New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-18

மாலைவேளைகளில் வரும் வாசுவுடன் ஆதியின் அலுவலக அறையில் அமர்ந்து செமினாருக்கு தயார் செய்து கொண்டிருந்தாள் சஞ்சனா. வீட்டில் அவர்கள் மட்டும் இருந்த வரையில் நினைத்த நேரத்தில் சஞ்சனாவிடம் வம்பு செய்துகொண்டு, கட்டியணைத்து கொஞ்சுவது ஆதியின் வழக்கம். பாரதி பிறந்த பின்னரும் அவன் அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை, சிலசமயம் பாரதியையும் சஞ்சனாவையும் சேர்த்து அணைத்து கொஞ்சுவான். மரகதம் வந்த பிறகு அது முற்றிலுமாக நின்றுபோனது. எந்த நேரமும் ஹாலில் உட்கார்ந்து இருக்கும் மரகததால் ஆதிக்கு அந்த சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. மரகதம் வருகை தான் இதற்கு காரணம் என்று உணராமல் ஒரு சொல்லத்தெரியாத கோவத்தில் இருந்தான் ஆதி. அந்த சமயம் தான் வாசுவும் வீட்டிற்கு வர தொடங்கினான்.

வாசு வர தொடங்கி ஒரு வாரம் கழித்து அலுவலகத்தில் இருந்து வந்த ஆதியின் கண்ணில்படுவதுபோல தோட்டத்தில் அமர்ந்து இருந்தார் மரகதம். எப்போதும் ஹாலில் அமர்ந்திருக்கும் மரகதம் வெளியில் இருப்பது பார்த்து அவரிடம் சென்றான் ஆதி.

அவனை பார்த்ததும் போலி ஆச்சரியம் காட்டிய மரகதம் வாப்பா இப்பதான் வரியா? உன்னோட கார் சத்தம் கேட்டதும் சஞ்சனா வந்திருப்பாளே என்று வாசலில் தேடுவதுபோல பாவனை செய்தவர் அட மறந்துட்ட வாசு தம்பி வந்திருக்கு சஞ்சனாக்கு எல்லா மறந்துபோயிடும், இப்பவெல்லாம் பாரதியகூட மாயாதான் சாய்ந்தரத்துல பாத்துக்குற. சரி நீ உள்ள வாப்பா உனக்கு காபி கொடுக்க சொல்ற என்று ஆதியின் மனதில் விஷத்தை ஏற்றிவிட்டு தனது திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார் மரகதம்.

வாரத்தில் மூன்று நாள் பாரதி மாயாவுடன் பார்க் செல்வது வழக்கம். பாரதி நடக்க தொடங்கிய நாளில் இருந்து வழக்கத்தில் இருக்கும் ஒன்று ஆனால் அதை இன்று திரித்து சொன்னார் மரகதம். ஆதிக்கு இருக்கும் கோவத்தில் இதுவும் சேர்ந்துகொண்டது, அதை நினைத்துக்கொண்டே உள்ளே சென்றவன் நேராக தங்கள் அறைக்கு சென்று அடைந்துகொண்டான். அலுவலக அறையில் இருந்த சஞ்சனாவிற்கு ஆதி வந்தது தெரியாது, மாலை அவள் பேசியபோது அவன் வர தாமதமாகும் என்று கூறியிருந்தான், சீக்கிரம் வாங்கப்பா மிஸ்ஸிங் யூ என்று கணவனிடம் சிறிதுநேரம் காதல் பேசிவிட்டுத்தான் வைத்தாள் சஞ்சனா. ஆனால் மரகதம் கூறிய விஷயங்களில் ஆதிக்கு சஞ்சனா பேசியது மறந்துபோனது.

தன்னை தவிர தன் காதல் மனைவிக்கு யாரும் முக்கியமாக இருக்கக்கூடாது என்று நினைக்கும் ஆதிக்கு வாசு வந்தால் அவள் உன்னை உன் குழந்தையை மறந்துபோவாள் என்பதுபோல பேசிய மரகதத்தின் பேச்சு கோவத்தை உண்டுபண்ணியது. அந்த கோவம் பேசிய மரகதத்தின் மீது வராமல் சஞ்சனா மீது வந்ததுதான் தவறாக போனது.

