீக்கெண்ட் வெளியில் போகிறேன் என்று கூறினான்.

வெளியில் என்றால் எங்கு என்று கேட்டாள் மித்ரா.

யூ.கே போக ஆப்ஷன் வந்திருக்கு, அதற்கான ஏற்பாடு எல்லாம் செய்தாயிற்று. இந்த சண்டே எனக்கு பிளைட் என்று கூறினான்.

ஓஹ்  ஆபீஸ் விசயமாகவா? போய்விட்டு எப்போது வருவீங்க?   என்று கேட்டாள்.

இரண்டு வருடங்கள் ஆகும் என்றான் பிரகாஷ்.

ஒரு நிமிடம் தன் காதில் சரியாக தான் விழுந்ததா என்று பிரகாஷை கேள்வியாக பார்த்தவள் , என்ன சொன்னீர்கள்? என்று கேட்டாள்.

நான் திரும்பி வருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் என்று சொன்னேன்….. என்று கூறினான்.

அவன் கூறி முடிப்பதற்குள் மித்ராவின் கண்களில் நீர் நிறைந்தது. அது கண்ணை விட்டு தாண்டாமல் இமை சிமிட்டி தடுத்தவள் என்ன  திடீரென்று என உள்ளே போன குரலில் கேட்டாள்  மித்ரா.

அவன் பிரிவு அவளை வருத்தம் கொள்ள செய்கிறது என்பதை உணர்ந்த பிரகாஷிற்கு ஏனோ அது இதமாக இருந்தது. அதை அவளிடம் வெளியில் காட்டாமல் , ஆஃபீஸ் ஜாயின் செய்து ஒன் அண்ட் ஆப் இயர் ஆகுது இல்லையா? வாய்ப்பு வந்தது, இப்போ தானே இதெல்லாம் எக்ஸ்ப்ளோர் பண்ண முடியும்,என்று கூறினான் பிரகாஷ்.

அதுவும் சரி தான் இப்போ தானே நீங்கள் இதை எல்லாம் எக்ஸ்ப்ளோர் பண்ண முடியும் என்று கூறிய மித்ரா, அதன் பின் எதுவும் பேசவில்லை.

சிறிது தூரம் அமைதியாக வந்தவன்,

மித்ரா எனக்கு பதிலாக என் பிரண்ட் சுஜியை உனக்கு கார்டியனாக போட்டிருக்கிறேன், உன் காலேஜிற்கும் ஹாஸ்டலுக்கு நான் ஆல்ரெடி லெட்டர் அனுப்பி இருக்கேன். ஏதாவது அவசரம் என்றால் நீ சுஜிக்கு கால் பண்ணு. எப்போதும் போல நீ ஜாக்கிரதையாக இரு, எங்கேயும் தனியாக வெளியில் போகவேண்டாம்.

 நீ பைனல் இயர் முடிக்கும்போது , நீ எம் பி ஏ ஜாயின் பண்ணுவதற்கு நான் வர ட்ரை பண்ணுகிறேன், அப்படி முடியவில்லை என்றால் அதற்கான அரேஞ்மென்ட்ஸை  நான் சுஜியை வைத்து செய்துவிடுகிறேன், என்று அவன் பேசிக்கொண்டே போக…….. 

எதிலும் கவனம் செலுத்தாமல்அவன் இரண்டு வருடங்கள் இந்தியாவில் இருக்க போவதில்லை, தன் அருகில் இருக்க போவதில்லை, என்கின்ற எண்ணமே அவளது எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

அமைதியாக வரும் அவளைப் பார்த்த பிரகாஷ், என்ன மித்ரா நான் கூறுவது உனக்கு புரிகிறதா? என்று கேட்க,

ஹ்ம்ம் புரிந்தது என்று ஒன்றுமே புரியாமல் தலையை ஆட்டினாள் மித்ரா.

அவனுக்குமே ஒரு மாதிரியாக கஷ்டமாக இருக்க, மித்ரா நான் முன்னரே சொன்னது போல தான், உன் வாழ்க்கையை தனியாக  பேஸ்  பண்ண கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா சமயத்திலும் உனக்கு யாரவது ஒருவர் உதவி செய்துகொண்டே இருக்க மாட்டார்கள்.

