என் வானவில்-33

என் வானவில்-33

அங்கிருந்த அனைவரும் என்ன நடக்கப்போகிறது? யார் இவர்கள் ? என்ற கேள்வியோடு பார்த்துக்கொண்டிருக்க,

மேடைக்கு வந்த மித்ராவின் தாத்தா தெய்வநாயகி அம்மாவிடம் நீங்க பெரிய மனுசங்க இப்படி செய்ரது உங்களுக்கே நல்லா இருக்கா? சங்கமித்ராவை உங்களுக்கு மட்டும் முழுசா சொந்தம்னு சொல்றது எப்படி நியாயம் என்று கேட்க,

தெய்வநாயகி பதில் கூறுவதற்கு முன் இடைபுகுந்த பிரகாஷ்,

ஐயா உங்களுக்குள்ள இருக்கிற குடும்ப பிரச்சனையை பிறகு பேசிக்கலாம் உங்களுக்கு கோவமே இருந்தாலும் நீங்களே சொல்ற மாதிரி சங்கமித்ரா உங்கள் வீட்டு பொண்ணு தான் அவளுக்காக நடக்கிற விழா இது. இதில்  எந்த பிரச்சனையும் வேண்டாமே, விழா நல்லபடியா முடியட்டும், அதுக்கு அப்புறம் நாம் இதை பத்தி பேசிக்கலாம் என்று கூற,

ரோஹித்தோ, இது எங்க குடும்ப விஷயம் நீ எதுக்கு தேவை இல்லாம தலையிடுற? என்று பிரகாஷின் மீது பாய்ந்தான்.

ஆனால் மித்ராவின் தாத்தாவோ ரோஹித் நீ அமைதியா இரு, யார் சொன்னா என்ன? அந்த தம்பி சொல்றதில் நியாயம் இருக்கு, விழா நல்லபடியா முடியட்டும் என்றவர், அமைதியாக சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

அதன் பின் தெய்வநாயகியும் மற்றவர்களும் வந்திருந்தவர்களை நல்ல விதத்தில் கவனித்து அனுப்பி வைத்தனர்.   வந்திருந்தவர்ளும் எதோ சலசலப்பு என்று புரிந்துகொண்டு விரைவாக கிளம்பிவிட்டனர். அனைவரும் கிளம்பிய பிறகு, தெய்வநாயகி, பிரகாஷ், சங்கமித்ரா, அபிராமி,பிரகாஷின் பெற்றோர்,சுஜி, ராம், சண்முகம், ரோஹித், மித்ராவின் தாத்தா, விஸ்வநாதன் என அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

மித்ராவின் தாத்தா, பேச தொடங்கினார், இங்க பாருங்கம்மா…  என்ன நடந்துச்சு நீங்க ஏன் மறச்சீங்க என்று எதை பத்தியும் நான் கேட்கப்போறதில்லை,

ஆனால் மித்ராவை நீங்க மட்டும் தனியா சொந்தம் கொண்டாட முடியாது, உங்க பொண்ணு காயத்ரிக்கு சங்கமித்ரா மேல என்ன உரிமை இருக்கோ அதே உரிமை என் மகன் அசோகனுக்கும் இருக்கு, இன்னும் சொல்ல போனால் சங்கமித்ரா நியாயப்படி எங்க வீட்டு வாரிசு, நீங்க இந்த விஷயத்தை மறைத்தது தப்பு ஆனால் அதை பத்தி நான் இப்போ பேச விரும்பல,

எங்க வீட்டு பொண்ணை எங்களோடு அனுப்பிவிடுங்க என்று கூற,

மித்ரா, அதிர்ந்து போனாள், யார் இவங்க? எங்க அப்பாவின் சொந்தமாக இருந்தாலும்  எங்க அம்மா நான் போகவே கூடாதுன்னு சொன்ன இடத்துக்கு இவங்க என்னை கூப்பிடறாங்களே என்று மனதிற்குள் எண்ணி கலங்கினாள்.

