என் அன்பு சகாக்களுக்கு
நீங்க எல்லா நினைக்கலாம் எப்பவும் பிள்ளைகளை திட்டக்கூடாது,கோவமா பேச கூடாது,இப்படி சொல்லிட்டே இருக்காங்களே அப்ப நாங்க பிள்ளைங்க என்ன செஞ்சாலும் கேக்கக்கூடாதா. நிச்சயம் கேட்கணும், ஆனா அதை எப்படி கேட்கிறோம், அல்லது எப்படி சொல்கிறோம் என்பதுதான் வேறுபாடு. எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் உண்டு அரிசி தீர்ந்துட்டா, அரிசி இல்ல வாங்கணும் அப்படினு சொல்லாம, அரிசி வேணுன்னு சொல்லுவோம் ரெண்டுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இல்ல னு சொல்றது எதிர்மறை, வேணுன்னு சொல்றது நேர்மறை அவ்வளவுதான் வித்தியாசம். இப்படி ஒரு தப்பு செஞ்ச நீ என் பிள்ளையே இல்லை அப்படினு சொல்லாம உன்கிட்ட இருந்து இதை நான் எதிர் பாக்கல,இதைவிடவும் என் பிள்ளைக்கு நல்ல மாதிரி சிந்திக்க தெரியுனு நம்பினேன் சொல்லி பாருங்க, அடுத்த முறை உங்க நம்பிக்கையை அவங்க பொய் ஆக்க மாட்டாங்க. பிள்ளைகளை நாள் வழி படுத்துறது பெற்றோர்களோட கடமை அதை சரியான முறையில் கையாளனும். ரொம்போ சிறு வயதிலேயே தன் தவறை ஒத்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தனும், தவறை ஒத்துக்கொள்ளும் பக்குவம் அந்த தவறை சரி செய்யும் மனமுதிர்ச்சியை அவர்களுக்கு கொடுக்கும். நீங்க அவர்கள் தவறு செய்யும் பொழுது அவர்களிடம் கத்தி, கோவம் கொண்டு எந்த பயனும் இல்லை. அவர்களுக்கு அந்த தவறை எடுத்து சொல்லுங்கள், அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள், சிந்திக்க நேரம் கொடுங்கள். நாம் இன்று பொறுமையுடன் அவர்களை வழிநடத்தி சென்றால் நாளை நாம் நடக்க இயலாத வயதில் அவர்கள் நம்மை தாங்கி நிற்பார்கள். உங்கள் பிள்ளைகளுக்கான ஒழுக்கத்தை அவர்கள் நிலையில் இருந்து அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.நாம் கடந்து வந்த பாதை வேறு அவர்கள் பயணிக்கும் பாதை வேறு அந்த வேறுபாட்டை முதலில் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து பேசலாம் ……
என்றும் அன்புடன்
சக தோழி