New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-10

என்னமா கல்யாணத்தை நிறுத்தப்போறன்னு சொல்லிட்டு இப்படி சும்மா உக்காந்திருக்க என்று கேட்டுக்கொண்டே தன் அன்னை அருகில் வந்து அமர்ந்தாள் மேனகா.

அதைத்தாண்டி யோசிச்சுட்டு இருக்க, இந்த  ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர், போட்டோல இல்லாதவங்கள இருக்குற மாதிரி காட்டு வாங்களே அந்த மாதிரி நமக்கு ஒரு ஆள் வேணும்.

ஒஹ்ஹஹ, மார்பிங் பண்ணவா,

ஆமா, ஆமா அதேதான். அந்த மாதிரி ஒரு ஆள் வேணும் பணத்துக்காக செய்றவன இருக்கனும். பிரச்சனைன்னு வந்த நம்பள கட்டிக்குடுக்க கூடாது.

அவ்ளோதான, ஆள் நான் பிடிக்குற, அவன் யாருக்கு வேலை செய்றானு தெரியாமலே வேலைய முடிச்சுகலாம், இன்னைக்கு அதுக்கெல்லாம்  நிறைய வழி இருக்கு என்றவள், ஆனா அம்மா அவங்க அது போலினு கண்டுபிடிச்சுட்டா பொண்ணு வீட்டுல இல்லனாலும், ஆதி கண்டிப்பா கண்டுபிடுச்சுடுவானே,

பொண்ணு வீடு போட்டோவை குடுத்து ஆதி கிட்ட விளக்கம் கேட்டுட்டாலே அதை பெரிய பிரச்சனையாக்கி உன்ன நம்பாத இப்படி ஒரு பொண்ணு உனக்கு தேவையானு கேட்டு ஆதி மனச கலைச்சி இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்.

அப்ப சரி போட்டோ ஏற்பாடு பண்றது என்னோட வேலைம்மா, ஆனா இந்த விஷயம் எல்லாம் அப்பாக்கு தெரியாம பார்த்துக்கணும், இல்லனா நம்பள அவரே காட்டிக்குடுத்துடுவாரு.

உங்க அப்பா கடக்குறாரு, நியாயம் நேர்மைனு பினாத்திக்கிட்டு தான் நாம்ப இன்னும் இப்படியே இருக்கோம். அவரை எல்லாம் நான் கவனிச்சுக்கிறேன் நீ கவலைப்படாதே என்று உறுதியாக சொன்னார் மரகதம்.

சஞ்சனாவிற்கு இறுதியாண்டு தேர்வுகள் முடிந்தது, திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்தது. பாலகுமாரும், கிருஷ்ணவேணியும் பத்திரிகை வைக்க உறவினர் வீட்டிற்கெல்லாம் சென்று வந்தனர். அப்படி அவர்கள் இல்லாத ஒரு நாளில், மரகதம் மேனகா தயார்செய்து அனுப்பிய புகைப்படங்கள் ஒரு கடிதத்தோடு சஞ்சனா கையில் கிடைத்தது.

அதை பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள். அது ஆதி இப்படியா என்று நினைத்து அல்ல, யாரு இந்த திருமணத்தை நிறுத்த இவ்வளவும் செய்கிறார்கள் என்று எண்ணி.

அதன் உடன் இருந்த கடிதத்தை படித்தாள்,

நிச்சயத்துக்கு முன்னாடியே வார்னிங் கொடுத்தும் நீங்க அதை பெருசா எடுத்துக்கலை, பணக்கார இடம் இதெல்லாம் சகஜம்னு நின்னாச்சுடீங்க போல. ஆனா இந்த போட்டோ பார்த்துக்கப்புறம் அப்படி நினைக்க முடியாது. இன்னும் காலம் கடந்துடல உங்க பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தீக்கோங்க.