தெய்வநாயகியோ நல்லா இருக்குங்க உங்க பையனும் என் பொண்ணும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டபோது எதிர்ப்பு தெரிவிச்ச நீங்க, இப்போ பேத்தின்னு உரிமை கொண்டாடுவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கு.

நான் மட்டும் இல்லையே நீங்களும் தானே எதிர்ப்பு தெரிவிச்சிங்க என்று விஸ்வநாதன் கூற,

தெய்வநாயகியோ நான் இல்லை அது மித்ராவின் தாத்தா தான் எதிர்ப்பு தெரிவிச்சார், இப்ப அவர் இல்லை, வீட்டை விட்டு போன பொண்ணின் ஞாபகத்திலேயே அவர் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு போய்ட்டார். நல்லா வாழணும்னு ஆசைப்பட்டு போன பொண்ணும் அல்பாய்சுலயே போய் சேர்ந்துட்டா. அப்போ இருந்து இப்போ வரை இருபது வருஷமா நான் தனியா தான் இருக்கேன். உங்களுக்காவது உங்க  பொண்ணு, மாப்பிள்ளை, பேரன்னு எல்லாரும் இருந்தாங்க, அப்படி யாரும் இல்லாம இந்த வீட்டில் தனியாவே இருந்த எனக்கு என் தனிமையை போக்க என் பொண்ணு அனுப்பி வச்ச வரமா தான் மித்ராவை நான் பாக்குறேன்.

எந்த நிலையிலும் அவளை முழுசா உங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று கூற,

மித்ராவின் தாத்தாவோ இல்லம்மா நீங்க பேசுறது சரியில்லை. நான் கோர்ட்டுக்கு போவேன் என்று கூறினார்.

தெய்வநாயகியோ நீங்க எங்க வேணும்னாலும் போங்க,மித்ரா மேஜர் அவ எங்க இருக்கணும்னு நினைக்கிறாளோ அங்க தான் இருப்பா, என்று கூற,

நீங்க இத்தனை நாள் அவளை கூட வச்சிருந்தீங்க அவளை பார்த்துக்கிட்டிங்க, நீங்க அவளது பாட்டினு சொன்னா அவ கண்டிப்பா உங்க கூட இருக்கணும்னு தான் விருப்பப்படுவா.எங்களை பத்தி அவளுக்கு எதுவுமே தெரியாது, அப்படி இருக்கிறப்போ அவ எங்க கூட வரமாட்டேன்னு சொல்றது ரொம்போ இயல்பான விஷயம் அதை உங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கணும்னு நினைக்காதீங்க, என்று கூற,

தெய்வநாயகியோ இங்க பாருங்க, மித்ரா ஏற்கனவே நிறைய பிரச்சனைகளில் இருந்து இங்க வந்தா, இப்போ தான் கொஞ்சம் நாளா அவளது வாழ்க்கையை அவ நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கா, நாம் ரெண்டுபேரும் இப்படி உரிமை போராட்டம் நடத்துறதுனால அவ நிம்மதி கெடுவதில் எனக்கு சம்மதம் இல்லை. இன்னைக்கு நான் அவளுக்காக பார்த்து பார்த்து ஏற்பாடு பண்ணின விழாவை நீங்க கெடுத்துட்டீங்க, உங்களுக்கு உண்மையிலும் உங்க பேத்தி மேல பாசம் இருந்திருந்தா விழாவுக்கு முன்னாடியோ விழாவுக்கு அப்புறமோ,வந்திருக்கலாமே? உங்களது தேவை எல்லாம் அவள் மீது இருக்கும் உரிமையை நிலைநாட்டனும் என்கிற எண்ணம் தான். அவளோட சந்தோசத்தை பத்தி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த நம்பிக்கையில் இவளை நான் உங்களோடு அனுப்புவது? என்று தெய்வநாயகி கேட்க,