பாட்டி என்னிடம் எதற்கு பிரச்சனை அவளை கேர்ள்ஸ் காலேஜில் சேர்த்திருக்க வேண்டியது தானே என்று கேட்டபோது,

நான் பாட்டிக்கு சொன்ன பதில் இது தான், நீ இந்த சமூகத்தில்  அனைத்தையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது பாதுகாப்பாக வைத்திருந்துவிட்டு பின்னர் எதையும் எதிர்கொள்ள தெரியாமல் இருந்தால் அது உனக்கு கஷ்டம். அதனால் நான் உன்னுடன் இல்லாத இந்த இரண்டு வருடங்களில் உன் மன தைரியத்தை நீ வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக உனக்கு புக்ஸ், எப்போதும் போல வீடியோஸ் அனைத்தையும் உனக்கு அனுப்பி வைக்கிறேன்.

இங்கு இருந்தால் என்ன, மாதத்திற்கு ஒருமுறை உன்னை பார்க்க வருவேன் இப்போ அது முடியாது.மற்றபடி எப்போதும் போல் உன்கிட்ட போனில் பேசுவேன் வரம் ஒருமுறை வீடியோ கால் பேசுகிறேன், வேறு என்ன என்று கேட்க,

மனமில்லாமல் தலையை ஆட்டினாள் மித்ரா.

சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு தெய்வநாயகியிடம் ஒருமணி நேரம் தனியாக பேசிவிட்டு அன்று இரவே ஊருக்கு திரும்பி விட்டான் பிரகாஷ்.

என்ன தான் அவன் தினமும் போனில் பேசுவேன். வீடியோ  கால் பேசலாம் என்று கூறி இருந்தாலும் அவன் கூப்பிடும் தொலைவில் இல்லை என்பது அவளுக்கு பயத்தையும் சற்று வருத்தத்தையும் கொடுத்தது.

அதே மனநிலையில் கல்லூரி போக விரும்பாதவள் அப்படியே அந்த வாரம் முழுவதும் வால்பாறையில் இருந்துவிட்டாள். அவளுடைய சோர்ந்த முகத்தை பார்த்து தெய்வநாயகியும் அவளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார், வள்ளியை அழைத்து அவளுடன் சேர்ந்து படம் பார்க்கவோ, வெளியில் செல்லவோ முயற்சி செய்து பார்த்தார், ஆனால் மித்ரா எதிலும் விருப்பம் இல்லாமல் அமைதியாக தனியாக, ஒதுங்கியே இருந்தாள் .

அதன் பின் வழக்கம்போல, திங்கட்கிழமை காலை கல்லூரிக்கு சென்றவள் அபிராமியிடம் தன் மனவருத்தத்தை கூறி புலம்பினாள்.

அபிராமியோ, இங்கு பார் மித்ரா இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாட்டிற்கு செல்வதெல்லாம் பக்கத்து ஊருக்கு போவது போல,அவர் தான் தினம் பேசுகிறேன் வீடியோ கால் பண்ணுவதாக கூறினார் இல்லையா? நீ வேண்டுமென்றால் பார், அவர் அங்கு சென்ற பின் உன்னிடம் பேச ஆரம்பித்த பின்னர், உனக்கு அவர் வெளிநாட்டில் இருக்கின்றார் என்ற எண்ணமே இருக்காது. தேவை இல்லாமல் நீ மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதே, பிரகாஷற்கு நீ நல்லபடியா படிக்க வேண்டும், அடுத்து எம்.பி.ஏ. படிக்க வேண்டும் இதெல்லாம் தான் ஆசை, அதில் நீ உன் கவனத்தை செலுத்து என்று தன் தோழியைத் தேற்றினாள்.

அபிராமி அவளிடம் பேசிய பிறகு மித்ராவும் படிப்பில் ஒன்றிபோனாள்.

மித்ராவிற்கு எந்த பிரச்சனையும் வராது அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் பிரகாஷ், யூ.கே  பயணமானான்.யாருமே எதிர்பார்க்காத பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வர தொடங்கின. மித்ரா அவற்றை தனியாக சமாளிப்பாளா என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்

                                          –நறுமுகை

3

No Responses

Write a response