இப்படிக்கு,

நலம்விரும்பி

சஞ்சனா அந்த போட்டோஸ்ஸை திரும்ப பார்த்தாள், மிகவும் மோசமாக சித்தரிக்கபட்டிருந்தது. அனால் அது உண்மையாக இருக்கோமோ என்று அவளுக்கு ஒரு நிமிடம் கூட தோன்றவில்லை. ஆதியை பிடிக்காதவர்கள், இந்த திருமணத்தை நிறுத்தவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுகிறார்கள் என்று அவளுக்கு புரிந்தது. ஆதியோட எதிரிகள் யார், யார் இந்த அளவிற்கு அவர்மேல் விரோதத்தோடு இருப்பது? இதை எப்படி கண்டுபிடிப்பது, இதுபோல் ஒரு போட்டோஸ் அண்ணன் கையில் சிக்கினால் கண்டிப்பாக திருமணத்தை நிறுத்தி விடுவான். என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு ஆதியின் பெரியம்மா, பெரியப்பா நியாபகம் வந்தது. உடனே அவர்களை பார்க்க கிளம்பி சென்றாள்.

தீடீரென சஞ்சனாவை பார்த்த ஆதியின் பெரியம்மா கற்பகம், சஞ்சனா!!!!! வா வா என்ன ஆச்சர்யம் எப்படிம்மா இருக்க,

நல்ல இருக்கேன் அத்தை, கல்யாணத்துக்கு முன்னாடி நான் இங்க வரலாமானு தெரியல…….

நீ இங்க தாராளமா வரலாம், ஆதி வீட்டுக்குதான் போக கூடாது, உள்ள வா எக்ஸாம் எல்லாம் எப்படி பண்ண, வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா,

எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை, எக்ஸாம் நல்லா பண்ணியிருக்கேன். மாமா வீட்டுல இல்லையா?

இல்லம்மா, வேலையா வெளியில போயிருக்காரு கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு, இரு நான் உனக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்.

அதெல்லாம் எதுவும் வேண்டாம் அத்தை,

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது முதல்முறையா வீட்டுக்கு வந்திருக்க எதாவது சாப்பிட்டுட்டுதான் போகணும் என்று கூறியவர் அவளுக்கு காபியும் பலகாரமும் கொண்டு வந்தார், அவர்கள் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போதே ஆதியின் பெரியப்பா குமரவேல் உள்ளேவந்தார்.

சஞ்சனாவை பார்த்து ஆச்சர்யபட்டவர், வாம்மா எப்ப வந்த,

இப்பதான் மாமா, உங்ககிட்டயும் அத்தைகிட்டயும் முக்கியமான விஷயம் பேசணும்,

என்னமா விஷயம் என்றவரிடம் அந்த போட்டோவையும், லெட்டரையும் கொடுத்தாள்.

அதை   வாங்கி படித்தவர், அந்த போட்டோஸ் பார்த்து அதிர்ந்து போனார். இதை வெச்சு ஆதியை என்று அவர் சொல்லி முடிக்கும் முன் தடுத்தவள்,

நான் ஆதியை சந்தேகபட்டு உங்ககிட்ட வரலை, இந்த திருமணத்தை நிறுத்த ஆதியை  பிடிக்காதவங்க யாரோ இதை செய்றாங்க, அவங்க நோக்கம் இந்த கல்யாணத்தை நிறுத்துறது மட்டும்தான் என்று சஞ்சனா சொன்னவுடன் குமரவேல் துணுக்குற்றார், ஆனால் அதை அவளிடம் கட்டிக்கொள்ளவில்லை. தொடர்ந்து பேசிய சஞ்சனா, உங்களுக்கு அவரோட பிசினெஸ் எதிரிகள் பற்றி தெரியும் அதுனாலதான் இதை உங்ககிட்ட கொண்டுவந்தேன். இதை நான் எப்படி சொல்லி ஆதிகிட்ட பேசுனாலும் தப்பா போறதுக்கு வாய்ப்பு இருக்கு அதுனாலதான் உங்ககிட்ட வந்தேன்.

இப்படி ஒரு போட்டோ பார்த்தும் ஆதி மேல சந்தேகபடமாயிருக்கியே, நெஜமாலும் அந்த பையன் கொடுத்துவெச்சவன் தான், உன்னைத்தான் கல்யாணம் செய்வேனு அவன் பிடிவாதமா இருந்தது ஏன்னு எனக்கு நல்ல புரியுது என்ற குமரவேல், இந்த பிரச்னையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி சஞ்சனாவை அவர்களுது காரிலேயே வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

சஞ்சனா சென்றதும் என்னங்க இது, இப்படி செய்ற அளவுக்கு அவனுக்கு எதிரி யாருங்க என்று ஆற்றாமையோடு கேட்டார், கற்பகம்.

