மறுநாள் காலை ஆதி கார்டனில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தான். அவனுக்கு காபி கொண்டுவந்த சஞ்சனா மதியம் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கேட்டாள். அவன் பதில் சொல்வதற்கு முன் போன் அடிக்க அதை எடுத்தான். அந்த பக்கம் கூறிய செய்தி கேட்டவன் பதறி எழுந்தான்.
என்ன சார் சொல்ரீங்க? நேத்து நைட் பேசுனனே இப்ப இப்படி சொன்ன என்று கோர்வையாக பேச முடியாமல் தடுமாறினான்.
பிசினெஸ் பிரச்சனையோ என்று எண்ணி அவனையே பார்த்த சஞ்சனாவிற்கு ஏனோ மனதை உறுத்தியது.
அதற்குள் ஆதி போனில் நான் இப்பவே வரேன், ……..சரி அங்கையே வரேன் என்று கூறி போனை வைத்தவன் சஞ்சனாவிடம் எப்படி சொல்வது என்று யோசித்தான். கூடவே யோசிக்க நேரம் இல்லை என்று உணர்ந்து சனா நான் சொல்றதை பொறுமையா கேளு மார்னிங் ரன்னிங் போன பாரதி திரும்ப வரலை கூட போன மாயா அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்க நம்ப இப்ப ஹாஸ்பிடல் போகனும்.
தயா???? என்ன சொல்றீங்க பாரதி அவ எங்கயும் போக மாட்ட அவ அப்படியெல்லாம் எங்கையும் போக மாட்ட என்று திக்கி திணறினாள்.
அதன்பின் அவசரமாக கிளம்பி ஹாஸ்பிடல்கு சென்றனர். ஹாஸ்பிடல் வாசலில் ஆதியை எதிர்கொண்ட இன்ஸ்பெக்டர் இர்ஃபான் தான்தான் ஆதியை அழைத்ததாக கூறி அவனை மாயா இருக்கும் ஐ சி யுக்கு அழைத்து சென்றான். மாயாவை தலையில் கட்டோடு ஐ சி யுவில் பார்த்ததும் சஞ்சனா பதறிப்போனாள்.
இன்ஸ்பெக்டர் மாயாக்கு என்ன ஆச்சு?
மேடம் மாயாவும், உங்க பொண்ணும் மார்னிங் ரன் போயிருக்காங்க அப்ப யாரோ கார்ல்ல வந்து மாயாவை அடிச்சுப்போட்டு உங்க பொண்ண கடத்திட்டு போய்ட்டாங்க, நீங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் மாயா கண்முழிச்சு இதை சொன்னாங்க. மிஸ்டர். ஆதி நீங்க பிசினெஸ் மேன் உங்க எதிரிங்க யாராவது இதை செஞ்சிருப்பாங்கனு நினைக்குறீங்களா?
இல்ல சார், அப்படி எனக்கு எதிரினு யாரும் இல்லை, பிசினெஸ் போட்டி உண்டு ஆனா இப்படி செய்ய கூடிய அளவுக்கு யாரும் இல்லை.
மேடம் உங்களுக்கு யார்மேலயாவது சந்தேகம் இருக்க?
இல்ல சார் என்னோட பொண்ண கடத்திட்டு போற அளவுக்கு எங்களுக்கு யார்கூடயும் பகை இல்லை.
சரி நாங்க தீவிரமா விசாரிச்சுட்டு இருக்கோம் ஒரு ஸ்டேட் மீட்டுக்கு வந்த பொண்ணுக்கு இப்படி நடந்திருக்கு, சீக்கிரம் உங்க பொண்ண கண்டுபிடிக்கனுனு சி எம் டைரக்ட்ட பேசி இருக்காரு எல்லா பக்கமும் போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம் என்று உறுதி கூறிவிட்டு சென்றார்.
கண்ணாடி வழியாக மாயாவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் சஞ்சனா, அவள் அருகில் வந்த ஆதி தோளை தொட்டு உசுப்பினான். அவனை திரும்பி பார்த்தவள் தயா மாயாவையே இப்படி அடிச்சு இருக்காங்க அப்ப பாரதிய???? எனக்கு ரொம்போ பயமா இருக்கு ஏதோ பெருசா தப்பா நடக்க போகுது என்று கூறி அவனை கட்டிக்கொண்டு அழுக தொடங்கினாள். அவளை தேற்றும் சக்தி இல்லாமல் அவனும் கலங்கி போயிருந்தான்.
பாரதி அவர்களின் சந்தோசம், அவர்களின் உலகம், பேச்சும் சிரிப்பும் என்று எப்பொழுதும் பட்டாம்பூச்சியாய் அவர்களை சுற்றி வண்ணம் சேர்ந்தவள். இன்று அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தொலைத்துவிட்டு நிற்கும் நிலையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நியூஸ்ஸில் விஷயம் பார்த்து சஞ்சனாவின் அம்மா, அண்ணா, ஆதியின் பெரியம்மா, பெரியம்மா அனைவரும் அடித்துபிடித்து ஓடிவந்தனர்.
