என் வானவில்-6

என் வானவில்-6

பாட்டியையும், அக்காவையும் காணச் சென்ற பிரகாஷ் பத்து நாள் கழித்து அன்று தான் வீடு திரும்பி இருந்தான். அதே நாளில் தான் மித்ராவிற்கு அவளது பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியது.

அவளது குரூப்பில் பள்ளி அளவில் அவள் தான் முதலிடம் எடுத்திருந்தாள். சண்முகம் மிக மகிழ்ச்சியாக இருந்தார். மகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிச்சென்று ராஜராஜனை பார்த்து அவளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பேசிவிட்டு வந்தார்.

அவள் வீட்டிற்கு வருவதற்குள் ராஜராஜன் ஜெயலட்சுமிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி இருந்ததால், வரும் வழியிலேயே மித்ராவை பார்த்து வாழ்த்துக்களை கூறி அவளுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அவள் ஜெயலட்சுமியுடன் பேச தொடங்கவும் சண்முகம் அவரது வீட்டிற்குள் சென்று மறைந்தார்.

அன்று காலை தான் வந்து சேர்ந்த பிரகாஷ் சிறிது நேரம் உறங்கிவிட்டு அப்போது தான் எழுந்து வெளியில் வந்தான்.

தன் அன்னையிடம் பேசிக்கொண்டிருக்கும் மித்ராவை பார்த்துக்கொண்டே வந்தவன், தன் அன்னையின் அருகில் நின்றான். அவனை பார்த்ததும் மித்ரா பொதுவாக புன்னகைத்துவிட்டு ஜெயலட்சுமியிடம் நான் பிறகு  வருகிறேன் ஆன்ட்டி என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், தன் தாயிடம் திரும்பி என்னமா விசேஷம் காலையிலேயே ரொம்ப சந்தோசமா பேசிக்கொண்டிருக்கீங்க என்று கேட்க,

இன்று மித்ராவிற்கு ரிசல்ட் வந்தது, காமஸ் குரூப்பில் அவள் தான் ஸ்கூல் பர்ஸ்ட் அவளுடைய அப்பா காலையிலேயே ஸ்கூலுக்கு அழைத்து சென்று நம் அப்பாவிடம் அவளை காலேஜ் சேர்த்துவதற்காக எல்லாம் பேசிவிட்டு வந்துவிட்டார். நாளை காலையில் ஏதோ காலேஜிக்கு போவார்கள் போல, மித்ரா பயங்கர சந்தோசமாக இருக்கிறாள். இங்க வந்த இந்த மூன்று மாதங்களில் இந்த பொண்ணை இப்போது தான் சந்தோசமாக பார்க்கின்றேன்.

அவள் மனதிற்கு அவள் நன்றாக இருக்க வேண்டும், என்றார் ஜெயலட்சுமி.

அது தான் நீங்க வாழ்த்திவிட்டீர்களே அப்போ அவள் நன்றாக தான் இருப்பாள் என்று பிராகாஷ் ஜெயலட்சுமியை கிண்டல் செய்ய,

போடா உனக்கு எப்போதுமே கிண்டல் தான் என்று கூறிவிட்டு, வீட்டிற்குள் செல்ல திரும்பினாள் ஜெயலட்சுமி.

அப்போது அந்த தெருவில் ஏதோ பலமாக மேள தாளம் சத்தம் கேட்க,இன்றைக்கு என்ன விசேஷம் என்று அவர் ஆச்சர்யத்துடன் திரும்பி பார்க்க, அந்த தெருவில் ரவுடி என்று அனைவராலும் அறியப்பட்ட பன்னீர்செல்வம் மாப்பிள்ளை கோலத்தில் பத்து நபர்கள் அவனை சுற்றி சீர் வரிசை தட்டுடன்  மேளதாளத்துடன் மித்ராவின் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

இவன் எதற்கு மித்ரா வீட்டிற்கு வருகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்பொழுதே அந்த கும்பல் மித்ராவின் வீட்டிற்குள் நுழைந்தது.

அவர்கள் உள்ளே சென்று ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வரும்வரை என்ன நடக்கிறது என்று அந்த தெருவில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் இவனுக்கு இந்த வீட்டில் என்ன வேலை என்பது போல மித்ராவின் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தனர். வந்தவர்கள் அனைவரும் வெளியில் வர கடைசியாக வந்தவன், மாமா ஞாபகம் இருக்கட்டும் எங்கே போனாலும் உங்க பொண்ணை நான் தூக்கிக்கொண்டு வந்து கட்டிக்கொள்வேன் என்று கூறிவட்டு சென்றான் பன்னீர்செல்வம்.

இவன் பொண்ணு என்று யாரை கூறுகிறான் என்று ஜெயலட்சுமி நினைக்க,

அடுத்த ஐந்து நிமிடத்தில் சண்முகம் கழுத்தை பிடித்து தள்ள வெளியில் வந்து விழுந்தாள் புவனா.

இங்கே பார் வர வர உன் ஆட்டம் அளவுக்கு மீறி போய்விட்டது. நானும் போனால் போகிறது, போனால் போகிறது, என்று பொறுத்து போய்விட்டேன். ஆனால் என்று நீ என் பொண்ணு வாழ்கையை நாசம் பண்ண இந்த அளவிற்கு துணிந்துவிட்டாயோ இனி உனக்கும் இந்த வீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. மரியாதையா உன் பொண்ணையும் மகனையும் கூட்டிக்கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியே போய்விடு என்று கத்தினார், சண்முகம்.