இது எதிரி செஞ்ச வேலை இல்லை, துரோகி செஞ்ச வேலை கற்பகம்.

நீங்க என்ன சொல்ரீங்க எனக்கு புரியலை,

இது மரகதம் பார்த்தவேலை, இந்த கல்யாணத்தை நிறுத்ததுனு நினைச்சது அவதான், பிசினெஸ் வட்டாரத்துல இவ்வளோ கீழ்தரமா செய்யக்கூடிய ஆளுங்க யாரும் இல்லை. அப்படியேனாலும் பிசினஸ்ஸில் கைவைப்பார்களே தவிர சொந்தவாழ்கைக்குள் இப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள். நீ மரகதத்திற்கு போன் செய்துவர சொல்ல, ஆதி கல்யாண விஷயத்தில் பிரச்சனை என்று சொல்.

அவர் சொன்னபடி கற்பகம், மரகததிடம் சொல்ல அடுத்த ஒருமணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் மரகதம். முழுக்க சந்தோசத்தோடு வந்தவர், என்ன அண்ணா பொண்ணு வீட்டுல பிரச்சனை பண்றங்களா, எனக்கு தெரியும் எல்லா பணத்துக்காக வரவங்க, சாதாரண மிடில் கிளாஸ் பணத்தை பார்த்ததும் ஆசை வந்து அதையும் இதையும் டிமாண்ட் பண்றாங்களா  என்று அடுக்கிக்கொண்டே போக, வாயைமூடு என்று உச்சக்குரலில் கத்தினார் குமரவேல்.

அந்த ஆவேசத்தில் பயந்துபோய் வாயை மூடிக்கொண்டார் மரகதம்.

நீ போடுற ட்ராமால இங்க பழிக்காது, காசுக்காக கல்யாணத்தை நிறுத்த நினைக்குறது யாருனு எனக்கு நல்லாவே தெரியும். எவ்வளோ தைரியம் இருந்த இப்படி ஒரு போட்டோஸ் ரெடி பண்ணி பொண்ணு வீட்டுக்கு அனுப்பி இருப்ப என்று போட்டோஸ்ஸை மரகதம் முகத்தில் வீசினார் குமரவேல்.

பொண்ணு வீட்டில் ஆதியிடம் இதை பற்றி கேட்பார்கள் அதனால் பிரச்சனை ஆகும் என்று  நினைத்தால், இந்த போட்டோஸ் எப்படி இவரிடம் வந்தது, அதுவும் நான்தான் செய்தேன் என்று எப்படி இவர் கண்டுபிடித்தார் என்று யோசித்து குழம்பிப்போனார் மரகதம்.

என்ன முழிக்குற இதல்லாம் எனக்கு எப்படி தெரிஞ்சுதுன்னா?? உன்ன தவிர எல்லாரும் முட்டாள்னு நினைக்கிறியா, ஆதி கூட கொஞ்ச நாள் பழகுன பொண்ணு அது சொல்லுது எனக்கு ஆதி மேல சந்தேகம் இல்லை, இந்த கல்யாணத்தை நிறுத்த யாரோ செய்ற வேலைனு அந்த பொண்ணுக்கு தெளிவா தெரியுது, அப்ப உன்னபத்தி  நல்ல தெரிஞ்ச எனக்கு இதை நீ தான் செஞ்சன்னு கண்டுபிடிக்குறது அவ்வளோ கஷ்டம் இல்லை.