ஆதி என்னடா நடந்துச்சு பாரதி எங்கட என்று கற்பகம் அழுகையோடே கேட்க, தெரியல பெரியம்மா எந்த தகவலும் இல்லை, போலீஸ் தேடிட்டு இருக்காங்க நானும் அவ கூட படிக்குறவங்க ஸ்கூல்ல எல்லா பக்கமும் விசாரிச்சுட்ட என்ன செய்றதுன்னே தெரியல எங்க எப்படி இருக்களோ என்று கூறும்போதே அவன் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.
சஞ்சனா யாரிடமும் பேசும் நிலையில் இல்லை எதையோ வெறித்தவண்ணம் அமர்ந்திருந்தாள் அவள் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. கிருஷ்ணவேணி மகள் அருகில் அமர்ந்து அவளுக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்துகொண்டிருந்தாள். அப்போது கற்பகம் எல்லா அம்மா வளர்ப்பு அடக்கி வளர்த்தி இருக்கனும் பெரியவங்க பேச்சை கேட்க்கும் பழக்கம் அம்மாக்கே கிடையாது இப்ப பொண்ண தொலைச்சுட்டு அழுது என்ன செய்ய என்று வார்த்தைகளில் விஷத்தை கக்கினார். பாலகுமார் கோவத்தில் ஏதோ சொல்ல வருவதற்குள் இடைபுகுந்த ஆதி,
பெரியம்மா எங்க வந்து என்ன பேசுறீங்க உங்க கோவத்தை காட்ட இதுதான் இடமா? என்ன சொன்னீங்க பொண்ண சரியா வளர்த்துல, நீங்க சொல்லி சஞ்சனா கேட்கல என்ன மன்னிக்கல அந்த கோவம் தானே உங்களுக்கு, நீங்க கேட்டு செய்யல ஆனா அதையே அவ பராதிக்காக செஞ்ச. அவகூட அவ பாதுகாப்புல இருந்த வரைக்கும் பாரதி பத்திரமாதான் இருந்த நான்தான் தொலைச்சுட்ட அப்ப என்னோட வளர்ப்பு சரி இல்லைனு ஒத்துக்குறீங்களா??
ஆதி இல்லடா நான் அப்படி சொல்லல
போதும் பெரியம்மா ஏற்கனவே நொந்துபோய் இருக்கோம் நீங்க துணையா இல்லைனாலும் பரவாயில்ல மேலும் காயப்படுத்தாதீங்க என்று கைகூப்பினான்.
வேகமாக அவன் கையை பிடித்த குமரவேல் தம்பி நீ என்புள்ளடா நம்ப வீட்டு பிள்ளைய காணோம் அதை முதல்ல பார்ப்போம் அவ ஆதங்கத்துல ஏதோ சொல்லிட்ட விட்டுடு என்று அவனை தேற்றினார்.
ஆதியின் ஆட்கள் குமரவேல் ஆட்கள், பிரைவேட் டிடெக்ட்டிவ், போலீஸ் என்று ஒரு பெரிய பட்டாளமே பாரதியை தேடியது. சஞ்சனா இருந்த இடத்தை விட்டு அசையவேயில்லை. அனைவரும் சாப்பாடு, தூக்கம் மறந்து இருந்தனர்.
இடையே இரு முறை கண் திறந்த மாயா எதுவும் பேசும் நிலையில் இல்லை ஆதியை பார்த்து அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது, பேச நினைத்தும் உடல் ஒத்துழைக்கவில்லை மீண்டும் மயக்கத்தில் விழுந்தாள்.
