New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-23

பாரதிக்கு அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்த போது, மாயா உடல்நலம் சற்றுதேறி ஐ.சி.யுவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டாள். அவளுக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது, அவள் இருக்கும் நிலையில் இதை கூறவேண்டாம் என்று யாரும் அவளிடம் எதுவும் கூறவில்லை. பாரதி கிடைத்துவிட்டாள்  என்று மட்டும் அவளுக்கு சொல்லப்பட்டது. பாரதி கிடைத்த பிறகு தன்னை யாரும் வந்து பார்க்கவில்லை, தன்மீது கோவமாக இருக்கிறார்கள் போல என்று நினைத்த மாயாவிற்கு என்றும்விட அந்த இறுதினங்கள் மறைந்த பெற்றோரின் நினைவு அதிகமாக இருந்தது. பாரதி கிடைத்துவிட்டாள் அதுபோதும் என்று நினைத்தவள் மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களை மாற்றுவதற்காக தொலைக்காட்சியை இயக்கினாள். இலக்கில்லாமல் சேனல் மாற்றி கொண்டிருந்தவள் தொழிலதிபர் ஆதித்யன் என்று வரவும் அந்த சேனலில் நிறுத்தினாள். அதில் கூறப்பட்ட செய்தியை அவளால் நம்பவே முடியவில்லை. எந்த நியூஸ் சேனலை மாற்றினாலும் செய்தி ஒன்றாகத்தான் இருந்தது.

பாரதி, பாரதிக்கு எப்படி என்று ஒன்றும் புரியாமல் அறையைவிட்டு வெளியில் வந்தவள், அங்கு அவளை பார்ப்பதற்கு வந்துகொண்டிருந்த பாலகுமாரை பார்த்து அவனிடம் ஓடினாள். அண்ணா பாரதிக்கு என்ன அண்ணா ஆச்சு ஏன் என்கிட்ட யாரும் சொல்லல இப்ப பாரதி எங்க நான் அவளை பார்க்கனும் என்று கண்ணீரோடு கேட்டவளிடம் என்ன சொல்வது என்று பாலகுமாருக்கு தெரியவில்லை. மாயாவுக்கு இப்போதைக்கு விஷயம் தெரிய கூடாது என்று ஆதி கூறியிருந்தான். ஆனால் அவளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது, எப்படியோ என்ன எல்லா நியூஸ்லையும் இதுதானே பிரேக்கிங் நியூஸ் என்று நினைத்தவன் மாயாவிடம், மாயா நீ முதல்ல உன்னோட ரூம்க்கு வா என்று அவளை அழைத்துசென்றான்.

நீ தெரிஞ்சுக்கிட்டது உண்மைதான், உனக்கு முழுசா உடம்பு சரியாகுற வரைக்கும் உன்கிட்ட சொல்லவேண்டானு மாப்பிள்ளை நினைச்சாரு அதுதான் சொல்லல. மாயா பாரதிக்கு டிரீட்மெண்ட் போயிட்டு இருக்கு நீ பயப்படாத முதல்ல உன்னோட உடம்பு குணமாகட்டும் அப்புறம் நீ பாரதியை பார்க்கலாம் சரியா,

இல்ல அண்ணா நான் சாரையும், மேடத்தையும் பார்க்கனும் ப்ளீஸ் கூட்டிட்டு போங்க என்று பிடிவாதம் பிடித்தாள் மாயா.

இதற்குமேல் முடியாது என்று விட்டுசென்றாலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியாது என்று நினைத்த பாலகுமார் அவளை தன்னுடன் அழைத்து கொண்டு சென்றான்.

பாரதிக்கு இன்னும் அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்தது. ஆதி, சஞ்சனா மற்றும் கிருஷ்ணவேணி வெளியில் காத்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த மாயா, ஆதி மற்றும் சஞ்சனாவின் வாடிப்போன முகம் பார்த்து தவித்து போனாள். வேகமாக அவர்கள் அருகில் ஓடியவள் சஞ்சனா கால்லை கட்டிக்கொண்டு அழுக தொடங்கினாள்.