இங்கபார் உன்னோட புருஷன் நல்ல மனுஷன் அவருக்காகதான் இவ்வளோ நாள் உன்ன பொறுத்துபோனேன். எப்ப நீ ஆதி வாழ்க்கையை கெடுக்க நினைச்சியோ இனி நான் சும்மா இருக்கமாட்டேன். இப்பவே போலீஸ்க்கு கூப்பிடுறேன் என்று  குமரவேல் கூற,

அண்ணா, அண்ணா ஏதோ என்னோட பொண்ண கட்டிக்குடுக்கனுனு ஆசையில செஞ்சுட்ட, தயவுசெஞ்சு இதை பெருசு பண்ணாதீங்க இனி நான் இப்படியெல்லாம் செய்ய மாட்டேன் இந்த ஒரு தரவ மன்னிச்சுடுங்க என்று கைகூப்பினார்.

நீ சொன்னது எல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி கையெழுத்து போட்டு குடு,

அண்ணா என்ன சொல்ரீங்க,

நீ சொன்னதை அப்படியே எழுதிக்கொடு  அப்பதான் உனக்கு பயம் இருக்கும். 

வேறு வழியில்லாமல் அவர் கேட்டதை எழுதி கொடுத்தார் மரகதம். இனி இந்த கல்யாணத்தை நிறுத்த தன்னால் முடியாது என்று உணர்ந்தவர், தன்னை சரியான இடத்தில் காட்டிக்கொடுத்த சஞ்சனாவை நேரம் பார்த்து பழிவாங்காமல் விடப்போறதில்லை என்று மனதில் கருவிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.

சஞ்சனா நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. அதேபோல் குமரவேல் மற்றும் கற்பகமும் கல்யாணத்தை நிறுத்த நினைத்தது யார் என்று சஞ்சனாவிடம் சொல்லவில்லை. இந்த விஷயங்களை ஒருவரிடம் மற்றவர் சொல்லி இருந்தால் பின்னர் சஞ்சனா வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவை தடுத்திருக்கலாம். பின்னர் நடக்கப்போவது என்னவென்று அறிந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது.

திருமணத்திற்கு 20வது நாட்கள் இருந்த நிலையில், திருமண வேலைகள் பரபரப்பாக நடந்தது. ஆதி திருமணத்திற்கும், அதன்பின்னும் சில நாட்கள் பிசினெஸ்ஸை கவனிக்க முடியாது என்று, முடிந்தவரை முக்கியமான வேலைகளை முடிக்கும் மும்முரத்தில் இருந்தான்.

அன்று  இரவு 9 மணியளவில் ஆதிக்கு அழைத்தாள் சஞ்சனா, சோர்வாக ஹலோ சொன்னவன் என்ன சனா இந்த டைம்ல,

இந்த டைம் அஹ்ஹ் இப்ப டைம் என்ன தெரியுமா, நைட் 9 ஆச்சு,

ஒஹ்ஹஹ் 9 ஆயிடுச்சா, கவனிக்கவேயில்லை வேலை சரியாய் இருந்துச்சு. நம்ம ஜெனரல் மேனேஜர்க்கு வேற உடம்பு சரியில்லை, அவர் இருந்துயிருந்த எனக்கு இந்த டைம்ல ரொம்போ ஹெல்ப்பா இருந்துயிருக்கும். அப்பா காலத்துல இருந்து இங்க ஒர்க் பன்றாரு, நம்பிக்கையான ஆள்.

அவருக்கு உடம்புக்கு என்ன நீங்க போய் பார்த்துட்டு வந்தீங்களா?

நான் போய் பாக்கணுமா….. என்று இழுத்தான்,

என்ன தயா உங்களுக்கு விசுவாசமான ஆள், உங்க அப்பா காலத்துல இருந்துயிருக்காருன்னா, அவரு பேமிலி மாதிரி இல்லையா? நீங்க கண்டிப்பா போய் பார்க்கணும்.

உனக்கு மட்டும் இதெல்லாம் எப்படி தோணுது சனா,

இதெல்லாம் ரொம்போ சாதாரண எமோஷன்ஸ் அம்மா இருந்த உங்களுக்கு சொல்லியிருப்பாங்க, இப்பவும் ஒன்னுமில்லை இனி நான் சொல்லித்தரேன்.

லவ் யூ சனா…….

