New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-26

கணேஷ் வந்து மிரட்டி விட்டு சென்றபின் காளிதாஸ், இர்ஃப்பானுக்கும், ஆதித்யனுக்கும் போன் பண்ணி அவரது அலுவலகத்திற்கு வர சொன்னார். வந்தவர்களிடம் கணேஷ் தன்னிடம் பல முறை கேஸ்ஸை விட்டு விலகி கொள்வதற்காக மிரட்டியது பற்றியும், இறுதியாக தான் தொடர்ந்து கேஸ்ஸை எடுத்தால் பாரதி மீது தகாத குற்றச்சாட்டு கோர்ட்டில் வைக்கபடும் என்று மிரட்டி விட்டு சென்றதையும் கூறினார்.

அதை கேட்ட இர்ஃப்பானும், ஆதித்யனும் மிகுந்த கோவம் அடைந்தனர். இர்ஃப்பான், வேகத்தோடு இதெல்லாம் என்ன லாயர் சார், அவனைசார்ந்த யாரோ தப்பு பண்ணிருக்காங்க, அவர்கள் இந்த கேஸ்ல மாட்டினா அவனுக்கு வேற கேஸ்ல பிரச்சனை, அதுக்காக ஒரு சின்ன பொண்ணுமேல இந்தமாதிரி பலி சொல்லுவனு எவ்வளோ தைரியமா உங்க ஆபீஸ்ல வந்து மிரட்டிட்டு போயிருக்கான் இவனுக்கு எல்லாம் இந்த தைரியம் எங்க இருந்து வருது?

என்ன இர்ஃப்பான் ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறீங்க!! இதெல்லாம் பொலிடிகல் பவர் குடுக்கற தைரியம். நாளைக்கே நீங்க கணேஷ் மேல ஒரு கேஸ் போட்டு, மேல் இடத்துல இருந்து அவனை ரிலீஸ் பண்ண சொன்ன நீங்க பண்ணாம போய்டுவீங்களா? என்று காளிதாஸ் கேட்க இர்ஃப்பானால் பதில் கூறமுடியவில்லை.

ஆனால் இர்ஃப்பானுக்கு மனம் ஆறவில்லை, ஒரு சின்ன பெண்ணிற்கு எந்த நிலை ஏற்பட்டிருக்கு, இந்த சமயத்திலும் அவன் தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக அந்த பெண் மேல் மேலும் சேற்றை வாரி இறைப்பேன் என்று கூறுவது மிகவும் வேதனையாக இருந்தது.

யோசனையில் நின்ற இர்ஃப்ப்பானிடம், காளிதாஸ் நம்ம கோவப்பட்டு ஒன்றும் செய்ய முடியாது. இப்ப நீங்க உண்மையாவே பாரதிக்கு உதவி செய்யனுன்னு நினைச்ச கணேஷும் அவனோட அந்த கூலி ஆட்களும் சம்பந்தப்பட்ட இன்னொரு கேஸ் என்ன? அதுக்கான வலுவான சாட்சியங்கள் இதையெல்லாம் நீங்க திரட்ட பாருங்க. நான் முதல் இரண்டுக்கும் முடிஞ்சவரை வாய்த வாங்க பார்க்குறேன். நீங்க அந்த கேஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை கொண்டு வந்தா, கணேஷ் இந்த கேஸ்ல தேவையில்லாம பாரதி மேல பலி போடாம நம்ம கிட்ட கொஞ்சம் பயந்து ஒதுங்கி போவான். அந்த கேஸ்காண ஆதாரத்தையும் நீங்க ஸ்டராங்கா  கொண்டு வந்துட்டீங்கன்னா மூணு பேரோட சேர்த்து இந்த பண முதலையையும் உள்ள அனுப்பிடலாம். இவன் மேலயிருக்க தப்பு ஆதார பூர்வமா  நிரூபிக்க பட்டு மீடியால வந்துருச்சுன பெரிய இடம் சப்போர்ட் பண்ண பயந்துகிட்டு, அவர்கள் நல்ல பேருக்கு பிரச்சனை வந்துருனு அமைதியா போயிருவாங்க.

கரெக்ட் சார், ரகசியமா நாலு பேர் வெச்சு அந்த கேஸ்ஸை நான் விசாரிக்க சொல்றேன். பாரதி கேஸ்ல டைரக்டா இன்வால்வான ஆஃபீஸர்ஸ் இருக்காங்க, ஆனா அந்த கேஸ்ல அவங்க மாட்டுவாங்கனு நீங்க நினைக்குறீங்களா சார்?

கண்டிப்பா மாட்டுவாங்க இர்ஃப்பான் அவன் என்னவோ பெரிய தப்பு பண்ணிருக்கான், அதனாலதான் இவங்க மூணு பேரையும் இவ்வளோ பாதுகாப்ப வெச்சுருக்கான். இப்பவும் அவங்க மூணு பேரையும் பாதுகாக்கத்தான் இங்க வந்து இவ்வளோ தூரம் பேசிட்டு போயிருக்கான். அதனால அவ கண்டிப்பா எங்கயோ தப்பு பண்ணிருக்கான், அது என்னனு மட்டும் நீங்க கண்டுபுடிச்ச போதும்.

