“To be in your children’s memories tomorrow, you have to be in their lives today.”
என் அன்பு சகாக்களுக்கு
குழந்தைக்கு என்ன தெரியும் அப்படினு மட்டும் நினைத்துடாதீங்க மலைநீர் எப்படி மண்ணு தனக்குள்ள உறிஞ்சுகுதோ அந்த மாதிரி நம்மளோட எல்லா சிந்தனைகளையும் குழந்தைகள் உள் வாங்கிக்குறாங்க. அப்ப அவங்களுக்கு குடுக்குற விஷயங்களை நம்ம தரமானதா குடுக்கணும். பெரும்பாலான அப்பாக்களுக்கு காலைல செய்தித்தாள் படிக்குற பழக்கம் இருக்கு, மனைவி கர்ப்பமா இருக்கப்ப அவங்கள கூட உக்கார வெச்சு சத்தமா படிங்க எல்லா படிக்கனுன்னு இல்ல சாதனைகள்,புத்தக வெளியீடு , விளையாட்டு , கலை இப்படி நேர்மறை விஷங்கள் படிக்கலாம்.அதுவே உங்க குழந்தை 5 வயசுக்குள்ள இருந்த நீங்களே கூட உக்காந்து படிச்சு காட்டுங்க.இது கொஞ்சநாள் அப்புறம் அவங்களுக்கே பழக்கமாயிடும். ‘சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” குழந்தைகளுக்கு ஒரு பழக்கத்தை கொண்டு வர நமக்கு தேவை எல்லா பொறுமை. எப்படி மண்ணில் இருக்கும் நிலக்கரி வைரம் ஆக சில காலம் தேவைபடுதோ அந்த மாதிரி நம்ம குழந்தைகளை நல்ல மனிதனா மாற்ற நமக்கு நிறைய பொறுமை வேணும். இன்றைக்கு இருக்க அவசர உலகத்துல இதுக்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்குனு நீங்க கேட்கலாம் இன்றைக்கு இதுக்கான நேரம் உங்ககிட்ட இல்லைனா உங்களுக்கு உங்க குழந்தைங்களோட நேரம் வேணுன்னு நீங்க நெனைக்குறப்ப அவங்களுக்கு அந்த நேரம் இல்லாம போய்டும். இது சுழற்சி இன்று நீங்க அவங்களுக்கு வழிகாட்டி நாளை அவங்க உங்களக்கு வழித்துணை.இன்று நாம் செய்யவேண்டியதை செய்யாம நாளை அடுத்த தலைமுறையை குறை சொல்லி எந்த பயனும் இல்லை.
என்றும் அன்புடன்
சக தோழி