பாரதி கடத்தப்பட்டு 24 மணிநேரம் கழித்து போலீஸும், பிரைவேட் டிடெக்ட்டிவும் அவளை ஊருக்கு வெளியில் ரோட்டோரம் ஒரு முள் புதரில் இருந்து கண்டுபிடித்தனர். இர்பான் ஆதிக்கு அழைத்து விஷயத்தை கூறினான், கூடவே இ சி யு வாசலில் இருந்து அவன் குடும்பத்தை வேறு இடத்திற்கு கூட்டி செல்ல சொன்னான். ஆதி ஏன் என்று கேட்க, ஆதி எனக்கு வீட்டுல காலேஜ் போற தங்கச்சி இருக்காங்க, உங்க பொண்ண இந்த நிலைமையில நீங்க யாரும் பார்க்க வேண்டாம் என்று கூறி போனை வைத்தான். ஆதிக்கு தொண்டைக்குழியில் ஏதோ அடைத்தது தன் செல்ல மகளுக்கு நேர்ந்தது என்ன என்று அவனால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
வேகமாக சென்று பாலகுமாரிடம் சொல்லி அனைவரையும் அங்கிருந்து ஒருவாறு வேறு இடத்திற்கு மாற்றினான். ஆனால் சஞ்சனா அசையவில்லை, பாலகுமாரை மற்றவர்களோடு அனுப்பிவிட்டு அவள் அருகில் வந்த ஆதி,
சனா நான் சொல்றத கேளு இங்க இருக்க வேண்டாம், டாக்டர் வேற ரூம் கொடுத்து இருக்காங்க அங்க போகலாம்,
இல்ல தயா இங்கதான் இருக்கனும் மாயாக்கும் நம்ப வேணும், பாரதி யார் கூட்டிட்டு போனாங்கனு மாயாக்கு எதாவது தெரியும் நான் எங்கயும் வரலை. சனா நான் சொல்றதை கேளு பாரதி சீக்கிரம் வந்துடுவா நம்ப இங்க இருக்க வேண்டாம் என்று அவன் எவ்வளவோ சொல்லியும் சஞ்சனா அசையவில்லை. நடக்கக்கூடாது என்று அவன் நினைத்தது நடந்தே விட்டது.
பாரதியை அவர்கள் கொண்டு வரும் போது சஞ்சனா, ஆதி இருவருமே அங்கிருந்தனர். சஞ்சனா பார்த்துவிடக்கூடாது என்று ஆதி அவளை அனுப்ப முயற்சித்து கொண்டிருந்தான் ஆனால் வேகமாக போலீஸ் உள்ளே வரும்போது தன்னை மீறி தன் மகள் நோக்கி போனவன், உடல் முழுதும் நகக்கீறல்கள், முகம் கன்னிப்போய், வெறும் துணி போர்த்திய நிலையில் தன் மகளை பார்த்து பாரதி என்று அலறிக்கொண்டு ஓடினான், இர்பான் அவனை பிடித்துக்கொள்ள அவன் குரல் கேட்டு ஓடிவந்த சஞ்சனா பாரதியை பார்த்து மயங்கி சரிந்தாள்.
டாக்டர்ஸ் பாரதியை ஐ சி யுகுள் கொண்டு செல்ல இன்னும் ரெண்டு டாக்டர்ஸ் சஞ்சனாவிடம் ஓடிவந்தனர். கைகளுக்குள் திமிரும் ஆதியை இர்பான் தான் இழுத்துப்பிடித்தான்.ஆதி ப்ளீஸ் டாக்டர்ஸ் டீரீட்மென்ட் கொடுக்கட்டும் நீங்க உங்க மனைவிய பாருங்க என்று பலமுறை சொல்லித்தான் ஆதி தன் நிலைக்கு வந்தான் அதற்குள் டாக்டர்ஸ் சஞ்சனாவை ரூம்க்கு கொண்டு சென்று ட்ரிப்ஸ் போட்டிருந்தனர்.
ஆதி அப்படியே நிலைகுலைந்து அமர்ந்தவன் மகளை கண்டா நிலையை பொறுக்கமுடியாமல் கதறினான். ஹாஸ்பிடலில் பரபரப்பு உணர்ந்து வெளியில் வந்து பார்த்த அவர்கள் குடும்பம் ஆதியின் நிலை கண்டு பயந்துபோனது. பாலகுமார் இர்பானிடம் என்ன நடந்தது என்று கேட்டான்.
பாரதியை ஒரு முள் புதர்ல இருந்து துணியெல்லாம் கிழிஞ்ச நிலையில கண்டுபிடிச்சோம். பார்த்தவுடனே புரிஞ்சுடுச்சு ரொம்போ மோசமா பாலியல் வன்கொடுமை செஞ்சிருக்காங்கனு. நீங்க பார்க்க கூடாதுனுதான் வேற இடம் போகச்சொன்ன ஆனா பெத்தமனசு கேட்கல பொண்ண பார்க்கக்கூடாத நிலையில பார்த்துட்டாங்க என்று கூறும்போது இர்பானுக்கே குரல் நடுங்கியது.
மொத்த குடும்பமும் நடந்ததை தாங்கமுடியாத அமைதியில் அழுது கரைந்தனர். பாரதிக்கு தீவிர சிகிச்சை நடந்துகொண்டிருந்தது. ஒரு பக்கம் சஞ்சனா மயக்கத்தில் இருந்தாள். ஹாஸ்பிடலில் இருந்த அனைவருக்கு மனசு பாரமாக இருந்தது.
என்றாவது இந்த குடும்பம் இதிலிருந்து வெளியில் வருமா என்று கனத்த மனதோடு நினைத்தான் இர்பான்.
பாரதியின் நிலை என்ன? பாரதிக்கு இந்த கொடுமையை செய்தவர்கள் யார்? ஆதி- சஞ்சனாவின் நிலை என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்….
-நறுமுகை