சாரி மேடம், என்ன நம்பித்தான் பாரதிய அனுப்புனீங்க இப்படி ஆகுனு நான் கொஞ்சம் கூட நினைக்கல, கூடவே இருந்தும் என்னால அவளை காப்பாற்ற முடியல, சின்ன பொண்ணு நம்ப யாராவது வந்துடமாட்டோமான்னு எவ்வளோ தவிச்சிருப்பா, இப்படி ஆயிடுச்சே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

வேகமாக அவளை தடுத்த சஞ்சனா, மாயா உனக்கே இப்பதான் உடம்பு கொஞ்சம் தேறி இருக்கு நீ கொஞ்சம் அமைதியா இரு, நடந்த எதுக்கும் நீ காரணம் இல்லை, குற்றவுணர்ச்சிய வளர்த்திக்காத. பாரதிய இதுல இருந்து மீட்டெடுக்க எனக்கு மாயா வேணும். எதையும் தைரியமா எதிர்த்து நிக்குற எங்களோட மாயா வேணும் என்று கூறினாள்.

அவளை அனைத்துக்கொண்ட மாயா, சின்ன பொண்ணு மேடம் என்னால தாங்க முடியல, எனக்கு எதாவது ஆகியிருந்த கூட பரவாயில்லை, இதை எப்படி பாரதி என்று கேவினாள்.

உனக்கு எதாவது ஆகியிருந்த மட்டும் எங்கனால நிம்மதியா இருந்திருக்க முடியுமா மாயா, அப்பவும் எங்களுக்கு இதே தவிப்புதான் இருந்திருக்கும் என்று கூறிய ஆதியை பார்த்த மாயாவிற்கு இவர்களா தன் மீது கோவமாக இருக்கிறார்கள் என்று நினைத்தோம் என்று தோன்றியது.

அதன்பின் சற்று அமைதியான மாயா, அறைக்கு போகமாட்டேன் என்று கூறி அவர்களோடே இருந்து கொண்டாள்.

அதேசமயம் அடையாரில் பணக்காரர்கள் வாழும் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த பையன் அண்ணா இங்க வந்து இந்த நியூஸ் பாரு என்று கத்தினான். அந்த குரல் கேட்டு வெளியில் வந்தது வேறு யாருமில்லை சிறுது மாதத்திற்கு முன்னாடி பாரதி பள்ளியில் பிரச்சனையில் மாட்டிக்கொண்ட வருண்,அது கிரிமினல் லாயர் காளிதாஸ்ஸின் வீடு. அவரும் பாரதியின் நியூஸ்ஸை பார்த்திருந்தார், அன்னைக்கு கேஸ் கொடுத்த என்னோட குடும்ப மானத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லைனு திமிர பேசுனான், இன்னைக்கு இப்படி ஆகிடுச்சு என்று நினைத்தார்.

இப்போது அவரது சின்ன மகன் விஷ்வா அந்த செய்தி பார்த்து தன் அண்ணனை அழைக்கவும் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே தனது வேலையை தொடர்ந்தார்.

தம்பி குரல் கேட்டு அங்கு வந்த வருண் எதுக்குடா கத்துற

அங்க நியூஸ் பாருண்ணா, எதோ சும்மா கிண்டல் பண்ணிடனு பிரின்ஸிபள்கிட்ட சொல்லி, அப்பாவ வரவெச்சு என்ன ஸ்கூல் மாற வெச்ச அந்த பாரதிக்கு நல்ல வேணும்.

அவன் கூறியது கேட்டு நியூஸ் பார்த்த வருண் கரெக்ட்ட சொன்ன விஷ்வா ரொம்போ ஓவர்ரா பண்ணா, இப்ப என்ன பண்ணுவ யார்கிட்ட போய் கம்ப்ளைண்ட் பண்ணுவ, வெளியில இனி தலைகாட்ட முடியாது என்று நக்கலாக சொன்னான்.