மித்ராவின் தாத்தாவிற்கு தான் செய்தது தவறோ என்ற எண்ணம் தோன்றியது. என்ன தான் ரோஹித்தும் விஸ்வநாதனும் கூறி இருந்தாலும் கூட, தான் விழா முடியும் வரை காத்திருந்திருக்க வேண்டுமோ, மற்றவர்கள் முன்னாடி இந்த பிரச்னையை கிளப்பி மித்ராவை குழப்பி இருக்க கூடாதோ? என்று நினைத்தவர், நான் செய்தது தப்பு தான் நான் அதை ஒத்துக்கிறேன். ஆனால் அந்த தப்பிற்காக  என் பேத்தி மீது எனக்கிருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று மித்ராவின் தாத்தா கூற,

தெய்வநாயகி எதோ பேசுவதற்கும் முன் பிரகாஷ் இடை புகுந்து, நான் ஒரு நிமிடம் பேசலாமா? என்று கேட்டான்.

ரோஹித்தோ , இது எங்க குடும்ப பிரச்சனை, முதல்ல உன்னை இங்க உள்ள விட்டதே தப்பு, நீ என்ன பேசப்போற, என்று எகிற,

அதுவரை அமைதியாக இருந்த மித்ரா,  மிஸ்டர். ரோஹித் எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்கு புரியாதா? மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசனும் என்கிற பழக்கம் உங்கள் இரத்தத்திலேயே கிடையாதா? என்று அவன் மீது பாய்ந்தாள்.

அதுவரை ஒரு வார்த்தை கூட பேசாத தன் பேத்தி பேசுவதை பார்த்து ஆச்சர்யப்பட்ட மித்ராவின் தாத்தா, ரோஹித் நீ கொஞ்சம் அமைதியா இரு, நீ என்ன தம்பி சொல்லணும் சொல்லு என்றார்.

சார், உங்க ரெண்டு பேருக்கும் மித்ரா மேல உரிமை இருக்கு, நான் அதை ஒத்துக்கொள்கிறேன்.பாட்டி சொன்ன மாதிரி மித்ரா ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா,இப்போ நீங்க ரெண்டு பேரும் இப்படி விவாதம் பண்றதும், அவளை வச்சு உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரதும், அவளுக்கு இன்னும் மனக்கஷ்டத்தை தான் கொடுக்கும். அவள் இப்போ தான் டிகிரி முடிச்சிருக்கா,இன்னும் மூணு மாசம் அவளுக்கு லீவ் தான், நீங்க சொன்ன மாதிரி அவ பாட்டி கூட இருந்ததால் தொடர்ந்து பாட்டி கூட இருக்கணும்னு விருப்பப்படுவா, அது இயல்பு இந்த மூணு மாசம் மித்ரா உங்க கூட இருக்கட்டும், அதன்பிறகு அவ எங்க இருக்கணும்னு அவ முடிவு பண்ணட்டும்.

ஆனால் அங்கிருக்கிற சமயத்துல, நீ இங்க தான் இருக்கணும், நான் உன்னை அப்படி பார்த்துப்பேன் இப்படி பார்த்துப்பேன் என்றெல்லாம் நீங்க சொல்ல மாட்டிங்கனு நான் நம்புகிறேன் என்று கூற,

மித்ராவின் தாத்தாவோ  நான் இதுக்கு சம்மதிக்கிறேன், அங்கு என் பேத்திக்கு நீங்க நினைக்கிற மாதிரியான எந்த தொந்தரவும் நடக்காது. அவ அங்கு இயல்பா இருக்கலாம் நாங்க யாரும் அவளை தொந்தரவு பண்ண மாட்டோம் மூணு மாசத்துக்கு பிறகு அவள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம், என்று கூற,

ரோஹித், விசுவநாதன் இருவரும் இந்த பிரகாஷ் இதை காரணம் இல்லாமல் செய்யமாட்டான், இப்போ என்ன பண்றது? என்று யோசித்துக்கொண்டிருந்தனர்,

மித்ராவிற்கும் தெய்வநாயகிக்கும் இதில் உடன்பாடு இல்லை என்றாலும் கூட, இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால்   மீண்டும் மீண்டும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று நினைத்து, நானும் இதற்கு ஒப்புக்கொள்கிறேன் என்றார் தெய்வநாயகி.