அதை கேட்டதுமே அங்கு சுற்றி நின்றுகொண்டிருந்த அனைவருக்குமே புரிந்துவிட்டது, புவனா மித்ராவை பன்னீர்செல்வத்திற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருக்கிறாள் என்று.

சண்முகம் புவனாவை கன்னம் கன்னமாக அறைய அங்கு நின்றிருந்த யாருக்கும் சிறிதுகூட பரிதாபமாக தோன்றவில்லை. இன்னும் நாலு போட்டால் கூட தப்பில்லை என்ற ரீதியில் தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஹேமா தான் அவசரமாக வந்து தன் தாயை சண்முகத்திடம் இருந்து பிரித்து நிறுத்தினாள்.

புவனாவோ அவர் அடித்ததை பற்றியோ, கூறியதை பற்றியோ கவலை படாமல், என்னை அடித்து வெளியில் அனுப்பிவிட்டால் உன் பொண்ணை காப்பாற்றிவிடலாம் என்று நினைக்கின்றாயா இவள் இருப்பதால் தான் என் பொண்ணு வாழ்க்கை என் வாழ்க்கை எல்லாம் நாசமாக போனது. இவளை நான் சும்மா விட மாட்டேன். என்னை மட்டும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்யும்போது உனக்கு நல்லா இருந்ததா? இவளை நான் கண்டிப்பாக இரண்டாம் தாரமாக தான் கொடுப்பேன். நீ என்னை வெளியில் அனுப்பினாலும் அந்த பன்னீர்செல்வம் நிச்சயமாக உன் பொண்ணை  இந்த உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் தேடி பிடித்து கல்யாணம் பண்ணுவான். 

நீ எப்படி அவனிடமிருந்து உன் பொண்ணை காப்பாற்றுகிறாய்னு என்று நான் பார்க்கிறேன். நீ அவளை படிக்க வைக்கிறேன்னு அவளுக்கு பெரிய இடத்தில் கல்யாணம் பண்ணுகிறேன்னு கிளம்பினால் நாளைக்கு எனக்கும் என் பொண்ணுக்கும் என்ன மிஞ்சும். இவளை மரியாதையா பன்னீர்செல்வத்திற்கு கல்யாணம் பண்ணி வைத்து அவன் கொடுக்கிற பணத்தை என் பொண்ணு பெயரில் டெப்பாசிட் பண்ணும் வழியை பாரு, அதை விட்டுவிட்டு உன் பொண்ணை காப்பாற்றுகிறேன்னு எதாவது செய்தால் அந்த பன்னீர்செல்வம் உன்னையும் உன் பொன்னையும் இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடுவான் என்று ஆங்காரமாக கத்தினாள்.

 எனக்கு என் பொண்ணை எப்படி காப்பாற்றுவது என்று தெரியும் நீ இந்த வீட்டை விட்டு முதலில் வெளியில் போ என்று அவர்களை வெளியில் தள்ளி கதவை அடைத்தார்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை உள்ளிருந்து கேட்டுக்ண்டிருந்த மித்ராவிற்கு தன் காதுகளில் விழுந்தவற்றையும் இங்கே நடந்தவற்றையும் நம்பவே முடியவில்லை.

இன்று காலையில் தான், இனி தான் நினைத்தது போல படிக்கலாம், தான் நினைத்த துறையில் வேலை செய்யலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தவளுக்கு இந்த விஷயம் அதிர்ச்சியாக இருந்தது. அதுபோக அவளது சித்தி கூறியதை போல் அந்த பன்னீர்செல்வம் தான் எங்கு சென்றாலும் தன்னை தேடிக் பிடித்துகொண்டு வந்துவிடுவானோ என்ற பயம் அவளுக்கு அதிகமாக இருந்தது. சுற்றி நடக்கும் எதையும் உணராமல் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் மித்ரா.

இங்கு நடப்பதை பார்த்து கொண்டிருந்த ஜெயலட்சுமியோ இவள் எல்லாம் ஒரு பொண்ணா? புருஷனை இழந்துவிட்டு நின்றவளை இந்த மனுஷன் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்ததற்கு இவள் இந்த மனுஷனையும் அந்த பொண்ணையும் எவ்வளவு படுத்துகிறாள். இவள் எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாள் என்று சாபம் கொடுத்துவிட்டு, இப்போது நாம் அங்கு செல்வது முறையல்ல என்று நினைத்து தன் வீட்டிற்குள் சென்று ராஜராஜனுக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.

நீ அதெல்லாம் ஒன்றும் கவலை படாதே அந்த பொண்ணு மேஜர் அவளை அப்படி எல்லாம் யாரும் கட்டாயம் செய்து கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. நான் சண்முகம் கிட்ட பேசுகிறேன் நாம் போலீசில் புகார் கொடுக்கலாம். அந்த லேடி அங்கிருந்து போன பிறகு நீ மித்ராவை பார்த்து ஆறுதல் கூறு என்று சொன்னார் ராஜராஜன். இங்கு நடக்கும் அனைத்தையும் யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷ், தன் போனை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றான்.

இனி நடக்கப்போவது என்ன? மித்ராவின் முடிவு என்ன இதிலிருந்து பிரகாஷ் அவளை காப்பாற்றுவானா ? என அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.

நறுமுகை   

                                                                                                                                                 

3

No Responses

Write a response