வாசு கிளம்பியதும் வெளியில் வந்த சஞ்சனா ஆதியின் கார் பார்த்து எப்போது வந்தார் என்ன கூப்பிடகூட இல்லை என்று நினைத்து வேகமாக அறைக்கு சென்றாள். அங்கு அவன் இருட்டில் படுத்திருக்க விளக்கை போட்டவள் என்னாச்சு தயா இப்படி இருட்டுல படுத்திருக்கீங்க வந்து என்ன கூப்பிடகூட இல்ல உடம்பு சரியில்லையா என்று நெற்றியில் கைவைத்து பார்த்தாள். தனக்கு என்றதும் துடிக்கும் அவள் பாசம் கண்டு அவன் கோவம் குறைந்தவனாக ஒன்னுமில்லை தலைவலி என்றான்.

என்ன கூப்பிடாம எதுக்கு தனியாப்படுத்திருக்கீங்க என்று கேட்டவள் தையிலம் தேய்த்து இதமாக பிடித்துவிட்டாள் அப்போதைக்கு கோவம் குறைந்து அமைதியானான் ஆதி. ஆனால் அவன் கோவத்தை தினமும் சீண்டி விட்டுக்கொண்டிருந்தார் மரகதம்.

சஞ்சனா வீட்டில் பெரும்பாலும் அவளது போனை கையில் வைத்திருக்க மாட்டாள் ஆதி வீட்டு எண்ணிற்கு அழைத்துதான் பேசுவான். அது தெரிந்திருந்த மரகதம் வீட்டு போனை மாலை வேலைகளில் எடுத்துக்கீழே வைத்துவிட்டு ஆதி சஞ்சனா போனிற்கு அழைக்கும் போது தொல்லை இருக்க கூடாது என்று போனை சஞ்சனா கீழ எடுத்துவைத்துவிட்டதாக சொன்னார். ஆதிக்கு தன்னை தொல்லை என்று தன் மனைவி நினைக்குறாளா என்ற எண்ணம் கசந்தது. இயல்பாக மாயா இன்னைக்கு பாரதியை வெளியில் அழைத்து செல்லவேண்டும் என்று சொல்லுவது தவறாக தெரிந்தது.

கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் ஆதியிடம் வாசுவின் பெயரை சொல்லிக்கொண்டிருந்தார் மரகதம். மாலை சிற்றுண்டி கொடுத்துவிட்டு வாசுவிற்கு பிடித்தது என்று செய்தது என்று சேர்த்து சொல்வார். ஆதி வீட்டில் இருக்கும் நேரம் குறைந்தது தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று நம்பிக்கையோடு இருந்த சஞ்சனா அந்த ஒதுக்கத்தை கவனிக்க தவறினாள். அவள் எப்போதும்போல போனில் பேசினாள், அவனுடன் நேரம் செலவிட்டாள் ஆனால் ஆதி மனதில் விழுந்திருந்த நச்சு விதை ஆதியினால் நேராக சிந்திக்க முடியாமல் செய்தது.

மரகதம் எதற்கெடுத்தாலும் வாசு வந்தான், அவனுக்கு பிடிச்சது, சஞ்சனா வாசுவுடன் பேசிக்கொண்டிருக்கிறாள், போன்ற வார்த்தைகளை விடாது ஆதியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பாரதி தன்னிடம் இணையாக விளையாடும் வாசுவை பற்றி ஆவலாக தனது தந்தையிடம் பேச தொடங்கினாள். எங்கு சென்றாலும் குடும்பத்தில் யாருடன் பேசினாலும் வாசு என்ற பெயர் வருவது இயல்பாகி போக ஆதி கொதித்து போனான்.

அவன் சஞ்சனாவை சந்தேகப்படவில்லை அவளுடைய நேரம் கவனம் தனக்கு இல்லை என்ற கோவம். அனைத்தும் ஆதி என்று இருந்தவள் இப்போது தான் கோவமாக இருப்பதுகூட தெரியாது இருக்கிறாள் என்ற ஆத்திரம் சில காயங்களை விட்டால் தன்னால் ஆறிவிடும் அதுபோல மரகதம் இல்லாமல் இருந்திருந்தால் வாசு வருகை அந்த வீட்டில் சாதாரணமாக இருந்து இருக்கும் ஏன் ஆதியே கூட அவனுக்கு எப்படி பேசவேண்டும் என்று சொல்லிகொடுத்திருப்பான் ஆனால் மரகதம் அப்படியெதுவும் நடக்காமல் பார்த்துக்கொண்டார், மேலும் ஆதியின் காயத்தை தொடர்ந்து குத்தி விட்டுக்கொண்டேயிருந்தார்.

