வானம் வசப்படும்…..

வானம் வசப்படும்…..

“Children must be taught how to think, not what to think.”
— Margaret Mead, cultural anthropologist

என் அன்பு சகாக்களுக்கு
பொதுவா பெற்றோர்கள் குழந்தைகளை ரொம்போ பாதுகாப்பா பாத்துக்கனுன்னு நினைப்பாங்க அதோட விளைவு பெரும்பாலான நேரத்துல குழந்தைங்களோட புது முயற்ச்சிகளுக்கு அது தடையா மாறிடுது. நம்மோட அனுபவங்களை எப்பவும் குழந்தைகள் மேல திணிக்கக்கூடாது. கீழ விழுந்துடாம சைக்கிள் கத்துக்க முடியாது, கையை சுட்டுக்காம சமையல் பழக முடியாது,தண்ணில முழுகாம நீச்சல் கத்துக்க முடியாது. இப்படி புதுசா கத்துக்குற எதுக்கு சில வலிகளை பொருத்துத்தாகணும். அந்த அனுபவங்களை உங்க குழந்தைங்களுக்கு குடுங்க அவங்க புதுசா எதாவது முயற்சி செய்யும்போது உங்க அனுபவம்னு சொல்லி அத தடுக்காதீங்க. புதுசா முயற்சி செய்யனுனு நினைக்குற அவங்க தேடல்தா அவங்களுக்கான எதிர்கால இலக்கை நிர்ணயிக்கும். முயற்சிகள் அவங்களுக்கு தோல்விகளை அறிமுகப்படுத்தும், தோல்விகளை சந்திக்க தெரிஞ்சதா வெற்றிக்கான வழி (வலி ) தெரியும். குழந்தைகள் நடக்க பழகும்போது கீழ விழுவாங்க அது அவங்க வாழ்க்கையோட முதல் தோல்வி, அப்ப அப்பா அம்மா பாட்டி தாத்தான்னு எல்லாரு போய் தூக்கிவிடுவோம் அது அவங்களுக்கு முதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அதாவது நம்ப விழுந்தா தூக்கிவிட யாராவது வருவாங்கனு, உண்மை என்னனா இன்றைக்கு இருக்க போட்டி உலகத்துல யாரும் நமக்கு கை குடுக்க வரமாட்டாங்க. அதனால உங்க குழந்தைகிட்ட அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க கீழ விழுந்த தானா எழுந்துக்க சொல்லிகுடுங்க. பசின்னு கேட்டு வரவனுக்கு பிடிச்சு வெச்சு இருக்க மீனை குடுக்குறதை விட மீன் பிடிக்க கத்துக்குடுக்குறதுத சரியான அணுகுமுறை. குழந்தைகளை அவங்க பார்வையில் உலகை பார்க்க விடுங்க உங்க அனுபவங்குற கண்ணாடியை அவங்களுக்கு போட்டுவிடாதீங்க. ஐன்ஸ்டின் அப்பா ஆராச்சியாளர் இல்லை, தந்தை பெரியார் அப்பா புரட்சியாளர் இல்லை , சச்சின் அப்பா பேட்ஸ்மேன் இல்லை, நம்ப குழந்தைகள் நமோட கற்பனைக்கு மீறின சாதனையாளர்களா வருவாங்க அதுக்கு நீங்க அவங்கள அவர்களோட போக்குல சிந்திக்க விடணும். தொடர்ந்து பேசலாம்.

என்றும் அன்புடன்
சக தோழி

3

No Responses

Write a response