அவன் அப்படி சொல்லவும் ஒரு நிமிடம் சனாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, தினமும் லவ் யூ, மிஸ் யூ சொல்லிக்கொள்ளும் காதலர்கள் இல்லை அவர்கள், நிறைய அறிவார்ந்த விஷயங்கள் பேசுவார்கள், படிப்பது வேறாக இருந்தாலும் சஞ்சனா நல்ல பிசினெஸ் யோசனைகள் சொல்லுவாள், ஆதி அதனாலே நிறைய பிசினெஸ் விஷயம் அவளிடம் சொல்லுவான். அப்படியிருக்க இன்று தீடீரென லவ் யூ, அதுவும் ஆழ்த்த குரலில் அவன் கூறியது சனா சஞ்சனாவை வாயடைக்க செய்தது.

என்னடா ஏதாவது பதில் சொல்றது என்று ஆதி கேட்கவும் தான், அவன் கூறியதற்கு தான் எதுவும் சொல்லவில்லை என்று அவளுக்கு உரைத்தது, உடனே குறும்புத்தனம் தலைதூக்க, நீங்க என்ன கேள்வி கேட்டீங்க நான் பதில் சொல்ல என்று கேட்டாள்.

அவள் கூறியதை கேட்டு சிரித்தவன், அது சரிதான் இதுக்குத்தான் ரொம்போ புத்திசாலி பொண்ணுங்கள லவ் பண்ண கூடாது என்று போலியாக வருத்தப்பட்டான். அவன் கூறியதை கேட்டு புன்னகைத்தவள்,

லவ் யூ டூ தயா, என்று அவனை போலவே ஆழ்ந்த குரலில் கூறினாள்.

சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். ஆதி தான் முதலில் அந்த மௌனத்தை கலைத்தான், அப்ப நாளைக்கு நீயும் என்னோடு வருகிறாயா?

எங்க?

ஜெனரல் மேனேஜர் மகேந்திரனை பார்த்துவிட்டு வரலாம்.

அம்மாகிட்ட கேட்கணும் என்று சஞ்சனா கூற, அத்தையிடம் நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறினான் ஆதி.

அதன்பின் அவனை வீட்டிற்கு கிளம்ப சொன்னாள் சஞ்சனா, வீட்டிற்கு சென்றுவிட்டு பேசுவதாக கூறி அவனும் போனை வைத்தான்.

ஆதிக்கு நாளுக்கு  நாள் சஞ்சனா மீதான காதல் வளர்ந்து கொண்டேயிருந்தது. விரைவில் அவள் தன் வீட்டிற்கு வரவேண்டும், இப்படி அம்மாவிடம் கேட்க வேண்டும், அண்ணனிடம் சொல்லவேண்டும் போன்ற தடைகள் இல்லாமல் இஷ்டம்போல சுற்றி திரிய வேண்டும் என்று நினைத்தவன், இன்னும் 20-வது நாள் ஓடிவிடும் என்று தன்னையே சமாதானப்படுத்திகொண்டு  வீட்டிற்கு கிளம்பினான்.

மறுநாள் கிருஷ்ணவேணியிடம் அனுமதி வாங்கி, சஞ்சனாவை அழைத்து கொண்டு மகேந்திரன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்றான். அங்குதான் முதல் முதலில் மாயாவை பார்த்தாள் சஞ்சனா, காலேஜ் போகும் வயதில், அப்பாவிற்கு இப்படி இருக்கு என்ற கவலையை மீறிய தைரியத்தோடு இருந்த மாயாவை, சஞ்சனாவிற்கு பிடித்திருந்தது.

ஆதியை பார்த்ததும் மகேந்திரன் மிகவும் மகிழ்ந்து போனார், அப்பா காலத்தில் இருந்து இருப்பதால் அவர் ஆதியை தம்பி என்றுதான் அழைப்பார்.

தம்பி நீங்க இவ்வளோ தூரம் வரணுமா, கல்யாண வேலை வேற இருக்கும். இந்த சமயத்துல உங்களுக்கு உதவிய இருக்கமா இப்படி வந்து படுத்ததே எனக்கு கஷ்டமாயிருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு போய்டலானு டாக்டர் சொல்லிட்டாரு, நான் திங்கள் எல்லாம் ஆபீஸ் வந்துடுவேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க ஆபீஸ் வேலை எல்லாம் நான் பார்த்துக்குறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க, நடக்க போறது நம்மவீட்டு கல்யாணம் என்ன செய்யனுனு மட்டும் சொல்லுங்க மத்ததெல்லாம் நான் பார்த்துகிறேன் என்று உற்சாகமாக பேசினார் மகேந்திரன்.