அன்று ஆதிக்கு பிசினஸில் பிரச்சனை வெகுகாலமாக இருந்த கிளைன்ட் இவர்களை பணவிஷயத்தில் ஏமாற்றப்பார்த்து மாட்டிக்கொண்டனர். ஆதி அனைவரையும் பிடித்து வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டான். ஆனால் அவனுக்கு கோவம் குறையவில்லை, அவர்கள் இதற்கு முன்னும் இதை செய்திருக்கிறார்கள் நாம் அறியாமல் இருந்திருக்கோம் என்று அவன்மீதே அவனுக்கு கோவம். அந்த கோவத்தோடு வீட்டிற்கு வந்தான்.

அன்றுதான் வாசு செமினாரில் சிறப்பாக ப்ரெசென்ட் செய்து அவார்ட் வாங்கியிருந்தான். பாரதி சிறிது உடம்பு சரியில்லாமல் இருந்ததால் சஞ்சனா உடன் செல்லவில்லை எனவே வாசு செமினார் முடிந்ததும் சஞ்சனாவிற்கு அழைத்து கூறினான். அதை கேட்டு ஆனந்தத்தில் இருந்த சஞ்சனா அந்த நேரம் வீட்டிற்கு வந்த ஆதியிடம், தயா செம ஹாப்பி நியூஸ் வாசு செமினார்ல அவார்ட் வங்கியிருக்கான் நான் செம ஹாப்பி என்று சந்தோசத்தோடு கூறியவளை கன்னத்தில் ஓங்கி அடித்தவன் நிறுத்துடி என்று கோவத்தின் உச்சியில் உறுமினான்.

அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த மாயா அந்த காட்சி கண்டு உறைந்துபோய் நின்றாள். வீட்டு வேலையாள் அனைவரும் சத்தம் கேட்டு ஓடிவந்தனர், மரகதம் உள்ளுக்குள் சந்தோசத்தோடு அதை வெளியில் காட்டாமல் நின்றுகொண்டிருந்தார்.

இது எதுவும் ஆதி கவனத்தில் பதியவில்லை, அவன் கண்ணை கருத்தை கோவம் மறைத்திருந்தது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தைகளை கொட்டினான்.

நானு பார்த்துட்டே இருக்க எல்லா நேரமும் வாசு வாசுனு பினாத்திட்டே இருக்க உனக்கு நான் புருஷனா அவனா, அந்த கேள்வியில் மனம் நொருங்க அமைதியாகி போன சஞ்சனா இன்றுவரைக்கும் ஆதியிடம் விளக்கம் கேட்கவில்லை.

புருஷன் என்ன டென்ஷன்ல இருக்கான் என்ன மனநிலையில இருக்கான் எதுவும் உனக்கு முக்கியம் இல்லை அந்த வாசு தான் முக்கியம். குழந்தையை பார்த்துக்க முடியாம அப்படி என்னடி உனக்கு வாசு கூட வேலை. இது என்னோட வீடு இந்த வீட்டுல எல்லாம் என் இஷ்டப்படிதான் நடக்கணும் நீ உட்பட அதுல அடக்கம். இனி யாரும் இந்த வீட்டுக்கு என்னோட அனுமதியில்லாம வரக்கூடாது, நீயும் எங்கயும் போக கூடாது என்று கத்தினான்.

அமைதியாக அந்த இடம்விட்டு சென்ற சஞ்சனா திரும்பி பெட்டியுடன் இறங்கி வந்தவள் பாரதியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் செல்ல முற்பட்டாள் அவர்கள் குறுக்கில் வந்து வழிமறித்த ஆதியை தீ கக்கும் கண்களால் பார்த்தாள். அந்த பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் வழிவிட்டு நின்றான் ஆதி. ஆறு வருடம் கழித்தும் அந்த பார்வையை அவனால் மறக்க முடியவில்லை.