ஓகே சார் நான் கண்டிப்பா அதுக்கான வேலைய பார்க்குற. எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க. அந்த டைம்ல கோர்ட்ல வாய்தா மட்டும் வாங்குங்க.

அதை நான் பார்த்துக்குறேன்.

சார் இன்னொன்னும் கேட்கனுன்னு நினைச்சேன், அட் எனி பாயிண்ட்  இந்த கேஸ் விசயமா பாரதி  கோர்ட்க்கு வர வேண்டியது இருக்குமா?

இல்ல இர்ஃப்பான் பாரதி கோர்ட்க்கு வர தேவையில்ல. மாஜிஸ்ட்ரேட் அவளோட வாக்குமூலத்த வீடியோ டேப் பண்ணிருக்காங்க, வெல்ஃபேர் ஒர்க்கர் பாரதியோட மெண்டல் கண்டிஷன் பார்த்து அவ கோர்ட்டுக்கு வரது நல்லதுயில்லைனு சொல்லிருக்காங்க. அதனால பாரதி கோர்ட்க்கு வர தேவையில்ல. மாயா மட்டும் கோர்ட்ல அஃஜெர் ஆகுற மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சு மாயாக்கு அது ஒன்னும் பிரச்சனையில்ல.

ஓகே சார், பாரதி கோர்ட்க்கு வராம இருக்குறதுதான் நல்லது. இவர்கள்  இருவரும் பேசிகொண்டே இருக்கும் பொழுது ஆதி ஏதும் பேசாமல் அமைதியாக  இருந்தான். பேசி  முடித்தவர்கள் இப்போதுதான் அதை உணர்ந்து என்ன ஆதி நாங்க ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கோம், அதுவும் அந்த ஆள் பாரதி பத்தி இந்த மாதிரி ஒரு  குற்றச்சாட்டை வைபேன்னு தைரியமா வந்து சொல்லிட்டு போயிருக்கான், அதை கேட்டுட்டு நீங்க அமைதியா இருக்கீங்க?

காளிதாஸ் சார் நீங்க ஒரு பெரிய லாயர், நீங்க ஒரு நண்பர்ங்குற அடிப்படையில இந்த கேஸ்ல எனக்கு ஹெல்ப் பண்ண வந்துருக்கீங்க. நீங்க உங்களுக்காக என்ன பீஸ் கோட் பண்ணாலும் நான் கொடுக்கத்தான் போறேன். பொலிடிகல் சைட் எனக்கும் பவர் இருக்கு, என்னோட பொண்ண இப்படி பண்ணுனவங்கள சும்மாவிட மாட்டனு தெரிஞ்சுமே அவன் இங்க வந்து எவ்வளோ தைரியமா உங்கள மிரட்டிட்டு போயிருக்கான்.

அப்ப எந்த வசதியும் இல்லாம, ஒரு ஏழை குடும்பத்துல இருந்து வர பொண்ணு இந்த மாதிரி ஒரு பாதிப்பிற்குள்ளான இவங்க எல்லாம் அந்த பொண்ண என்ன சார் பண்ணுவாங்க? நம்மகிட்ட பணம் இருக்கு, பவர் இருக்கு, அப்படி இருக்கும்போதே நம்ம கிட்ட எவ்வளோ தைரியமா மோதுறாங்க, உங்க பொண்ணு மேல இப்படி ஒரு பலியை போடுவேன்னு நேர்ல வந்து மிரட்டிட்டு போயிருக்கான். எந்த பண பலமும், அதிகார பலமும் இல்லாத குடும்பத்துல இருந்து ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு அநியாயம் நடந்துச்சுனா, அந்த பொண்ணுக்கு இந்த நாட்டுல எண்ணிக்குமே நீதி கிடைக்காதா?

இதை நம்ம இப்படியே விட்டுட போறோம்மா? இப்ப நம்ம வீட்டு பொண்ணுக்கு வந்துருக்கு, நம்மனால தண்டனை வாங்கி கொடுக்க முடியும், தண்டனை வாங்கி கொடுத்த உடனே என்னோட வேலை முடிஞ்சுருச்சுனு நிம்மதியா தூங்கிட முடியுமா?

பாரதி மாதிரி எத்தனை சின்ன பொண்ணுங்க, இன்னைக்கு நானும், சஞ்சனாவும் என்ன நடந்தாலும் சரி இந்த சமூகத்தை எதிர்த்து நிற்குறதுனு முடிவு பண்ணிருக்கோம். நாங்க பாரதிக்கு அந்த தைரியத்தை கொடுப்போம். கண்டிப்பா பாரதிய ஒரு ரூம்குள்ள, வீட்டுக்குள்ள முடங்கி போக விடமாட்டோம். ஆனா இந்த சமூகத்த பேஸ் பண்ண பயப்படுறவங்க இதை எப்படி எடுத்துப்பாங்க? அவங்க குடும்பமே அதோட முடிஞ்சு போச்சா? ஒரு சிலரோட கொஞ்சோ நேர வெறிக்கு ஒரு குடும்பமே பலி ஆகுறதா? இதெல்லாம் இங்க யாருமே கேக்கறது கிடையாது. இதுக்கெல்லாம் என்ன சார் முடிவு?

