குறள் :பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
விளக்கம் :அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.
என் அன்பு சகாக்களுக்கு
நம்ப எல்லாருக்கு திருவள்ளுவரை நல்ல தெரியும் அவரு குறள்களில் இல்லாத வாழ்க்கை கல்வியே கிடையாது. மக்கட்பேறு அப்படினு ஒரு அதிகாரம் எழுதி இருக்காரு நீங்க மேல படிச்ச குறள் அந்த அதிகாரத்துல வரதுத, ரொம்போ எளிமையா எப்படி பட்ட குழந்தை வாழ்க்கையின் செல்வம்னு சொல்லி இருக்காரு. நல்லதை அறியும் அறிவுள்ள குழந்தைகள் நமக்கு கிடைக்கும் மிக சிறந்த செல்வம். பழய படத்துல ஒரு பட்டு இருக்கும்.
“ எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவன் ஆவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே “
இது உண்மை எந்த போல்டெர்ஸும் இல்லாத வெற்று திரைய வர கம்ப்யூட்டர் டெஸ்க்டாப நம்ப எப்படி வேண்டியது வேண்டாதது எல்லா போட்டு நெறைச்சு வெக்குறோமோ அப்படித்த கள்ளம்,கபடம்,சூது,வாது, வேண்டியவங்க,வேண்டாதவங்க,விருப்பு, வெறுப்பு,இப்படி எதுமே இல்லாம இந்த உலகத்துக்கு வர குழந்தைங்களை இது எல்லா இருக்கவங்கல மாத்துறோம். ஆனா இந்த மேல இருக்க பாட்டுல எனக்கு ஒரு கருத்து வேறுபாடு இருக்கு,அது என்ன அன்னை வளர்ப்பினில் குழந்தைனு வந்தா அது பெற்றோர் வாளர்ப்பினில். குழந்தைனு வந்துட்டா அங்கு ஆண் பெண் கணவன் மனைவி எல்லா கடந்து பெற்றோர் அப்படிங்குற அடையாளம்தா முதன்மைய இருக்கும். அதனால குழந்தை வளர்ப்புங்குறது ஒரு டீம் ஒர்க் என்ன டீம் ல இரண்டே உறுப்பினர்கள். அதனால குழந்தைக்கு நல்லவைகளை நல்ல மாதிரி சொல்லற பொறுப்பு அம்மா அப்பா ரெண்டு பேருக்கு உண்டு. தொடர்ந்து பேசலாம் …………
என்றும் அன்புடன்
சக தோழி