செல்லும் அவர்களை தடுக்கமுடியாமல் நின்ற ஆதிக்கு என்ன நடந்தது, என்ன பேசினோம், ஏன் பேசினோம் எதுவும் புரியவில்லை. வெளியே சென்றவர்களை மாயா சஞ்சனா அம்மா வீட்டிற்கு அழைத்து சென்றாள். அவர்களை விட்டுட்டு நேரே ஆதி வீட்டிற்கு வந்தால் மாயா அங்கு தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த ஆதி முன் சென்று நின்றாள்.

நீங்களா சார்! உங்க வாய்ல இருந்த அவ்வளோ மோசமான வார்த்தைகள் வந்துச்சு, அவங்க உங்க மனைவி ஒருநாளைக்கு பத்து போன் எனக்கு பண்ணி நீங்க சாப்பிட்டீங்களா, தண்ணி குடிச்சீங்களா, ஒர்க்ல ரொம்போ டென்ஷன் இல்லையேன்னு உங்கள பத்தி எப்பவும் கேட்டு தெரிஞ்சுப்பாங்க. வாசுவை அவங்க பிள்ளை மாதிரி நினைச்சாங்க அன்னைக்கு நீங்க எனக்கு அடைக்கலம் கொடுத்த மாதிரி அவங்க வாசுக்கு சப்போர்ட் பண்ணனுனு நினைச்சாங்க. கொஞ்ச வருஷம் முன்னாடி நம்ப ரெண்டு பேரும் அதே ரூம்ல நைட் முழுக்க வேலை செஞ்சிருக்கோம் நம்பள மோசமா பேச மேடம்க்கு எவ்ளோ நேரம் ஆகியிருக்கும்.

என்னமா விட்ட பேசிக்கிட்டே போற எதோ கோவத்துல ரெண்டு வார்த்தை பேசிட்டான் அதுக்காக இவ வீட்டை விட்டு போய்டுவாள? அப்புறம் ஆதிக்கு என்ன மரியாதை. அவன் மேல அவ்ளோ அக்கறை இருக்கவ கூடவே இருந்து நீங்க சொல்ற மாதிரி நடந்துக்குறங்கனு சொல்லி நிரூபிச்சிருக்கனும். அதைவிட்டுட்டு வீட்டை விட்டு வெளில போன என்ன அர்த்தம் என்று அவர்கள் பிரிவை நிரந்தரமாக்க ஆதியை மேலும் தூண்டிவிடும் வேலையை செய்தார் மரகதம்.

அவரை வெறுப்போடு பார்த்த மாயா, அதுக்கு அர்த்தம் அவங்களுக்கு மானரோஷம் இருக்கு செய்யாத தப்புக்கு எதையும் நிரூபிக்குற அவசியம் அவங்களுக்கு இல்லை என்று பதில் கொடுத்தவள், ஆதியிடம் திரும்பி சார் தப்பான சகவாசம் சகுனியோட உபதேசம் எப்போதும் நன்மையை விளைவிக்காது. யாரு பேச்சுக்கு செவி சாய்க்குறீங்கறதுல கவனமா இருங்க.

அப்ப என்ன சகுனினு சொல்றீயா என்று மரகதம் எகுற,

நான் யாரையும் சொல்லல குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுகுது என்று சொன்ன மாயா அங்கிருந்து வெளியேறினாள்.

ஆதிக்கு தான் செய்த தவறின் அளவு புரிந்தது, சஞ்சனா அவனுக்கு எல்லாமுமாக இருந்தவள், மாயா சொன்னதுபோல அவன் விஷயம் என்றால் கூடுதல் கவனம் அக்கறை எல்லாம் இருக்கும். அவளை பார்த்து எப்படி அந்த வார்த்தை சொன்னேன், என்றாவது அவள் தன்னை மன்னிப்பாள என்று யோசித்தவன் தன் கோவம் சக்தி அனைத்தும் வற்றிப்போய் அவனது அறைக்கு சென்றான்.

மரகதம் தனது அறைக்கு சென்று சந்தோசமாக அவர் வெற்றியை மகளிடம் பகிர்ந்துகொண்டிருந்தார். ஆதி எப்போது மரகதத்தின் உண்மை முகத்தை அறிவான். அறிய தொடர்ந்து வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”.

-நறுமுகை

4

No Responses

Write a response