அவர்களுக்கு சாப்பாடு எடுத்துவைத்து கொண்டிருந்த அவர்களின் அம்மா அனுராதா மகன்களின் பேச்சை கேட்டு அதிர்ந்துப்போனார். காலையில் அந்த செய்தி பார்த்து பாவம் அந்த பொண்ணு என்று மனம் கனத்துபோனது அவருக்கு, அந்த செய்தி பார்த்து தன் மகன்கள் இப்படி பேசுவது அவருக்கு தனது வளர்ப்பு மீது சந்தேகத்தை கொடுத்தது.

பேசிக்கொண்டிருந்த மகன்கள் அருகில் வந்தவர் தொலைக்காட்சியை அணைத்தார். என்னம்மா பார்த்துட்டு இருக்கப்ப எதுக்கு ஆப் பண்ணீங்க

நீங்க பேசிட்டு இருந்ததுக்கு உங்கள பாராட்டத்தான். மனைவி வந்து பேசவும் செய்யும் வேலையை விட்டுவிட்டு அவர்களை கவனித்தார் காளிதாஸ்.

பாராட்டவ? என்னம்மா சொல்ரீங்க என்று கேட்டான் வருண்.

ஆமா வருண், ஒரு பொண்ணோட வழிய, வேதனையை கொண்டாடுற என்னோட மகன்களை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு. நான் படிக்காதவத்தான், உங்களையும், உங்க அப்பாவையும் தாண்டி எனக்கு உலகம் கிடையாது. என்னதான் படிக்கலைனாலும் உங்கள நல்ல முறையில வளர்த்திருக்கனு எனக்கு எப்பவும் பெருமையா இருக்கும். என்னைக்கு ஸ்கூல்ல கம்ப்ளைண்ட் வந்ததோ அன்னைக்கே எனக்கு கருக்குனு இருந்துச்சு. சரி வயசு கோளாறு இதெல்லாம் சொல்லி புரியவெச்சுக்கலாம்னு இருந்துட்டேன். அதுக்கேத்தமாதிரி உங்க அப்பாவும் நான் ஏற்கனவே பேசிட்ட நீ திரும்ப அதையே பேசி பசங்கள கஷ்டப்படுத்தாதனு சொல்லிட்டாரு. எப்பவும் போல அவருக்கு எதிர்பேச்சு பேசாம அமைதிய இருந்துட்டேன். அதுதான் நான் செஞ்ச தப்பு பேசி இருக்கனும். இதை இதை அப்பா சொல்லனும் இதை இதை அம்மா சொல்லனுனு இருக்கு. என்னதான் ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கனுனு அப்பா சொன்னாலும் அவரு ஒரு ஆண்ங்குற நிலையில இருந்துதான் சொல்லுவாரு. அன்னைக்கே நான் இந்த மாதிரி வெளியில ஏற்படுற தொல்லைகள் ஒரு பொண்ண எந்த அளவுக்கு பாதிக்கும், தப்பு செஞ்சது ஆம்பளையா இருந்தாலும் அதுக்கு சேர்த்து பெண்ணைத்தான் சிலுவை சுமக்கவைக்குனு உங்களுக்கு புரியற மாதிரி நான் சொல்லி இருக்கனும்.

அப்படி நான் சொல்லி இருந்த ஒருவேளை இன்னைக்கு அந்த பொண்ணு நிலமையை பார்த்து உங்களுக்கு சந்தோசம் வந்திருக்காது. ஒரு சின்ன கேலிய தாங்காத அந்த பொண்ணு இவ்வளோ பெரிய வழிய எப்படி தாங்குவானு கொஞ்சமாவது யோசிச்சிய வருண். உன்னோட தம்பிதான் சின்ன பையன் நீ என்ன ஒன்னு தெரியாதவன தப்புடானு நீயில்ல அவனுக்கு சொல்லியிருக்கனும். எனக்கோ, இல்ல நீ காதலிக்குறயே காவியா அவளுக்கோ இப்படி நடந்து இருந்த அப்பவும் இப்படித்தான் நடந்துபியா?