ஆதி நீங்க சொல்லுற எல்லாமே எனக்கு புரியுது. உங்கள நாங்க பார்க்க வரதுக்கு முன்னாடி எங்க வீட்ல ஒரு விஷயம் நடந்துச்சு. நீங்க சொல்ற அந்த எனக்கென்ன அப்படினு போற குரூப்ல நானும் ஒரு ஆளாத இருந்த என்று கூறி, காளிதாஸ் தன் வீட்டில் நடந்த சம்பவத்தை ஆதியிடம் விலக்கி கூறினார்.

கேட்டுக்கொண்டிருந்த இர்ஃ ப்பான் உண்மைதான் சார், எனக்கு இது ஒரு கேஸ் ஆனா வீட்ல அம்மா, அக்கா, தங்கச்சி எல்லாம் இது ரொம்ப கொடுமை அந்த குடும்பமே ஒடஞ்சு போயிரும். அந்த பொண்ணால இதுலயிருந்து வெளிய வரவே முடியாது. அந்த பொண்ணோட வாழ்க்கையே போயிருச்சு, அவ ஒரு சின்ன பொண்ணு, அவளோட சிறகை ஒடைச்சுட்டாங்கனு, அவங்க கண் கலங்கி பேசுறப்பதான் அதோட வலியே எனக்கு புரிஞ்சுது.

இதுக்கான குரல் நம்ம வீட்டு பெண்கள் கிட்டயிருந்து தான் வரனும். இதோட வலி என்ன, வேதனை என்ன, நமக்கும் பொறுப்பு இருக்குனு வீட்ல இருக்க பொண்ணுங்க சொன்னாதான் நமக்கு தெரியுது.

சரிதான் அதை நான் ஒத்துக்குறேன் என்ற ஆதி, காளிதாஸிடம் திரும்பி சார் கேஸ் விஷயம நீங்க என்ன பன்ணுன்னு நினைக்குறீங்களோ யுவர் விஷ். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஏன் இப்படி பண்ணீங்க, ஏன் இதை இப்படி பண்ணலன்னு கேள்வி கேட்க்க போறது கிடையாது. பாரதி கோர்ட்டுக்கு வர தேவை இல்லனு நீங்க சொல்லிட்டீங்க. மாயா கோர்ட்க்கு வரணுன்னு நீங்க சொல்லிருக்கீங்க. எனக்கு பாரதியும்,மாயாவும் வேற வேற கிடையாது. மாயா கோர்ட்டுக்கு வந்துட்டு போறதுனால அவளோட வாழ்க்கையில எந்த பாதிப்பும் வந்துர கூடாது. அதை பார்த்து கொஞ்சம் கவனமா ஹாண்டில் பண்ணுங்க.

இர்ஃப்பான் நீங்க இந்த கேஸ்ல ஆல்ரெடி எங்களுக்காக நிறைய ஹெல்ப் பண்ணிருக்கீங்க. மேலும் இதுல இன்வால்வாகி கணேஷ் மாதிரி ஒரு பெரிய ஆளோட பகையை சம்பாதிச்சுக்கணுமா வேணாமங்குறது உங்களோட பர்சனல் விஷயம். பட் நீங்க ஹெல்ப் பண்னணுன்னு நினைக்குறீங்கன ரியல்லி தாங்க யு ஃபார் தட்.

என்னால இந்த விஷயத்தை பாரதிக்கு நடந்த அநியாயத்துக்கு தண்டனை வாங்கி கொடுத்ததோட விட முடியாது. கூடிய சீக்கிரம் ஒரு ஆப்ளிகேஷனோட வருவேன். அப்ப நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று கூறி அங்கிருந்து வெளியேறி விட்டான் ஆதி.

காளிதாஸிற்கு ஆதியின் மனநிலை நன்றாக புரிந்தது. அவன் ஒரு தகப்பன் என்ற நிலையை தாண்டி சமூகத்தில் ஒரு பொறுப்பான இடத்தில் இருக்கும் மனிதன் என்ற முறையில் தனக்கு கடமைகள் இருப்பதாக நினைப்பதை காளிதாஸ் புரிந்து கொண்டார். அவருமே நீதி வாங்கி கொடுக்கும் இடத்தில் இருக்கும் தனக்கும் தார்மீக பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்துதான் இருந்தார். ஆதித்யன் என்ன வேண்டுகோளோடு வந்தாலும்  கண்டிப்பாக அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

இர்ஃப்பானும் பாரதி கேஸ்ல் சம்பந்தபட்ட நான்கு காவல் துறை அதிகாரிகளை வைத்து கணேசனின் வரலாறை தோண்ட தொடங்கினான். இந்த போரில் வெற்றி பெற போவது யார் என அறிய தொடர்ந்து வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”.

-நறுமுகை ஈஸ்வர்

9

No Responses

Write a response