பிரகாஷ் மித்ராவை பார்க்க, மித்ராவோ, நீங்க என்ன சொன்னாலும் சரி சத்யா, என்று  கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள் .

ரோஹித்திற்கு, பிரகாஷின் மீது வன்மம் எழுந்தது, அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.

அப்போ சரி, எப்போ நாங்க மித்ராவை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்? என்று மித்ராவின் தாத்தா கேட்க, ஒருவாரம் டைம் குடுங்க நானே அவளை கூட்டிக்கொண்டு வந்து உங்க ஊரில் விடுறேன்  என்று கூறினான் பிரகாஷ்.

எதுக்கு அந்த ஒரு வாரம் நாங்க ஏதும் சொல்ல கூடாதுனு சொல்லிட்டு நீங்க வச்சி பிரைன்வாஸ் பண்ணி அனுப்ப போறிங்களா? என்று  ரோஹித் நக்கலாக கேட்க,

பிரகாஷோ,  திடீர்னு நீங்க இப்படி கிளம்பனும்னு சொன்னா எப்படி? என்ன தான் நான் சொன்னேன்னு அவ வர ஒத்துக்கொண்டாலும் அவளுக்கு அந்த மாற்றத்தை ஏத்துக்கொள்ள கொஞ்சம் நாள் வேண்டாமா?அதுக்கு தான் அந்த ஒரு வாரம் டைம். மூணு வருசமா மித்ரா இங்கதான் இருக்கா, நாங்க இந்த ஒரு வாரத்தில் எதையும் புதுசா சொல்லவோ செய்யவோ போறது இல்லை என்று ரோஹித்தை பார்த்து கொண்டே கூறினான்.

மித்ராவின் தாத்தாவோ, சரி அடுத்தவாரம் திங்கள் கிழமை நாங்கள் மித்ராவை அங்க எதிர்பார்க்கிறோம் என்று கூறிவிட்டு, கிளம்பலாம் ரோஹித், என்று தன் பேரன் மற்றும் மாப்பிளையுடன் வெளியேறினார்.

கலகலப்பாக தொடங்கிய நாள் இப்படியா முடியனும், என்று நினைத்து கொண்டு அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர்.

அங்கோ ஊருக்கு சென்று சேர்ந்த விஸ்வநாதனும் ரோஹித்தும் அப்பா முதலில் இந்த பிரகாஷ்க்கு ஒரு வழி செய்யனும் அவன் இருக்கும் வரை மித்ரா விஷயத்தில் நம் திட்டம் போடும் எதுவுமே நடக்காது பிரகாஷ் மித்ராக்கு முன்னிருக்கும் அரண் மாதிரி, அவனை அடிச்சு உடைச்சாதான் நாம் மித்ராவை நெருங்க முடியும்.

மித்ரா பிரகாஷ் மேல கண்மூடித்தனமா நம்பிக்கை வச்சிருக்கா, அவன் மலையில் இருந்து குதின்னு சொன்னா கூட அவ குதிப்பா,  என்று கூற

விஸ்வநாதனோ, ரோஹித், நான் உனக்கு அப்பா….. எவ்வளவோ பாத்துட்டேன், இந்த பிரகாஷை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும், நீ அதை பத்தி எல்லாம் பெருசா கவலைப்படாத, முதலில் மித்ரா இங்க வந்து சேரட்டும்  பின்னர் நடக்கவிருப்பதை பிறகு பார்த்துக்கலாம் என்று கூறினார்.

விஸ்வநாதனால் பிரகாஷுக்கு வரப்போகும் ஆபத்து என்ன?  ரோஹித்தும் விஸ்வநாதனும் மித்ராவை வைத்து  போட்டிருக்கும் திட்டம் என்ன? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்   “என் வானவில்.

                                          – நறுமுகை.

3

No Responses

Write a response