அம்மா என்று வார்த்தை வராமல் தலைகுனிந்தான் வருண். மகன் காதலிக்குறான் வெளியில் சென்றுவரும் நமக்கு தெரியாத விசயம் வீட்டுலயே இருக்கும் மனைவிக்கு தெரிந்திருக்கிறது. மனைவி பேச தொடங்கியதும் தனது எண்ணத்திற்காக அவருக்கு அவமானமாக தான் இருந்தது. தலைகுனிந்து நிற்கும் மகன் அருகில் வந்து நின்றார் காளிதாஸ்.

அவரை பார்த்த  அனுராதா, என்னங்க ஒண்ணுமே தெரியாத படிக்காதவ இவ்வளோ பேசுறானு பார்க்குறீங்களா? இதை பேச அறிவு வேண்டாம், அந்த பொண்ணோட வழிய புரிஞ்சுக்க முடிஞ்சா போதும். விஷ்வா பொண்ண பொறந்திருந்த அந்த பொண்ணு வயசுதான் இருந்திருக்கும், ஆனா நம்ம வீட்டுலதான்  பொண்ணு இல்லையே  வேற யாரு எப்படி போன என்னனு அமைதியா இருந்தீங்களா?

உங்க மனைவி பொண்ணுதான், உங்க பசங்களோட அம்மா பொண்ணுதான், அதை மறந்துடீங்களே என்று கேட்கும்போது அவருக்கு குரல் கரகரத்தது. சிறிதுநேரம் அந்த இடமே அமைதியாக இருந்தது. அனைவரும் உணர்ச்சிமயமாக இருந்தனர். வருணுக்கு அவன் அன்னை கேட்ட கேள்விகளின் நியாயம் புரிந்தது, அவனால் பாரதி நிலையில் காவியாவை யோசிக்கக்கூட முடியவில்லை விதிர்த்து போனான். விஷ்வாவிற்கு அனைத்தும் புரியவில்லை என்றாலும் தான் பேசியது தவறு என்று புரிந்தது.

அமைதியை கலைத்து பேசதொடங்கினார் காளிதாஸ். ராதா எதுக்கு இப்படி உன்னையே படிக்காதவனு குறைத்து பேசுற, என்னோட எல்லா வெற்றிக்கும் மூலகாரணமே நீதான். நீ இந்த வீட்டோட ஆணிவேர், வெளியில சொல்லலனாலும் நீ இல்லாம எங்க மூணு பேருக்கும் இயக்கமே இருக்காது. ஏதோ ஒரு கோவத்துல பசங்க தப்பா பேசிட்டாங்க நானும் அமைதிய இருந்துட்டேன் தப்புதான் எங்களை மன்னிச்சுடு. நீ இப்படி கலங்கி போற அளவுக்கு நம்ப பசங்க மோசமானவங்க இல்லை, நீ அவங்கள சரியாதான் வளர்த்தி இருக்க. இப்ப என்ன செய்யலானு சொல்லு செய்வோம்.

அவங்களை போய் பார்க்கலாங்க இந்த சமயத்துல சொந்தமே நெருங்கி வர யோசிக்கும், யாரு இல்லைனு அவங்க கலங்கிபோய்டலாம். நம்ம இருக்கோனு சொல்லிட்டு வருவோம், நீங்க முடிஞ்ச இந்த கேஸை நடத்துங்க. இந்த கேஸ்ஸை நான்தான் நடத்துறதுனு எப்பவோ முடிவு பண்ணிட்ட, சரி நீ கிளம்பு போய் பார்த்துட்டு வந்திடலாம் என்று கூற அனுராதா நிம்மதியாக கிளம்ப சென்றார்.

இவர்களின் தவறை அனுராதா புரியவைத்துவிட்டார். ஆனால் சுற்றி இருக்கும் சமூகம் பாரதியை வீழ்த்த காத்திருக்கிறது அதில் இருந்து அவள் எப்படி மீண்டு வரப்போகிறாள்??? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்.

-நறுமுகை

28

No Responses

Write a response