சஞ்சனா இவர்களை ஏன் பேமிலி மாதிரி என்று கூறினாள் என்பதை அந்த கணத்தில் உணர்வுப்பூரமாக அறிந்தான் ஆதி. மகேந்திரன் மனைவி சிலவருடங்களுக்கு முன்னர் தவறிவிட்டார் என்று அவனுக்கு தெரியும், அவர் வாழ்வதே அவர் மகளுக்காக தான் என்று அவன் அறிந்திருந்தான். எனவே அவருடைய உடல்நிலை தேறி நல்லபடியாக இருப்பது மிகவும் அவசியம் என்று நினைத்தவன்,

சார், உங்க ஹெல்த் தான் இப்போ முக்கியம், மெடிக்கல் செலவு எல்லாம் நான் பார்த்துகிறேன், நான் டாக்டர் கிட்ட பேசி ஓகே சொன்னாதான் நீங்க ஆபீஸ் வரணும் அதுவரைக்கும் ரெஸ்ட் எடுங்க என்றவன், மாயாவிடம் திரும்பி ரெஸ்ட் எடுக்காம எதாவது வேலை செஞ்ச உடனே எனக்கு போன் பண்ணு அதே மாதிரி உனக்கு எதாவது தேவைனாலும் என்ன கூப்பிடு என்று கூறி அவன் போன் நம்பர் மற்றும் சஞ்சனாவின் எண்ணை மாயாவிடம் கொடுத்தான். அதன்பின் டாக்டரிடம் பேசி அவர் உடல்நிலை பற்றி அறிந்து கொண்டவன், பணத்தை பற்றி கவலை இல்லை அவர் முழுவதும் குணமானால் போதும் என்று கூறி செலவுக்கான பணத்தையும் கட்டிவிட்டு வந்தான்.

மகேந்திரன் உணர்ச்சி மிகுதியில் அவன் கைபிடித்து கண்கலங்கினார்.

என்ன சார் நீங்க, இதுக்கெல்லாம் போய் எவ்வளோ காலமா எங்களுக்காக நீங்க உழைக்குறீங்க, அப்பா காலத்துல இருந்து கூடவே இருக்கீங்க, நீங்களும் எனக்கு அப்பா மாதிரிதான், உங்களுக்கு செய்றது என்னோட கடமை. என்னோட கல்யாண பரிசே நீங்க முழுசா குணமாகி சந்தோசமா  எங்க கல்யாணத்துல கலந்துக்குறதுதான் என்று கூறினான். அதன் பின் சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு கிளம்பினர்.

வெளியில் வந்து கார் ஏறியதும், கலக்கிட்டிங்க தயா ஐ அம் சோ ஹாப்பி, அவங்க முகத்துல எவ்வளோ சந்தோசம் அதுக்கு காரணம் என்னோட தயானு நினைக்குறப்ப எனக்கு ரொம்போ சந்தோசமா இருக்கு என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்தாள் சஞ்சனா.

இதுக்கு காரணம் நீதான் சனா, இந்த மாற்றம் உன்னாலதான். இப்பவே அப்படியே உன்ன என்கூடவே கூட்டிட்டு போய்டலானு இருக்கு,

இருக்கும், இருக்கும், இன்னும் 20வது நாள் தான் அப்புறம் நீங்களே நினைச்சாலும் என்ன விட்டுட்டு எங்கையும் போக முடியாது,

20 இல்லை 19 நாள் தான்  இருக்கு மை டியர் சனா பேபி, அவன் கூறியதை கேட்டு சஞ்சனா சிரிக்க, அவளும் அவனோடு இணைந்து நகைத்தான்.

வாசகர்களே, நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆதித்யன், சஞ்சனா திருமண கொண்டாட்டம் அடுத்த பகுதியில் தவறாமல் வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”.

நறுமுகை

1

No Responses

Write a response